Bread of Life Church India

தேவையானதை மட்டும்...பேச வேண்டும்.

சிறுவன் ஒருவன்  தன்  ஆசிரியரிடம் வந்து "சார் Sex என்றால் என்ன? என்று கேட்டான். இந்த சிறு வயதில் கேட்க கூடாத கேள்வியை கேட்கிறானே என்று ஆசிரியருக்கு கோபம்.

ஆனாலும் தனது கோபத்தை மறைத்து, செக்ஸ் என்றால், தாம்பத்திய உறவு.
அது கணவன் மனைவிக்காக கடவுளால் கொடுக்கப்பட்டது. அதன் மூலமாகவே பிள்ளைகள் பிறக்கிறார்கள். என்று மிகவும் விரிவாக சில நிமிடங்கள் அந்த சிறுவனிடம் விவரித்து சொல்லி விட்டு, இந்த வயதிலேயே இது மாதிரி கேள்விகளை எல்லாம் கேட்க கூடாது என்று கோபத்துடன்  சொன்னார்.

ஆசிரியர் சொன்னவைகளை எல்லாம் அமைதியாக கேட்டுக்கொண்டிருந்த சிறுவன் கொஞ்ச நேரம் ஆசிரியரையே பார்த்து விட்டு, குழப்பத்துடன், ஆசிரியர் சொன்னது எதுவும்  புரியாமல் ஒரு பேப்பரை காண்பித்து, சார்  இதில் Sex  என்று போட்டிருக்கிறது இதற்கு நேராக என்ன எழுத வேண்டும் என்று  கேட்டான்.

...........

இப்படிதான் அநேகர்...மற்றவர்களின் புரிதலுக்கு ஏற்ற மாதிரி பேசாமல் தனக்கு தெரிந்ததை எல்லாம் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

எந்த இடத்தில் எது தேவையோ அதை மட்டும் சரியாக அறிந்து பேச வேண்டும்.




அதே தந்திரங்கள் பலிக்குமா?

...பழைய கதைதான் முழுவதும் வாசியுங்கள்.....

ஒரு தொப்பி வியாபாரி ஊர் ஊராக அலைந்து தொப்பி விற்று விட்டு  வரும் போது மிகவும் களைப்பாக இருந்ததால்  தொப்பிகளை கிழே  வைத்து விட்டு, ஒரு மரத்தின் நிழலில் அமர்ந்தான்.

மரத்தின் நிழலில் இதமான காற்றி்ல் அப்படியே கண் அயர்ந்து தூங்கி விட்டான். கண் விழித்து பார்த்த போது தனக்கு அருகில் இருந்த  தொப்பிகளை காணவில்லை. சுற்றி பார்க்கும் போது மரகிளைகளில் அமர்ந்திருந்த குரங்குகள் தொப்பிகளை அணிந்திருந்தன.

குரங்குகள் ஒவ்வொன்றும் அணிந்திருக்கும்  தொப்பிகளை எப்படி வாங்குவது என்று யோசித்த வியாபாரி தன்னுடைய தலையில் அணிந்திருந்த தொப்பியை எடுத்து கீழே போட்டான்.

உடனே குரங்குகளும் அணிந்திருந்த தொப்பிகளை கீழே போட்டு விட்டது.

உடனே சந்தோஷத்துடன் எல்லா தொப்பிகளையும் எடுத்துக்கொண்டு வியாபாரி வியாபாரத்திற்கு சென்றான்.

ஆண்டுகள் உருண்டோடின..தொப்பி வியாபாரிக்கு வயதாகி விட்டது.

இப்போது தொப்பி வியாபாரியின் பேரன் தாத்தாவை போன்று தொப்பி வியாபாரம் செய்ய புறப்பட்டான்.

அப்பொழுது அந்த தொப்பி வியாபாரி தனக்கு நடந்த அனுபவங்களை தனது பேரனிடம் சொன்னான்.

"ஒரு நாள் நான் வியாபாரத்துக்கு சென்ற போது, அசதியில் ஒரு மரத்தின் நிழலில் தூங்கி விட்டேன்.

அப்பொழுது மரத்தில் அமர்ந்து இருந்த குரங்குகள் தொப்பியை எடுத்து அணிந்து கொண்டன. உடனே அந்த தொப்பிகளை எப்படி குரங்குகளிடம் இருந்து வாங்குவது என்று யோசித்த நான், எனது தலையில் அணிந்திருந்த தொப்பியை எடுத்து கீழே போட்டேன்.

உடனே குரங்குகளும் தான் அணிந்திருந்த தொப்பிகளை கீழே போட்டு விட்டது நான் தொப்பிகளை எடுத்து வந்து விட்டேன்" என்று தனது பேரனிடம் தனது பழைய அனுபவத்தை விவரித்து  சொன்னான்.

தனது தாத்தாவின் அனுபவத்தை கேட்ட பேரன். தொப்பி வியாபாரத்திற்கு சென்றான்.

மதிய வேளையில்  மிகவும் களைத்து போனவனாக ஒரு மரத்தின் நிழலில் அமர்ந்தவன் அப்படியே தூங்கி விட்டான்.

