"ஜீவ அப்பம்'' (செப்டம்பர் 2015) மாத இதழ்
கிறிஸ்துவுக்குள் அன்பான ஜீவ அப்பம் இணைய நண்பர்களுக்கு, ஆவிக்குரிய வாழ்வுக்கு
உறுதுணையாக, விசுவாச வாழ்வுக்கு தேவையான செய்திகளுடன்,
கிறிஸ்துவுக்குள் வளரவும், நிலைத்து நிற்கவும், "ஜீவ அப்பம்'' மாத
இதழ் வெளி வந்து கொண்டிருக்கிறது.
எல்லாரும் இலவசமாக படிக்கும் வண்ணமாக மின் இதழாகவும் (PDF) இணையத்தில் கொடுக்கப்படுகிறது. இந்த மாத ( செப்டம்பர் 2015) ஜீவ
அப்பம் மாத இதழை இலவசமாக பதிவிறக்கம் செய்து படியுங்கள்.
உனக்குள் இருக்கும் பலம்
தங்களுக்கு எதிரான
போராட்டங்களையே, சிலர் தோல்வி என்று
நினைத்துக்கொள்கின்றனர். ஆகையால் போராட்டத்தைப் பார்த்தும்,
போராட்டத்திற்கு காரணமாக இருக்கும் எதிரியை
பார்த்தும் பயந்து விடுகின்றனர்.
ஆகையால்தான் எதிரி கொண்டு வரும்
போராட்டத்தை நேருக்கு நேர் நின்று ஜெயிக்க
முடியாதபடி திணருகின்றனர். நமக்கு எதிரான பிரச்சனைகள்,
போராட்டங்கள் வரும் போது கண்ணை
மூடிக்கொண்டால் பிரச்சனை நீங்கி விடாது.
எதிரியை நேருக்கு நேர்
நின்று, எதிர்த்து, பிரச்சனைகளை தூள் தூளாக்க வேண்டும்.
அதை விட எதிரியின் தந்திரங்களை
சரியாக அறிந்து கொள்ள வேண்டும்.
சத்தியமுள்ள, சத்தான சந்ததியே.......
கிறிஸ்துவுக்குள் பிரியமான என் அன்பு ஜீவ
அப்பம் சொந்தங்களே, உங்கள் அனைவருக்கும் இயேசு
கிறிஸ்துவின் வல்லமையுள்ள நாமத்தில் வாழ்த்துக்கள்.
நமது ஜீவ அப்பம்
மூலம் உங்களை சந்திப்பதில் மிகுந்த
மகிழ்ச்சி அடைகிறேன். தேவனுடைய மேலான கிருபையும். இரக்கமுமே,
நமது மாத இதழ் வருவதற்கு
மிக முக்கிய காரணம்.
பல நெருக்கடிகள் மத்தியில்தான்
உங்கள் கரங்களில் இந்த புத்தகமானது தவழ்ந்து
கொண்டிருக்கிறது. அத்தனை நெருக்கங்களையும் தாண்டி
இந்த புத்தகத்தை உங்களிடம் கொண்டுவந்து சேர்ப்பதற்கு காரணம், எதாகிலும் ஒருவார்த்தை
உங்கள் வாழ்க்கையில் கிறிஸ்துவுக்குள்ளான மறுரூபத்தை ஏற்படுத்தி விட வேண்டும் என்பதற்காகத்தான்.
நமது சிந்தனை, எண்ணங்கள்
கிறிஸ்துவைப்போல் மாற்றத்தை பெற்றுவிட வேண்டும். இதுதான் நமது வாழ்க்கையில்
இருக்கும் பொல்லாத அரண்களை நிர்மூலமாக்கும்.
மகிழ்ச்சியாய் வாழ்ந்திடவே
இந்த மாதத்திற்கான ஆசீர்வாதமான
வசனத்தை தியானிப்போம். “இந்த நாள் நம்முடைய
ஆண்டவருக்குப் பரிசுத்தமான நாள், விசாரப்படவேண்டாம்; கர்த்தருக்குள்
மகிழ்ச்சியாயிருப்பதே உங்களுடைய பெலன் என்றான்’’ (நெகேமியா 8:10).
சந்தோஷமும், மகிழ்ச்சியும் தேவனால் கொடுக்கப்படுவதாகும், மகிழ்ச்சியை விரும்பாதவர்
இந்த பூமியில் யார் இருக்க முடியும்.மனிதர் மகிழ்ச்சியை விரும்புகிறார்கள்.
ஆனால் எதை மனிதரின்
இருதயம் மகிழ்ச்சி என்று நினைக்கிறது. எந்த
மகிழ்ச்சி கிடைக்காமல் மனிதர்கள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். அல்லது எந்த மகிழ்ச்சியைத்
தேடி மனிதர்கள் அலைந்து கொண்டிருக்கிறார்கள் ?
உலக பொருள்களின் வழியாகவும்,
உலக இன்பங்களின் வழியாகவும், மகிழ்ச்சியையும், சந்தோஷத்தையும் மனிதர்கள் தேடுவதால்தான் அதை முழுமையாக பெற்றுக்கொள்ள
முடியாமல், கலக்கம், கவலை, பயம், வேதனை
என்று வேண்டாத யாவற்றையும், விரும்பாமல்
எடுத்துக்கொள்ள வேண்டிய பரிதாப நிலைக்கு
தள்ளப்படுகிறார்கள்.
நீயே அந்த மனிதன்
தவறுகள் ஒரு மனிதனுடைய வாழ்வில் ஏற்படுத்தும்
பாதிப்பைவிட, அந்த தவறுகளை இன்னொருவர் மீது திணிக்க முற்படுவதே மனித வாழ்வில் நீங்காத
பாதிப்பை ஏற்படுத்தி விடுகிறது.
தன்னுடைய தவறுகளுக்கு இன்னொருவரே காரணமாக
இருக்கிறார் என்று மற்றவரை சுட்டி காட்ட காரணம் கண்டுபிடிக்கப்படும் வரை மனிதனுடைய
தவறுகள் ஒருபோதும் சரி செய்யப்படுவதில்லை.
தப்பிதங்களுக்கு சூழ்நிலைகள்தான் காரணம்
என்று சூழ்நிலைகளை காரணம் காட்டி தப்பித்து விடுவது, தற்காலிகமான விடுதலையே. அப்படிப்பட்ட
மனிதன் அந்த சூழ்நிலையில் இருந்து தப்பித்துக்கொள்கிறானே தவிர, தப்பிதங்களில் இருந்து
தப்பித்துக்கொள்வதில்லை.
