Bread of Life Church India

பூமி முழுவதும் அழியப் போகிறதுசிறுவர்கள் அங்கும் இங்கும் ஓடி ஆடி விளையாடிக் கொண்டிருந்தனர். மகிழ்ச்சியுடன் கூடி விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் திடீர் என்று ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டனர். “ஏய் ஏன்டா அடிச்சுக்கிறீங்க, சண்டபோடாதீங்க, சண்டபோடாதீங்க’’ என்று ஒவ்வொருவரையும் விலக்கிக்கொண்டிருந்தான் சிறுவனான நோவா. “நல்லாதானே விளையாடிக்கொண்டிருந்தோம் நீ எதற்கு அவனை அடித்தாய்’’ என்று முதலாவது அடித்த சிறுவனிடம் கேட்டான் நோவா. “அவன் எப்போதும் என்னை கேலி பேசிக்கொண்டே இருக்கிறான். நான் சொல்ல சொல்ல கேட்காமல் தொடர்ந்து கேலி பேசிக்கொண்டே இருந்தான் அதனாலதான் அடிச்சேன்’’ என்றான் முதலாவது அடித்த சிறுவன்.

வெற்றி வாழ்க்கை சாத்தியமே (தொடர் செய்தி, பகுதி 1)

``நாம் நம்மில் அன்பு கூருகிறவராலே முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர் களாயிருக்கிறோமே'' (ரோமர் 8:37).
    ``நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலே நமக்கு ஜெயங்கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம்'' ( 1 கொரிந்தியர் 15:57).
    ``நமக்கு எதிரிடையாகவும் கட்டளைகளால் நமக்கு விரோதமாகவும் இருந்த கையெழுத்தைக் குலைத்து, அதை நடுவிலிராதபடிக்கு எடுத்து, சிலுவையின்மேல் ஆணியடித்து; துரைத் தனங்களையும் அதிகாரங்களையும் உரிந்துகொண்டு, வெளியரங்கமான கோலமாக்கி, அவைகளின்மேல் சிலுவையிலே வெற்றிசிறந்தார்'' (கொலோசெயர் 2:14,15).

பொருளாதாரா உயர்வா? தேவ அங்கீகாரமா?

தற்காலத்தில் இரண்டு விதமான கிறிஸ்தவ விசுவாசிகளை காணலாம்.
    1) உலகப் பொருட்களின் அடிப்படையில் தேவ ஆசீர்வாதத்தை தேடுபவர்கள். 2) தெய்வ பக்தியின் அடிப்படையில் தேவ அங்கீகாரத்தை வாஞ்சித்துத் தேடுபவர்கள்.      இவ் விருசாராருக்கும் இடையில்தான் எத்தனை பெருத்த வித்தியாசம்! ஏராளமான இன்றைய விசுவாசிகள், தேவனால் ஆசீர்வதிக்கப்படுவதில், அதிலும் பிரதானமாய் உலகப் பொருட்களினால் ஆசீர்வதிக்கப்படுவதில் மாத்திரமே திருப்தி கொண்டுவிட்டார்கள்.

பக்தர்களா? சீஷர்களா?

பெருந்திரளான பக்தர் கூட்டத்தை ஏற்படுத்திவிட வேண்டும் என்று இயேசுவானவர் அன்றும், இன்றும், என்றுமே செயல்படவில்லை. மனிதனின் அறியாமை யால் இக்கால சூழ்நிலையில் தெய்வங்களுக்கு மட்டுமல்ல, மனிதர்களுக்கும் கூட ``பக்த கோடிகள்'' பெருகிக் கொண்டிருக்கிறார்கள்.
    ஆனால் இயேசுவானவர் பக்தர்கள் கூட்டத்தையல்ல! தம்மை உத்தமமாய் பின்பற்றும் ``சீஷர்கள்'' கூட்டத்தை எதிர்பார்க்கிறார். பக்தராவதற்கு கொள்கைகள் அவசியமல்ல, ஒருவருக்கு பக்தராக மாறுவது வெளிவேஷமாகவே இருக்கும். ஆனால் சீஷர்களாவது மனித உள்ளுணர்வுக்குள் நடக்கும் ஒரு மாபெரும் மறுரூபம், இவ்விதமான மறுரூபத்தையே இயேசு வானவர் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் கொடுக்கும் படியாக தம்மை பின்பற்றும் படியான அழைப்பைக் கொடுக்கிறார்.

இழந்ததை திரும்ப பெறுவாய்


பட்சித்த வருஷங்களின் விளைவை உங்களுக்குத் திரும்ப அளிப்பேன் (யோவேல் 2:25). உங்கள் பிரயாசத்துக்கு தக்க பலனை பெற்றுக் கொள்ளாமலும்,  உங்கள் உழைப்பின் பயனை உண்ணாமலும், வீணான விரயமும், தேவையில்லாத மன உளைச்சலும் அடைந்து நீங்கள் வேதனைப்பட்டு கலங்கிப் போயிருக்கலாம்.

உயர்வுக்கு வழி

ஒரு மனிதன் கோழி பண்ணையை சுற்றிப் பார்க்கும் படியாக சென்றார். சுற்றிப் பார்த்துக் கொண்டு வரும்பொழுது, ஒரு முட்டை தானாக உடைவதைப் பார்த்தார். பார்த்தவரின் கண்கள் தொடர்ந்து அந்த முட்டையின் மீதே பதிந்து நின்றது. அப்படியே பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே, கொஞ்சம் கொஞ்சமாக முட்டை ஓடுகள் அகன்று உள்ளே இருந்து குஞ்சின் அலகு தெரிய ஆரம்பித்தது. அதைப் பார்த்துக் கொண்டிருந்தவருக்கு, ஆர்வம் அதிகமாகி விட்டது. இன்னும் ஆர்வமாக பார்க்க ஆரம்பித்து விட்டார். அப்படியே நேரம் செல்ல, செல்ல பாதி அளவிற்கு முட்டையின் ஓடு உடைந்து பாதி அளவு குஞ்சு வெளியே தெரிய ஆரம்பித்தது.

எது எழுப்புதல் ?

இந்திய தேசத்தின் மக்கள் கிறிஸ்துவுக்குள்ளாக மனந்திரும்ப வேண்டும் என்ற எண்ணங்கொண்டு இன்றைய கிறிஸ்தவ சமுதாயத்தில் எழுப்புதல் வாஞ்சையுடைய அநேகரை அவர்கள் பேசுவதிலிருந்து கண்டு கொள்ள முடிகிறது.

கிறிஸ்துவை அறியாத மக்கள் எப்படியாவது அவரை அறிந்து இரட்சிக்கப்பட வேண்டுமென்ற வாஞ்சையும், பிரயாசமும் கொண்ட இப்படிப்பட்டவர்களைத்தான் தேவன் விரும்புகிறார்., தேடுகிறார்.

அறுவடையின் நாட்கள்

நம்முடைய வாழ்க்கையிலே எவ்வளவோ விதமான எதிர் பார்ப்புக்கள் உண்டு, எதிர்பார்ப்பு இல்லாத வாழ்க்கை இல்லை,நம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான எதிர் பார்ப்புக்கள் உண்டு.
சில நேரங்களில் நாம் எதிர் பார்த்தவைகள் உடனடியாக நடந்துவிடும், சில சமயம் தாமதமாகும். தாமதமாகும் பொழுது,சோர்ந்து போகிறோம், கலங்கி போகிறோம். வாழ்க்கையே அவ்வளவுதான் எல்லாம் முடிந்து விட்டது என்று எண்ணிக் கொள்ளுகிறோம்.