Bread of Life Church India

நன்மை எங்கிருந்து வரும்?

    
மனிதரின் சிந்தையில் எப்பொழுதுமே ஒரு எண்ணம் ரீங்காரமிட்டுக் கொண்டே இருக்கும் "நன்மை எங்கிருந்து வரும்" நமக்கு யார் நன்மை செய்வார், எவ்விதத்திலேயாகிலும் நன்மை கிடைக்காதா, என்ற எண்ணம் தான். ஆனால் உண்மையாக நடப்பது என்ன? பெரும்பாலான நபர்களை பார்த்து மனம் நொந்து போவது தான் வாழ்க்கையில் மிச்சமாக இருக்கும். ஆனால் உண்மையாகவே மனிதர் களின் வாழ்வில் நன்மை வருமென்றால் அது ஒருவரிடமிருந்து தான் வரும்.
    வானத்தையும் பூமியையும் உண்டா க்கின தேவன் மனிதனின் மீட்புக்காக தான் மனிதனாக இப்பூமியில் பிறந்து "நன்மை செய்கிறவராக இப்பூமியில் சுற்றி திரிந்தார்"    (அப் 10:38) என்று ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை குறித்து வேதம் கூறுகிறது.
    "நன்மை செய்கிறவராக" என்று ஏன் வேதாகமம் இயேசுவானவரை மையப்படுத்தி காண்பிக்க வேண்டும் என்று சற்று ஆழ்ந்து சிந்திப்போமேயானால் ரோமருக்கு எழுதின நிருபத்திலே 7 ம் அதிகாரம் 18, 19 வசனங்களை வாசித்து பார்க்கும் பொழுது ஒரு தனி மனிதனின் கூக்குரல் நமது காதில் வந்து விழும். தன்னை ஒரு மனிதன் எவ்வளவுதான் நியாயப் படுத்திக் கொண்டு வாழ்ந்தாலும், பேசினாலும் தன்னு டைய மன சாட்சியிலே குத்தப் பட்டவனாகவே வாழ்கிறான் என்பதை அப்பட்டமாக எடுத்துக் கூறும் வேத பகுதியே அது "என்னிடத்தில், அதாவது, என் மாம்சத்தில், நன்மை வாசமாயிருக்கிறதில்லையென்று நான் அறிந்தி ருக்கிறேன், நன்மை செய்ய வேண்டுமென்கிற விருப்பம் என்னிடத்திலிருக்கிறது, நன்மை செய்வதோ என்னிடத்திலில்லை ஆதலால் நான் விரும்புகிற நன்மையைச் செய்யாமல், விரும்பாத தீமையையே செய்கிறேன்" (ரோமர் 7 : 18, 19)
    ஒரு மனிதன் எந்த நிலையில் இருக் கிறான் என்பதை இன்னொரு மனிதன் குற்றப்படுத்த வேண்டிய அவசியமே இல்லை காரணம், மனச்சாட்சியோடு வாழும் ஒவ்வொரு மனிதனுக்கும் தெரியும் தான் எந்த அளவுக்கு குற்றவாளி என்பது. மனிதனின் இப்படிப்பட்ட நிலைக்கு காரணத்தையும் வேதம் கூறுகிறது "நான் அல்ல, எனக்குள் வாசமாயிருக்கிற பாவமே அப்படிச் செய்கிறது" (ரோமர் 7 : 16)
    ஒரு மனிதனின் உண்மையான நிலைதான் என்ன? என்று ஆராய்ந்து பார்க்கும் பொழுது எவ்வளவுதான் நன்மை செய்ய வேண்டுமென்று நினைத்தாலும், எல்லாவற் றையும் துரந்து, துரவி வாழ்க்கை வாழ்ந்தாலும் எத்தனையோ அறிவுரை வார்த்தைகளை பேசினாலும், கேட்டாலும் மனிதன் பாவத்தி லிருந்து விடுதலையாக்கப் படவில்லை என்றால் எல்லாமே மாயையாகவே இருக்கும். பக்தி உட்பட.