மனிதனின் தொடர் தோல்விக்கு அடிப்படையாக இருப்பது,
தனது தவறை நேர்மையாக ஏற்றுக்கொள்ளாத தன்மைதான். ஆதி மனிதர்களாகிய ஆதாம் ஏவாளில் இருந்து
வந்த இந்த நிலை மனிதர்களிடம் செயல்படுவது விசித்திரம் அல்ல, அது ஜென்ம சுபாவம்.
பொய் சொல்வதற்கும், ஒரு விஷயத்தை மாற்றி
சொல்வதற்கும், திரித்து பேசுவதற்கும், மற்றவர்களை குற்றப்படுத்துவதற்கும் செலவிடப்படுகிற
நேரத்தையும், அதற்காக எடுக்கும் பயிற்சியையும் நிறுத்தி விட்டு, தனக்குள் இருக்கும்
வேண்டாதவைகளை விட்டு விட நேர்மையாக தேவனிடத்தில் அறிக்கையிட்டு, தன்னுடைய தப்பிதங்களுக்கு
மனஸ்தாபப்பட்டு தன்னைத்தானே அனுதினமும் நியாயம் தீர்த்து நடக்கும் போது வாழ்க்கை கிறிஸ்துவைப்போல
வெற்றியுடன் ஜொலிக்க ஆரம்பித்து விடும்.
எல்லாம் உனக்காக......
தேவனுடைய வார்த்தைகளை தியானித்து வாசிக்கும்
போது நமக்குள் உண்டாகும் பரவசத்தை வார்த்தையால் சொல்ல இயலாது, காரணம் தேவனுடைய வார்த்தையின்
வல்லமை நமக்குள்ளாக சென்று நம்மை உயிர்ப்பிக்கிறது.
ஜீவ அப்பம் வாசக குடும்பத்திற்கு இந்த மாத தேவனுடைய
வாக்குத்தத்தமான வார்த்தை “நீ எப்போதும்
என்னோடிருக்கிறாய், எனக்குள்ளதெல்லாம் உன்னுடையதாயிருக்கிறது’’ (லூக்கா 15:31).
லூக்கா 15 ம் அதிகாரத்தில் 11ம் வசனத்தில் இருந்து
32 ம் வசனம் வரை உள்ள வேத பகுதியில் இரண்டு விதமான நபர்களைக் குறித்து இயேசுவானவர்
சொல்வதைப் பார்க்கலாம்.
அநேகமாக இந்த பகுதியில் இளைய மகனைக்குறித்துதான்
நாம் அதிகமாக தியானித்து இருக்கிறோம். ஆனால் உண்மையாக இந்த பகுதி மூத்த குமாரனை மையமாக
வைத்தே துவங்குகிறது.
மூத்த குமாரன், தனது தந்தை இளைய மகனை கவனிப்பது
போல் தன்னை கவனிக்க வில்லையே என்று வருந்துகிறான். ஆனால் தந்தையின் பதிலோ, தனது மூத்த
மகனையும் தான் எவ்விதம் நேசிக்கிறேன், எந்த
அளவுக்கு அதிகாரம் தந்திருக்கிறேன் என்பதை அறிந்து கொள்ள அறிவுறுத்துவதாக இருக்கிறது.
அஸ்திவாரம்
கிறிஸ்துவுக்குள் அன்பான ஜீவ அப்பம் குடும்ப
அங்கத்தினர்களுக்கு, தேனிலும் இனிமையான இயேசு கிறிஸ்துவின் வல்லமையுள்ள நாமத்தில் அன்பான
வாழ்த்துக்கள்.
பிரியமானவர்களே, நமது ஜீவ அப்பம் ஊழியங்களை
கர்த்தர் ஆசீர்வதித்து, எல்லைகளை விரிவாக்கி
வருவதால் கர்த்தரை நன்றியோடு ஸ்தோத்தரித்து, துதிப்போம்.
தேவனுடைய வார்த்தைகளை அறிவிக்கவும், அநேகர்
தேவனுடைய வார்த்தைகளினாலே விடுவிக்கப்படவும், ஆசீர்வதிக்கப்படவும் ஜீவ அப்பம் மாத இதழை
தேவன் பயன்படுத்தி வருகிறார்.
பயனுள்ள கருவிகளாய்.........
கிறிஸ்துவுக்குள் பிரியமான ஜீவ அப்பம் அன்பு வாசக குடும்பத்திற்கு, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபத்துடன் வாழ்த்துக்கள்.
இம்மட்டுமாக நம்மைக் காத்து வழி நடத்தி வரும் இம்மானுவேலாகிய தேவனுக்கு எல்லா கனமும், மகிமையும் துதியும் உண்டாவதாக.
நமது ஜீவ அப்பம், ஊழியங்களையும், ஜீவ அப்பம் மாத இதழையும் ஆசீர்வதித்து நடத்தி வரும், அன்பான தேவனுக்கு ஸ்தோத்திரம் செலுத்துவோம்.
ஜீவ அப்பம் ஊழியமானது தேவனுடைய கிருபையால் அநேகருக்கு ஆசீர்வாதமாக தேவன் நமக்கு கொடுத்திருக்கிறார். இந்த ஊழியமானது இன்னும் விரிவடைந்து அநேகருக்குப் பயனுள்ளதாக இருக்க ஜெபியுங்கள்..
அறிவு, இறுமாப்பையும், அன்பு பக்தி விருத்தியடையவும் செய்யும் என்ற வேத வார்த்தையின் படி, அறிவு பெருகிக்கொண்டிருக்கும், தற்கால உலகில் அன்பு குறைந்து கொண்டிருக்கிறது.

விருத்தியாகும் வாழ்வு
“இந்த தேசத்திலே வாசம்பண்ணு; நான் உன்னோடேகூட இருந்து, உன்னை ஆசீர்வதிப்பேன்’’ (ஆதி 26:3)
ஆண்டவர் குறிப்பிடும் எல்லைக்குள் இருந்து செயல்படும் போது தேவனாகிய கர்த்தர் நம்முடன் இருந்து நம்முடைய செயல்களைப் பெருக செய்கிறார். நன்மையாக மாற்றுகிறார். இது தான் ஆண்டவர் நம்மிடம் எதிர்பார்க்கிறார்.
கர்த்தர் நம்மை ஒரு எல்லையில் நிறுத்துவதின் நோக்கமே நாம் அவருடைய வார்த்தைகளுக்கு கீழ்ப்படிந்து தேவ சித்தம் செய்கிறவர்களாக இருக்கிறோமா? என்பதை காண்பதற்காகவே.
