Bread of Life Church India

காலம் கெட்டு போச்சு ! ஏலே மூதேவி விடிஞ்சி எவ்வளவு நேரமாவுது, இன்னும் இழுத்து மூடிக்கீட்டு கிடக்கே எந்திரிலே’’ என்று ரோஸ் அம்மா எழுப்ப மூடி இருந்த போர்வையை விலக்கி, கண்களை திரட்டி, முறைத்து விட்டு, மறுபடியும், முகத்தை மறைத்து படுத்துக்கொண்டான்.

ஏலே இப்ப எந்திரிக்கிறீயா மூஞ்சியில தண்ணிய ஊத்தவா?’’ என்று சொல்ல, “சனியென் சனியென், விடிய காலமே இதுக்கு என்ன வந்துது, நிம்மதியா உறங்கக் கூட விடாமா இப்பிடி கத்தி உசுர வாங்குது’’ என்று முணு முணுத்தபடியே அருகில் இருந்த நார்க்காலியை எட்டி உதைத்தபடியே விருட் என்று வெளியே சென்றான்  ரோஸ் அம்மாவின் மகன் பீட்டர்.

"ஜீவ அப்பம்'' (மார்ச் 2015) மாத இதழ்

கிறிஸ்துவுக்குள் அன்பான ஜீவ அப்பம் இணைய நண்பர்களுக்கு,  நமது ஆவிக்குரிய வாழ்வுக்கு உறுதுணையாக, நமது விசுவாச வாழ்வுக்கு தேவையான செய்திகளுடன், கிறிஸ்துவுக்குள் நாம் வளரவும், நிலைத்து நிற்கவும், "ஜீவ அப்பம்'' மாத இதழ் வெளி வந்து கொண்டிருக்கிறது.எல்லாரும் இலவசமாக படிக்கும் வண்ணமாக மின் இதழாகவும் (PDF) இணையத்தில் கொடுக்கப்படுகிறது.  இந்த மாத ( மார்ச்  2015) ஜீவ அப்பம் மாத இதழை  இலவசமாக  பதிவிறக்கம் செய்து படியுங்கள்.

