Bread of Life Church India

புது வருட துவக்கம் மட்டுமல்ல, புது வாழ்வின் ஆரம்பம்

கிறிஸ்துவுக்குள் அன்பான என் அன்பு தேவ பிள்ளைகளுக்கு புத்தாண்டின் வாழ்த்துக்களுடன் இந்த புது வாழ்வின் வாக்குத்தத்த தை கொடுப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
     2014 ம்  ஆண்டு புதிய வாக்குத்தத்தம் உங்களுக்கு ஆசீர்வாதமாகவும், நிறைவான நன்மைகளையும் கொண்டு வரப்போகிறது. அதற்காக கர்த்தரை ஸ்தோத்தரித்து, கர்த்தருடைய நாமத்தை மகிமைப்படுத்துகிறேன்.

நீங்களும் எஜமானாக வேண்டுமா?


இந்த உலகத்தில் பணம் எல்லாவற்றிற்கும் தேவை என்பதை எல்லோரும் அறிவோம். பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதை இலட்சியமாக கொண்டு செயல்படுவோரும் உண்டு. பணம் இல்லாவிட்டால் இன்றைய காலகட்டத்தில் எதையுமே செய்யமுடியாது என்பது போன்ற நிலை வந்துவிட்டது. இதையும் யாரும் மறுக்க முடியாது.
ஆனால் இந்த பணத்தை பயன்படுத்தும் விதத்தைதான் அதிகமானோர் சரியாக அறிந்து கொள்ள வில்லை. இதைக்குறித்து வேதாகமம் என்ன சொல்லுகிறது என்பதை வேதாகமம் வெளிச்சத்தில் பார்க்கலாம்.

இந்த செயல் நல்லதா ?

சில நண்பர்கள் தங்கள் முக நூல் பக்கத்தில் தொடர்ந்து ஊழியங்களையும், ஊழியர்களையும் விமர்சனங்கள் செய்து எழுதிக்கொண்டு இருக்கிறார்கள். கேட்டால் தவறு செய்கிறவர்களை அடையாளம் காட்டுகிறோம் என்று பதில் சொல்லுவார்கள்.

வானமும் பூமியும் சந்தித்த நாள்


"அந்தகாரத்திலும் மரண இருளிலும் உட்கார்ந்திருக்கிறவர்களுக்கு வெளிச்சம் தரவும், நம்முடைய கால்களைச் சமாதானத்தின் வழியிலே நடத்தவும், அவ்விரக்கத்தினாலே உன்னதத்திலிருந்து தோன்றிய அருணோதயம் நம்மைச் சந்தித்திருக்கிறது'' ( லூக்கா 1:78,79).
வானமும் பூமியும் ஒன்றோடு ஒன்று சந்திக்குமா? என்றால் சந்திக்காது என்றே அநேகர் சொல்லுவார்கள். ஒருவிதத்தில் அதுவும் உண்மைதான். ஆனால் வானாதி வானமும் கொள்ளாத தூயாதி தூயவரான ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, தம்முடைய மக்களை சந்திக்கும் படியாக இந்த பூமிக்கு வந்தார். அந்த நாளை நினைவு கூர்ந்துதான் நாம் இந்த மாதத்தில் நமது மகிழ்ச்சியை தெரிவித்து வருகிறோம்.

எச்சில் கைகள்




ஊழியங்களிலும், ஊழிய அழைப்பிலும், வித்தியாசங்கள் உண்டு. வேதாகமத்தில் அப்போஸ்தலர்கள் ஒவ்வொருவரும் தங்களின் அழைப்பின்படி ஊழியத்தை நிறைவேற்றினர். அதில் அவர் ஊழியம் சிறந்தது, இவர் ஊழியம் குறைந்தது என்று எதையும் சொல்ல முடியாது.
இந்த காலத்திலும் அவரவர் அழைக்கப்பட்டுள்ள ஊழியத்தில் நிலைத்திருப்பது நல்லது. நிறை குறை எல்லோரிடத்திலும் உண்டு. குறைகளை மட்டும் நோக்கினால் ஒருவர் கூட தேறமாட்டோம் . இது தான் உண்மை.
இப்போதும் சிலர் சொல்லுவதை கேட்டிருக்கிறேன். நான் பவுலைப்போல ஊழியம் செய்கிறேன். நான் அவரைப்போல ஊழியம் செய்கிறேன், நான் இவரைப்போல ஊழியம் செய்கிறேன் என்று சொல்லி விட்டு, அப்படிப்பட்டவர்களின் ஊழிய வழிகளை நோக்கி பார்ப்பது இல்லை.

வென்றவர் மூலம் வெல்வோம்



 
வெற்றி வாழ்க்கை சாத்தியமே (பகுதி 2)

1.       அறிந்து கொள்ள வேண்டிய சத்தியங்கள்
கடந்த நாட்களில் அறிந்து கொள்ள வேண்டிய சத்தியங்கள் என்ற தலைப்பில், அ) சுயத்தின் அடிமைத்தனத்தில் இருந்து விடுதலை பெற்று விட்டோம் என்று பார்த்தோம்.
தொடர்ந்து அதை தியானித்து, வெற்றி வாழ்க்கை வாழும்படியாக தேவ கிருபைகளை பெற்றுக்கொள்வோம்.
ஆ) பாவத்தின் பிடியிலிருந்து விடுதலை பெற்று விட்டோம்.
     “பாவத்தினின்று நீங்கள் விடுதலையாக்கப்பட்டு, நீதிக்கு அடிமைகளானீர்கள்’’ ( ரோமர் 6:22). தேவனுடைய வார்த்தை சொல்லுகிறது, பாவத்தில் இருந்து நீங்கள் விடுதலையாக்கப் பட்டு விட்டீர்கள் என்று. ஆனால் அநேக நேரங்களில் இந்த உண்மையை ஏற்றுக்கொள்ள நம்முடைய உள்ளம் மறுக்கிறது. ஏன் என்று பார்த்தால் வேதம் இப்படி சொல்லுகிறது ஆனால் என்னுடைய வாழ்க்கையில் எந்த மாற்றமும் இல்லையே, அப்படி இருக்க இந்த வசனத்தை எப்படி முழுமையாக ஏற்றுக்கொள்வது.

"ஜீவ அப்பம்'' (டிசம்பர் 2013) கிறிஸ்தவ மாத இதழ்

கிறிஸ்து இயேசுவுக்குள் பிரியமான நண்பர்களுக்கு இந்த மாத (டிசம்பர் 2013) ஜீவ அப்பம் மாத இதழை மின் இதழாக (PDF)கொடுத்துள்ளோம்.  இலவசமாக  பதிவிறக்கம் செய்து படியுங்கள்.

மேலும் இந்த மாத இதழைக்குறித்து  உங்கள் கருத்துக்களை கீழே பின்னூட்டத்தில் பதிவு செய்யுங்கள்.

பூமி முழுவதும் அழியப் போகிறது



சிறுவர்கள் அங்கும் இங்கும் ஓடி ஆடி விளையாடிக் கொண்டிருந்தனர். மகிழ்ச்சியுடன் கூடி விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் திடீர் என்று ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டனர். “ஏய் ஏன்டா அடிச்சுக்கிறீங்க, சண்டபோடாதீங்க, சண்டபோடாதீங்க’’ என்று ஒவ்வொருவரையும் விலக்கிக்கொண்டிருந்தான் சிறுவனான நோவா. “நல்லாதானே விளையாடிக்கொண்டிருந்தோம் நீ எதற்கு அவனை அடித்தாய்’’ என்று முதலாவது அடித்த சிறுவனிடம் கேட்டான் நோவா. “அவன் எப்போதும் என்னை கேலி பேசிக்கொண்டே இருக்கிறான். நான் சொல்ல சொல்ல கேட்காமல் தொடர்ந்து கேலி பேசிக்கொண்டே இருந்தான் அதனாலதான் அடிச்சேன்’’ என்றான் முதலாவது அடித்த சிறுவன்.