மேலே நாம் வாசித்த தேவனுடைய வார்த்தையானது ஈசாக்கினிடத்தில் தேவன் சொன்ன வார்த்தை, அது எந்த சூழ்நிலையில் சொல்லப்பட்டது என்பதை பார்த்தால் பஞ்ச காலத்திலே எகிப்திற்கு போக புறப்பட்ட ஈசாக்கினிடத்தில் “நீ எகிப்திற்கு போக வேண்டாம், இந்த தேசத்தில் வாசம் பண்ணு, நான் உன்னை ஆசீர்வதிப்பேன் என்பதாகும்.
ஈசாக்கும் கர்த்தருடைய வார்த்தைகளுக்கு கீழ்ப்படிந்து கேராரூரிலேயே தங்கி விட்டான்.
தேவன் கொடுக்கும் வாக்குத்தத்தத்தின் படி கீழ்ப்படிந்து நடந்தால் என்ன ஆசீர்வாதங்கள் உண்டாகும் என்பதைக் குறித்து அடுத்து அடுத்து உள்ள வசனங்கள் விவரித்து காண்பிக்கின்றன.

தோல்விக்கு தோல்வி
எப்போது ஒரு மனிதன் வெற்றி வாழ்க்கை வாழ வேண்டும் என்று தீர்மானிக்கிறானோ, அப்பொழுது அவன் போராட்ட களத்தில் எதிரியை வீழ்த்த தயாராகி விட்டான் என்று எண்ணிக்கொள்ளலாம்.
இந்த களத்தில் தோல்வியின் விளிம்பை தொடாதவர்கள் இருக்க முடியாது. காரணம் வெற்றி வீரனாய் வலம் வருவதற்கு, வெற்றியில் பாடம் கற்றவர்களை விட, தோல்வியின் விளிம்பில் பாடம் கற்றவர்களே அதிகம். தோல்வியின் பாதையில் செல்லாதவரை வெற்றியின் அருமை உணரப்படுவதில்லை. ஆகவேதான் தோல்வியின் வாசனையை முகர்ந்து பார்க்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
ஆனால் அது முடிவல்ல, வெற்றியே முடிவாக இருக்கும், இவ்வித திடநம்பிக்கையுடன் போராடுபவர்களே, தோல்வியில் துவண்டு போகாமல் எழுந்து ஜெயிக்கிறவர்கள். அவர்களே, போராட்டத்தில் வெற்றியை ருசிக்க முடியும்.
ஆனால் அது முடிவல்ல, வெற்றியே முடிவாக இருக்கும், இவ்வித திடநம்பிக்கையுடன் போராடுபவர்களே, தோல்வியில் துவண்டு போகாமல் எழுந்து ஜெயிக்கிறவர்கள். அவர்களே, போராட்டத்தில் வெற்றியை ருசிக்க முடியும்.
நீ என்னுடையவன்
“கர்த்தர் சொல்லுகிறதாவது: பயப்படாதே; உன்னை மீட்டுக்கொண்டேன்; உன்னைப்
பேர்சொல்லி அழைத்தேன்; நீ என்னுடையவன்’’ (ஏசாயா 43:1)
தேவன் இஸ்ரவேல் மக்களுக்கு
தந்த வாக்குத்தத்தங்கள் எல்லாவற்றையும் நிறைவேற்றிக்கொடுத்தார், ஆவிக்குரிய இஸ்ரவேலர்களாய் இருக்கிற நாமும் இந்த வாக்குத்தத்தங்களை
கிறிஸ்து இயேசுவுக்குள் நமக்கு சொந்தமாக்கிக்கொள்ளலாம்.
இந்த உலகத்தின் பாவ
அடிமைத்தனத்தில் இருந்து நம்மை மீட்டெடுத்து,
தம்முடைய வாக்குதத்தங்களுக்கு சுதந்திரவாளிகளாக்கிய தேவனுக்கே மகிமை உண்டாவதாக.
நம்மை பெயர் சொல்லி,
அழைத்து, தம்முடைய நாமம் தரிப்பித்து, நம்மை
அதிகாரமுள்ளவர்களாய் இந்த பூமியிலே வாழ
வைத்திருக்கிற தேவன் சொல்லுகிறார்.
நம் கரங்கள் இணைந்தால்......
கிறிஸ்துவுக்குள் மிகவும் அன்பான ஜீவ
அப்பம் குடும்ப அங்கத்தினர்களுக்கு இயேசு
கிறிஸ்துவின் நாமத்தில் அன்பான வாழ்த்துக்கள்.
ஜீவ அப்பம் மாத
இதழ் மூலமாக உங்களுடன் பேசும்படியாக
உதவி செய்து வரும் தேவனை
நன்றி நிறைந்த இருதயத்துடன் ஸ்தோத்தரிக்கிறேன்.
ஒவ்வொரு மாதமும் தேவைகளை
சந்தித்து, இந்த ஊழியங்கள் சிறப்பாக
நடைபெறவும், மாத இதழ் வெளியிடவும்,
அநேக ஆத்துமாக்களை சந்தித்து, சத்தியத்தை அறிவிக்கவும், இரக்கம் பாராட்டி வரும்
தேவாதி தேவனை துதிக்கிறேன்.
அன்பு தேவனுடைய பிள்ளைகளே,
நம்முடைய வாழ்வு, ஏனோ, தானோ
என்ற வாழ்வு அல்ல, அர்த்தம்
நிறைந்த வாழ்வு, நோக்கம் இல்லாமல்
தேவன் நம்மை தெரிந்து கொள்ள
வில்லை, திட்டமில்லாமல் நம்மை இரட்சிக்கவும் இல்லை.
பலமற்றவர்களின் பலம்
“என் கிருபை உனக்குப்போதும்; பலவீனத்திலே
என் பலம் பூரணமாய் விளங்கும்
என்றார். ஆகையால், கிறிஸ்துவின் வல்லமை என்மேல் தங்கும்படி,
என் பலவீனங்களைக்குறித்து நான் மிகவும் சந்தோஷமாய்
மேன்மைபாராட்டுவேன்
அந்தப்படி நான் பலவீனனாயிருக்கும்போதே பலமுள்ளவனாயிருக்கிறேன்; ஆகையால் கிறிஸ்துவினிமித்தம்
எனக்குவரும் பலவீனங்களிலும், நிந்தைகளிலும், நெருக்கங்களிலும், துன்பங்களிலும், இடுக்கண்களிலும் நான் பிரியப்படுகிறேன்” (2 கொரி 12:9,10)
இந்த பூமியில் வாழும்
நாட்களில் பல வேளைகளில் பெலவீனங்கள்
தாக்குகிறது. அது சரீரத்திலும், ஆத்துமாவிலும்
உண்டாகிறது. பெலவீனம் இல்லாமல் வாழ்கிறவர்கள் குறைவு, பெலவீனத்தை மேற்கொண்டு
வாழ்கிறவர்கள் அதிகம். பெலவீனங்கள் வருகிறபொழுது.
