கெட்டுப்போகிறவர்களுக்கே பைத்தியமாக இருக்கும்
தனக்கு முன் இருக்கும்
எதிரியை வீழ்த்துகிறவர்களையே வெற்றி பெற்றவர்கள் என்று
அழைப்பார்கள். இதுதான் உலக வழக்கம்,
உலக நியதி, ஆனால் இதற்கு
முற்றிலும் மாறுபாடாக இயேசு கிறிஸ்து சிலுவையில்
மரித்தார். ஆனால் இயேசு கிறிஸ்து
“சிலுவையிலே வெற்றி சிறந்தார்” (கொலோ 2:15) என்று வேதம் கூறுகிறது.
மரணத்தை தோல்வி என்று நினைக்கும் உலக ஞானிகளால் இதை
ஏற்றுக்கொள்ள முடிய வில்லை. உலக
ஞானிகள் இதை பைத்தியகாரத்தனமாக எண்ணுகிறார்கள்.
எனவேதான். “சிலுவையைப்பற்றிய
உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது” (1 கொரி 1:18) என்று வேதம் கூறுகிறது.
அவர்கள் தங்களை ஞானிகள் என்று
எண்ணிக்கொண்டாலும் கடவுளின் இரட்சிப்பின் வழியை அவர்களால் அறிந்து
கொள்ள முடிவில்லை.
உலக ஞானமே கடவுளோடு
இணைந்து கொள்ள முடியாதபடி அவர்களை
தடுக்கிறது. “தேவஞானத்துக்கேற்றபடி உலகமானது சுயஞானத்தினாலே தேவனை அறியாதிருக்கையில், பைத்தியமாகத்
தோன்றுகிற பிரசங்கத்தினாலே விசுவாசிகளை இரட்சிக்க தேவனுக்குப் பிரியமாயிற்று” (1 கொரி
1;21) என்று வேதம் கூறுகிறது.
ஆனால் உலக ஞானிகளால்
பைத்தியமாக தோன்றுகிற சுவிசேஷத்தினாலேயே மனுகுலத்தை விடுதலையாக்க தேவன் விரும்புகிறார்.
சிலுவையில் மரித்து, அடக்கம் பண்ணப்பட்டு, மூன்றாம்
நாளில் இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்தார்.
இதை விசுவாசித்து ஏற்றுக்கொள்வதே விசுவாசம். இதை விசுவாசிக்கும் ஒருவர்
பாவத்திலிருந்து விடுதலையாக்கப்பட்டு, தேவனுடைய பிள்ளை என்ற அதிகாரத்தை
பெறுகிறார் என்பதுதான்… சிலுவையின் உபதேசம்.
தன்னையே காப்பாற்றிக்கொள்ள முடியாமல்
மரித்தவர் மற்றவர்களை விடுதலையாக்க முடியுமா? இது என்ன பைத்தியகாரதனமாக
இருக்கிறது. என்று சொல்லி இந்த
உபதேசத்தை விசுவாசித்து ஏற்றுக்கொள்ளாதவர்கள் கெட்டுப்போவார்கள். எனவே, கெட்டுப்போகிறவர்களுக்கே சிலுவையைப்பற்றிய உபதேசம்
பைத்தியமாயிருக்கிறது என்று வேதம் கூறுகிறது.
ஆனால் இயேசு கிறிஸ்துவின்
சிலுவை மரணத்தின் மூலமாகவே, தேவன் மனுகுலத்தை விடுதலையாக்குகிறார்.
இதுதான் “விசுவாசம்” இந்த விசுவாசமே இரட்சிப்பை
கொடுக்கிறது. இதைக்குறித்துதான் “இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது”
(1 கொரி 1;18) என்று வேதம் கூறுகிறது.
Rev. V.S. Lourduraj
Bread of Life Church
Bread of Life Church
0 comments:
Post a Comment