    "பக்தி மார்க்கம்" எந்த ஒரு மனிதனின் வாழ்விலும் பெறும் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது. பக்தியென்பது ஒரு வட்டத்துக் குள்ளாக தன்னைத் தானே அடைத்துக் கொள்வது தான். "நிர்பந்தமான மனுஷன் நான்! இந்த மரண சரீரத்தினின்று யார் என்னை விடுதலையாக்குவார்" (ரோமர் 7 : 24) என்று கூறும் வேதம் "என் மனதினாலே தேவனுடைய நியாயப் பிரமாணத்துக்கும் மாம்சத்தினாலேயோ பாவப் பிரமாணத்துக்கும் ஊழியஞ் செய்கிறேன்" (ரோமர் 7 : 25) என்று மனிதர்களின் இரட்டை வாழ்க்கையை தோலுரித்து காண்பிக்கிறதை பார்க்கிறோம்.
    மனிதனுடைய வாழ்க்கையில் மனம் ஒரு புறம் சென்று கொண்டிருக்கிறது. சரீரம் மற்றொருபுறம் சென்று கொண்டிருக்கிறது. மனதையும் சரீரத்தையும் ஒரே வழியில் செலுத்த வேண்டுமானால் "இயேசு கிறிஸ்துவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் என்னைப் பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்தி னின்று விடுதலையாக்கிற்றே" (ரோமர் 8 : 2) என்று வேதம் கூறுகிற பிரகாரமாக மனிதனுக்குள் நன்மையை கொடுக்கும் படியாகவே, இப்பூமியில் நன்மை செய்கிறவராக இயேசு கிறிஸ்து சுற்றி திரிந்தார். இயேசுவானவர் இப்பூமியில் பிறந்ததன் நோக்கம் மனிதனுக்கு நன்மை செய்ய வேண்டும் என்பது தான்.
    இப்பொழுதும் அவர் மனிதர்களுக்கு எவ்விதம் நன்மை செய்து கொண்டிருக்கிறார் என்பதை குறித்து சுருக்கமாக வேதத்தின் வெளிச்சத்தில் நாம் அறிந்து கொள்ளலாம்.

தேவ வல்லமை

    இயேசு கலிலேயா எங்கும் சுற்றி நடந்து அவர்களுடைய ஜெப ஆலயங்களில் உபதேசித்து, ராஜ்யத்தின் சுவிசேஷத்தை பிரசங்கித்து, ஜனங்களுக்கு உண்டாயிருந்த சகல வியாதி களையும், சகல நோய்களையும் நீக்கி சொந்த மாக்கினார் (மத் 4 : 23). உபதேசித்தார், பிரசங்கித்தார், வியாதிகளையும் நோய் களையும் நீக்கி குணப்படுத்தினார் "நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்". வியாதியும், நோய்களும் மனிதர்களை விட்டு வைப்பது இல்லை. சிலருக்கு வைத்தியம் பண்ணுவதற்கு பணம் இருக்கும், சிலருக்கு பணம் இருக்காது. மனிதனுக்குள் வியாதி வருவதற்கு பல காரணங்கள் உண்டு. சில வியாதிகள் மருத்துவர்களுக்கே சவால் விடக்கூடிய அளவிற்கு இருக்கும்.
    வியாதியோடு இருக்கும் மனிதனுக்கு எதை குறித்து சொன்னாலும், சொல்லும் வார்த்தைகளை காது கொடுத்து கேட்க முடியாது, காரணம் அவர்கள் வேதனை அவர்களுக்குத்தான் தெரியும்.
    ஆகையால் தான் இயேசுவானவர் உபதேசிக்கவோ, பிரசங்கிக்கவோ மட்டும் செய்யாமல், நோய்களையும் குணமாக்கினார். "இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார்" (எபி 13 : 8). இன்றை க்கும் அவர் நோய்களை குணமாக்குகிறார்.