சந்தேகங்களும் உடனடியாக கூடவே வந்து விடுகிறது.
காலம் கெட்டு போச்சு !
ஏலே மூதேவி விடிஞ்சி
எவ்வளவு நேரமாவுது, இன்னும் இழுத்து மூடிக்கீட்டு
கிடக்கே எந்திரிலே’’ என்று ரோஸ் அம்மா
எழுப்ப மூடி இருந்த போர்வையை
விலக்கி, கண்களை திரட்டி, முறைத்து
விட்டு, மறுபடியும், முகத்தை மறைத்து படுத்துக்கொண்டான்.
“
“ஏலே இப்ப எந்திரிக்கிறீயா மூஞ்சியில
தண்ணிய ஊத்தவா?’’ என்று சொல்ல, “சனியென்
சனியென், விடிய காலமே இதுக்கு
என்ன வந்துது, நிம்மதியா உறங்கக் கூட விடாமா
இப்பிடி கத்தி உசுர வாங்குது’’ என்று
முணு முணுத்தபடியே அருகில் இருந்த நார்க்காலியை
எட்டி உதைத்தபடியே விருட் என்று வெளியே
சென்றான் ரோஸ்
அம்மாவின் மகன் பீட்டர்.
"ஜீவ அப்பம்'' (மார்ச் 2015) மாத இதழ்
கிறிஸ்துவுக்குள் அன்பான ஜீவ அப்பம் இணைய நண்பர்களுக்கு, நமது ஆவிக்குரிய வாழ்வுக்கு
உறுதுணையாக, நமது விசுவாச வாழ்வுக்கு தேவையான செய்திகளுடன்,
கிறிஸ்துவுக்குள் நாம் வளரவும், நிலைத்து நிற்கவும், "ஜீவ அப்பம்'' மாத
இதழ் வெளி வந்து கொண்டிருக்கிறது.
எல்லாரும் இலவசமாக படிக்கும் வண்ணமாக மின் இதழாகவும் (PDF) இணையத்தில் கொடுக்கப்படுகிறது. இந்த மாத ( மார்ச் 2015) ஜீவ
அப்பம் மாத இதழை இலவசமாக பதிவிறக்கம் செய்து படியுங்கள்.
இன்னும் கொஞ்சங்காலந்தான்
என்ன இன்னும் உறங்கிக்கிட்டு இருக்கீங்க, எந்திரிங்க’’ என்று கூப்பிடும் சத்தம் கேட்டு, வேகமாக எழுந்திருந்து மணியைப் பார்த்தான் “ஏய் சீக்கிரமா எழுப்ப கூடாதா? ஐயா, வைய போராக, தூக்காளில கஞ்ச ஊத்து,’’ என்று சொல்லிக்கொண்டே, முகத்தைக் கழுவிக்கொண்டு, துண்டை எடுத்துத் தோளில் போட்டுக்கொண்டு, கொரட்டி கம்மை எடுத்துக்கொண்டு, புறப்பட, தூக்குவாளியில் இருக்கும் கஞ்சியைக் கொடுத்து, இப்ப கொஞ்சம் கஞ்சி குடிச்சுட்டு போங்க, என்று மனைவியின் வார்த்தைகளை நின்று கூடக் கேட்காதவனாய், வேண்டாம், வேண்டாம் நேரம் ஆச்சு, பிறவு குடிச்சிக்கிறேன். என்று சொல்லி விட்டு, நேரம் ஆகி விட்டதே என்ற வேகமும், துடிப்பும் அவனுடைய கண்களிலும், நடையிலும் தெரிந்தது.ஓட்டமும் நடையுமாக வேலை செய்யும் முதலாளி வீட்டை நோக்கி சென்றான்.
“என்னடா, வளவா இம்புட்டு நேரம், நேரம் என்ன ஆவுது, சீக்கிரம் போடா’’ என்று சொல்ல, ஐயா, இதோ போரேன்யா, என்று சொல்லியபடி, ஆட்டுத் தொழுவத்தை நோக்கி சென்று ஆடுகளை அவிழ்த்து, மேய்க்கும் படி, ஓட்டி சென்றான்.
மேய்ச்சலுக்குத் தயாரான ஆடுகள், வேகமாக நடக்க ஆரம்பித்தன. செல்கிற வழியில் பச்சை பசேலெனக் கண்களைப் பறிக்கும் தாவரங்களைப் பார்த்து பெருமூச்சு விட்டபடி நடக்கலாயின.
எல்லா ஆடுகளும் ஒழுங்காய் நடந்து சென்று கொண்டிருக்க, அதில் வைரவன் என்ற ஆடு மட்டும் தன் இஷ்டப்படி, போகிறவழியில் இருக்கும் எல்லாத் தோட்டத்தில் உள்ள பயிர்களையும் மேய்ந்து கொண்டே சென்றது.
அதைப் பார்த்தப் மற்ற ஆடுகள், “ம் அதை மட்டும் ஒருவரும் ஒன்றும் சொல்வதில்லை, அதை மாதிரி நாம செய்தால் இந்நேரம் எத்தனை அடி விழுந்து இருக்கும்’’ என்று சொல்ல மற்ற ஆடுகளும் ஆமாம் என்பது போல் தலையை ஆட்டின.
போகிற வழியில் கண்ணில் தெரியும் எல்லாவற்றையும் மேய்ந்து கொண்டு, மற்ற ஆடுகளைப்பார்த்து, “ஏய் பயந்தாங்களி பசங்களா, என்னை யாரும் ஒன்னும் பண்ண முடியாது, நான் எங்கு வேணுமனாலும், போவேன், என்ன வேணுமனாலும் செய்வேன், யாரும் என்னை ஒன்னும் பண்ண முடியாது’’ என்று சொல்லி, சிரித்தது வைரவன்.
அது என்னமோ, போப்பா, இது இன்னைக்கு நேத்தா நடக்குது, பல நாளா நீ இப்படிதான் பண்ணிக்கிட்டு இருக்க, உன்னிய மாதிரி நாங்களும் பண்ணினா, ஒரு பக்கம் தோட்டகாரங்க அடிப்பாங்க, இன்னொரு பக்கம், நம்ம எஜமான் அடிப்பாரு, ஆனா உன்னைய மட்டும் யாரும் ஒன்னுமே பண்ண மாட்டேங்கிறாங்க, நீ கொடுத்து வச்சவந்தான். என்று பெருமூச்சு விட, “ஆமா, ஆமா அதுக்கெல்லாம் அதிஷ்டம் வேணும், அந்த அதிஷ்டம் எனக்கு வந்திருக்கு, நீங்க என்ன பாத்து பொறாம மட்டும்தான் பட முடியும், என்னைய மாதிரி உங்களால, பண்ண முடியாது’’ என்று சொல்லியது.
