Bread of Life Church India

உன்னை மேன்மைப்படுத்துவேன்


இம்மாத ஆசீர்வாத வாக்குத்தத்தம் இதை வாசித்து தேவனுடைய பெரிதான கிருபைகளையும், நன்மைகளையும் சுதந்தரித்துக் கொள்வோம்.
"நான் மோசேயோடே இருந்ததுபோல, உன்னோடும் இருக்கிறேன் என்பதை இஸ்ரவேலரெல்லாரும் அறியும்படிக்கு, இன்று அவர்கள் கண்களுக்குமுன்பாக உன்னை மேன்மைப்படுத்துவேன்''(யோசுவா 3:7).

நிறைவான பலனைப்பெறுவாய்

   ``உன் செய்கைக்குத்தக்க பலனைக் கர்த்தர் உனக்குக் கட்டளையிடுவாராக. இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடைய செட்டைகளின்கீழ் அடைக்கலமாய் வந்த உனக்கு அவராலே நிறைவான பலன்கிடைப்பதாக என்றான்'' <ரூத் 2:12>.

    இந்த ஆசீர்வாதமான வார்த்தையை ரூத்தைப்பார்த்து போவாஸ் சொல்லுகிறார். ரூத்தின் செய்கைகளையும், அவர் உன்னதமான கர்த்தர் மேல் வைத்திருக்கும் விசுவாசத்தையும் அறிந்து அப்படிச்சொல்லுகிறார். எல்லோருமே ஆசீர்வாதமாக இருக்க வேண்டும் என்றுதான் விரும்புவார்கள். இது இயற்கை, ஆனால் ஆசீர்வாதங்களை பெற்றுக் கொள்ளுவதற்கான செய்கைகள் எல்லோரிடத்திலும் இருப்பது இல்லை.

பட்சிக்கிறவனிடத்திலிருந்து பட்சணம் வரும்

``பட்சிக்கிறவனிடத்திலிருந்து பட்சணமும், பலவானிடத்திலிருந்து மதுரமும் வந்தது'' <நியா 14:14>. வேதாகமத்தில் விடுகதையாக சிம்சோனால் கொடுக்கப்படும் வார்த்தையே நாம் மேலே வாசிக்கும் வசனம். இந்த வசனத்தை தியானித்துக்கொண்டிருக்கும் போது இவ்வசனத்திற்கு இணையாக சில சம்பவங்களின் மூலமாக தேவனுடைய மக்களின் வாழ்வில்  தேவன் எப்படியெல்லாம் செயல்பட்டார், இக்காலத்திலும் எப்படி செயல்படுகிறார் என்பதை பார்க்கும் போது மிகவும் ஆசீர்வாதமாக இருக்கிறது, இவ்வசனத்தை உங்களோடு பகிர்ந்து இந்த ஆசீர்வாதத்திற்கு நீங்களும் பங்கு பெறவேண்டும் என்ற நோக்கத்தில் பரிசுத்த ஆவியானவரின் ஒத்தாசையுடன் இந்த செய்தியை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். ஜெபத்துடன் விசுவாசித்து வாசியுங்கள். கர்த்தர் அற்புதம் செய்வார்.   

கம்பளிப்புழுவின் ஆதங்கம்

ஒரு கம்பளிப்புழு ஒவ்வொரு செடியாக ஊர்ந்து சென்று அதிலுள்ள மெல்லிய இலைகளைத் தன் தாடையில் வைத்து அரைத்துத் தின்று தன் பசியைப்போக்கிக் கொண்டிருந்தது. அப்போது செடிகளிலுள்ள பூக்களும் இலைகளும் பழங்களும் தங்களுக்குள்  பேசிக் கொள்ளும் சலசலப்பான சத்தம் கம்பளிப்புழுவின் கவனத்தை திருப்பியது. தன் காதுகளை நன்றாகத் தீட்டிக் கொண்டு அவைகள் பேசுவதைக்கேட்டது.

முன்மாதிரி வாழ்க்கை வாழ்வோம்.