    மாற்கு 5 : 25-34 வரை உள்ள வேத பகுதியை நாம் வாசித்து பார்க்கும் பொழுது 12 வருடங்கள் வியாதியில் அவதி பட்ட பெண்மணி, அதிகமான வைத்தியர்களால் கவனமாக வைத்தியம் செய்தும் இருக்கிற பணத்தை யெல்லாம் செலவு செய்து பார்த்தும் 12 வருடங் களாக அவளுக்கு மீதம் இருந்தது வருத்தமும், வேதனையும் மட்டும்தான். இப்படிப்பட்ட நிலையில் தான், கடைசியாக அவள் எடுத்த தீர்மானம் "இயேசுவை குறித்து கேள்விப்பட்டு, நான் அவருடைய வஸ்திரங்களையாகிலும் தொட்டால் சொஸ்தமாவேன்" (மாற்கு 5 : 27) என்று இயேசுவானவரை தேடி வருகிறாள்.
    அவர் இருக்கும் இடத்தை கண்டு பிடித்து அவரிடம் போகலாம் என்றால் அவரை சுற்றிலுமாக நெருங்க முடியாத அளவிற்கு பெரும் கூட்டம், அது மாத்திரமல்ல தன்னுடைய வியாதியின் தன்மையை மற்றவர்கள் அறிய வெளியே சொல்ல முடியாத நிலை, இவ்விதமான இக்கட்டான சூழ்நிலையில்தான் "அவருடைய வஸ்திரங்களையாகிலும் தொட்டால் சொஸ்தமாவேன்" என்று தனக்குள் எண்ணிக் கொண்டு, யாருக்கும் தெரியாமல் இயேசு கிறிஸ்துவின் வஸ்திரத்தை தொடுகிறாள் "என்ன ஆச்சரியம்!" 12 வருடங்களாக பாடாய் படுத்திக் கொண்டிருந்த அந்த பெண்மணியின் சரீரத்தில் காணப்பட்ட வியாதியிலிருந்து உடனடியாக சுகத்தை பெற்றுக் கொண்டாள்.
    இச்செய்தி எல்லா இடங்களுக்கும் பரவ ஆரம்பிக்கிறது "அவரிடத்திலிருந்து வல்லமை புறப்பட்டு எல்லாரையும் குணமாக்கின படியினாலே, ஜனங்கள் யாவரும் அவரைத் தொடும்படிக்கு வகை தேடினார்கள்" (லூக் 6 : 19) என்று வேதம் கூறுகிறது. அது மாத்திரமல்ல, "பிணியாளிகளெல்லாரையும் அவரிடத்தில் கொண்டு வந்து, அவருடைய வஸ்திர த்தின் ஓரத்தையாகிலும் அவர் கள் தொடும்படி உத்தரவாக வேண்டு மென்று அவரை வேண் டிக் கொண்டார்கள்; தொட்ட யாவரும் சொஸ்தமா னார்கள்" (மத் 14 : 35, 36) இவ்விதமாக இயேசு கிறிஸ்துவினிடத்தில் வந்த ஒருவராகிலும் சுகத்தை பெறாமல் போகவில்லை. அதே இயேசு கிறிஸ்துவின் வல்லமை இன்றைக்கும் குறையாமல், எல்லா மனிதர்களுக்கும் நன்மை செய்யும் படியாக இருக்கிறது.
    கடைசி காலத் தில் வாழ்ந்து கொண்டி ருக்கிறோம். மனிதனின் நோய் குணமாக தயாரி க்கும் மருந்தில் கூட கலப்படத்தை செய்ய மனிதன் துணிந்து விட்டான். நாம் சாப்பி டுகிற ஒவ்வொரு மருந்தையும், அதுமட்டுமல்ல சாப்பிடுகிற ஒவ்வொரு பொருளையும் கூட சந்தேகத்துடனே கூட சாப்பிட வேண்டிய துர்பாக்கியமான கால கட்டத்துக்குள் வந்திருக்கிறோம்.