இதைக் கேட்ட மற்ற ஆடுகள், தங்களுக்குள்ளாகப் பேசிக்கொண்டன. “இந்தக் கடவுள் ஏந்தான் இப்படி, வஞ்சகமா படைத்தானோ, எல்லோரையும் ஒரே மாதிரி படைக்க வேண்டியது தானே, அவனை ஒரு மாதிரி, நம்மை ஒரு மாதிரின்னு, ஏன் இப்படி ஓர வஞ்சனையாகப் படைக்க வேண்டும்’’ அவன் என்ன செய்தாலும், யாரும் கேட்க மாட்டாங்க, ஆனா நாம சின்னத் தவறு செஞ்சாலும், அதைப் பெருசா எடுத்து உடனே நம்மை அடிக்க வாராங்க, என்ன பொழப்பு இது’’ என்று சொல்ல,
இது மட்டுமா? வீட்டுக்குச் சென்றதும் நம்மை ஒரே இடத்தில் அடைத்து வைக்கின்றனர், ஆனா, அவனை மட்டும் நம்மோடு கூட அடைத்து வைப்பதும் இல்லை, கட்டி போடுவதும் இல்லை. அவன் விருப்பத்திற்கு எல்லா இடமும் சுற்றி வருகிறான்’’ இவ்விதமாக ஒன்றோடு ஒன்று தங்கள் ஆதங்கத்தை, தெரிவித்துக்கொண்டன.
இப்படியே நாட்கள் சென்றன. கோயில் திருவிழா வந்தது, அந்த வேளையில் “டேய் வளவா, இங்கே வாடா அந்த வைரவன பிடிச்சிட்டு வந்து, கோயில்ல கட்டு, நாம நேர்ந்து கொண்ட மாதிரி, அதைப் பலி செலுத்த வேண்டிய நேரம் வந்திடுச்சு,’’ என்ற சொல்ல வளவன், வைரவனைப் பிடித்துக் கோயிலுக்கு முன்பாகக் கட்டி வைத்தான்.
வைரவனுக்கோ, ஒன்றுமே புரிய வில்லை, இதுவரை நம்மை எங்கும் கட்டி போடவே மாட்டார்களே, இன்று இங்கு வந்து கட்டி போட்டு இருக்கிறார்களே, என்று திருவிழா கூட்டத்தைப் பார்த்து, அங்கும், இங்கும் விழித்துக்கொண்டிருந்தது.
தன்னுடைய நண்பர்கள் எல்லாம் ஒன்றாக ஒரு இடத்தில் இருப்பார்கள். அவர்களை எல்லாம் விட்டு விட்டு, என்னை மட்டும் ஏன் இங்குக் கொண்டு வந்திருக்கிறார்கள். என்று சிந்தித்துக்கொண்டிருக்கும் போதே, அதை அவிழ்த்து, இழுத்துச் சென்றனர்.
ஏதோ, விவரீதம் நடக்கப்போகிறது என்று மட்டும் அதற்குப் புரிந்து விட்டது.
சிறிது நேரத்திற்கெல்லாம் அதைப் பலி செலுத்தும் இடத்திற்குக் கொண்டு, சென்று பலியிட தயாரான நேரத்தில், “இத்தனை காலமாக, என் விருப்பத்திற்கும், என் இஷ்டத்திற்கும் விடப்பட்டது இதற்காகதானா? என்று சிந்தித்துக்கொண்டிருக்கும் போதே அதனுடைய தலை துண்டிக்கப்பட்டது.
துன்மார்க்கமாக வாழ்கிறவர்கள், கண்டிக்கப்படுவதில்லை, தண்டிக்கப் படுவதில்லை, தங்கள் இஷ்டப்படி நடக்கிறார்கள். என்றும் தாங்கள் உண்மையாக வாழ்கிறவர்களாக இருந்தாலும் தண்டிக்கப்படுகிறோமே என்று அநேகர் நினைப்பது உண்டு, ஆனால் வேதம் கூறுகிறது. “துன்மார்க்கன் ஆபத்துநாளுக்கென்று வைக்கப்படுகிறான்; அவன் கோபாக்கினையின் நாளுக்கென்று கொண்டுவரப்படுகிறான்’’ <யோபு 21:30> “அக்கிரமக்காரர் ஏகமாய் அழிக்கப்படுவார்கள்; அறுப்புண்டுபோவதே துன்மார்க்கரின் முடிவு <சங் 37:38>

எதை நோக்கி பயணிக்கிறது?
சில நாட்களுக்கு முன் ஒரு எழுத்தாளரின் புத்தக வெளியீட்டு விழா விற்கு இன்னொரு மதத்தை சார்ந்த என்னுடைய நண்பர் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப் பட்டிருந்தார். அந்த பாராட்டு விழாவிற்கு நண்பர் மூலமாக நானும் அழைக்கப்பட்டு, அவருடன் சென்றிருந்தேன்.
அங்கு நடைபெற்ற விஷயங்கள் முற்றிலும் மாறுபட்டவைகளாக இருப்பினும் நடைபெற்றுக் கொண்டிருந்த ஒவ்வொரு விஷயங்களையும் அமர்ந்தபடியே என் மனதில் உள்வாங்கி,சிந்திக்கலானேன்.
எழுத்துலகில் பிரபலமாகிக் கொண்டிருக்கும் ஒருவர் ஒரு குறிப்பிட்ட புராணத்தை நாவல் வடிவமாக்கிக் கொண்டிருக்கிறார், அந்த நூல்களின் வெளியீட்டு விழா, அந்த நூல் வரிசைகளை தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறார்.
அந்த புத்தக வெளியீட்டு விழாவிற்கு பிரபலங்கள் பலர் அழைக்கப்பட்டிருக்க அதில் என்னைக் கவர்ந்த விஷயங்கள் என்னவென்றால் தான் எந்த புராணத்தை நாவல் வடிவமாக்கிக் கொண்டிருக்கிறாறோ, அதே புராணத்தை தங்கள் சொற்பொழிவுகளிலும், மொழியாக்கத்திலும், ஒவியங்களிலும் பிரபலப்படுத்திக்கொண்டிருக்கும் தன் சகாக்களைக் கண்டறிந்து அவர்களை அழைத்து, சிறப்பித்து, வாழ்த்தி, கனப்படுத்தி, உற்சாகப்படுத்தி, கௌரவித்து, பாராட்டி, மெமோண்டோ கொடுத்தார் அந்த எழுத்தாளர்.