இன்னும் கொஞ்சங்காலந்தான்

என்ன இன்னும் உறங்கிக்கிட்டு இருக்கீங்க, எந்திரிங்க’’ என்று கூப்பிடும் சத்தம் கேட்டு, வேகமாக எழுந்திருந்து மணியைப் பார்த்தான் “ஏய் சீக்கிரமா எழுப்ப கூடாதா? ஐயா, வைய போராக, தூக்காளில கஞ்ச ஊத்து,’’ என்று சொல்லிக்கொண்டே, முகத்தைக் கழுவிக்கொண்டு, துண்டை எடுத்துத் தோளில் போட்டுக்கொண்டு, கொரட்டி கம்மை எடுத்துக்கொண்டு, புறப்பட, தூக்குவாளியில் இருக்கும் கஞ்சியைக் கொடுத்து, இப்ப கொஞ்சம் கஞ்சி குடிச்சுட்டு போங்க, என்று மனைவியின் வார்த்தைகளை நின்று கூடக் கேட்காதவனாய், வேண்டாம், வேண்டாம் நேரம் ஆச்சு, பிறவு குடிச்சிக்கிறேன். என்று சொல்லி விட்டு, நேரம் ஆகி விட்டதே என்ற வேகமும், துடிப்பும் அவனுடைய கண்களிலும், நடையிலும் தெரிந்தது.ஓட்டமும் நடையுமாக வேலை செய்யும் முதலாளி வீட்டை நோக்கி சென்றான்.
    “என்னடா, வளவா இம்புட்டு நேரம், நேரம் என்ன ஆவுது, சீக்கிரம் போடா’’ என்று சொல்ல, ஐயா, இதோ போரேன்யா, என்று சொல்லியபடி, ஆட்டுத் தொழுவத்தை நோக்கி சென்று ஆடுகளை அவிழ்த்து, மேய்க்கும் படி, ஓட்டி சென்றான்.
    மேய்ச்சலுக்குத் தயாரான ஆடுகள், வேகமாக நடக்க ஆரம்பித்தன. செல்கிற வழியில் பச்சை பசேலெனக் கண்களைப் பறிக்கும் தாவரங்களைப் பார்த்து பெருமூச்சு விட்டபடி நடக்கலாயின.
எல்லா ஆடுகளும் ஒழுங்காய் நடந்து சென்று கொண்டிருக்க, அதில் வைரவன் என்ற ஆடு மட்டும் தன் இஷ்டப்படி, போகிறவழியில் இருக்கும் எல்லாத் தோட்டத்தில் உள்ள பயிர்களையும் மேய்ந்து கொண்டே சென்றது.
    அதைப் பார்த்தப் மற்ற ஆடுகள், “ம் அதை மட்டும் ஒருவரும் ஒன்றும் சொல்வதில்லை, அதை மாதிரி நாம செய்தால் இந்நேரம் எத்தனை அடி விழுந்து இருக்கும்’’ என்று சொல்ல மற்ற ஆடுகளும் ஆமாம் என்பது போல் தலையை ஆட்டின.
    போகிற வழியில் கண்ணில் தெரியும் எல்லாவற்றையும் மேய்ந்து கொண்டு, மற்ற ஆடுகளைப்பார்த்து, “ஏய் பயந்தாங்களி பசங்களா, என்னை யாரும் ஒன்னும் பண்ண முடியாது, நான் எங்கு வேணுமனாலும், போவேன், என்ன வேணுமனாலும் செய்வேன், யாரும் என்னை ஒன்னும் பண்ண முடியாது’’ என்று சொல்லி, சிரித்தது வைரவன்.
    அது என்னமோ, போப்பா, இது இன்னைக்கு நேத்தா நடக்குது, பல நாளா நீ இப்படிதான் பண்ணிக்கிட்டு இருக்க, உன்னிய மாதிரி நாங்களும் பண்ணினா, ஒரு பக்கம் தோட்டகாரங்க அடிப்பாங்க, இன்னொரு பக்கம், நம்ம எஜமான் அடிப்பாரு, ஆனா உன்னைய மட்டும் யாரும் ஒன்னுமே பண்ண மாட்டேங்கிறாங்க, நீ கொடுத்து வச்சவந்தான். என்று பெருமூச்சு விட, “ஆமா, ஆமா அதுக்கெல்லாம் அதிஷ்டம் வேணும், அந்த அதிஷ்டம் எனக்கு வந்திருக்கு, நீங்க என்ன பாத்து பொறாம மட்டும்தான் பட முடியும், என்னைய மாதிரி உங்களால, பண்ண முடியாது’’ என்று சொல்லியது.