வெற்றி வாழ்க்கை சாத்தியமே (தொடர் செய்தி, பகுதி 1)

``நாம் நம்மில் அன்பு கூருகிறவராலே முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர் களாயிருக்கிறோமே'' (ரோமர் 8:37).
    ``நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலே நமக்கு ஜெயங்கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம்'' ( 1 கொரிந்தியர் 15:57).
    ``நமக்கு எதிரிடையாகவும் கட்டளைகளால் நமக்கு விரோதமாகவும் இருந்த கையெழுத்தைக் குலைத்து, அதை நடுவிலிராதபடிக்கு எடுத்து, சிலுவையின்மேல் ஆணியடித்து; துரைத் தனங்களையும் அதிகாரங்களையும் உரிந்துகொண்டு, வெளியரங்கமான கோலமாக்கி, அவைகளின்மேல் சிலுவையிலே வெற்றிசிறந்தார்'' (கொலோசெயர் 2:14,15).

பொருளாதாரா உயர்வா? தேவ அங்கீகாரமா?

தற்காலத்தில் இரண்டு விதமான கிறிஸ்தவ விசுவாசிகளை காணலாம்.
    1) உலகப் பொருட்களின் அடிப்படையில் தேவ ஆசீர்வாதத்தை தேடுபவர்கள். 2) தெய்வ பக்தியின் அடிப்படையில் தேவ அங்கீகாரத்தை வாஞ்சித்துத் தேடுபவர்கள்.      இவ் விருசாராருக்கும் இடையில்தான் எத்தனை பெருத்த வித்தியாசம்! ஏராளமான இன்றைய விசுவாசிகள், தேவனால் ஆசீர்வதிக்கப்படுவதில், அதிலும் பிரதானமாய் உலகப் பொருட்களினால் ஆசீர்வதிக்கப்படுவதில் மாத்திரமே திருப்தி கொண்டுவிட்டார்கள்.

பக்தர்களா? சீஷர்களா?

பெருந்திரளான பக்தர் கூட்டத்தை ஏற்படுத்திவிட வேண்டும் என்று இயேசுவானவர் அன்றும், இன்றும், என்றுமே செயல்படவில்லை. மனிதனின் அறியாமை யால் இக்கால சூழ்நிலையில் தெய்வங்களுக்கு மட்டுமல்ல, மனிதர்களுக்கும் கூட ``பக்த கோடிகள்'' பெருகிக் கொண்டிருக்கிறார்கள்.
    ஆனால் இயேசுவானவர் பக்தர்கள் கூட்டத்தையல்ல! தம்மை உத்தமமாய் பின்பற்றும் ``சீஷர்கள்'' கூட்டத்தை எதிர்பார்க்கிறார். பக்தராவதற்கு கொள்கைகள் அவசியமல்ல, ஒருவருக்கு பக்தராக மாறுவது வெளிவேஷமாகவே இருக்கும். ஆனால் சீஷர்களாவது மனித உள்ளுணர்வுக்குள் நடக்கும் ஒரு மாபெரும் மறுரூபம், இவ்விதமான மறுரூபத்தையே இயேசு வானவர் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் கொடுக்கும் படியாக தம்மை பின்பற்றும் படியான அழைப்பைக் கொடுக்கிறார்.

இழந்ததை திரும்ப பெறுவாய்


பட்சித்த வருஷங்களின் விளைவை உங்களுக்குத் திரும்ப அளிப்பேன் (யோவேல் 2:25). உங்கள் பிரயாசத்துக்கு தக்க பலனை பெற்றுக் கொள்ளாமலும்,  உங்கள் உழைப்பின் பயனை உண்ணாமலும், வீணான விரயமும், தேவையில்லாத மன உளைச்சலும் அடைந்து நீங்கள் வேதனைப்பட்டு கலங்கிப் போயிருக்கலாம்.

உயர்வுக்கு வழி

ஒரு மனிதன் கோழி பண்ணையை சுற்றிப் பார்க்கும் படியாக சென்றார். சுற்றிப் பார்த்துக் கொண்டு வரும்பொழுது, ஒரு முட்டை தானாக உடைவதைப் பார்த்தார். பார்த்தவரின் கண்கள் தொடர்ந்து அந்த முட்டையின் மீதே பதிந்து நின்றது. அப்படியே பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே, கொஞ்சம் கொஞ்சமாக முட்டை ஓடுகள் அகன்று உள்ளே இருந்து குஞ்சின் அலகு தெரிய ஆரம்பித்தது. அதைப் பார்த்துக் கொண்டிருந்தவருக்கு, ஆர்வம் அதிகமாகி விட்டது. இன்னும் ஆர்வமாக பார்க்க ஆரம்பித்து விட்டார். அப்படியே நேரம் செல்ல, செல்ல பாதி அளவிற்கு முட்டையின் ஓடு உடைந்து பாதி அளவு குஞ்சு வெளியே தெரிய ஆரம்பித்தது.

எது எழுப்புதல் ?

இந்திய தேசத்தின் மக்கள் கிறிஸ்துவுக்குள்ளாக மனந்திரும்ப வேண்டும் என்ற எண்ணங்கொண்டு இன்றைய கிறிஸ்தவ சமுதாயத்தில் எழுப்புதல் வாஞ்சையுடைய அநேகரை அவர்கள் பேசுவதிலிருந்து கண்டு கொள்ள முடிகிறது.

கிறிஸ்துவை அறியாத மக்கள் எப்படியாவது அவரை அறிந்து இரட்சிக்கப்பட வேண்டுமென்ற வாஞ்சையும், பிரயாசமும் கொண்ட இப்படிப்பட்டவர்களைத்தான் தேவன் விரும்புகிறார்., தேடுகிறார்.

அறுவடையின் நாட்கள்

நம்முடைய வாழ்க்கையிலே எவ்வளவோ விதமான எதிர் பார்ப்புக்கள் உண்டு, எதிர்பார்ப்பு இல்லாத வாழ்க்கை இல்லை,நம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான எதிர் பார்ப்புக்கள் உண்டு.
சில நேரங்களில் நாம் எதிர் பார்த்தவைகள் உடனடியாக நடந்துவிடும், சில சமயம் தாமதமாகும். தாமதமாகும் பொழுது,சோர்ந்து போகிறோம், கலங்கி போகிறோம். வாழ்க்கையே அவ்வளவுதான் எல்லாம் முடிந்து விட்டது என்று எண்ணிக் கொள்ளுகிறோம்.

"ஜீவ அப்பம்'' கிறிஸ்தவ மாத இதழ் நவம்பர் 2013

கிறிஸ்து இயேசுவுக்குள் அன்பான நண்பர்களுக்கு இந்த மாத (நவம்பர் 2013) ஜீவ அப்பம் மாத இதழை மின் இதழாக (PDF)கொடுத்துள்ளோம்.  இலவசமாக  பதிவிறக்கம் செய்து படித்து ஆசீர்வாதங்களை சுதந்தரித்துக்கொள்ளுங்கள்.

மேன்மையும், கனமும்.....

``ஐசுவரியமும் கனமும் உம்மாலே வருகிறது; தேவரீர் எல்லாவற்றையும்
ஆளுகிறவர்; உம்முடைய கரத்திலே சத்துவமும் வல்லமையும் உண்டு; எவரையும் மேன்மைப்படுத்தவும் பலப்படுத்தவும் உம்முடைய கரத்தினால் ஆகும்'' <1நாளா 29:12>.
    இவ்வசனம் வேதாகமத்தில்  தாவீது இராஜாவின் ஜெபமாக இருக்கிறது. தேவனின் மகத்துவத்தையும் வல்லமையையும் அறிந்திருந்த தாவீது, தேவனிடமிருந்தே சகலவிதமான நன்மைகளையும்,  நிறைவான ஆசீர்வாதங்களையும் பெற்றுக் கொண்டார்.

உங்கள் துக்கம் முடிந்தது

``உன் சூரியன் இனி அஸ்தமிப்பது மில்லை; உன் சந்திரன் மறைவதுமில்லை; கர்த்தரே உனக்கு நித்திய வெளிச்ச மாயிருப்பார்; உன் துக்க நாட்கள் முடிந்துபோம்'' (ஏசாயா 60:20).
    கர்த்தர் தமது மக்களுக்கு வெளிச்சமாக இருந்து, தம்மை விசுவாசித்து பின்பற்றும் யாவரையும் பிரகாசிக்க வைக்கிறார்.
    கடந்த நாட்களில் துக்கத்துடனும் வேதனையுடனும் வாழ்ந்து வந்த உங்கள் துக்கங்களை மாற்றி,  உங்களை ஆனந்த களிப்புடன்  செழிக்க வைக்கப்போகிறார்.

இதற்கு யார் காரணம் ?

