Bread of Life Church India

உயர்ந்த நிலைக்கு செல்லவே!

வாழ்க்கையென்கிற ஓட்டத்தில் தெரிந்தோ, தெரியாமலோ, புரிந்தோ புரியாமலோ, விரும்பியோ விரும்பாமலோ அநேகர் ஓடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஒன்றை மட்டும் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும்.
     தான் போக வேண்டிய இடத்தை, சரியாக அறியாமல் பயணம் செல்பவன் வழியெல்லாம் குழப்பத்தோடு செல்வான். புறப்படும்பொழுது, போகவேண்டிய இடத்தையும், போய் என்ன செய்ய வேண்டும் என்பதையும், தீர்மானித்து தன் பயணத்தை ஆரம்பிக்கிறவன் நிச்சயத்தோடு ஆரம்பிக்கிறான். மேலும், தீர்மானிக்கப்பட்டதில் உறுதியாக இருந்து, திறம்பட செயல்படுகிறவன், சிறந்த ஒரு லட்சியவாதியாக நின்று, சாதனைக்கு பங்குள்ளவனாக இருக்கிறான். மனிதர்களாகிய நமக்கு, வாழ்க்கையின் நிச்சயம், பயணத்தின் லட்சியம் தெரிந்திருக்கும்பொழுது, உண்மையாகவே நமது வாழ்வு சிறப்பான வாழ்வாக இருக்கும்.

தடுமாற்றத்தின் காரணம்

விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான் பின் வாங்கிப் போவானானால் அவன் மேல் என் ஆத்துமா பிரியமாயிராது (எபி 10:38) என்றும் மேலும்   ஆபகூக் 2:4, ரோமர் 1:17, கலா 3:11 வேதாகமத்தில் அதிக இடங்களில் விசுவாசத்தால் வாழ்வோம் என்று கூறும் வேதம், விசுவாசத்தில் போராடும்படியான அழைப்பையே (1திமோ6:12, யூதா 3) ஒவ்வொரு மனிதனுக்கும் கொடுக்கிறது. மேலும், விசுவாசத்தின் மேன்மையை உணர்த்தி, மறுபடியும் மறுபடியும் தேவன் அழைக்கிற அழைப்பும் விசுவாசத்தில் நிலைத்திருக்கும் படியாகவே உள்ளது.

அரணை காத்துக்கொள்

வாழ்க்கை பயணத்தில் சமாதானமும், மகிழ்ச்சியையும் மனிதர் யாவரும் விரும்புவர். ஆனால் நினைப்பது ஒன்று நடப்பது வேறொன்று என்பது போல் இவைகளை கெடுக்கும் படியாகவே ஒரு மனிதனுக்கு முன்னும், குடும்பத்துக்கு முன்னும் எதிரியான பிசாசு சிதறடிக்கிறவனாக வருகிறான். பாதுகாப்பு வட்டத்துக்குள் வரும்படி மனிதனுக்கு வேதம் அழைப்பு விடுக்கிறது.

நன்மை எங்கிருந்து வரும்?

    
மனிதரின் சிந்தையில் எப்பொழுதுமே ஒரு எண்ணம் ரீங்காரமிட்டுக் கொண்டே இருக்கும் "நன்மை எங்கிருந்து வரும்" நமக்கு யார் நன்மை செய்வார், எவ்விதத்திலேயாகிலும் நன்மை கிடைக்காதா, என்ற எண்ணம் தான். ஆனால் உண்மையாக நடப்பது என்ன? பெரும்பாலான நபர்களை பார்த்து மனம் நொந்து போவது தான் வாழ்க்கையில் மிச்சமாக இருக்கும். ஆனால் உண்மையாகவே மனிதர் களின் வாழ்வில் நன்மை வருமென்றால் அது ஒருவரிடமிருந்து தான் வரும்.

எதை நோக்கி பயணம் ?

வாழ்க்கை என்பது பயணம். இப்பயணத்தின் ஆரம்பம் எது? பயண த்தின் நோக்கமென்ன? இப்பயணம் முடிவ டையும் இடம் எது? காரணமில்லாமல் எந்த செயலுமில்லை. அர்த்தமில்லாமல் வாழ்க்கையில்லை.
    உலக வரலாற்றில் எவ்வளவோ மனிதர்கள் தோன்றி மறைந் திருக்கிறார்கள். அதில் சிலர் மட்டுமே மனதில் நிற்பார்கள். மனதில் நிற்பவர்களிலும் உயர்ந்து நிற்பவர்தான் ஆண்டவ ராகிய இயேசு கிறிஸ்து. மனித வாழ்வின் அர்த்தத்தையும், மேன்மையையும் உணர்த்திக் கொடுப்பதே இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாறு, அதுவே தேவன் மனிதனுடைய கரங்களில் கொடுத்திருக்கும் வேதம்.

இழந்ததைக் கொடுக்கவே...!

உடைந்தவை முன்போல் ஒட்டாது என்பது பழமொழி. இது நடைமுறைவாழ்வில் நிதர்சனமான உண்மை. இது போல் மனிதனின் வாழ்வில் ஒட்டவே வைக்க முடியாதபடி உடைத்து போட்டவைகளில் மிக முக்கியமானவை மூன்று.


1)மனிதனுக்கும் மனிதனுக்குமுள்ள ஐக்கியம்.
2) தேவனுக்கும் மனிதனுக்குமுள்ள உறவு.
3) தேவன் மனிதனுக்கு கொடுத்த சமாதானம்.

    இவைகளை எப்படியாகிலும் திரும்ப பெற்றிட வேண்டுமென்கின்றதவிப்பு ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இல்லாமலில்லை. இதற்க்காக மனிதயினம் சுயமாக எடுக்கும் பிரயாசங்களும், துடிப்புகளும், எதையும் செய்ய துணியும் முடிவுகளும் சாதகமாக இல்லை. பாதகமாகவே முடிகின்றது என்பது மறுக்கமுடியாத சரித்திர உண்மை.

நீதியை நிறைவேற்றிய கிருபை

   
நியாயப் பிரமாணத்தை ஆனாலும் தீர்க்க தரிசனங்களை ஆனாலும் அழிக்கிறதற்கு வந்தேன் என்று எண்ணிக் கொள்ளாதேயுங்கள்; அழிக்கிறதற்கு அல்ல, நிறைவேற்றுகிறதற்கே வந்தேன். (மத் 5:17,18) என்று இயேசு கிறிஸ்து நமக்கு போதிக்கிறார்.நியாயப்பிரமாணம் என்றால் என்ன ?

    தேவன் இஸ்ரவேல் மக்களோடு செய்து கொண்ட உடன்படிக்கை தொடர்பாகவே கட்டளைகள் கொடுக்கப்பட்டன.
    இஸ்ரவேலர் தேவனுக்குச் சொந்தமானவர்கள் அவர்கள் தேவனுக்கு உண்மையும், கீழ்படியுதலும் உள்ளவர்களாயிருக்க வேண்டும் என்றும், அவர்கள் அனுசரிக்க வேண்டிய காரியங்கள் அனைத்தையும் இந்தக் கற்பனைகள் எடுத்துக் காட்டின. மேலும் இந்தச்சட்டம் தேவனுடைய இயல்பான தன்மையையும் ஒழுக்கத்தையும் காட்டுகிறது. அதாவது, அவரது அன்பு, பரிசுத்தம், நற்பண்பு, நீதி, தீமையை வெறுத்தல் ஆகியவை இதன்மூலம் வெளிப்படுத்தப் படுகின்றது.