நான் உனக்குத் துணை நிற்கிறேன்
``உன் தேவனா யிருக்கிற கர்த்தராகிய நான் உன் வலதுகையைப் பிடித்து; பயப்படாதே, நான் உனக்குத் துணை நிற்கிறேன் என்று சொல்லுகிறேன்'' <ஏசாயா 41:13>.
பிரியமானவர்களே, எனக்கு துணையாக யாரும் இல்லையே, எல்லாம் எனக்கு எதிராகவே இருக்கிறதே என்று, மனம் கலங்கி வேதனையோடு இருக்கும் உங்களைப் பார்த்துதான் கர்த்தர் சொல்லுகிறார் ``நான் உனக்குத் துணை நிற்கிறேன்'' இந்த உலகத்திலே, யாருக்கு செல்வாக்கும், உயர்ந்த பதவியும், அதிகாரமும் இருக்கிறதோ, அப்படிப்பட்டவர்களின் பின்னால்தான் ஒரு கூட்டம் எப்போதும் துணையாக இருந்து கொண்டே இருக்கும்.
பிரியமானவர்களே, எனக்கு துணையாக யாரும் இல்லையே, எல்லாம் எனக்கு எதிராகவே இருக்கிறதே என்று, மனம் கலங்கி வேதனையோடு இருக்கும் உங்களைப் பார்த்துதான் கர்த்தர் சொல்லுகிறார் ``நான் உனக்குத் துணை நிற்கிறேன்'' இந்த உலகத்திலே, யாருக்கு செல்வாக்கும், உயர்ந்த பதவியும், அதிகாரமும் இருக்கிறதோ, அப்படிப்பட்டவர்களின் பின்னால்தான் ஒரு கூட்டம் எப்போதும் துணையாக இருந்து கொண்டே இருக்கும்.
இவைகளெல்லாம் இல்லாமல் போகும் போது உடனடியாக அது வரை ``நான் எப்போதும் உங்களோடு இருப்பேன் என்று சொன்னவர்கள் எல்லாம் காணாமல் போய் விடுவார்கள். இது தான் மனிதரின் குணம். ``வெல்லம்'' இருக்கும் இடத்தில் எறும்புகள் கூட்டம் இருக்கும் என்பது போல, நம்மிடம் எல்லாம் இருக்கும் போது தான் மனிதர் கூட்டம் நம்மை நெருங்கி நிற்கும்.
ஒன்றுமில்லை என்று தெரிந்தால் சொந்தமாவது, பந்தமாவது, அன்பாவது நட்பாவது, எல்லாவற்றையும் உதறி தள்ளிவிட்டு, எல்லோரும் விலகி சென்று விடுவார்கள்.
ஆனால் நாம் என்ன நிலையில் இருந்தாலும், நம்மை விட்டு விலகாதவர் அன்பு தெய்வம் இயேசு கிறிஸ்து மட்டுமே.
உங்களை மனிதர்கள் கைவிட்டு விட்டார்களா? நீங்கள் நம்பியவர்கள் உங்களை ஏமாற்றிவிட்டார்களா? கலங்காதீங்க! கர்த்தர் இயேசு உங்களோடு இருக்கிறார். ``இதோ உலகத்தின் முடிவு பரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனே கூட இருக்கிறேன்'' <மத் 28:20> என்றவர் வாக்கு மாறாதவர்.
``நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கை விடுவதுமில்லை என்று அவர் சொல்ஙி யிருக்கிறாரே,
எனக்கு அன்பானவர்களே, இயேசு கிறிஸ்து உங்களை விட்டு விலக மாட்டார் உங்களை கை விடமாட்டார். நீங்கள் அவரோடு கூட இருந்து, அவருடைய வார்த்தைகளுக்கு கீழ்ப்படிந்து, அவருக்கு பிரியமாக வாழும் பொழுது, உங்கள் வாழ்க்கையில் எப்படிப்பட்ட போராட்டங்கள் வந்தாலும், எவ்வளவு பேர் உங்களுக்கு எதிர்த்து வந்தாலும், ஒருவரும் உங்களுக்கு துணையாக இல்லாமல் தனித்து விடப்பட்ட சூழ்நிலையில் இருந்தாலும், பயப்படாதீர்கள். ``அவர்கள் உனக்கு விரோதமாக யுத்தம் பண்ணுவார்கள்; ஆனாலும் உன்னை மேற்கொள்ள மாட்டார்கள்; உன்னை இரட்சிக்கும் படிக்கு நான் உன்னுடனே இருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லு கிறார்'' <எரேமியா 1:19>.
