எதை நோக்கி பயணம் ?
வாழ்க்கை என்பது பயணம். இப்பயணத்தின் ஆரம்பம் எது? பயண த்தின் நோக்கமென்ன? இப்பயணம் முடிவ டையும் இடம் எது? காரணமில்லாமல் எந்த செயலுமில்லை. அர்த்தமில்லாமல் வாழ்க்கையில்லை.
உலக வரலாற்றில் எவ்வளவோ மனிதர்கள் தோன்றி மறைந் திருக்கிறார்கள். அதில் சிலர் மட்டுமே மனதில் நிற்பார்கள். மனதில் நிற்பவர்களிலும் உயர்ந்து நிற்பவர்தான் ஆண்டவ ராகிய இயேசு கிறிஸ்து. மனித வாழ்வின் அர்த்தத்தையும், மேன்மையையும் உணர்த்திக் கொடுப்பதே இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாறு, அதுவே தேவன் மனிதனுடைய கரங்களில் கொடுத்திருக்கும் வேதம்.
மனிதனுடைய நாட்கள் புல்லுக்கு ஒப்பாகவும், பூவுக்கு ஒப்பாகவும் சொல்லப்படுவது உண்மைதான். காரணம் வேதமும் அதை ஆமோதிக்கிறது (சங் 103:15,16). அப்படிப்பட்ட மனிதனுடைய வாழ்க்கையை தேவன் தமது கரங்களில் எடுக்கிறார்.
எந்த ஒரு மனிதனுடைய வாழ்க்கை தேவனுடைய கரத்திற்குள் வருகிறதோ, அந்த மனிதன் சரித்திரத்தில் நிற்கிறான். அது மாத்திரமல்ல, அழிவில்லா வாழ்வை அதாவது நித்தியமான வாழ்வைப் பெறுகிறான். நித்தியமான வாழ்வு என்பது சாத்தியமா? அப்படி எண்ணுவது முற்போக்கு சிந்தனையும் எண்ணமும் உள்ள மனிதனுக்கு அழகா? கண்களில் பார்க்காத ஒன்றை உண்மையாக்க முயற்சி செய்தால், அது மக்களை ஏமாற்ற பயன்படுத்தும் வித்தையே தவிர வேறல்ல என்று சொல்கிறவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
அப்படிப் பட்டவர்களுக்கும் தனது வாழ்க்கையின் மூலமாக பிறப்பு, வாழ்வு, மரணம், உயிர்த்தெழுதல் மறுவாழ்வு என்பவை உண்டு என்பதை வாழ்க்கையின் மூலமாக சரித்திரத்தில் உண்மையாக வாழ்ந்து காண்பித்தவரே இரட்சகர் இயேசு கிறிஸ்து.
மனிதன் பிறக்கிறான், வாழ்கிறான், மரிக்கிறான். இது தான் மனித இனம். சிருஷ்டிக்கப்பட்டது முதல் நடைமுறையில் இருக்கும் உண்மை. ஆனால் மனிதனுக்கு உயிர்த்தெழுதல் உண்டு, மறுவாழ்வுண்டு, மனித வாழ்வு இப்பூமியோடு முடிந்து போகக் கூடிய வாழ்வல்ல, என்பதை வெறும் வாய் வார்த்தையின் மூலமாக மட்டுமல்லாது, யாவரும் காணும்படியாக உயிர்த்தெழுந்தார். இன்றைக்கும் உயிரோடிருக்கிறார், சரித்திர நாயகன் இயேசு கிறிஸ்து.
இந்த விசுவாச வாழ்வுக்கே இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் மனிதர் ஒவ்வொருவரும் ஜாதி, மதம், இனம், மொழி வேறுபாடின்றி அழைக்கப் படுகின்றனர். இயேசுவானவர் ஒவ்வொருவரையும் அழைப்பது மேலான உயிர்த்தெழுதலுக்கும், நித்தியமான வாழ்வுக்குமே சற்று ஆழ்ந்து சிந்திப்போமா!

பயணத்தின் ஆரம்பம்
மனித வாழ்வு அறியாமையில் ஆரம்பித்து அறியாமை யில் முடிந்து கொண் டிருக்கிறது. ஆரம்பமும் தெரியவில்லை முடிவும் தெரியவில்லை. இதுதான் மனிதனின் கூற்று. ஆனால் இதற்கு பதில் வேதத்தில் இருக்கிறது.