வயது முதிர்ந்த கணவன் மனைவி உச்சி வெயிலில் தங்களின் வாழ்க்கையின் கசப்பான அனுபவங்களை ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டே நடந்தனர். “நாம் பெற்று வளர்த்தது ஒரே மகன் என்று எவ்வளவு செல்லமாக பார்த்து பார்த்து எப்படி எல்லாம்  அவனை நாம் வளர்த்தோம். ஒரு நிமிஷத்தில் நம்மை தூக்கி எறிந்து விட்டானே’’, என்று கண்ணீர் முகத்தில் வடிய அதை துடைக்க கூட மறந்த நிலையில் மிகுந்த வேதனையோடு தளு தளுத்த குரலில் பேசிய தனது மனைவியின் வார்த்தையை கேட்ட முதியவர், “இன்னுமா நீ அதையே நினைச்சுகிட்டு வருகிறாய், என்ன செய்ய நம்முடைய நடுத்தர வயதை மகனை வளர்ப்பதற்க்காகவே செலவு செய்து பாடு பட்டோம். அவன் வளர்ந்து நம்மை பார்த்துக்கொள்வான் என்று நினைத்தோம். ஆனால் அவனோ, நம்மை நாயை விட கேவலமாக துரத்தி விட்டான். பரவாயில்லை, மீதி நாட்களில் நமக்காக பாடுபட்டு, நம்முடைய வாழ்க்கையை ஓட்டுவோம்’’ என்று கண்களில் முட்டிக்கொண்டு வந்த கண்ணீரை கண்களை தாண்டி வரவிடாமல் சமாளித்துக்கொண்டே முதியவர் பேசினார்.

ஐயோ, என்னை காப்பாற்ற யாரும் இல்லையா?

ஒரு மனிதன் மலையில் ஏறுவதற்காக வேண்டிய எல்லா பொருள்களையும் எடுத்துக்கொண்டு பாதுகாப்பாக ஏறிக்கொண்டிருந்தான். பல கடினமான பகுதியையும் கவனமாக கடந்தான். அவனுடைய பயணத்தில் எத்தனையோ இடறல்கள் வந்தும் அவைகளையும் தாண்டி மலையின் உச்சியை அடையும்படியாக அருகில் சென்று விட்டான். அவனுக்குள்ளாக மகிழ்ச்சி “இன்னும் சிறிது தூரம்தான் என்னுடைய இலக்கை நான் அடைய போகிறேன்’’ என்று நினைத்துக்கொண்டே உற்சாகமாக சென்று கொண்டிருந்தான். பகல் சென்று இருள் சூழ ஆரம்பித்தது. மலை உச்சியின் மிக அருகில் வந்து விட்டான்.

விதை முளைக்கும் முன்....

"அவர் கிறிஸ்துவுக்குள் உன்னதங்களில் ஆவிக்குரிய சகல ஆசீர்வாதத்தினாலும் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார்'' ( எபேசியர் 1:3).
"நிச்சயமாக நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து, உன்னைப் பெருகவே பெருகப்பண்ணுவேன் என்றார். அந்தப்படியே,  அவன் பொறுமையாய்க் காத்திருந்து, வாக்குத்தத்தம் பண்ணப்பட்டதைப் பெற்றான்'' (எபிரெயர் 16:14,15).

எறும்பின் வழியும், ஞானமும்



"அற்பமான ஜெந்துவாயிருந்தும், கோடைகாலத்திலே தங்கள் ஆகாரத்தைச் சம்பாதிக்கிற எறும்பு" ( நீதிமொழிகள் 30:25 )
தினமும் நம் வாழ்க்கையில் நாம் பார்க்கிற குட்டி உயிரினம் எறும்பு. வீட்டு மூலைமுடுக்குகளிலும் இண்டு இடுக்குகளிலும் சுற்றிக்கொண்டு திரிந்து கொண்டிருக்கும். அதை ஒரு நாளும் நாம் ஒரு பொருட்டாக நினைத்தது கிடையாது.. உருவத்தில் நம்மைவிட ஆயிரம் மடங்கு சிறிய இந்த எறும்புகள் நம்மை கடிக்கும்போது ஒற்றைவிரலில் நசுக்கி கொன்று விடுவோம். அதை .யாராலும் முற்றிலுமாக அழித்துவிட முடியாது என்பதே உண்மை

கழுகிடம் கற்றுக்கொள்

“உன் பிராணனை அழிவுக்கு விலக்கி மீட்டு, உன்னைக் கிருபையினாலும் இரக்கங்களினாலும் முடிசூட்டி, நன்மையினால் உன் வாயைத் திருப்தியாக்குகிறார்; கழுகுக்குச் சமானமாய் உன் வயது திரும்ப வால வயது போலாகிறது’’ ( சங்கீதம் 103:4,5).
கழுகின் சிறப்பு.
கழுகுகளில் மொத்தம் 74 இனங்கள் உள்ளன. உலகம் முழுவதும் கழுகுகள் பரவலாகக் காணப்படுகின்றன.

பருவ நிலை மாற்றம்


ஒரு தகப்பன் தனது இரண்டு மகள்களுக்கு திருமணம் ஆக வேண்டும், நல்ல மணமகன் வாழ்க்கை துணையாக கிடைக்க வேண்டும் என்று ஜெபித்துக்கொண்டிருந்தார். தேவன் அவருடைய விண்ணப்பத்தைக் கேட்டு அவருடைய இரண்டு மகள்களுக்கும் தேவனுக்கு பயந்த நல்ல மணமகனை கொடுத்தார். ஒரு மணமகன் விவசாயம் செய்து வந்தார். இன்னொருவர் குயவன் மண் பாத்திரங்கள் செய்து வந்தார்.