ஆபத்து நேரத்திலும் துணையாக இருப்பார்
``என் ஆபத்து நாளில் எனக்கு எதிரிட்டு வந்தார்கள்; கர்த்தரோ எனக்கு ஆதரவாயிருந்தார்''
<சங்கீதம் 18:18>.கர்த்தர் தன்னைத் தன்னுடைய எல்லாச் சத்துருக்களின் கைக்கும், சவுஙின் கைக்கும் நீங்கலாக்கி விடுவித்த நாளிலே தாவீது, பாடின சங்கீதமே 18ம் சங்கீதம். இதில் அவர் சந்தித்த பிரச்சனைகளையும், ஆபத்தான வேளைகளையும் விவரித்து சொல்ஙி, கர்த்தர் தமக்கு எப்படிப்பட்டவராக இருந்தார் என்பதையும், அவருடைய மகத்துவத்தையும் சொல்ஙிக்கொண்டு வரும் தாவீது, தன்னுடைய ஆபத்து காலத்தில், நண்பர்களாக இருந்தவர் களும் தன்னிடத்தில் உதவி பெற்றவர்களும் கூட, தனக்கு எதிராக எப்படி வந்தார்கள் என்று குறிப்பிடு கிறார்.
சில வேளைகளில் சூழ்நிலை குற்றவாளியாக மாற்றி விடும் பொழுது, நம்மோடு இருப்பவர்களும் கூட, நம்மை புரிந்து கொள்ளாது, ``இவனோடு நாம் இருந்தால் நம்மையும் மற்றவர்கள் குற்றவாளியாக நினைத்து விடுவார்கள் என்று நினைத்துக்கொண்டு, நம்மை விட்டு விலகி செல்வது மட்டுமல்ல, நமக்கு எதிராக இருப்பவர்களோடு கைகோர்த்துக்கொண்டு, நமக்கு எதிராகவே அவர்களும் செயல்படுவார்கள்.
அது போலதான் தாவீது ராஜாவின் வாழ்க்கையிலும் நடந்தது, தவறே செய்யாமல் துரத்தியடிக்கப் பட்டார். ஓடி ஒளிந்தார், ஆனால் காலம் கனிந்தது, காரணமே இல்லாமல் பகைத்த, பகைவர்களின் கைகளிஙிருந்து விடுவித்தது மட்டு மல்ல, எதிரிகளே இல்லாமல் கர்த்தர் செய்தார். ஆபத்து நாட்களிலே தாவீதோடு கூட கர்த்தர் இருந்தார். அவரை விடுவித்தார். ஆபத்துக்கள் அணுகாமல் பாதுகாத்தார்.