    இப்படிப்பட்ட காலத்திலும் நமக்கு பாதுகாப்பும், பராமரிப்பும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து ஒருவரால் மட்டுமே கொடுக்க முடியும். தேவ வல்லமையால் நிரப்பப்படும் மனிதனின் வாழ்க்கையில் கண்ணுக்குத் தெரியாமல் பரவி  கொண்டிருக்கும் கொள்ளை நோயின் தாக்குதலில் இருந்து தப்பித்துக் கொள்ள முடியும். உலகத்தில் எதை எதையோ தேடி, ஓடி களைத்துப் போயிருப்பவர்கள் அதிகம். ஆனால் நன்மையை தம்முடைய வல்லமையால் கொடுக்கும் இயேசு கிறிஸ்துவை தேடி, நாடி வருகிற ஒவ்வொருவருக்கும், இயேசுவானவர் கொடுக்கும் இளைப்பாருதல், வாழ்க்கையில் இன்பமானவை. வேதம் இவ்வாராக கூறுகிறது "கர்த்தரைக் கண்டடையத் தக்க சமயத்தில் அவரைத் தேடுங்கள்; அவர் சமீபமாயிரு க்கையில் அவரை நோக்கிக் கூப்பிடுங்கள்" (ஏசா 55 : 6). அவரை தேடுகிறவர்களுக்கும், அவரை நோக்கி கூப்பிடுகிறவர்களுக்கும் நன்மை தேடி வரும்.

தேவ ஆசீர்வாதம்

    என் தேவன் தம்மு டைய ஐசுவரியத்தின் படி உங்கள் குறைவை யெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகி மையிலே நிறைவாக் குவார் (பிலி 4 : 19).
    இவ்வுலக வாழ்க்கை யில் பணம் என்பது எல்லாவற்றிற்குமே தேவையான ஒன்று. அது இல்லாமலோ, குறைவாகவோ இருக்கும் பொழுது உண்மையாகவே அது பெரும் பாடுதான். சில ருடைய வாழ்க்கை யில் எவ்வளவுதான் சம்பாதித்தாலும் திண் டாட்டம் தான். காரண மென்ன "கர்த்தரின் ஆசீர்வாதமே ஐசுவரிய த்தைத் தரும்; அத னோடே அவர் வேதனை யைக் கூட்டார்"       (நீதி 10:28) என்று வேதம் கூறுகிறது.
    அநேகருடைய வாழ்க்கையில் "கர்த்தர்" இல்லை ஆகையால் அந்த ஆசீர்வாதமில்லை. மனிதன் பணத்தை தேடுகிறான்.  கர்த்தரை விட்டு விடுகிறான். ஆனால் வேதம் கூறுகிறது கர்த்தரின் ஆசீர்வாதம்தான் பணத்தை கொடுக்கும். அதே வேளையில் "இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ் செய்யக் கூடாது;" (லூக் 16 : 13).
    மனிதர்களுடைய வாழ்க்கையில் இயேசு ஒருவரே எஜமானாக இருக்க வேண்டும். பணம் எப்பொழுதும் வேலைக்காரனாகவே இருக்க வேண்டும். மாறாக இன்றைக்கு மனிதன் பணத்தை எஜமானாக போற்ற ஆரம்பித்து விட்டது தான் பெரும் பாதகத்தை மனித வர்க்கத்துக்கே ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. இயேசு கிறிஸ்துவை எஜமானாக ஏற்றுக் கொள்ளும் மனிதர்களுக்கு இயேசுவானவர் பணம் என்ற வேலைக்காரனைக் கொடுக்கிறார். அந்த வேலைக்காரனை ஒரு நாளும் எஜமானாக மாற்றிவிடக் கூடாது. அப்படி மாற்றும் போது தான் "பண ஆசை எல்லாத்  தீமைக்கும் வேராயிரு க்கிறது; சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தை விட்டு வழுவி, அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக் கொண்டிருக்கி றார்கள்" (I தீமோ 6 : 10) என்று வேதம் கூறுகிறது.