கண் விழித்து பார்த்த போது தொப்பிகளை காண வில்லை. சுற்று முற்றும் பார்த்த போது மரத்தில் அமர்ந்திருந்த குரங்குகள் தொப்பிகளை எடுத்து அணிந்திருந்தன.

உடனே அவனுக்கு தாத்தா. சொன்ன கதை ஞாபகத்திற்கு வந்தது.

இப்போது என்ன செய்கிறேன் பார்.
 என்று தான் அணிந்திருந்த தொப்பியை எடுத்து கீழே போட்டான்.

கீழே போட்டு விட்டு குரங்குகளை பார்த்தான். குரங்குகள் தாங்கள் அணிந்திருந்த தொப்பியை கீழே போட வில்லை.

மறுபடியும் தலையில்  தொப்பியை அணிந்து விட்டு கீழே போட்டு விட்டு குரங்குகளை பார்த்தான்.

அப்பொழுதும் குரங்குகள் தொப்பியை கீழே போட வில்லை.

அவனுக்கு புரியாமல் திகைத்துக்கொண்டிருக்கும் போது குரங்குகள் அவனைப்பார்த்து உனக்கு எப்படி தாத்தா இருக்கிறாரோ அதே போல
எங்களுக்கும் தாத்தா இருக்கிறார் என்றது...😀😀

..கதையின் பொருள்..
ஒருவரின் அனுபவம் இன்னொருவருக்கு உதவாது..

செயல்களில் மாற்றம் இல்லாமல் ஜெயிக்க முடியாது.

எனவே..சிந்தித்து செயல்படுவோம்.☺

Rev. V.S.Lourduraj
Bread of Life Church
Thiruvottiyur, Chennai 19

கெட்டுப்போகிறவர்களுக்கே பைத்தியமாக இருக்கும்

தனக்கு முன் இருக்கும் எதிரியை வீழ்த்துகிறவர்களையே வெற்றி பெற்றவர்கள் என்று அழைப்பார்கள். இதுதான் உலக வழக்கம், உலக நியதி, ஆனால் இதற்கு முற்றிலும் மாறுபாடாக இயேசு கிறிஸ்து சிலுவையில் மரித்தார். ஆனால் இயேசு கிறிஸ்துசிலுவையிலே வெற்றி சிறந்தார்” (கொலோ 2:15) என்று வேதம் கூறுகிறது. மரணத்தை தோல்வி என்று  நினைக்கும் உலக ஞானிகளால் இதை ஏற்றுக்கொள்ள முடிய வில்லை. உலக ஞானிகள் இதை பைத்தியகாரத்தனமாக எண்ணுகிறார்கள். எனவேதான்.  சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது” (1 கொரி 1:18) என்று வேதம் கூறுகிறது. அவர்கள் தங்களை ஞானிகள் என்று எண்ணிக்கொண்டாலும் கடவுளின் இரட்சிப்பின் வழியை அவர்களால் அறிந்து கொள்ள முடிவில்லை.
உலக ஞானமே கடவுளோடு இணைந்து கொள்ள முடியாதபடி அவர்களை தடுக்கிறது. “தேவஞானத்துக்கேற்றபடி உலகமானது சுயஞானத்தினாலே தேவனை அறியாதிருக்கையில், பைத்தியமாகத் தோன்றுகிற பிரசங்கத்தினாலே விசுவாசிகளை இரட்சிக்க தேவனுக்குப் பிரியமாயிற்று  (1 கொரி 1;21) என்று வேதம் கூறுகிறது.
ஆனால் உலக ஞானிகளால் பைத்தியமாக தோன்றுகிற சுவிசேஷத்தினாலேயே மனுகுலத்தை விடுதலையாக்க தேவன் விரும்புகிறார்.
சிலுவையில் மரித்து, அடக்கம் பண்ணப்பட்டு, மூன்றாம் நாளில் இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்தார். இதை விசுவாசித்து ஏற்றுக்கொள்வதே விசுவாசம். இதை விசுவாசிக்கும் ஒருவர் பாவத்திலிருந்து விடுதலையாக்கப்பட்டு, தேவனுடைய பிள்ளை என்ற அதிகாரத்தை பெறுகிறார் என்பதுதான்சிலுவையின் உபதேசம்.
தன்னையே காப்பாற்றிக்கொள்ள முடியாமல் மரித்தவர் மற்றவர்களை விடுதலையாக்க முடியுமா? இது என்ன பைத்தியகாரதனமாக இருக்கிறது. என்று சொல்லி இந்த உபதேசத்தை விசுவாசித்து ஏற்றுக்கொள்ளாதவர்கள் கெட்டுப்போவார்கள். எனவே, கெட்டுப்போகிறவர்களுக்கே சிலுவையைப்பற்றிய உபதேசம் பைத்தியமாயிருக்கிறது என்று வேதம் கூறுகிறது.
ஆனால் இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணத்தின் மூலமாகவே, தேவன் மனுகுலத்தை விடுதலையாக்குகிறார். இதுதான்விசுவாசம்இந்த விசுவாசமே இரட்சிப்பை கொடுக்கிறது. இதைக்குறித்துதான்இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது” (1 கொரி 1;18) என்று வேதம் கூறுகிறது.


Rev. V.S. Lourduraj
Bread of Life Church