இவர்களின் திருமணங்கள் மிகவும் சிறப்பாக நடை பெற்றது. தகப்பனுக்கும், பிள்ளைகளுக்கும் மிகுந்த சந்தோஷம். மகள்கள் இருவரையும் அவர்களின் கணவன் வீட்டிற்கு மகிழ்ச்சியுடன் அனுப்பி வைத்தார்.
சில மாதங்கள் ஆகி விட்டது. தகப்பன் தனது மகள்கள் எப்படி இருக்கிறார்கள் என்று பார்த்து வரலாம் என்று மகள்களை பார்க்கும் படியாக புறப்பட்டு சென்றார்.
முதலாவது விவசாயம் செய்யும் மகளை பார்க்கும் படியாக சென்றார். தகப்பனார் சென்றதும் மூத்தமகள் “அப்பா வாங்க எப்படி இருக்கீங்க’’ என்று அன்பாக அழைத்து உபசரித்தாள். “என்னமா எப்படி இருக்க உனது கணவர் உன்னை நல்லபடியாக கவனித்துக்கொள்கிறாரா? நீ சந்தோஷமாக இருக்கிறாயா?’’ என்று கேட்டார்.
“அப்பா,எனது கணவர் என்னை மிகவும் நல்ல படியாக கவனித்துக்கொள்கிறார். தேவ கிருபையால் நான் அதிகமான சந்தோஷத்துடன் இருக்கிறேன்’’ என்று சொல்லி அநேக விஷயங்களை பேசி விட்டு “எங்கள் விவசாயத்திற்கு ஏற்றபடி மழைதான் நன்றாக பெய்ய வில்லை. நீங்கள் நல்ல மழை பெய்ய வேண்டும் என்று எங்களுக்காக ஜெபித்துக்கொள்ளுங்கள்’’ என்று கூறினாள். தகப்பனும் “நல்லது மகளே, நீங்களும் ஜெபியுங்கள். நானும் மழைக்காக ஜெபிக்கிறேன்’’ என்று சொல்லி விட்டு, நான் புறப்படுகிறேன். அப்படியே உனது தங்கை வீட்டிற்கும் சென்று தங்கையையும் பார்த்து விட்டு, நான் ஊருக்கு செல்கிறேன். போய் வருகிறேன் என்று சொல்லி விட்டு, தனது அடுத்த மகளை பார்க்கும்படி சென்றார்.
இளைய மகளின் வீட்டிற்கு தகப்பன் போகிற போதே, அந்த மகள் தனது தந்தை வருகிறதை கண்டு, வேகமாக ஓடி வந்து, அப்பா எப்படிப்பா இருக்கீங்க, இப்பக்கூட உங்களைத்தான் நினைத்துக்கொண்டிருந்தேன்’’ என்று மகிழ்ச்சி பொங்க விசாரித்து, வீட்டிற்குள் அழைத்துச்சென்றாள். மகளை பார்க்கும் போதே அவள் மகிழ்ச்சியாக நல்லபடியாக இருக்கிறாள் என்று அறிந்து கொண்ட தகப்பன், “நீ எப்படிம்மா இருக்கிறாய்’’ என்று கேட்டார். எனக்கு என்னப்பா, இயேசப்பா கிருபையில் ரொம்ப நல்லா இருக்கிறேன்’’ என்றாள்.
சிறிது நேரம் இருந்து விட்டு, மகளுக்கு வேண்டிய ஆலோசனைகளை கொடுத்து விட்டு, தகப்பன் புறப்பட ஆரம்பித்தார். உடனே மகள் “என்னப்பா வந்ததும் வராததுமா உடனே புறப்பட்டு விட்டீர்கள். இரண்டு நாள் இருந்து விட்டு போகலாமே’’ என்று கேட்டாள். “ இல்லமா எல்லா வேலையையும் விட்டு விட்டு, நீங்க எப்படி இருக்கீங்க என்று பார்த்து விட்டு போகலாம் என்றுதான் வந்தேன்மா. தேவன் உங்களுக்கு ஒரு குறையும் இல்லாமல் நன்றாக வைத்திருக்கிறார். இன்னொரு முறை வரும் பொழுது இரண்டு நாள் தங்கி விட்டு போகிறேன்’’ என்று சொல்லி புறப்பட்டார்.
அப்பொழுது மகள் எல்லாம் நல்லபடியாகத்தான் இருக்கிறது அப்பா, ஆனால் மழை அடிக்கடி பெய்கிறதினால், நாங்கள் செய்கிற மண் பாத்திரங்களை காய வைக்க முடியாமல் சில நேரங்களில் கஷ்டமாக இருக்கிறது. எனவே, மழை வந்து அடிக்கடி எங்களுக்கு தொல்லைகொடுக்காதபடிக்கு தயவு செய்து எங்களுக்காக ஜெபித்துக்கொள்ளுங்கள்’’ என்று சொன்னதும், தகப்பன் ஒரு கனம் திகைத்து போனார். இருப்பினும் உடனடியாக சுதாரித்துக்கொண்டு, “சரிம்மா அப்படியே செய்கிறேன்’’ என்று சொல்லி விட்டு, தனது ஊருக்கு புறப்பட்டார்.
வருகிற வழியெல்லாம் அவருக்கு, தனது மூத்த மகள் “மழை வேண்டும் அதற்காக ஜெபித்துக்கொள்ளுங்கள்’’ என்று சொன்னதும், இளைய மகள் “மழை எங்களுக்கு தொந்தரவாக இருக்கிறது ஆகவே வேண்டாம்’’ என்று ஜெபித்துக்கொள்ளுங்கள்’’ என்று சொன்னதும் மாறி மாறி காதுகளில் ஒலித்துக்கொண்டிருந்தன.
வீட்டிற்கு வந்தும் அந்த குழப்பம் நீங்க வில்லை. நேராக தனது ஜெப அறைக்கு சென்றார். முழங்காலில் நின்று ஜெபிக்க ஆரம்பித்தார். “தேவனே எனது மகள்களின் வாழ்க்கையில் உமது சித்தத்தின்படி எல்லாம் நடக்கட்டும்’’ என்று ஜெபித்தார்.
“நாம் எதையாகிலும் அவருடைய சித்தத்தின்படி கேட்டால், அவர் நமக்குச் செவி கொடுக்கிறாரென்பதே அவரைப் பற்றி நாம் கொண்டிருக்கிற தைரியம்’’ ( 1 யோவான் 5:14 ).
“அவர் சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்திருக்கிறார்;’’ ( பிரசங்கி 3:11 )

அக்கரை பச்சை


ஒரு சமயம் மாடுகள் பசுமையான புல் வெளியில் மேய்ந்து கொண்டிருந்தன. அந்த புல் வெளியில் நடுவாக முள் வேலி தடுப்பு போடப்பட்டிருந்ததால், இந்த பக்கம் சில மாடுகளும், அந்தப்பக்கம் சில மாடுகளுமாக வேறு வேறு நபர்களின் மாடுகள் மேய்ந்து கொண்டிருந்தன.

எல்லாவற்றையும் செய்து முடித்தவர்

`எனக்காக யாவையும் செய்து முடிக்கப் போகிற தேவனாகிய உன்னதமான தேவனை நோக்கிக் கூப்பிடுவேன்' '(சங் 57:2) இந்த சங்கீதத்தை தாவீது எந்த சூழ்நிலையில் எழுதினார் என்று மேலே வாசிக்கும் போது விளங்கி கொள்ளலாம்.
    தனது உயிருக்கு உத்திரவாதமில்லாத நிலையில்,  சவுலுக்கு  தப்பியோடிக்
கொண்டிருக்கும் பொழுது ``எனக்காக யாவையும் செய்து முடிக்கப் போகிற  தேவனை நோக்கிக் கூப்பிடுவேன்'' என்று விசுவாசத்துடன் அறிக்கையிட்டு கூப்பிட்ட தாவீதின் கூப்பிடுதலின் சத்தத்திற்கு செவிகொடுத்து உயர்த்தின தேவன் இன்றைக்கும் நம்மோடு உண்டு.

மரணத்தை காணாத மனிதன்


இதமான தென்றல் வீசிக்கொண்டிருந்த மாலை வேளை, ஏவாள் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தாள். நடையில் ஒரு பதட்டம். ஒரு இடத்தில் நிற்க முடியாதபடிக்கு கூடாரத்திற்கு உள்ளே போகிறதும் வெளியே வருவதுமாக படபடப்புடன் காணப்பட்டாள். தூரத்தில் ஆதாம் வருவது தெரிந்ததும் வேகமாக ஓடினாள்.
ஏவாள் ஓடிவருவதை கண்ட ஆதாம் “ என்ன ஏவாள் ஏன் பதட்டமாக ஓடிவருகிறாய்?’’ என்று கேட்டான். மூச்சு இரைத்தபடியே “ காயீனையும், ஆபேலையும் காணவில்லை. காலையில் வெளியே சென்றவர்கள் இன்னும் வரவில்லை’’. என்று படபடப்புடன் சொன்னாள். “என்ன காலையில் சென்றவர்கள் இன்னும் வரவில்லையா? எங்கு செல்வதாக சொன்னார்கள்’’ என்று ஆதாமும் சற்று பயந்தபடியே கேட்டான். “என்னிடத்தில் ஒன்றும் சொல்லவில்லை ஆனால் அவர்கள் பேசிக்கொண்டதை வைத்து பார்க்கும் போது, காயின்தான் ஆபேலை தன்னுடைய வயல்வெளிக்கு அழைத்துச்சென்றான்’’ என்று ஏவாள் சொன்னதும் “சரி நீ இங்கேயே இரு நான் சென்று பார்த்து வருகிறேன்’’ என்று சொல்லி ஆதாம் ஓட்டமும் நடையுமாக வேக வேகமாக காயீனின் வயல்வெளியை நோக்கி சென்றான்.

இன்னும் என்ன செய்ய போகிறாய்?


அழகிய ஒரு குடும்பம் மிகுந்த மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தது. கணவன் தூர தேசத்தில் இருந்தாலும், கணவனோடு தொடர்பு கொண்டு, குடும்பத்திற்கு தேவையானதை கணவனிடம் பெற்று, தனது கணவன் கொடுப்பதை வைத்து, மனைவி குடும்பத்தை நன்றாக நடத்தி வந்தாள். நாட்கள் செல்ல செல்ல, மனைவியின் நடத்தையில் மாறுதல் உண்டாக ஆரம்பித்தது. கணவனோடு தொடர்பு கொள்ளாமல், குடும்பத்தையும் பிள்ளைகளையும் சரியாக கவனிக்காமல், ஏனோ தானோ என்று குடும்பத்தை நடத்த ஆரம்பித்தாள். ஆரம்பத்தில் கணவன் மேலும், பிள்ளைகள் மேலும் இருந்த அன்பு குறைந்து தன் சுய இஷ்டப்படி நடக்க ஆரம்பித்தாள்.