முடியாது, தெரியாது என்றும், தான் செய்த தவறுக்குமற்றவரை சுட்டிக்காட்டுவதும் மனித இயல்பு. இதை நாம் நமது ஆதி பெற்றோரிடமிருந்து பெற்றுக் கொண்டோம்.அவர்களது வீழ்ச்சியில் தேவன் அவர்களை விசாரித்தபோது, தங்களது தோல்வியை மறைக்க ஒருவர் மற்றொருவரைசுட்டிக் காட்டினர்.இதுபோல நாம் செய்யும் ஒவ்வொரு பாவத்திற்கும்மற்றவரை குறைகூறபிசாசு நம்மைத் தூண்டுவான்.

கொடுங்கள், கொடுக்கப்படும்

ஒரு மனிதன் வெகு தொலைவில் இருந்து நடந்து வருகையில் பாலைவனப் பகுதியில் வந்து கொண்டிருக்கும் போது, தான் கொண்டு வந்த தண்ணீர் தீர்ந்து போன படியால் மிகுந்த தாகத்துடன் நாவு வரண்டு, தண்ணீர் கிடைக்காதா? என்ற ஏக்கத்துடன் சென்று கொண்டிருந்தார்.

ஜெபத்தின் மேன்மை

ஜெபம் நம்முடைய வாழ்க்கையில் மகத்தான செயல்களை செய்யக் கூடியது. ஜெபம் செய்யக்கூடிய நபர் எதைக்குறித்தும் பயப்படவோ, கலங்கியோ, கவலைப் பட்டோ நிற்பதில்லை. காரணம் கர்த்தர் ஜெபிக்கிற மனிதரோடு எப்போதும்
இருக்கிறார்.
    ஜெபம் அநேகருக்கு கடினமானதாக இருக்கிறது. அல்லது ஜெபிக்கும் படியான நேரத்தை சரியாக அமைத்துக்கொள்ளாமல், தனக்கு ஜெபிக்கவே நேரம் இல்லை என்று
சொல்லுகிறவர்களாக இருக்கிறார்கள்.

சிறுமைக்கு பதில் சிங்காரம்

இம்மாதத்தில் தேவன் கொடுத்துள்ள வார்த்தைகளை தியானித்து ஆசீர்வாதங்களை சுதந்தரித்துக்கொள்ளப்போகிறோம்.      தேவரீர்; எங்களைச் சிறுமைப்படுத்தின நாட்களுக்கும், நாங்கள் துன்பத்தைக் கண்ட வருஷங்களுக்கும் சரியாய் எங்களை மகிழ்ச்சியாக்கும்.<சங்கீதம் 90:15>.
    மோசேயினால் எழுதப்பட்ட 90ம் சங்கீதம் மோசேயின் ஜெபம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இச் சங்கீதத்தில் 39 வருட வனாந்திர வாழ்க்கையில் சந்தித்த சிறுமைகளையும், துன்பங்களையும் தேவனிடத்தில் ஜெபமாக மோசே ஏறெடுக்கிறார்.
அதுமட்டுமல்ல கானானுக்குள் போக போகிற அந்த நேரத்தில் இனி எங்களின் வாழ்க்கையில் நாங்கள் இதுவரைக்கும் பட்ட சிறுமைக்கும், துன்பத்திற்கும் சரிநிகராக இனி வரும் நாட்களில் நாங்கள் மகிழ்ச்சியாக வாழவேண்டும் என்று முறையிடுகிறார்.

ஜீவ அப்பம் மாத இதழ் ஜூலை 2013, Jeeva Appam magazine july 2013 pdf

ஜூலை 2013 ஜீவ அப்பம் மாத இதழை ஜெபத்துடன் இங்கே கொடுத்துள்ளோம், இதில் எழுதப்பட்டுள்ள தேவனுடைய வார்த்தைகள் உங்களுக்கு ஆசீர்வாதமாகவும், விசுவாச வாழ்வுக்கு வழிகாட்டியாகவும் இருக்கும், பதிவிறக்கம் செய்து, படித்து பயன் பெற்று, தேவனை மகிமைப்படுத்துங்கள்
 
 
 
 
 

Download link