பிரியமானவர்களே, இது போன்று நீங்களும் காரணமே இல்லாமல் குற்றவாளிகளாக்கப்பட்டு, ஆபத்தில் சிக்கி, அதனால் உங்களோடு இருந்தவர்களும், உங்களுக்கு உதவியாக துணை நில்லாமல் உங்களை விட்டு விலகி உங்களுக்கே எதிராக மாறிவிட்டார்களா? ஆகையால் வாழ்க்கையே வெறுத்து போன நிலையில் எதற்காக எனக்கு இப்படிப்பட்ட போராட்டம், ஏன் எனக்கு இந்த வாழ்க்கை என்று குழப்பத்தின் உச்ச நிலைக்கு சென்று யார் எனக்கு துணையாக இருப்பார்? யார் என்னுடைய நீதியை வெளிப்படுத்தி, நான் குற்றவாளி இல்லை என்பதை நிரூபிப்பார்? என்று ஆபத்தின் மத்தியில் கலங்கி கதறிக்கொண்டிருக்கிறீர்களோ? உங்களைப்பார்த்துத்தான் ``நான் உனக்கு துணை நிற்கிறேன்'' உன் நீதியை பட்டப்பகலைப்போல மாற்றுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
ஆபத்திஙிருந்தும், எதிரிகளின் கையிஙிருந்தும், விடுவித்த ஆண்டவர் தாவீதை நேராக சமஸ்த இஸ்ரவேலையும், ஆளுகை செய்யும் இராஜாவாக உயர்த்தினார். உங்களுடைய வாழ்க்கையிலும், இப்பொழுது நடந்து கொண்டிருக்கும் யுத்தத்திஙிருந்து உங்களை விடுவித்து, உங்களுக்கு ஜெயத்தை கொடுத்து, எந்த நிலையிஙிருந்து நீங்கள் தள்ளப்பட்டீர்களோ! அதைவிட மேலாக கர்த்தர் உங்களை உயர்த்தப்போகிறார். எனவே, தாவீதைப்போல, நெருக்கத்தின் மத்தியிலும் தேவனை உயர்த்தி மகிமைப் படுத்துங்கள். ``தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும், ஆபத்துக்காலத்தில் அனுகூலமான துணையுமானவர்'' <சங்கீதம் 46:1>
தனிமை நேரத்தில் துணையாக இருப்பார்
``கர்த்தரோ எனக்குத் துணையாக நின்று....என்னைப் பலப்படுத்தினார்;''<2தீமோ 4:17> பவுல் அப்போஸ்தலர் தன்னுடைய விசுவாச ஓட்டத்தை நல்ல முறையில் ஓடி முடிக்கிற வேளையில் தன்னுடைய உத்தம குமாரனான தீமோத்தேயுவுக்கு கர்த்தருடைய வார்த்தையை சொல்லுகிறார்.
ஒரு சமயத்தில் என்னோடு கூட இருந்தவர்கள் என்னை விட்டுப் பிரிந்து போய் விட்டார்கள் <தீமோ4:10> எல்லோரும் என்னைக்கைவிட்டார்கள் <தீமோ 4:16> ஆனால் ``கர்த்தரோ எனக்குத் துணையாக நின்றார்'' என்று தன்னுடைய ஊழிய நாட்களில் நடந்த அனுபவ சாட்சியை சொல்லுகிறார்.
எதற்காக இதை சொல்லுகிறார் என்றால் புதிய தலைமுறையாக அடுத்து ஊழிய பாதையில் செல்ல இருக்கும் தீமோத்தேயு தனிமையான சூழ்நிலையில், சோர்ந்து போய்விடக்கூடாது என்றும், அப்படிப்பட்ட சூழ்நிலையில் கர்த்தருக்குள் தன்னைத் திடப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், கர்த்தரையே சார்ந்து கொள்ள வேண்டும் என்றும், கர்த்தர் தனிமை நேரத்தில் தனக்கு எப்படி துணையாக இருந்தார் என்பதை அறிவுறுத்தி சொல்லுகிறார்.
எதற்காக இப்படிப்பட்ட தனிமை சூழ்நிலை ஏற்படுகிறது, ஏன் மற்றவர்கள் நம்மை விட்டு விலகி செல்கிறார்கள், எதற்காக நாம் மற்றவர்களால் கைவிடப்படுகிறோம், என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.
எல்லாம் நமக்கு சரியாக நடந்து கொண்டு இருக்கும் பொழுது, எல்லோரும் நம்மோடு இருக்கும் பொழுது, சில நேரங்களில் நாம் தேவனுடைய துணையை தேடுவது இல்லை, தேவனை சார்ந்து கொள்வதும் இல்லை, ``எல்லாமே எனக்கு என்னோடு இருப்பவர்களே செய்து விடுவார்கள், நான் சொல்வதற்கு முன்பாகவே எனக்காக எல்லாவற்றையும் செய்கிறவர்கள் என்னோடு உண்டு'' என்று நமக்குள்ளாகவே ஒரு பெருமிதம் வந்துவிடும்.
அப்படிப்பட்டவர்களை கர்த்தர்தான் நமக்கு அனுகூலமாக வைத்திருக்கிறார் என்பதை மறந்து, நாம் செயல்பட ஆரம்பிக்கும் பொழுது, கர்த்தர் ``நான் தான் இப்படிப்பட்டவர்களை உன்னோடு வைத்து, அனுகூலமான வழிகளை உனக்கு முன்பாக வைத்திருந்தேன். ஆனால் அனுகூலமான வழியை உண்டு பண்ணினவரான என்னை மறந்து, நீங்கள் அந்த வழிகளை மேன்மை படுத்தி, என்னை விட்டு விட்டீர்கள், என்னுடைய துணையை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்'' என்றே சில நேரங்களில் கர்த்தர் நம்மைத் தனிமைப்படுத்துகிறார்.