உறுதியான வாழ்வும், நிலையான நன்மையும்


     ``யூதா வம்சத்தாரில் தப்பி மீந்திருக்கிறவர்கள் மறுபடியும் கீழே வேர் பற்றி மேலே கனி கொடுப்பார்கள்''  (ஏசாயா 37:31). யூதா தேசத்தை குறித்த வாக்குத்தத்தத்தை ஏசாயா தீர்க்கதரிசியின் வழியாக தேவன் கொடுக்கிறார்.   யூதா தேசத்திற்கு வந்த ஆபத்திலிருந்து தப்பி யார் எல்லாம் நிலைத்திருக்கிறார்களோ, அவர்கள் இனி உறுதியுடனும் நிறைவான நன்மையை பெற்றும் சுகத்துடன் வாழ்வார்கள் என்று தேவன் முன்பதாகவே வாக்குப் பண்ணுகிறார்.

ஜீவ அப்பம் கிறிஸ்தவ மாத இதழ் அக்டோபர் 2013

கிறிஸ்து இயேசுவுக்குள் அன்பான நண்பர்களுக்கு இந்த மாத (அக்டோபர் 2013) ஜீவ அப்பம் மாத இதழை இலவசமாக  பதிவிறக்கம் செய்து படித்து ஆசீர்வாதங்களை சுதந்தரித்துக்கொள்ளுங்கள்.

மேலும் இந்த மாத இதழைக்குறித்து  உங்கள் கருத்துக்களை கீழே பின்னூட்டத்தில் பதிவு செய்யுங்கள்.

வந்த இடம் நல்ல இடம்


எருசலேமிலிருந்து இரண்டு மைல் தூரமான ஒலிவ மலைச்சரிவிலிருந்த பெத்தானியாவை நோக்கி மக்கள் குதிரை வண்டிகளிலும், நடந்தும், கூட்டம் கூட்டமாய் சென்று கொண்டிருந்தனர். வியாதியோடு இருந்தவர்களையும் கூட சிலர் சுமந்து கொண்டும், வண்டியில் ஏற்றிக்கொண்டும் வேக வேகமாக சென்று கொண்டிருந்தனர்.

இந்த நிலைமை வேண்டாமே


இரவு நன்றாக தூங்கி, காலை எழும்பினேன். எழுந்தது முதல் உள்ளத்தில் நின்ற நினைவுகள் வேறு எதையும் சிந்திக்க விடாமல் அந்த நினைவுகளிலேயே உள்ளம் நிறைந்திருந்தது.  அதிலிருந்து விடுபடமுடியாமல் அதையே சுற்றிக்கொண்டிருக்கிறது உள்மனம்.

காணும் போதே மறைந்த தோட்டம்


சூரியன் உதித்து, படைப்புகள் எல்லாம் படைத்தவரை வணங்கி நின்ற அதிகாலை வேளையில், பறவைகளும் விலங்கினங்களும், சத்தம் எழுப்பி, கடவுளுக்கு நன்றி சொல்லிக்கொண்டிருந்தன.

மதிக்கப்படுவாய்


``நான் உங்களைக் கீர்த்தியும் புகழ்ச்சியுமாக வைப்பேன்'' என்று கர்த்தர் சொல்லுகிறார் (செப்பனியா 3:20).
                 சிறுமைப்பட்டு, அவமானப்பட்டு, நிந்திக்கப்பட்டு, வேதனையோடு வாழ்ந்து வந்த நம்முடைய வாழ்க்கையில் இதுமுதல் நம்மை புகழ்ச்சியாக்கி, எந்த இடங்களில் எந்த பகுதியில் நிந்திக்கப்பட்டு, சிறுமை அனுபவித்தோமோ, அதே பகுதியில் கர்த்தர் நம்மை உயர்த்தி மேன்மையாக வைக்கப்போகிறார்.

எதிரியின் அடையாளம்


நம்முடைய நண்பன் யார் என்பதை அறிந்துகொள்வதற்கு முன்பாக எதிரி யார்? என்பதை அறிந்திருக்க வேண்டும். எதிரியை இனம் கண்டு கொள்ளாதவன் போர்களத்தில் தோல்வியை சந்திப்பது நிச்சயம்.
இது யாருக்குதான் தெரியாது. புதிதாக எதாவது இருந்தால் சொல்லுங்கள் என்று சிலர் சொல்லுவது காதில் விழுகிறது. பொறுமையாக இருங்கள் அதைத்தான் சொல்லவருகிறேன். இன்றைக்கும் நம்மில் சிலர் நம்முடைய எதிரியை வெளியில் தேடிக்கொண்டிருக்கிறோம். உண்மை என்னவென்றால் எதிரி நமக்கு வெளியில் இல்லை. ஆனால் நமக்கு உள்ளேதான் எதிரி தங்கி இருக்கிறான். அந்த எதிரியைத்தான் பரிசுத்த வேதாகமம் (பைபிள்) “பாவம்’’ என்று அடையாளப்படுத்தி காண்பிக்கிறது.

ஐயோ! யாரும் இந்த இடத்திற்கு வந்துவிடாதீர்கள்!


காலை முதல் அந்த ஊரே பரபரப்பாக இருந்தது. அரண்மனை பெரியவரின் பிறந்த நாள் என்பதால் ஊரில் உள்ள அனைவரும் அரண்மனையில் குவிய ஆரம்பித்தனர். சிறுவர்களும், சிறுமிகளும் அங்கும் இங்கும் மகிழ்ச்சியுடன் துள்ளி குதித்து விளையாடிக்கொண்டிருந்தனர். குதிரை வண்டிகளிலும், மாட்டு வண்டிகளிலும், வெளி ஊர்களில் இருந்தும் மக்கள் வந்த வண்ணமாக இருந்தனர். “சிறு விஷயமாக இருந்தாலும் விழா எடுத்து அமர்களப்படுத்தும் பெரியவர், தனது பிறந்த நாளை சாதாரணமாக கொண்டாடுவாரா? அதுதான் இந்த பரபரப்புக்கு காரணம்’’ என்று இருவர் பேசிக்கொண்டனர்.

இஸ்ரேல் புனித பூமியா? எருசலேம் புனித ஸ்தலமா?



     இஸ்ரேல் பயணம் செல்வதும், இயேசு கிறிஸ்து  பிறந்து, ஊழியம் செய்த பகுதிகளையும், சிலுவைப்பாடுகள் பட்ட இடங்களையும் பார்த்து வருவது நல்ல விஷயம்தான். ஆனால் அதை தற்போது “புனித பயணம்’’ என்றும், புனித ஸ்தலம், புனித பூமி என்றும் அழைக்கிறார்கள். இதை வேதாகமத்தின் அடிப்படையில் ஏற்றுக்கொள்ள முடியுமா? என்றால் கட்டாயமாக ஏற்றுக்கொள்ள முடியாது.  எந்த அடிப்படையில் இஸ்ரேல் புனித பூமி என்றும், எருசலேம் புண்ணிய ஸ்தலம் என்றும் அழைக்கிறார்கள் என்று விளங்கி கொள்ள முடிய வில்லை. இப்படிப்பட்ட செயல் ஒரு சிலரால் கிறிஸ்தவத்திற்குள் வந்தது கூட, வேறு சில மதத்தை பார்த்துத்தான் இருக்க வேண்டும் என்று கருதுகிறேன்.

மனு குலத்தின் முதற்கொலை




சூரியன் மறைந்து கொண்டிருந்த அந்த நேரத்தில் உலகத்தின் முதல் மனிதர்களான ஆதாமும், ஏவாளும் பாலை நிலத்தில் நடந்து கொண்டிருந்தனர். இருவருடைய முகத்திலும் பயமும், திகிலும் நிறைந்திருந்தது, சோகத்தால் மிகவும் வாடிப் போன நிலையில் இருந்தனர். "எப்படி இருந்த நமது வாழ்க்கை இப்படி ஆகி விட்டது. நாம் செய்த முட்டாள் தனமான செயலால்தானே நாம் இந்த நிலைக்கு ஆளானோம். ஒரு நிமிடம் யோசித்து இருந்தால் கடவுளின் தோட்டமான ஏதேனை விட்டு வெளியே துரத்தப்பட்டிருக்க மாட்டோமே. கடவுளோடு கூட சந்தோஷமாக இருந்திருப்போமே. வஞ்சக சாத்தான் தந்திரமாக நம்மை ஏமாற்றி விட்டானே’’ என்று ஆதாம் ஏவாளிடம், தனது ஆதங்கத்தை வெளிப்படுத்திக் கொண்டே  நடந்தான்.