அதில் எனது நண்பரும் ஒருவர், அவர் அந்த புராணத்தை மொழியாக்கம் செய்து கொண்டிருக்கிறார்.
அடிமைத்தனமா? சுயாதீனமா?
பரிசுத்தமாக வாழவேண்டும், வெற்றி வாழ்க்கை வாழ
வேண்டும் என்று அநேகர் விரும்பினாலும்
ஏன் அநேகரால் வாழ முடிய வில்லை
என்பதை குறித்து பார்த்து விட்டு, எப்படி வாழலாம்
என்பதைக்குறித்தும் வேத வசனத்தின் அடிப்படையில்
கவனிப்போம்.
கிறிஸ்தவ பெயரோடு, இருப்பதால் உலகத்தினர் பார்வையில் கிறிஸ்தவர் என்று அறியப்பட்டாலும், கிறிஸ்துவுக்குள்ளான
வாழ்வு என்பது கிறிஸ்துவைப்போல் வாழும்
வாழ்வாகும்.
கிறிஸ்துவைப்போல் வாழும் வாழ்வு மகிழ்ச்சியாகவும்,
மனநிறைவாகவும் இருக்கும், தேவன் நம்மை கிறிஸ்துவின்
சாயலாக மாற்றி, கிறிஸ்துவினால் உண்டாகும்
ஆசீர்வாதங்களுக்கு நம்மை உடன் சுதந்திரராக
வைக்கிறார்.
நீ மேன்மையடைவாய்
தேவனுடைய வார்த்தைகள் வல்லமையுள்ளது. தேவன் நமக்கு கொடுக்கும் வாக்குத்தத்தம் நிறைவானது. ஒவ்வொரு நாளும் தேவன் தம்முடைய வார்த்தை களினாலே நம்மை நிறைந்து நடத்தி வருகிறார். தேவன் நமக்கு தரும் வார்த்தைகளை தியானித்து, ஆசீர்வாதங்களை சுதந்தரித்துக்கொள்வோம்.
”எவரையும் மேன்மைப்படுத்தவும் பலப்படுத்தவும் உம்முடைய கரத்தினால் ஆகும்’’ (1 நாளாகமம் 29:12) இந்த வார்த்தையானது ஜெபமாகவும், துதியாகவும் தேவ சமூகத்திலே, தாவீது மூலமாக ஏறெடுக்கப்படுகிறது.
”எவரையும் மேன்மைப்படுத்தவும் பலப்படுத்தவும் உம்முடைய கரத்தினால் ஆகும்’’ (1 நாளாகமம் 29:12) இந்த வார்த்தையானது ஜெபமாகவும், துதியாகவும் தேவ சமூகத்திலே, தாவீது மூலமாக ஏறெடுக்கப்படுகிறது.
அமாவாசை சிறப்பானதா?
இக்காலத்திலே கிறிஸ்தவத்தில் வேதத்தின் அடிப்படையை
விட்டு, விரும்பத்தகாத காரியங்கள் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. காரணம். தன் சுய அனுபவங்களை
முன் வைத்து செயல்படுவதால்தான். அவைகளில் ஒன்றுதான்அமாவாசை, பவுர்ணமி என்ற பெயரில்
நடைபெறும் ஜெபங்கள். இது இந்நாட்களில் ஒருவரைப் பார்த்து, ஒருவர், அவரைப்பார்த்து இன்னொருவர்
என்று பெருகிக் கொண்டிருக்கிறது.
ஜெபம் எந்த நாளிலும் வைக்கலாம்,எந்த நாளையும்
சுவிசேஷம் அறிவிக்க பயன்படுத்தலாம். சிலர் குறிப்பிடுவதுபோல் அமாவாசை நாளிலும் வைக்கலாம்.
ஆனால் அதற்கு “அமாவாசை ஆசீர்வாத ஜெபம் ?’’ “அமாவாசை விடுதலை ஜெபம்? ‘’ அமாவாசை அற்புத
ஜெபம்?’’ என்று பெயர் சூட்ட வேண்டாம் என்பதே இந்த செய்தியின் சாரம்.
ஏன்
பெயர் சூட்டக்கூடாது? என்று
கேட்பவர்களுக்கு, அமாவாசைக்கும் கிறிஸ்துவுக்கும் என்ன சம்மந்தம். அதே போல் அமாவாசை
பிரபலமாகும் அளவிற்கு, சுவிசேஷமோ, கிறிஸ்துவோ, அமாவாசையை தேடி வரும் மக்களுக்குள்ளாக
பிரபலமாகாதிருப்பதுதான்.
அமாவாசையில் எதோ வித்தியாசம் நடக்கும் அதுதான்
சிறப்பு,என்பதுதான் மக்களிடத்தில் இருக்கிறதே தவிர, கிறிஸ்துவிடத்தில்தான் எல்லாம்
இருக்கிறது. அவரிடத்தில் எல்லா நாளும் சிறப்பு உண்டு என்பது மக்களிடத்தில் காணாமல்
போகிறதே,
அமாவாசைக்கு
சிறப்பு இருக்கிறதா? மற்ற
மத நம்பிக்கை உள்ளவர்கள் மத்தியில் அமாவாசையைக் குறித்த சிறப்புகளும், பயங்களும் கலந்திருக்கிறது.
ஆனால் மற்ற நாளுக்கும் அமாவாசைக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பதே கிறிஸ்தவத்தின்
விசுவாசம்.
அமாவாசைக்கு அர்த்தம் கற்பிக்க சிலர் பழைய
ஏற்பாட்டில் வரும் சில வசனங்களை மேற்கோள் காட்டுவார்கள். அந்த வசனங்களையும், அதன் பின்னணிகளையும்,
சம்பவத்தையும் வேதத்தின் வெளிச்சத்திலேயே ஆராய்வோம்.
“இது
அமாவாசியும் அல்ல, ஓய்வுநாளும் அல்லவே; நீ இன்றைக்கு அவரிடத்துக்குப் போகவேண்டியது
என்ன என்று கேட்கச்சொன்னான்’’
(2 இராஜாக்கள் 4:23) என்று சூனேமியாளின் கணவன் கேட்டதாக வேதம் நமக்கு காண்பிக்கிறது.
இந்த வார்த்தைகள் இங்கு பயன்படுத்தப்பட்ட
நோக்கத்தை நேரடியாக நாம் அறிந்து கொள்ளுதல் நல்லது.