சிலர் நம்மோடு நல்ல ஐக்கியம் கொண்டு இருப்பார்கள், காரணமே இல்லாமல் சிறு மனஸ்தாபத்தோடு அந்த ஐக்கியம் இல்லாமல் போகும், ஏன் என்றே நமக்கு தெரியாமல் குழப்பமாக இருக்கும், ஏன் அப்படி நடக்கிற தென்றால், கர்த்தர் நம்மைத் தனிமைப்படுத்தி சில காரியங்களை கற்றுக்கொடுக்க விரும்புகிறார். ஆகையால்தான் சில ஐக்கியம் உடைக்கப்படுகிறது.
அப்படிப்பட்ட நேரங்களில் நாம் தேவ சித்தம் அறிந்து, தேவனோடு நெருங்கி, தேவனுடைய துணையை அறிந்து, தேவனைச் சார்ந்து கொள்ள வேண்டும். அப்பொழுது, புதிய காரியங்களை கர்த்தர் நமக்கு கற்றுக்கொடுத்து, உயர்த்துவார்.
``இயேசுவும் நானும் மட்டுமே'' என்று சொல்லக்கூடிய சூழ்நிலை உண்டாகி இருக்கலாம். கவலைப்படாதீர்கள், அதைவிட மேலான சந்தோஷம் வேறு ஒன்றுமில்லை.
தனிமைப்படுத்தப்பட்டு, இருக்கிறபடியினால், ``இனி என்னுடைய வாழ்க்கையே முடிந்து போய் விட்டது. என்று கலங்காதீர்கள் கர்த்தர் உங்களுக்கு துணையாக இருக்கிறார். ``அவர் உனக்குத் துணையாயிருப்பார்; சர்வ வல்ல வராலே அப்படியாயிற்று, அவர் உயர வானத்திஙிருந்து உண்டாகும் ஆசீர்வாதங்களினாலும், கீழே ஆழத்தில் உண்டாகும் ஆசீர்வாதங்களினாலும் உன்னை ஆசீர்வதிப்பார்'' <ஆதி 49:25>.
பெலவீனத்தில் துணையாக இருப்பார்
``என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்து வினாலே எல்லாவற்றையும் செய்ய எனக்குப் பெலனுண்டு'' <பிஙி 4:13>.
பெலவீன நேரத்தில், வியாதி நேரத்தில் மற்றவர்கள் துணையாக இருக்கமாட்டார்கள், அப்படிப்பட்ட சூழ்நிலையில், ஆறுதலாக பேசுவது போல இருந்தாலும். பின்னால் சென்று இவர்கள் என்ன ``பாவம்'' செய்தார்களோ? அதனால்தான் இப்படிப்பட்ட பெலவீனம் வந்து இருக்கிறது, என்று வேதனைப்படுத்தும் வார்த்தைகளை வாரியிறைப்பார்கள்.
இப்படித்தான் வேதாகமத்தில் பிஙிப்பியர் 2ம் அதிகாரத்தில் 25ம் வசனம் முதல் 30ம் வசனம் வரை உள்ள வேத பகுதியில் எப்பாப்பிரோ தீத்து என்னும் தேவ மனிதனை குறித்து பவுல் அப்போஸ்தலர், பிஙிப்பி சபைக்கு சாட்சியாக எப்பாப்பிரோ தீத்து எப்படிப்பட்டவர் என்பதை வெளிப்படுத்தி காண்பிக்கிறார்.
1. விசுவாசிகளின் ஸ்தானாதிபதி.
2. எல்லோர் மேலும் வாஞ்சையுள்ளவன்.
3. தன் பிராணனையும் எண்ணாமல் கிறிஸ்துவின் ஊழியம் செய்தவன்.