ஜீவ அப்பம் ஊழியங்கள், கைப்பிரதிகள்

கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே, ஜீவ அப்பம் ஊழியங்கள் மூலமாக வெளியிடப்பட்டுள்ள கைப்பிரதிகளை pdf வடிவில் download செய்து கொள்ளும்படியாக கொடுத்துள்ளோம். உங்கள் பகுதியில் நீங்கள் கைப்பிரதி ஊழியம் செய்வீர்கள் என்றால், இக்கைப்பிரதியை நீங்கள் download செய்து பிரதி எடுத்து கிறிஸ்துவை அறிந்திராத மக்களுக்கு கொடுக்கலாம். இதை வாசிக்கும் போது அநேகர் இயேசு கிறிஸ்துவை அறிந்து, இரட்சிக்கப்பட்டு, ஆசீர்வாதங்களை சுதந்தரித்துக்கொள்வார்கள். 

கீழே Download links கொடுக்கப்பட்டுள்ளது.







3, சுதந்திரமும், மனித வாழ்வும்




எதாகிலும் சந்தேகம் இருந்தால் கேட்கலாம்.

Jeeva Appam Magazine (ஜீவ அப்பம் மாத இதழ் ) September 2013 pdf

பிரியமானவர்களே, இம்மாத (செப்டம்பர்) "ஜீவ அப்பம் மாத இதழை, தறவிறக்கம் செய்து வாசித்து, தேவ ஆசீர்வாதம் பெற்று மகிழுங்கள்.

கீழே pdf file, Download link கொடுக்கப்பட்டுள்ளது.


ஜெபத்துடன், எழுதப்பட்டுள்ள தேவனுடைய வார்த்தைகள். பயனுள்ளதாக, ஆவிக்குரிய வாழ்வுக்கு உறுதுணையாக இருக்கும்

வாசித்து பயன்பெற்று , நீங்கள் பெற்ற ஆசீர்வாதங்களை, தெரியப்படுத்துங்கள். ஒன்று சேர்ந்து தேவனை மகிமைப்படுத்துவோம்.


Download link

சமாதானத்தின் தேவன் உங்களோடிருப்பார்


கிறிஸ்துவுக்குள் மிகவும் பிரியமான என் அன்பு சகோதர சகோதரிகளே, சமாதானம் இல்லாமல் தத்தளித்துக் கொண்டிருக்கும் உங்களுக்கு கர்த்தர்  கொடுக்கும் வாக்குத்தத்தமான தேவனுடைய வார்த்தை ``சமாதானத்தின் தேவன் உங்களோடிருப்பார்'' <பிலி 4:9>.
                சமாதானம் என்றால் எபிரேய மொழியில் ``ஷாலோம்'' என்றும் கிரேக்கத்தில் ஐரீன் என்றும் அழைக்கப்படும் இவ் வார்த்தையானது வாழ்க்கையை சிக்கலில்லாமல் மனதை தூய்மையாய் காத்து உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்க வாழ்தல் என்று அர்த்தம் தருகிறது.

உங்களோடு ஒரு நிமிடம்

தேவனுடைய இராஜ்ஜியத்தில் நாம் பங்கு பெறும் படிக்கு  நமக்காக தம்முடைய இரத்தத்தை சிந்தி, நம்மை தேவனுடைய இராஜ்ஜியத்துக்கு பங்குள்ளவர்களாக மாற்றிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் ஈடு இணையற்ற நாமத்தில் உங்களை வாழ்த்துகிறேன்.
     தொடர்ந்து  ``நமது ஜீவ அப்பம் மாத இதழ் வெளியிடும்படியாக கிருபை கொடுத்து தாங்கி நடத்திவரும் தேவாதி தேவனைத் துதிக்கிறேன்.
    கடந்த மாதத்தில் ஜீவ அப்பம் மாத இதழ்  ஆசீர்வாதமாக இருந்தது என்று அநேகர் தொலைபேசி வழியாக தெரிவித்தார்கள். தேவனுக்கே மகிமை உண்டாவதாக!
    தற்போது அநேக இடங்களுக்கு மாத இதழ் அனுப்பி வைக்கப்படுவதால்,  அநேகர் தொடர்பு கொண்டு, ஜீவ அப்பம் எங்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கிறது, தொடர்ந்து எங்களுக்கும் அனுப்பி தாருங்கள் என்று தங்கள் விலாசத்தை கொடுத்திருக்கிறார்கள்.
    பிரியமானவர்களே, நமக்கு முன் வைக்கப்பட்டிருக்கும் பொறுப்புக்கள் ஏராளம். அவைகளை அறிந்தவர்களாக உணர்ந்தவர்களாக நாம் செயல்படவேண்டியது அவசியம்.
     இன்னும் பிரதிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டியது இருப்பதால்,  இதற்கு தேவைகள் அதிகமாகிறது.
    ஒவ்வோரு மாதமும் புத்தகம் வெளியிடுவது சாதாரணமான காரியம் அல்ல, ஒவ்வோரு இதழும் சவாலாகத் தான் வெளியிடப்படுகிறது, தேவனுடைய கிருபையும், தேவனுடைய துணையும் இல்லாமல் இருக்குமானால் கட்டாயமாக இப்புத்தகம் வெளியிட முடியாது எல்லா கனமும் மகிமையும் தேவனுக்கே உண்டாவதாக!
    இந்த வருடத்தில் பிப்ரவரி மாதம் முதல் எல்லாமாதமும். தொடர்ச்சியாக ஜீவ அப்பம் வெளியிட தேவன் கிருபை செய்து வருகிறார். கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.  இதற்கு தேவ பிள்ளைகளாகிய உங்களின் ஜெபமும், நீங்கள் கொடுக்கும் ஒத்துழைப்பும் முக்கிய காரணம்.
    தொடர்ந்து உங்களின் ஜெபமும் ஒத்துழைப்பும் தேவை, கர்த்தரை மட்டுமே சார்ந்து, விசுவாசத்துடன் இந்த ஊழியம் நடை பெற்று வருகிறது. நீங்கள் இந்த ஊழியத்தில் பங்கு எடுத்து செயல் படும் போது, கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நிச்சயமாக உங்களை ஆசீர்வதித்து உயர்த்துவார். எல்லா வித நன்மைகளையும் பெற்று நீங்கள் சுகத்துடன் வாழ்வீர்கள்.
    இந்த ஊழியத்துடன் இணைந்து செயல்படும் போது, நீங்களும் ஊழியம் செய்ய ஆரம்பிக்கிறீர்கள். இந்த ஊழியத்தின் மூலமாகவும், நமது ஜீவ அப்பம் மாத இதழ் மூலமாகவும் இரட்சிக்கப்பட்டு, மக்கள் ஆசீர்வதிக்கப்படும் போது அந்த ஆசீர்வாதத்தின் பலனை கர்த்தர் உங்கள் கணக்கில் கொண்டு வருவார்.
    புத்தக ஊழியம் ஒரு மிஷனரியாக செயல்படக்கூடியது. எப்படி என்றால் நாம் நேரடியாக சென்று சொல்ல முடியாத இடங்களுக்கும் தேவனுடைய வார்த்தைகளை இந்த புத்தகத்தின் மூலமாக நாம் எழுதி அனுப்ப முடியும். நாம் போக முடியாத இடங்களுக்கும் வீடுகளுக்கும் இப்புத்தகம் சென்று,  கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை அறிவித்து,தேவனுடைய வார்த்தையை சொல்லி, இயேசு கிறிஸ்துவை அறிந்திராத அநேகரை இரட்சிப்புக்கு நேராக நடத்துகிறது.
    உலகத்தின் நெருக்கத்தால் சூழ்நிலைகள் எதிராக இருக்கும் போது சோர்ந்து இருக்கும் தேவ பிள்ளைகளை உற்சாகப் படுத்தி, விசுவாசத்தில் உறுதியாக நிற்க தேவனுடைய வார்த்தையால் பெலப்படுத்துகிறது. நமது ஜீவ அப்பம் மாத இதழ் ஒரு மிஷனரியாக செயல்படுகிறது. எனவே ஜீவ அப்பம் மாத இதழ் என்னும் மிஷனரியை தாங்குங்கள்.
    அன்பானவர்களே இந்த ஊழியத்தில் இதுவரை நீங்கள் பங்கு எடுக்காமல் இருந்தால் உடனடியாக பங்கு எடுக்க முன் வாருங்கள். கர்த்தர் உங்களை அளவில்லாமல் ஆசீர்வதித்து உங்களை உயர்த்துவதை நீங்கள் காண்பீர்கள்.
    தொடர்ந்து உங்களுக்காக ஜெபிக்கிறோம். தேவாதி தேவன் தாமே உங்களையும் உங்கள் குடும்பத்தையும் சமாதானத்தினால் நிறைத்து, ஒரு குறைவும் இல்லாமல் நல்ல சுகத்துடனும் பெலத்துடனும், சந்தோஷமாக வாழ கிருபை தருவாராக ஆமேன். 

