Bread of Life Church India

உனக்குள்ளதை வெளிப்படுத்து..

கல்லூரி ஆண்டு விழா துவங்குவதற்கு இன்னும் சிறிது நேரமே இருந்தன.  மாணவர்கள் எல்லோரும் மிகுந்த உற்சாக வெள்ளத்தில் மிதந்து கொண்டிருக்க, மனதில் படபடப்புடன் தான் எழுதிவைத்திருந்த கட்டுரையை மறுபடியும் வாசித்து பார்த்து “நன்றாக எழுதி இருக்கிறேனா? இல்லை இதை நான் வாசிக்கும் போது மற்றவர்கள் என்னைப்பார்த்து கிண்டல் செய்து சிரிப்பார்களா?’’ என்று நினைத்துக்கொண்டிருக்கும் போதே மனதிற்குள் கலவரம் மேலோங்க கரங்களில் இருக்கும் விரல்களை மடக்கி சொடுக்கிக்கொண்டிருந்தான் ஜான்.
ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் தனித்திறமைகளை காண்பிக்க வேண்டும் என்று கல்லூரி பேராசிரியர் சொல்லி இருந்ததால் தன்னால் முடிந்த அளவு கட்டுரையை சொந்தமாக தயார் செய்து வைத்திருந்தான்.
விழா ஆரம்பம் ஆனது ஒவ்வொருவரும் தங்களின் திறமைகளை காண்பித்துக்கொண்டிருந்தனர். கரவொலி அரங்கத்தை அதிரப்பண்ணியது. இதைப்பார்த்துக்கொண்டிருக்கையில் தன்னுடைய கரத்தில் இருக்கும் பேப்பரை மறுபடியும் விரித்துப்பார்த்து விட்டு, தன்னைத்தானே நொந்து கொண்டவனாய், அவனுக்கே அவன் மேல் வெறுப்பு இன்னும் அதிகமானது.

மாற்றத்தின் மறுபக்கம்

கிறிஸ்துவுக்குள் மிகவும் பிரியமான இணைய தள ஜீவ அப்பம் குடும்ப அங்கத்தினர்களுக்கு, சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
இந்த ஆண்டில்  மூன்றாம் மாதத்தில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.
ஒருசில  காரணங்களால், கடந்த சில மாதங்களாக நமது ஜீவ அப்பம் மாத இதழ் வெளிவரவில்லை,  இணையத்திலும் செய்திகளை வெளியிட முடியவில்லை. அநேகர் விசாரித்தீர்கள், ஜெபித்தீர்கள் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.
இந்த ஆண்டில் தொடர்ந்து நமது ஜீவ அப்பம் வெளியிட தேவன் நமக்கு உதவி செய்வாராக.
கடந்த ஆண்டு, தேவ கிருபையால் தேவனுடைய ஊழியத்தை செய்ய கர்த்தர் நமக்கு உதவி செய்தார்.  தேவனுக்கே மகிமை உண்டாகட்டும்.
தேவ பிள்ளைகளாகிய நம்முடைய ஒவ்வொருவருடைய செயல்களும், முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்றே கர்த்தர் எதிர்பார்க்கிறார். தேவனோடு ஐக்கியப்பட்டு, மற்றவர்களை தேவனுடைய ஐக்கியத்துக்குள்ளாக கொண்டுவருவதும், விசுவாச வாழ்வில் நாம் வளர்ந்து, மற்றவர்களையும் விசுவாச வாழ்வில் வளர்வதற்கு வேண்டிய உதவிகளை செய்வதற்குமே நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம்.

"ஜீவ அப்பம்'' (மார்ச் 2016) மாத இதழ்

கிறிஸ்துவுக்குள் அன்பான ஜீவ அப்பம் இணைய நண்பர்களுக்கு,  ஆவிக்குரிய வாழ்வுக்கு உறுதுணையாக,  விசுவாச வாழ்வுக்கு தேவையான செய்திகளுடன், கிறிஸ்துவுக்குள் வளரவும், நிலைத்து நிற்கவும், "ஜீவ அப்பம்'' மாத இதழ் வெளி வந்து கொண்டிருக்கிறது.