    எந்த ஒரு மனிதனும் தரித்திரனாக இருப்பது தேவனுக்கு பிரியமில்லை, மனித னுடைய தரித்திரிய நிலையை மாற்றும் படியாகவே தேவகுமாரனாகிய இயேசு கிறிஸ்து தரித்திரரானார் என்று வேதம் கூறுகிறது.
    இப்பூமியில் இயேசுவானவர் அவதரித்த தின் நோக்கம் ஒவ்வொரு மனிதனும் தேவ ஆசீர்வாதத்தை பெற்றுக் கொள்ளும் படியாகவும் தான்.

தேவ கிருபை

    "தேவன், தம்முடைய ஒரே பேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப் போகாமல் நித்திய ஜீவனை அடையும் படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்" (யோவான் 3 : 16). மனிதனுக்கு தம்முடைய வல்லமையின் மூலமாக சுகத்தை தரும் இயேசுவானவர், தம்முடைய ஆசீர்வாதத்தின் மூலம் பொருளாதாரத்தை தருகிறவர் தம்மை விசுவாசிக்கிற ஒவ்வொருவருக்கும் தம்முடைய கிருபையின் மூலமாக "நித்திய ஜீவனை" கொடுக்கிறார்.
    நித்திய வாழ்க்கை ஒவ்வொரு மனிதனும் பெற்றுக் கொள்ளும் படியாகவே இயேசுவானவர் தம்முடைய ஜீவனையே மனிதனுக்காக கொடுத்தார். "அநேகரை மீட்கும் பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார்" (மத் 20 : 28) என்று வேதம் கூறுகிறது. தேவனுடைய ஜீவனுக்கு தூரமாக இருந்த ஒவ்வொருவருக்கும் தம்முடைய கிருபையினாலே சமீபமாக்கினார். லூக்கா 24 : 47, 48 ல் "அன்றியும் மனந்திரும்புதலும் பாவ மன்னிப்பும் எருசலேம் தொடங்கி சகல தேசத்தாருக்கும் அவருடைய நாமத்தினாலே பிரசங்கிக்கப் படவும் வேண்டியது." நீங்கள் இவைகளுக்குச் சாட்சிகளாயிருக்கிறீர்கள் என்று வேதம் கூறுகிறது. நித்திய ஜீவனுக்கு ஒரு மனிதன் தகுதி பெற வேண்டுமானால் மனந்திரும்பி பாவமன்னிப்பை பெற்றுக் கொள்ள வேண்டும்.
    "இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்" (I யோவான் 1 : 7). மாறாக எந்த ஒரு மனித நீதியும் நித்திய வாழ்வையும், சமாதானத்தையும் கொடுக்காது. இதற்கு உதாரணமாக வேதாகமத்தில் அப்போஸ்தலர் 10-ம் அதிகார த்தில் கொர்நேலியு என்ற மனிதனைக் குறித்த சரித்திரத்தில் காணலாம். கொர்நேலியு எப்படிப்பட்ட மனிதனென்று 2ம் வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது என்றால் "அவன் தேவ பக்தியுள்ளவனும், தன் வீட்டாரனைவரோடும் தேவனுக்குப் பயந்தவனுமாயிருந்து, ஜனங்களுக்கு மிகுந்த தருமங்களைச் செய்து, எப்பொழுதும் தேவனை நோக்கி ஜெபம் பண்ணிக் கொண்டிருந்தான்" என்று வாசிக்கி றோம்.