ஆபத்து வரும் முன்......

 மது அருந்தி அதில் இன்பம் காண துடிக்கிறது சிலருடைய இருதயம். அந்த மதுவினால் ஏற்படும் துன்பத்தின் மிகுதி எப்படி இருக்கும் என்பதை அறிந்து கொள்ளாமல். அதை தனது வாழ்வின் ஒரு பகுதியாக வைத்தும், பெருமையாக நினைத்தும் வாழ்கிறவர்களை காண முடிகிறது. ஆபத்து வரும் வரை ஆபத்தின் விளைவுகளை அறியாமல் வாழ்கிறவர்கள் இப்படி மதுவுக்கு அடிமையானவர்களே.

மதுவுக்கு அடிமையானவர்களிடத்தில் என்னதான் அறிவுரை சொன்னாலும் கேட்கும் மன நிலையில் அவர்கள் இருப்பதில்லை. மதுவினால் பிடிக்கப்பட்டு, நடத்தப்பட்டவர்களை கணக்கிட்டு அவர்கள் வாழ்நாளை அறிந்தால் ஐம்பது வயதை கடந்தவர்கள் சிலர் மட்டுமே, இப்படிப்பட்ட மதுவுக்கு அடிமைப்பட்டு, விடுபட முடியாமல், குடும்பத்தை கவனிக்காமல், பிள்ளைகளை சரியாக வளர்க்காமல், வாழ்க்கையையே இழந்தோர் எண்ணிக்கைக்குள் அடங்காதோர். 

சமீபத்தில் எனக்கு தெரிந்த ஒரு வாலிப சகோதரன் வயது 22.மது என்ற போதைக்கு அடிமையாகி, ரயில்வே தண்டவாளத்தை கடக்கும் போது ரயில் வருவதை கவனிக்காமல் ரயிலில் அடிபட்டு, ஒருகால், ஒரு கை முழுமையாக வெட்டப்பட்ட நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, உயிருக்கு ஆபத்து இல்லாமல், தற்போது ஒரு கால், கை இல்லாமல்  மிகுந்த வருத்தம் அடைகிறார். அதற்கு முன்பு சொல்லப்பட்ட அறிவுரையெல்லாம் அவருக்கு எரிச்சலையும் கோபத்தையுமே ஏற்படுத்தியது,  ஆனால் அறிவுரைகளை தள்ளியதால் ஏற்பட்ட விளைவுகள் வாழ்க்கை முழுவதும் வேதனை. இப்படிப்பட்டோர் ஒருவர் இருவர் அல்ல, எண்ணிக்கைக்கு அடங்காதோர்.

குடி, போதை , இன்பமாகவும், கொண்டாட்டமாகவும் ஆரம்பிக்கப்படுகிறது, ஆனால் அது துன்பமாகவும், வேதனையாகவும் முடிகிறது. மதிமயக்கும் அந்த மதுவை அருகில் வரவிடாமல் துரத்தி அடித்து விட்டால் வாழ்க்கையில் எப்போதுமே இன்பம்தான். இந்த மதுவை ஊக்குவித்தும், மது அருந்தும் போது, துணைதேடியும், மது என்றால் இலவசமாக கூட வாங்கி தருகிறேன் என்றும் இருப்பவர்களை காணலாம், உலகமோ, அரசாங்கமோ, நண்பர்களோ மதுவை அருந்த அனுமதிக்கலாம். ஆனால் அந்த மது வாழ்க்கையையும், குடும்பத்தையும் சீக்கிரத்தில் அழித்துவிடும். 

அடிமைப்பட்டவன் அடிமைத்தனத்திலிருந்து விடுபட முடியாது ஏனென்றால் பாவம் செய்கிறவன் எவனும் பாவத்திற்கு   அடிமையாக இருக்கிறான் அது அவனை விடாது. ஆகவே, இந்த அடிமைத்தனத்திலிருந்து இயேசு கிறிஸ்து விடுதலையாக்கினால் முழுமையான விடுதலையை பெற்றுக்கொள்ளலாம். தொடர்ந்து இயேசு கிறிஸ்துவின் சத்திய வார்த்தைகளை அறிந்து கொண்டால் அந்த வார்த்தைகள் விடுதலையோடு வாழவைக்கும். ( யோவான் 8:32,34,36.)

எனது தலைவன்

    ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கையிலும் தான் பின்பற்றக் கூடிய மாதிரியாக ஒரு தலைவரை தெரிந்துகொண்டு தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்வதற்கு முயற்சிப்பதுண்டு.
         அப்படி ஒருவர் பின்பற்றக் கூடிய தலைவர், எப்படிப்பட்டவர்? என்பது மிகவும் முக்கியமான விஷயம்.
ஏனென்றால் தான் பின்பற்றுகிறதலைவர்
(1)    நம்மில் ஒருவராக
(2)    நம்மில் மேலானவராக
(3)    நமக்கு முன்மாதிரியாக
(4)    நாம் நினைப்பதை அப்படியே செய்பவராக

இருக்க வேண்டும் என்று எல்லோருமே நினைப்பது உண்டு.

    ஆனால் இவையாவும் ஒன்றுசேர ஒருவருக்குள் அமைவதென்பது கூடாத காரியம். மாறாக ஒருசில தன்மையோடு மட்டுமே சில தலைவர் இருப்பதுண்டு.

    மேலும், தனக்கு முன்மாதிரியாக வைக்கும் தலைவர் சில நேரங்களில் ஏதோ ஒன்றில் தவறு செய்ய நேரிடும் பொழுது முழு மனதோடு ஏற்றுக் கொள்வதற்கு எந்த ஒரு நபரும் விரும்புவதில்லை.

    ஏனென்றால், தவறு செய்யும் தலைவரின் தனித் தன்மை மற்றவர்களைப் போல சாதாரண நிலைக்குத் தள்ளப்படுகிறது.

    இது ஆன்மீகம், அரசியல், மற்றும் பொழுதுபோக்கு துறைகளானாலும் சரி மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. அப்படி இல்லாத பட்சத்தில் சிலர் அன்பின் மிகுதியில் தான் பின்பற்றுகிறவரை தலைவர் தன்மையுடன் காணலாம்.

    ஆனால் உலகமும் சரித்திரமும், அதை ஒப்புக் கொள்வதில்லை.

    ஆகவே, எந்த சூழ்நிலையிலும் சாதாரண நிலையிலல்ல இன்னொருவர் பின்பற்றக் கூடிய தலைவருக்குரிய தகுதிகளுடன் (தவறு செய்யாத) இருப்பதையே எல்லோரும், ஏன் சரித்திரமும் கூட எதிர்பார்க்கிறது.

    அப்படிப்பட்ட ஒருவரே தலைவர் என்றஇடத்திற்கு சரியானவராக இருக்க முடியும். இப்பொழுது எல்லோரு க்குள்ளும் எழும் கேள்வி, தவறே செய்யாத தலைவர் உண்டா? அவர் யார்? இதற்கு சத்தியமும் சரித்திரமும் ஒருவரை அடையாளம் காட்டுகிறது. அவர் யார்? எப்படிப்பட்டவர்?

     எதைப் பற்றியும், கவலைப்படாதவர்; எதற்கும் அஞ்சாதவர்; அநீதி அக்கிரமங்களை கண்டிக்கத் தயங்காதவர். மக்களின் விடுதலைக்காக துணிச்சலோடு போராடினவர். தன்னலமற்றவர்; பிறரை நேசித்தவர்; தனக்காக வாழாமல் பிறருக்காகவே வாழ்பவர்,என்னிடத்தில் பாவம் உண்டென்று உங்களில் யார் என்னைக் குற்றப்படுத்தக் கூடும்? என்று சவால் விட்டவர் (யோவான் 8:46). ``என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; என் பின்னே வாருங்கள், என்னைப் பின்பற்றுங்கள்; என்று நல்வாழ்வுக்கு அழைக்கும் இயேசு கிறிஸ்துவானவரே.