எல்லாரும் இலவசமாக படிக்கும் வண்ணமாக மின் இதழாகவும் (PDF) இணையத்தில் கொடுக்கப்படுகிறது.  இந்த மாத ( மார்ச்  2016) ஜீவ அப்பம் மாத இதழை  இலவசமாக  பதிவிறக்கம் செய்து படியுங்கள்.

நண்பனா? எதிரியா?




பாவத்திற்கு விரோதமாய்ப் போராடுகிறதில் இரத்தஞ்சிந்தப் படத்தக்கதாக நீங்கள் இன்னும் எதிர்த்து நிற்கவில்லையே’’ (எபி 12:4).
பாவத்திற்கும், கிறிஸ்தவத்திற்கும் எந்த விதமான சம்மந்தமும் இல்லை. பாவம் செய்கிறவனாக இருந்தால் அவன் கிறிஸ்தவன் இல்லை. கிறிஸ்தவனாக இருந்தால் அவன் பாவம் செய்வது இல்லை.
பாவத்தை ஜெயிக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்கள் முதலாவது பாவத்தை எதிரியாகப் பார்க்க வேண்டும், பாவத்திலிருந்து விடுபட வேண்டும் என்பவர்கள் பாவத்தை வெறுக்க வேண்டும்.
பாவத்திற்கு நண்பனாக இருந்து கொண்டு, பாவத்தை ஜெயிக்க வேண்டும் என்ற பேச்சுக்கள் எல்லாம் வெறும் மாய்மாலங்களாகவே இருக்கும்.
பாவத்தை வெறுக்காமல் பரிசுத்த வாழ்வை விரும்புவது எவ்விதம் சாத்தியமாகும். பரிசுத்த வாழ்வை விரும்புகிறவர்கள் பாவத்தை வெறுக்க வேண்டும். பாவத்துடன் உள்ள தொடர்பை துண்டிக்க வேண்டும்.
இயேசு கிறிஸ்து பாவத்தின் அடிமைத்தனத்தில் இருக்கும் மனிதனை விடுவித்து, பரிசுத்தமாக்குகிறார். அனுதினமும் பாவத்தை ஜெயிக்க பெலன் தருகிறார்.

உன் எல்லையில் சத்துரு இல்லை



தேவனுடைய வாக்குத்தத்த வசனத்தை தியானித்து, தேவனுடைய ஆசீர்வாதங்களை சுதந்தரித்துக்கொள்வோம்.
“யூதாவே, சகோதரரால் புகழப்படுபவன் நீயே; உன் கரம் உன் சத்துருக்களுடைய பிடரியின்மேல் இருக்கும்; உன் தகப்பனுடைய புத்திரர் உன்முன் பணிவார்கள்’’  (ஆதி 49:8)
நம்மை சத்துருவின் கையில் ஒப்புக்கொடுக்காத தேவன், சத்துருவை ஜெயிக்கவும், நமக்கு விரோதமாக எழும்பும் சத்துருவை முறியடிக்கும் பெலத்தையும் கொடுப்பேன் என்று வாக்குத்தத்தமாக இந்த வார்த்தைகளை இந்த மாதத்தில் நமக்கு கொடுக்கிறார்.
நமக்கு எதிரிடையாக செயல்படும் சத்துரு, நம்மை பெலவீனப்படுத்தும்படியாகவும், நமது நன்மைகளையும், ஆசீர்வாதங்களையும் திருடும் படியாகவும் செயல்பட நினைக்கிறான், அது மட்டும் அல்ல, தேவ சமூகத்தில் இருந்து நம்மை பிரிக்கும் படியாகவும், தேவனோடு உள்ள ஐக்கியத்தை உடைக்கும் படியாகவும் தந்திரமாக செயல்படப் பார்க்கிறான்.