Bread of Life Church India

இந்த செயல் நல்லதா ?

சில நண்பர்கள் தங்கள் முக நூல் பக்கத்தில் தொடர்ந்து ஊழியங்களையும், ஊழியர்களையும் விமர்சனங்கள் செய்து எழுதிக்கொண்டு இருக்கிறார்கள். கேட்டால் தவறு செய்கிறவர்களை அடையாளம் காட்டுகிறோம் என்று பதில் சொல்லுவார்கள்.


என்னுடைய கருத்து என்னவென்றால் தவறு செய்கிறவர்கள் எல்லா காலத்திலும் உண்டு. மேலும் நாமும் கூட எல்லாவற்றிலும் முழுமை அடைந்து விட்டோமா? தெரியவில்லை. தவறு என்று தெரிந்தால் தேவ கிருபையால் அதில் இருந்து நாம் விடுபட இயேசு கிறிஸ்து உதவி செய்கிறார்.

இப்பொழுது நான் எழுதுவதின் நோக்கம் கிறிஸ்துவை அறியாதவர்கள். கிறிஸ்துவை சமீபத்தில் அறிந்து கொண்டவர்கள். கிறிஸ்துவுக்குள் வளர வேண்டிய இளைய சமுதாயம் இவர்கள் அதிகமாக பயன்படுத்துவது. இணையத்தையும் முகநூல் பக்கங்களையுமே. இவர்களை கிறிஸ்துவுக்குள் நல்ல முறையில் வழிநடத்த, நாம் என்ன முயற்சி எடுக்கிறோம்.

அப்படிப்பட்டவர்கள் கிறிஸ்துவை அறிந்து கொள்வதற்குள். தவறு செய்கிறவர்களை சுட்டி காட்டியதும். ஓ எல்லோரும் இப்படித்தான் இருப்பார்களோ? இனி நமக்கு இந்த கிறிஸ்தவமே வேண்டாம் என்று ஓடி விடுவதற்கு ஏதுவாக உங்கள் வார்த்தைகள் அமையாதா ? தயவு செய்து சிந்தியுங்கள்.

உண்மையாகவே தவறு செய்கிறவர்களையும், அவர்களை பின்பற்றுகிறவர்களையும் உங்கள் வார்த்தைகள் மாற்றவே மாற்றாது.

மாறாக குற்றப்படுத்தும் உங்கள் வார்த்தைகள் கிறிஸ்துவுக்குள் புதிதாக வருகிறவர்களையும். இளைய தலைமுறைக்கும் இடரலாக இருக்கும் என்பது எனது தாழ்மையான கருத்து. ஏற்றுக்கொள்வதும் ஏற்றுக்கொள்ளாததும் உங்கள் விருப்பம் ஆனால் அன்பு நண்பர்களே சிந்தியுங்கள்................

நம்முடைய எழுத்துக்கள் ஒருவரைக்கூட கொல்லக் கூடாது. ஆனால் அநேகரை கிறிஸ்துவுக்குள் விசுவாச பாதையில் நடத்துவதாக இருக்க வேண்டும். அநேகர் இரட்சிக்கப்பட ஏதுவாக இருக்க வேண்டும். மற்றவரை வாழ வைப்பதாக இருக்க வேண்டும்.

தவறு செய்ய வேண்டும் என்று தீர்மானித்து விட்ட ஊழியர்களை உங்கள் வார்த்தைகள் ஒன்றுமே செய்யாது. அவர்கள் அப்படித்தான் இருப்பார்கள் ஏன் என்றால் பிசாசு அப்படிப்பட்டவர்களை நடத்துகிறான். ஆனால்..................அவர்களுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம்.

அவர்கள் தவறு செய்து புற மதத்தவர்கள் மத்தியில் இயேசு கிறிஸ்துவின் நாமத்தை தூசிக்கிறார்கள். சிலர் அவர்களை குற்றப்படுத்தி புற மதத்தவர்கள் மத்தியில் இயேசு கிறிஸ்துவின் நாமத்தை தூசிக்கிறார்கள். என்ன வித்தியாசம். ???????????????

எந்த அளவுக்கு நாம் கிறிஸ்துவை  வெளிப்படுத்துகிறோமோ, அந்த அளவுக்கு அறியாமை நீங்கும். இளுள் விலக வேண்டும் என்றால் வெளிச்சம் வர வேண்டும். மாறாக இருள் இருக்கிறதே இருள் இருக்கிறதே என்று கத்திக்கொண்டிருப்பதினால் எந்த மாற்றமும் ஏற்பட்டுவிடாது. 
மற்றவர்களை குறித்து பேசாமல் சத்தியத்தை மட்டும் சத்தமாக பேசுவோம். சத்தியம் மக்களை விடுதலையாக்கும்.

0 comments:

Post a Comment