1)  நம்மில் ஒருவராக

     நம்மில் ஒருவராக தன்னுடைய சிங்காசனத்தை விட்டு எளிய குடும்பத்தில் பிறந்தவர் (லூக் 2:11), மனுஷர் தயவில் வளர்ந்தவர் (லூக் 2:52). மேலும் வேதம் கூறுகிறது. ``நம்முடைய பலவீனங்களைக்'' குறித்து (தோல்விகள்) பரிதபிக்கக் கூடாத (புரிந்து கொள்ள முடியாத) பிரதான ஆசாரியர் நமக்கிராமல், எல்லாவற்றிலும் நம்மைப் போல சோதிக்கப்பட்டு (நம்மில் ஒருவராக) பாவமில்லாத வராயிருக்கிற (குற்றமே செய்யாத) பிரதான ஆசாரியரே (தலைவரே) நமக்கிருக்கிறார் (எபி 4:15).

     இதிலே சொல்லப்பட்டிருக்கிறநம்மைப் போல என்று சொல்லும் வார்த்தை நமக்குள் ஒருவராய் இருக்கிறார் என்று பொருள்படும்படி எழுதப்பட்டுள்ளது. அவரே நமது பிரதான ஆசாரியர் என்று சொல்லும் வார்த்தை முதல் தலைவர் என்று நமக்கு வெளிப்படுத்துவதை காண முடிகிறது.

     இது நம்மில் ஒருவராக இருக்க வேண்டும் என்று எண்ணுகிறஎண்ணத்தை பூர்த்தி செய்வதாக உள்ளது.

2) நம்மிலும் மேலானவர்

    எல்லா நாமத்துக்கும் மேலாய் அவர் உயர்ந்திருக்கத் தக்கதாக, ``அவரை உன்னதங்களில் தம்முடைய வலது பாரிசத்தில் உட்காரும்படிச் செய்து, எல்லாவற்றையும் அவருடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தி, எல்லாவற்றையும் எல்லாவற்றாலும் நிரப்புகிறவருடைய நிறைவாகிய சரீரமான சபைக்கு அவரை எல்லாவற்றிற்கும் மேலான தலையாகத் தந்தருளினார். (எபே 1:20_23) என்று வேதம் நமக்கு தெளிவுபடுத்திக் கூறுகிறது.

    எனவே உன்னதங்கள் என்பது எல்லாவற்றிற்கும் மேலாக என்பதை நமக்கு உணர்த்தி கொடுக்கிறது.

    சரீரமான சபை என்பது ஒரு இடத்தையல்ல; திரளான மக்கள் கூட்டத்திற்கு (தலையாக) தலைவராக ஏற்படுத்தினார் என்று நாம் அறிந்து கொள்ளலாம்.

    எனவே நாம் பின்பற்றுகிறவர் நம்மிலும் மேலான வராக இருப்பதை நாம் அனைவரும் எதிர்பார்க்கிறோம். அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்பவராகவும் உள்ளார்.

3) நமக்கு முன்மாதிரியாக

    அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும் தேவனுக்கு சமமாய் இருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், தம்மைத் தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து மனுஷர் சாயலானார்.

    அவர் மனுஷ ரூபமாய் காணப்பட்டு மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரண பரியந்தமும் கீழ்படிந்தவராகி தம்மைத்தாமே தாழ்த்தினார் <பிலி 2:6_9> என்று வேதம் கூறுகிறது.

    அவர் எல்லாவற்றிற்கும் தலைவராயிருந்தும் அதை அவர் உயர்வாக எண்ணாமல், தம்மைத் தாழ்த்தி என்று சொல்வது நம்மைப் போல் மாற்றப்பட்டு, பாடுகளின் வழியாக இந்த உயர்வை பெற்றார் என்று மிகவும் அழகாக இந்தப் பகுதி நமக்கு விளக்கி கொடுக்கிறது.

    இதே வழியிலேயே தன் சீஷனும் செல்ல வேண்டும் என்று விரும்புகிறார்.

    ``ஒருவன் என்னைப் பின் பற்றி வர விரும்பினால் அவன் தன்னைத்தானே வெறுத்து தன் சிலுவையை எடுத்துக் கொண்டு என்னைப் பின்பற்றக் கடவன்'' (மத் 16:24). இது அவரே தம்மைப் பின்பற்றவிரும்புகிறவர்களுக்கு கொடுத்துள்ள ஒரு அறைகூவல் ``ஏனெனில், கிறிஸ்துவும் உங்களுக்காகப் பாடுபட்டு, நீங்கள் தம்முடைய அடிச்சுவடுகளைத் தொடர்ந்து வரும்படி உங்களுக்கு மாதிரியைப் பின்வைத்துப் போனார் (1 பேதுரு 2:21) என்று வேதம் கூறுகிறது.

    தன்னைப் பின்பற்றி வர வேண்டுமென்று வார்த்தை அளவிலே நின்று விடாதபடிக்கு, அவைகளை செயலில் நிரூபித்து, மாதிரியை உண்டு பண்ணி கொடுத்திருக்கிறார். ஆகவே அந்தப் பாதையில் செல்வது அவர் பெற்றவெற்றியை பெற்றுக் கொள்வதற்காகத்தான். அவர் எல்லாவற்றிலும் முன்மாதிரியாக திகழ்கிறார்.

4) நாம் நினைப்பதை செய்கிறார்

     நாம் வேண்டிக் கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியை செய்கிற வல்லமையின்படியே நமக்கு செய்ய வல்லவராகிய அவருக்கு (எபே 3:20) என்று வேதம் கூறுகிறது. அப்படியானால் நாம் நினைப்பது மாத்திரமல்ல அதற்கும் மேலே அவரால் செய்ய முடியும் என்பதே வேதத்தின் பதில். இது நமக்கு மாத்திரமல்ல காலங்கடந்து, செய்துகொண்டு வருகிறவருக்கு சரித்திரமும் சாட்சி கொடுத்துக் கொண்டேதான் இருக்கிறது.

    ``பிதாவே இவர்களை மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே'' என்று அவர் நமக்காக ஜெபித்த பொழுது. அவர்

1)    சிறுமைப்படுத்தப்பட்ட நிலையில் இருந்தார்.
2)    தன்னுடைய சரீரத்தில் மிகவும் பலவீனமடைந்திருந்த நிலையிலிருந்தார்.
3)    பாடுகளின் உச்சத்தில் இருந்தார்.
4)    தன்னுடைய ஆத்துமாவிலும், சரீரத்திலும் மிகுந்த வேதனைக்குள்ளான நிலையில் இருந்தார்.

    ஆனால் தான் செய்து முடிக்க வேண்டியதில் மிகவும் தெளிவுள்ளவராய் இருந்தார். தான் வந்த, ஏற்றுக் கொண்ட பணியை மிகவும் சரியாக செய்து, இன்று உலகம் முழுவதிலும் கோடிக்கணக்கான மக்கள் பாவமன்னிப்பைப் பெற்று, நித்திய மரணம், நித்திய அழிவு ஆகியவற்றின் வல்லமையிலிருந்து விடுதலையாக்கப் பட்டிருக்கிறார்கள்.

    வேதம் கூறும்பொழுது ``நான் விரும்புகிறதைச் செய்யாமல் நான் வெறுக்கிறதையே செய்கிறேன் (ரோமர் 7:15), நிர்பந்தமான மனுஷன் நான்; இந்த மரண சரீரத்தினின்று யார் என்னை விடுதலையாக்குவார்? (ரோமர் 7:24) என்றமனிதனின் ஏக்கங்கள் தவிப்புகள், மனிதனின் விருப்பங்கள், இவைகளை நிறைவேற்றுகிறவராக ``கிறிஸ்து இயேசுவினாலே_ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் என்னைப் பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்று விடுதலையாக்கிற்றே (ரோமர் 8:2), ஆகவே நம்முடைய மனதில் நினைப்பதை நமக்காக செய்கிறவராக இருப்பவர், இயேசு கிறிஸ்துவுக்கு ஒப்பானவர் யார்?

    அப்படியானால், நான் பின்பற்றவிரும்பும் தலைவர் : சந்தேகமே இல்லை இயேசுவே!