மனிதன் இவ்வுலகில் பிறப்பதற்கு முன் எங்கே இருந்தான். இயேசுவானவர் கூறுகிறார் ``நீங்களும் ஆதி முதல் என்னுடன் கூட இருந்தபடியால் எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் (யோவான் 15:27). வேதம் கூறுகிறது ``அவர் உலகத் தோற்றத்துக்கு முன்னே கிறிஸ்துவுக்குள் நம்மைத் தெரிந்து கொண்டபடியே'' (எபே 1:4). இவ்விதமாக நித்தியத்திலிருந்தே மனிதனுடைய வாழ்க்கை ஆரம்பிக்கிறது.
அது ஆதி தகப்பனிடமிருந்து சந்ததியாக வந்து சரீரமும் ரத்தமுமாக இப்பூமியில் பிறக்கிறான். மனிதன் பிறந்தது முதல் இறப்பை நோக்கியே நகர்கிறோம் என்று எண்ணுகிறான். ஆனால் வேதம் கூறுகிறது, மறுபடியும் நித்தியத்திற்குள்ளாகவே நுழைகிறான் என்று. இதை எப்படி அறிந்து கொள்வது. இயேசுவானவர் மற்ற மனிதர்களைப் போல் தகப்பனின் வித்தாக வராமல் ``காரணம் இருப்பவர் பிறக்கிறார்''. ஆகவே இயேசுவானவரின் பிறப்பு எதற்கு முன்மாதிரியாக இருக்கிறதென்றால் முந்திய நித்தியத்திலிருந்தே மனிதனின் வாழ்வு ஆரம்பமானது என்பதை அழுத்தம் திருத்தமாக, தெள்ளத்தெளிவாக சரித்திரத்தில் காண்பிக்கிறது.
நித்தியத்திலிருந்து வந்ததையே மனிதன் மறுக்கிறான். இன்னும் ஒரு படி மேலாகச் சென்று ஆராய்ந்தால் மனிதன் மனிதன் என்பதையே மறக்கிறான் என்பதுதான் உண்மை. காட்டில் வாழும் மிருகங்கள் கூட தனது இனத்தை அழிக்க நினைக்காது. ஆனால் மனிதன் மட்டுமே மனிதனை ஏமாற்றுவான், கொள்ளையிடுவான், துன்புறுத்துவான், அழித்து விடவும் தயங்கு வதில்லை. இது நடைமுறை வாழ்வில் நாம் கண்கூடாக பார்த்துக் கொண்டு வரும் நிஜம்.
மனித வாழ்வின் நோக்கம், கூடி வாழ்வது நேசத்தைப் பிறர் மீது காண்பிப்பதும், அன்பு செலுத்துவதுமே ஆகும். இதையே தனது வாழ்வின் மூலம் முன்மாதிரியை காண்பித்துக் கொடுத்தார் இயேசு கிறிஸ்து. ``தன்னைப் போல் பிறனை நேசி'' மனித வாழ்வின் பெரும் மாற்றத்தை (ஏற்படுத்தின) ஏற்படுத்தும் வார்த்தை.
தன்னைப் போல பிறனை நேசிக்கச் சொல்லி கொடுப்பது எளிது. ஆனால் இயேசுவானவர் சொல்லி மட்டும் கொடுக்கவில்லை. தன்னை அழிக்க வந்தவர்களையும் அரவணைத்தார். தன்னை அடித்தவனையும் உண்மையாக உள்ளப்பூர்வமாக நேசித்தார். இதுதான் பூமியில் வாழும் நம்மிடமும் தேவன் எதிர்பார்க்கும் மேலான குணம். பூமியில் வாழும் நாட்கள் வெறும் புசிப்பும் குடிப்பும் மட்டுமல்ல!
ஒரு மனிதனைப் பார்த்து ``ஏன் சாப்பிடுகிறாய்'' என்று கேட்டால் ``வாழ்வதற்காக'' என்று பதில் கூறுவான். ``ஏன் வாழ்கிறாய்'' என்று கேட்டால் ``சாப்பிடுவதற்காக'' என்று பதில் சொல்லுவான். மனித வாழ்க்கை சாப்பிடுவதற்காகவா? வாழ்வதற்காகவா? என்னதான் சாப்பிட்டாலும் ஒரு நாள் நிச்சயம் முடிவு உண்டுதான். எப்படித்தான் வாழ்ந்தாலும் அப்பொழுதும் முடிவு உண்டுதான்.