    இதில் மிகவும் நல்ல குணமுள்ளவனாக காண்பிக்கும் (1) தேவ பக்தி, (2) தேவ பயம், (3) தான தர்மம், (4) ஜெபம். இவ்வித நல்ல குணங்கள் இருந்தும் இவை ஒன்றும் அவனுக்கு நித்திய ஜீவனைக் கொடுக்காது என்பதை அவன் அறிந்து கொள்ளும்படியாக அவனிடத்தில் தேவ தூதன் அனுப்பப்படுகிறான். அந்த தேவ தூதன் மூலமாக நற்செய்தியை அறிவிக்காமல் நற்செய்தியை அறிவிக்கும் மனிதனை தேடி போ என்ற செய்தியை மட்டும் தேவ தூதன் அறிவிக்கிறான்.
    அதற்கு அப்படியே கீழ்படிந்த கொர் நேலியு பேதுருவை தேடி ஆட்களை அனுப்பி கூட்டி வரும்படியாக சொல்கிறான். பேதுரு வந்தவுடன் "நீர் வந்தது நல்ல காரியம்; தேவனாலே உமக்கு கட்டளையிடப்பட்ட யாவையும் கேட்கும் படிக்கு நாங்கள் எல்லாரும் இப்பொழுது இங்கே தேவ சமுகத்தில் கூடியிருக்கிறோம்" (அப் 10 : 33) என்று கூறுகிறான்.
    தேவனாலே கட்டளையிடப்பட்டு பேதுருவால் போதிக்கப் பட வேண்டிய வார்த்தை என்ன? என்று தொடர்ந்து வேதத்தை வாசிக்கும் பொழுது "அவரை (இயேசுவை) விசுவாசிக் கிறவன் எவனோ அவன் அவருடைய நாமத்தினாலே பாவ மன்னிப்பை பெறுவான்" (அப் 10 : 43) என்று இயேசு கிறிஸ்துவினாலே பாவ மன்னிப்பை பெற வேண்டுமென்று வேதம் கூறுகிறது. இந்த அதிகாரம் முழுக்க வேதம் நமக்கு உணர்த்துவது என்ன? "நித்திய ஜீவனை" மனிதன் பெற்றுக் கொள்வதற்கு மனிதனின் நற்கிரியைகள் மட்டுமல்ல இயேசு கிறிஸ்துவால் கிடைக்கும் பாவ மன்னிப்பே மனித வாழ்வில் நித்திய ஜீவனைக் கொடுக்கும்.
    இவ்விதமாக மனிதர்களுடைய வாழ்க்கையில் நன்மையை கொடுக்கும் படியாக இயேசுவானவர் இப்பூமியில் "நன்மை செய்கிறவராக சுற்றித்திரிந்தார். முதலாவது மனிதனின் சரீரசுகத்தைக் கொடுத்து நன்மை செய்கிறார். இரண்டாவது வாழ்கின்ற வாழ்க்கையில் தம்முடைய ஆசீர்வாதத்தினாலே செழிப்பைக் கொடுக்கிறார். அது மாத்திரமல்ல, எல்லாவற்றிற்கும் மேலாக "நித்திய வாழ்வைக் கொடுக்கிறார். இதை தம்முடைய வல்லமை யாலும், ஆசீர்வாதத்தினாலும், கிருபை யினாலும் அவரை விசுவாசிக்கிற ஒவ்வொருவருக்கும் கொடுக்கிறார்.
    மனிதன் நன்மை செய்வான் என்று நம்பினால் மனிதன் கைவிட்டு விடுவான். ஆனால், இயேசு கிறிஸ்துவை நம்பி விசுவாசிக்கிற ஒவ்வொருவருடைய வாழ்க்கை யையும் கைவிடாமல் இயேசுவானவர் நன்மை செய்வார். அந்த ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவைச் சார்ந்து அவரைப் பற்றிப் பிடித்துக் கொள்ளும் ஒவ்வொருவருடைய வாழ்க்கை யிலும் நன்மைதான். "நன்மை எங்கிருந்து வரும் அது இயேசு கிறிஸ்துவினிடமிருந்தே வரும்!"

0 comments:

Post a Comment