இஸ்ரவேல் மக்களுக்கு அமாவாசையே மாதத்தின்
முதல் நாளாக இருந்தது. எனவே மாதத்தின் முதல் நாளிலேயே இஸ்ரவேலர்களின் பண்டிகைகள் ஆரம்பமாகும்,
அந்த நாட்களிலேயே இஸ்ரவேலர்கள் தேவ சமூகத்திற்கு
செல்வது உண்டு.
இதைக்குறித்து வேதாகமம் சொல்லுவதை
கவனிப்போம்.
“உங்கள்
மகிழ்ச்சியின் நாளிலும், உங்கள் பண்டிகைகளிலும், மாதப்பிறப்புகளிலும், உங்கள் சர்வாங்க
தகனபலிகளும் சமாதானபலிகளும் செலுத்தப்படும்போது பூரிகைகளை ஊதவேண்டும்; அப்பொழுது அவைகள்
உங்கள் தேவனுடைய சமுகத்தில் உங்களுக்கு ஞாபகக்குறியாயிருக்கும்; நான் உங்கள் தேவனாகிய
கர்த்தர் ’’ (எண்ணாகமம் 10:10)
“உங்கள்
மாதப்பிறப்புகளில் நீங்கள் கர்த்தருக்குச் சர்வாங்க தகனபலியாக இரண்டு காளைகளையும்,
ஒரு ஆட்டுக்கடாவையும், ஒரு வயதான பழுதற்ற ஏழு ஆட்டுக்குட்டிகளையும் செலுத்தக்கடவீர்கள்’’
( எண்ணாகமம் 28:11).
மாதத்தின் முதலாம் நாளில் தேவ சமூகத்தில்
வந்து பலி செலுத்த தேவன் கட்டளை கொடுக்கிறதை
மேலே உள்ள வசனங்கள் நமக்கு காண்பிக்கிறது.
“நாள்தோறும்
காலையிலும் மாலையிலும் கர்த்தரைப் போற்றித் துதித்து, ஓய்வுநாட்களிலும், அமாவாசைகளிலும்,
பண்டிகைகளிலும், கர்த்தருக்குச் சர்வாங்க தகனபலிகள் செலுத்தப்படுகிற சகல வேளைகளிலும்’’
(1 நாளாகமம் 23:30) என்று மாதத்தின் முதலாம் நாளையே வேதம் அமாவாசை என்று சொல்லுவதை
கவனிக்க வேண்டும். எனவே பழைய ஏற்பாட்டு வசனங்கள் முக்கியத்துவப்படுத்துவது அமாவாசையை
அல்ல, மாதத்தின் முதலாம் நாளை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
எல்லா புறவின மக்களும் (இஸ்ரவேலர் அல்லாதோர்)
சூரியனை வைத்து தங்கள் நாட்குறிப்புக்களை வைத்திருக்க, இஸ்ரவேல் மக்களின் நாட்குறிப்புக்கள்
சந்திரனை வைத்தே குறிக்கப்படுவதால் இஸ்ரவேலர்களுக்கு அமாவாசை அன்றே மாதத்தின் முதல்
நாளாக கணக்கிடப்பட்டு வந்ததாக அறிய முடிகிறது.
எனவே இஸ்ரவேலர்கள் ஓய்வு நாளை எப்படி கடைப்பிடித்தார்களோ,
அதே போன்று, மாதத்தின் முதலாம் நாளிலும் தங்கள் பண்டிகை நாட்களை கடைப்பிடித்து வந்திருக்கிறார்கள்.
ஆகையால்தான் தன்னுடைய மகனை பிழைக்க வைக்கும்
படி தேவ மனிதனாகிய எலிசாவிடத்திற்கு ஆள் அனுப்பி அவரை வரசொல்ல வேண்டும் என்று தன் கணவனிடத்தில்
சொன்னபொழுது விஷயம் அறியாத சூனேமியாளின் கணவன், இன்று மாதத்தின் முதல்நாளும்(அமாவாசி)
இல்லை. ஓய்வு நாளும் இல்லையே பின்பு ஏன் அவரிடத்திற்கு போக வேண்டும்? என்று காரணம்
கேட்கிறான்.
மேலும் வருடத்தின் முதல் மாதத்தில் முதலாம்
நாள் மிகவும் விஷேசமாக கருதப்பட்டிருக்கிறது, ஆகையால்தான் 1 சாமுவேல் 20: 5,6 ல் “தாவீது யோனத்தானை நோக்கி: இதோ, நாளைக்கு அமாவாசி,
நான் ராஜாவோடே பந்தியிருந்து சாப்பிடவேண்டியதாயிருக்கும்; ஆனாலும் நான் மூன்றாம் நாள்
சாயங்காலமட்டும் வெளியிலே ஒளித்திருக்கும்படி எனக்கு உத்தரவு கொடும்.
உம்முடைய தகப்பன் என்னைக் குறித்து விசாரித்தால்,
தன் ஊராகிய பெத்லகேமிலே தன் குடும்பத்தார் யாவரும் வருஷத்துக்கு ஒருதரம் பலியிடவருகிறபடியால்
தாவீது அவ்விடத்திற்குப் போக என்னிடத்தில் வருந்திக்கேட்டான் என்று நீர் சொல்லும்’’ என்று தன்னை கொல்ல திட்டமிட்டிருக்கும் சவுலுக்கு
முன்பாக போகாமல் தப்பித்துக்கொள்வதற்கு வருடத்தின் முதலாம் மாதத்தில் முதலாம் நாளில்
குடும்பமாக பலி செலுத்த செல்ல வேண்டும் என்று சொல்லச்சொல்லி தாவீது சொல்லுவதைதான் மேலே
உள்ள வசனங்களில் வாசிக்கிறோம்.
இவ்வசனங்கள் அமாவாசயை முக்கியத்துவப் படுத்த
வில்லை. எனவே இவ்வசனங்களை மேற்கோள்காட்டி,
அமாவாசை பழைய ஏற்பாட்டில் முக்கியத்துவப் படுத்தப்பட்டதாக கருதக்கூடாது.
இந்த வசனங்கள் மாதத்தின் முதலாம் நாளில்
கர்த்தருடைய சமூகத்தில் செலுத்தப்படும் பலிகளையே முக்கியத்துவப்படுத்துகிறது.
இதைத்தொடர்ந்து புறவினத்தவரின் செயல்களான
ஜோசியம், நட்சத்திரம் பார்க்கும் செயலுடன் அமாவாசி நாளை கணிப்பதையும் சுட்டிக்காட்டி,
தேவன் கடிந்து கொள்வதை ஏசாயா 47:13 ல் வாசிக்கலாம்.