    இதைக் கேட்ட மற்ற ஆடுகள், தங்களுக்குள்ளாகப் பேசிக்கொண்டன. “இந்தக் கடவுள் ஏந்தான் இப்படி, வஞ்சகமா படைத்தானோ, எல்லோரையும் ஒரே மாதிரி படைக்க வேண்டியது தானே, அவனை ஒரு மாதிரி, நம்மை ஒரு மாதிரின்னு, ஏன் இப்படி ஓர வஞ்சனையாகப் படைக்க வேண்டும்’’ அவன் என்ன செய்தாலும், யாரும் கேட்க மாட்டாங்க, ஆனா நாம சின்னத் தவறு செஞ்சாலும், அதைப் பெருசா எடுத்து உடனே நம்மை அடிக்க வாராங்க, என்ன பொழப்பு இது’’ என்று சொல்ல,
இது மட்டுமா? வீட்டுக்குச் சென்றதும் நம்மை ஒரே இடத்தில் அடைத்து வைக்கின்றனர், ஆனா, அவனை மட்டும் நம்மோடு கூட அடைத்து வைப்பதும் இல்லை, கட்டி போடுவதும் இல்லை. அவன் விருப்பத்திற்கு எல்லா இடமும் சுற்றி வருகிறான்’’ இவ்விதமாக ஒன்றோடு ஒன்று தங்கள் ஆதங்கத்தை, தெரிவித்துக்கொண்டன.
இப்படியே நாட்கள் சென்றன. கோயில் திருவிழா வந்தது, அந்த வேளையில் “டேய் வளவா, இங்கே வாடா அந்த வைரவன பிடிச்சிட்டு வந்து, கோயில்ல கட்டு, நாம நேர்ந்து கொண்ட மாதிரி, அதைப் பலி செலுத்த வேண்டிய நேரம் வந்திடுச்சு,’’ என்ற சொல்ல வளவன், வைரவனைப் பிடித்துக் கோயிலுக்கு முன்பாகக் கட்டி வைத்தான்.
வைரவனுக்கோ, ஒன்றுமே புரிய வில்லை, இதுவரை நம்மை எங்கும் கட்டி போடவே மாட்டார்களே, இன்று இங்கு வந்து கட்டி போட்டு இருக்கிறார்களே, என்று திருவிழா கூட்டத்தைப் பார்த்து, அங்கும், இங்கும் விழித்துக்கொண்டிருந்தது.
தன்னுடைய நண்பர்கள் எல்லாம் ஒன்றாக ஒரு இடத்தில் இருப்பார்கள். அவர்களை எல்லாம் விட்டு விட்டு, என்னை மட்டும் ஏன் இங்குக் கொண்டு வந்திருக்கிறார்கள். என்று சிந்தித்துக்கொண்டிருக்கும் போதே, அதை அவிழ்த்து, இழுத்துச் சென்றனர்.
      ஏதோ, விவரீதம் நடக்கப்போகிறது என்று மட்டும் அதற்குப் புரிந்து விட்டது.
சிறிது நேரத்திற்கெல்லாம் அதைப் பலி செலுத்தும் இடத்திற்குக் கொண்டு, சென்று பலியிட தயாரான நேரத்தில், “இத்தனை காலமாக, என் விருப்பத்திற்கும், என் இஷ்டத்திற்கும் விடப்பட்டது இதற்காகதானா? என்று சிந்தித்துக்கொண்டிருக்கும் போதே அதனுடைய தலை துண்டிக்கப்பட்டது.
   துன்மார்க்கமாக வாழ்கிறவர்கள், கண்டிக்கப்படுவதில்லை, தண்டிக்கப் படுவதில்லை, தங்கள் இஷ்டப்படி நடக்கிறார்கள். என்றும் தாங்கள் உண்மையாக வாழ்கிறவர்களாக இருந்தாலும் தண்டிக்கப்படுகிறோமே என்று அநேகர் நினைப்பது உண்டு, ஆனால் வேதம் கூறுகிறது. “துன்மார்க்கன் ஆபத்துநாளுக்கென்று வைக்கப்படுகிறான்; அவன் கோபாக்கினையின் நாளுக்கென்று கொண்டுவரப்படுகிறான்’’ <யோபு 21:30> “அக்கிரமக்காரர் ஏகமாய் அழிக்கப்படுவார்கள்; அறுப்புண்டுபோவதே துன்மார்க்கரின் முடிவு <சங் 37:38>