இவர் ஒரு நாளிலே வியாதி பட்டவராக, மரணத்துக்கு சமீபமாக இருந்து, கர்த்தரின் இரக்கத்தினால், நல்ல சுகம் பெற்று, மறுபடியும் ஊழியம் செய்யப்போகிறார். ஆனால் ஜனங்களோ, அவரை ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. காரணம், கடந்த நாட்களில் இவர் செய்த பாவத்தின் விளைவுதான், இவருக்கு வியாதி வந்து, மரணம் வரை சென்றிருக்கிறார் என்று, அவரை கனவீன படுத்தி யிருக்கலாம், ஆகையால்தான் பவுல் அப்படியாக நினைத்து கனவீன படுத்தினவர்களை பார்த்து சொல்லுகிறார்.
``ஆகையால் நீங்கள் அவனை மறுபடியும் கண்டு, சந்தோஷப்படவும், என் துக்கங் குறையவும், அவனை அதி சீக்கிரமாய் அனுப்பினேன்.
ஆனபடியினாலே நீங்கள் கர்த்தருக்குள் மிகுந்த சந்தோஷத் தோடே அவனை ஏற்றுக்கொண்டு, இப்படிப்பட்டவர்களைக் கனமாய் எண்ணுங்கள்'' <பிஙி 2:28,29> என்று அறிவுறித்தி சொல்லுவதை கவனிக்கலாம்.
அன்பானவர்களே, பெலவீனங்கள் வராமல் இருப்பது நல்லது, பெலவீனமோ, வியாதியோ வருவது தேவனுடைய சித்தம் இல்லைதான். ஆனாலும் வியாதிகள்,
1. பாவத்தின் விளைவாக வருகிறது,
2. பிசாசின் மூலமாகவும் வருகிறது.
3. இயற்கை சூழல் மாறும் பொழுதும் வருகிறது.
எனவே, எதுவாக இருந்தாலும், தேவ இரக்கத்தைக் கேட்டு, பாவத்தின் விளைவாக வியாதி வந்திருந்தால், தேவனிடத்தில் மன்னிப்புக் கேட்டு, பாவ அறிக்கை செய்து, மனந்திரும்பி, பாவத்தை விட்டு விலகி, கர்த்தரை அண்டிக்கொள்ள வேண்டும்.
பிசாசின் மூலமாக வந்திருக்குமானால் இயேசுவின் நாமத்தினாலே பிசாசை கடிந்து கொண்டு, பிசாசின் கிரியைகளை இயேசுவின் நாமத்தில் அழிக்க வேண்டும்.
இயற்கை மூலமாக வந்திருந்தாலும், பாதுகாப்புக்கேட்டு, தேவனிடம் மன்றாட வேண்டும்.
இப்படியாக தேவனை சார்ந்து ஜெபிக்கும் பொழுது,கர்த்தர் பரிபூரண சுகத்தையும், விடுதலையையும் தருவார்.
அதே வேளையில் மற்றவர்கள், அப்படிப்பட்ட சூழ்நிலையில், மனதை வேதனைப்படுத்தும் படியாக, சொல்லும் வார்த்தைகளை, கேட்டு சோர்ந்து போக வேண்டாம், நம்மை பெலப்படுத்துகிறவர் கிறிஸ்துவே. அவர் நமக்கு துணையாக இருக்கிறார்.
ஆகவே எல்லா வியாதிகளுக்கும், பாவம் மட்டுமே காரணம் என்று ஒருவரையும் தள்ளி விட்டு, அவர்களுக்கு செய்ய வேண்டிய உதவிகளை செய்யாமல் விட்டு விடக்கூடாது.
``என் கிருபை உனக்குப் போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும் என்றார். ஆகையால் கிறிஸ்துவின் வல்லமை என் மேல் தங்கும்படி, என் பலவீனங்களைக் குறித்து நான் மிகவும் சந்தோஷமாய் மேன்மை பாராட்டுவேன்''<2கொரி 12:9> என்று வேதம் கூறுகிறது.
ஆகவே பெலவீனத்தில் கர்த்தர் துணையாக நின்று, பெலவீனத்திஙிருந்து விடுதலை தருவார். சந்தோஷமாக வாழ்வீர்கள், கர்த்தர் எல்லா சூழ்நிலையிலும் துணையாக இருக்கிறார்.
0 comments:
Post a Comment