தேவனால் அமாவாசையை கணிப்பவர்கள் கண்டிக்கப்படுவதின்
மூலமாக அமாவாசைக்கு முக்கியத்துவம் இல்லை என்பதை நன்றாக அறிந்து கொள்ள முடிகிறது.
இவைகள் மட்டுமல்ல, நமக்கு அமாவாசை மாதத்தின்
முதலாம் நாள் அல்ல, நாம் இப்போது பயன்படுத்தி வரும் காலண்டர் முறைகள் சூரியனை வைத்தே
கணிக்கப்பட்டு, அதைதான் நாம் நடை முறைப்படுத்தி வருகிறோம்.
மேலும் பழைய ஏற்பாட்டு, பலிகள் இயேசு கிறிஸ்தவின்
மூலமாக நீக்கப்பட்டு, இன்று நம்மையே ஜீவ பலியாக தேவ சமூகத்தில் அர்ப்பணித்து தொழுது
கொள்ள வேண்டும் என்று வேதம் நமக்கு சொல்லுகிறது.
நாட்கள், முக்கியத்துவப்படுத்தப்படாமல்,
கிறிஸ்துவே முக்கியத்துவ படுத்தப்படுகிறார். நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை
எல்லா நாளும் நாம் தொழுது கொள்ளவே வேதம் நமக்கு கற்றுத்தருகிறது.
எங்கு தொழுது கொள்ள வேண்டும் என்று கேட்ட
சமாரியா ஸ்திரீயிடம், இயேசு கிறிஸ்து எப்படி தொழுது கொள்ள வேண்டும் என்று கூறுவதை யோவான்
சுவிசேஷத்தில் வாசிக்கிறோம்.
எனவே இந்நாட்களிலும் அமாவாசை பெயரால் பலவித
தலைப்புகளில் நடத்தப்படும் ஜெப ஆராதனைகள் அமாவாசையை
மட்டும் முக்கியத்துவப்படுத்தி, அமாவாசையை சிறப்பு நாளாக்கிக்கொண்டிருப்பது போல் இருக்கிறது.
மற்ற ஆராதனை நாட்களை விட எந்த விதத்திலும்
அமாவாசை நாளிலே நடத்தப்படும் ஆராதனைகள் சிறப்பு இல்லை. ஆனால் கிறிஸ்துவை அறியாத மக்களிடத்திலும்,
ஏன் கிறிஸ்தவர்களிடத்திலும் கூட மற்ற ஆராதனைகளை விட அமாவாசை ஆராதனைகள் சிறப்பு ஆராதனையாக
கருதப்பட்டு வருவதற்கு என்ன காரணம்.? அமாவாசை பெயரால் நடத்தி, அதற்கு சிறப்பு விளம்பரம்
கொடுப்பதால்தான்.
இது நாளடைவில், மக்களை கிறிஸ்துவை விட்டு
விலக்கி, அமாவாசையோடு ஐக்கியமாக்கி, அமாவாசைக்கு அடிமைப்படுத்தி விடும் கவனம் தேவை.
நமது தேச மக்களிடத்தில் அமாவாசை பயம் அதிகமாகிக்கொண்டே
இருக்கிறது. அதை கிறிஸ்தவத்திற்குள்ளும் அனுமதிக்க வேண்டாம்.
தவறு செய்கிறவர்களுக்கும், திருடர்களுக்கும்,
மற்றவர்களுக்கு தீங்கு செய்கிறவர்களுக்கும், பிசாசின் ஆவிகளுடன் இணைந்து பில்லி சூனியம்,
மந்திரம், ஏவல் செய்கிறவர்களுக்கு இருட்டு மிகவும் வசதியாக இருக்கும் என்பதால்தான்
கும் இருட்டான அமாவாசை நாளை தேர்ந்தெடுக்கிறார்களே தவிர அந்த நாளில் அவர்களுக்கும்
சிறப்பு ஒன்றும் இல்லை.
எனவே
பிசாசுகளை விரட்டுவதற்கும், பிசாசின் கிரியைகளை அழிப்பதற்கும் நமக்கு அமாவாசை
மட்டுமல்ல, இயேசுவின் நாமத்தில் எல்லா நாளும் சிறப்பான நாட்கள்தான். விடுதலை ஊழியமும்,
விடுதலை ஊழியரும் எல்லா நாட்களும் பிரகாசிப்பார்கள். இதுவே தேவன் அவர்களுக்கு தந்திருக்கும்
சிறப்பு.
கிறிஸ்துவை அறியாதவர்களுக்கு அன்றைய தினம்
சுவிசேஷம் அறிவிக்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் நடத்தப்படுவதாக இருந்தாலும், அது
நாளடைவில், அமாவாசையை முக்கியத்துவ படுத்துவதாகவே மக்கள் திருப்பி விடுகின்றனர்.
இந்த செய்தியின் வாயிலாக அறிவிக்கப்படும்
செய்தியும், அறிந்து கொள்ள வேண்டிய செய்தியும் இதுதான். எந்த நாளிலும் ஆராதனை, ஜெபம்
நடத்தலாம் நடத்தவே கூடாது என்று சொல்வதற்கு யாருக்கும் உரிமை இல்லை. ஆனால் அமாவாசை
ஜெபம், அமாவாசை ஆசீர்வாத ஜெபம், அமாவாசை விடுதலை ஜெபம், அமாவாசை சிறப்பு ஆராதனை என்ற
தலைப்புக்களில் நடத்த வேண்டாம், இது அமாவாசையில் ஏதோ சிறப்பு இருக்கிறது என்பது போல்
காண்பித்து விடும்.
எனவே விடுதலை ஆராதனை, ஆசீர்வாத ஆராதனை, நற்செய்தி
ஆராதனை என்று பெயர் வைத்துக்கொள்ளலாம் அதற்கு முன்பாக இருக்கும் “அமாவாசை’’யை நீக்குவதே
நல்லது. செய்வார்களா? அப்படி நடத்துகிறவர்கள். பொருத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
லாபமா? நஷ்டமா?
மனிதர்கள் எப்போதும் வருமானத்தில் மட்டும்தான் லாப, நஷ்டக் கணக்கு பார்க்கிறார்கள். ஆனால் வாழ்க்கையில் லாப, நஷ்டக் கணக்கு பார்க்கிறவர்கள் மிகவும் குறைவு.
என்ன செய்தால் லாபம் ஈட்டலாம். எப்படிச் சம்பாதிக்கலாம் என்பதுதான் நாள் முழுவதும் மனிதனின் எண்ணங்கள், செயல்கள். ஆனால் இவைகளை எல்லாம் தாண்டி உண்மையான லாபம் மனிதனுக்கு எது என்றால் கிறிஸ்துவை ஆதாயப்படுத்திக்கொள்வதே.