எதை நோக்கி பயணிக்கிறது?

   
    சில நாட்களுக்கு முன் ஒரு எழுத்தாளரின் புத்தக வெளியீட்டு விழா விற்கு இன்னொரு மதத்தை சார்ந்த என்னுடைய நண்பர் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப் பட்டிருந்தார். அந்த பாராட்டு விழாவிற்கு நண்பர் மூலமாக நானும் அழைக்கப்பட்டு, அவருடன்  சென்றிருந்தேன்.
    அங்கு நடைபெற்ற விஷயங்கள் முற்றிலும் மாறுபட்டவைகளாக இருப்பினும் நடைபெற்றுக் கொண்டிருந்த ஒவ்வொரு விஷயங்களையும் அமர்ந்தபடியே  என் மனதில்  உள்வாங்கி,சிந்திக்கலானேன்.
    எழுத்துலகில் பிரபலமாகிக் கொண்டிருக்கும் ஒருவர் ஒரு குறிப்பிட்ட புராணத்தை நாவல் வடிவமாக்கிக் கொண்டிருக்கிறார், அந்த நூல்களின் வெளியீட்டு விழா, அந்த நூல் வரிசைகளை தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறார்.
    அந்த புத்தக வெளியீட்டு விழாவிற்கு பிரபலங்கள் பலர் அழைக்கப்பட்டிருக்க அதில் என்னைக் கவர்ந்த விஷயங்கள் என்னவென்றால் தான் எந்த புராணத்தை நாவல் வடிவமாக்கிக் கொண்டிருக்கிறாறோ, அதே புராணத்தை தங்கள் சொற்பொழிவுகளிலும், மொழியாக்கத்திலும், ஒவியங்களிலும் பிரபலப்படுத்திக்கொண்டிருக்கும் தன் சகாக்களைக் கண்டறிந்து அவர்களை அழைத்து, சிறப்பித்து, வாழ்த்தி, கனப்படுத்தி, உற்சாகப்படுத்தி, கௌரவித்து, பாராட்டி, மெமோண்டோ கொடுத்தார் அந்த எழுத்தாளர்.
    அதில் எனது நண்பரும் ஒருவர், அவர் அந்த புராணத்தை மொழியாக்கம் செய்து கொண்டிருக்கிறார்.

அடிமைத்தனமா? சுயாதீனமா?பரிசுத்தமாக வாழவேண்டும், வெற்றி வாழ்க்கை வாழ வேண்டும் என்று அநேகர் விரும்பினாலும் ஏன் அநேகரால் வாழ முடிய வில்லை என்பதை குறித்து பார்த்து விட்டு, எப்படி வாழலாம் என்பதைக்குறித்தும் வேத வசனத்தின் அடிப்படையில் கவனிப்போம்.
கிறிஸ்தவ பெயரோடு, இருப்பதால் உலகத்தினர் பார்வையில் கிறிஸ்தவர் என்று அறியப்பட்டாலும், கிறிஸ்துவுக்குள்ளான வாழ்வு என்பது கிறிஸ்துவைப்போல் வாழும் வாழ்வாகும்.
கிறிஸ்துவைப்போல் வாழும் வாழ்வு மகிழ்ச்சியாகவும், மனநிறைவாகவும் இருக்கும், தேவன் நம்மை கிறிஸ்துவின் சாயலாக மாற்றி, கிறிஸ்துவினால் உண்டாகும் ஆசீர்வாதங்களுக்கு நம்மை உடன் சுதந்திரராக வைக்கிறார்.

நீ மேன்மையடைவாய்

தேவனுடைய வார்த்தைகள் வல்லமையுள்ளது. தேவன் நமக்கு கொடுக்கும் வாக்குத்தத்தம் நிறைவானது. ஒவ்வொரு நாளும் தேவன் தம்முடைய வார்த்தை களினாலே நம்மை நிறைந்து நடத்தி வருகிறார்.  தேவன் நமக்கு தரும் வார்த்தைகளை தியானித்து, ஆசீர்வாதங்களை சுதந்தரித்துக்கொள்வோம்.
”எவரையும் மேன்மைப்படுத்தவும் பலப்படுத்தவும் உம்முடைய கரத்தினால் ஆகும்’’ (1 நாளாகமம் 29:12) இந்த வார்த்தையானது ஜெபமாகவும், துதியாகவும் தேவ சமூகத்திலே, தாவீது மூலமாக ஏறெடுக்கப்படுகிறது.

விடை தேடும் கேள்விகள்