ஆகவே, மரணத்தை நினைத்து வாழும்படியாக சொல்லவில்லை ``மரணத்திற்குப் பின்னும் ஒரு வாழ்க்கை இருக்கிறது என்பதை எண்ணி வாழ்க்கை பயணத்தை தொடர்வதுதான் நல்லது. ``ஏன் பிறந்தேன்'' என்று ஒரு மனிதன் தன் வாழ்நாட்களில் சிந்தித்துப் பார்ப்பதற்குள் வாழ்வின் பாதி நாட்கள் கடந்து போயிருக்கும்''. என்ன செய்யப் போகிறேன் என்று எண்ணுவதற்குள் மீதி நாட்களும் போய்விடும். ``இதைத்தான் செய்ய வேண்டும்'' என்று முடிவு எடுப்பதற்குள் வாழ்க்கையே முடிந்து விடும். வாழும் நாட்களில் தான் பிறந்ததின் நோக்கத்தையும், தான் செய்ய வேண்டிய காரியத்தையும் செய்து முடிக்க வேண்டிய செயலையும், தொடர்ந்து வாழப்போகும் ``நித்திய வாழ்க்கையையும்'' சரியாக அறிந்து கொள்ள வேண்டுமானால் மனந்திறந்து, பரிசுத்த வேதாகமத்தை வாசித்து பயனுள்ள இப்பூமி வாழ்வை மட்டுமல்ல என்றும் அழியாத பரலோக வாழ்வையும் பெற்றுக் கொள்ளலாம். மனித சத்தங்கள் நிறைந்த இப்பூமியில் மாதேவனின் சத்தத்தை கேட்க வேண்டுமா? பரிசுத்த வேதாகமத்தை திறந்து உள்ளத்தோடு கற்றுக் கொள்ள ``வாஞ்சிக்கும் குழந்தையைப் போல நெருங்க வேண்டும்.'' (1 பேதுரு 2:3)
உயிர்த்தெழுதல் உண்டா?
இக்கேள்வி அன்றிலிருந்து இன்றுவரை ஒருவரையும் விட்டு வைக்காத கேள்வி. வேதாகம காலத்திலேயே உயிர்த்தெழுதல் இல்லை என்று அடம்பிடித்தக் கூட்டத்தார் இருந்தார்கள். சதுசேயர்கள் வேதத்தை ஏற்றுக் கொண்டார்கள். உயிர்த்தெழுதலை மறுத்தார்கள். அப்படிப்பட்ட காலத்தில்தான் இயேசுவானவர் மரித்து, உயிர்த்தெழுந்தார்.
அவர் பிறந்ததும், பாடுபட்டு மரித்ததும் ஏதோ கண்ணாமூச்சி விளையாட்டல்ல, மனிதனுக்கு தேவன் சொல்லும் சத்தியம். மனித இனத்திற்கே மாபெரும் நற்செய்தி, மனித இனத்திற்கு உயிர்த்தெழுதல் உண்டு என்பதை நிரூபித்த சவால் சரித்திரம் மட்டுமல்ல, இயேசுவானவரை விசுவாசித்து பின்பற்றினால் கிடைக்கும் மாபெரும் கிருபை கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலே. கிறிஸ்தவத்தின் ``உயிர் நாடி'' கிறிஸ்து உயிர்த்தெழுந்தார் என்பதற்கு கிறிஸ்தவர்களே சாட்சி (1 கொரி 15:15). கிறிஸ்துவோடு உயிர்த்தெழப் போகிறோம் என்பதற்கு கிறிஸ்துவின் வருகையே சாட்சி, அவர் வரப்போகிறார். அவர் வருகையில் கிறிஸ்துவுக்குள்ளானவர்கள் எடுத்துக் கொள்ளப் படுவார்கள் மரித்தவர்கள் எழுந்திரிப்பார்கள்.
அவரை நம்பாதவர்கள் அவரை விசுவாசியாதவர்கள் நிலை என்ன? நம்பாதவர்களும், விசுவாசியாதவர்களும் எப்படி அவரோடு கூட போக முடியும்.
சிந்தை ஓட்டத்தை சற்று நிறுத்தி நிதானமாக யோசித்தால் நம்முடைய வாழ்க்கை ஓட்டத்தின் அர்த்தம் தெரியும். நம்முடைய ஆத்மீக தேடலின் உண்மை நிலை புரியும். எதைப் பெற்றாலும் மனிதனுக்குள் திருப்தி இல்லையே ஏன்? இப்பூமியில் கிடைக்கும் எதுவும் மனிதனை திருப்திப்படுத்த முடியாது. அப்படி திருப்திப் படுத்தக் கூடிய ஒன்றை இப்பூமியில் ஒரு மனிதன் கண்டு கொண்டான் என்றால் அவன் வரும் ``நித்திய வாழ்வை'' அறிந்து கொண்டான் என்பதுதான் உண்மை.
0 comments:
Post a Comment