மகிழ்ச்சியாய் வாழ்ந்திடவே
இந்த மாதத்திற்கான ஆசீர்வாதமான
வசனத்தை தியானிப்போம். “இந்த நாள் நம்முடைய
ஆண்டவருக்குப் பரிசுத்தமான நாள், விசாரப்படவேண்டாம்; கர்த்தருக்குள்
மகிழ்ச்சியாயிருப்பதே உங்களுடைய பெலன் என்றான்’’ (நெகேமியா 8:10).
சந்தோஷமும், மகிழ்ச்சியும் தேவனால் கொடுக்கப்படுவதாகும், மகிழ்ச்சியை விரும்பாதவர்
இந்த பூமியில் யார் இருக்க முடியும்.மனிதர் மகிழ்ச்சியை விரும்புகிறார்கள்.
ஆனால் எதை மனிதரின்
இருதயம் மகிழ்ச்சி என்று நினைக்கிறது. எந்த
மகிழ்ச்சி கிடைக்காமல் மனிதர்கள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். அல்லது எந்த மகிழ்ச்சியைத்
தேடி மனிதர்கள் அலைந்து கொண்டிருக்கிறார்கள் ?
உலக பொருள்களின் வழியாகவும்,
உலக இன்பங்களின் வழியாகவும், மகிழ்ச்சியையும், சந்தோஷத்தையும் மனிதர்கள் தேடுவதால்தான் அதை முழுமையாக பெற்றுக்கொள்ள
முடியாமல், கலக்கம், கவலை, பயம், வேதனை
என்று வேண்டாத யாவற்றையும், விரும்பாமல்
எடுத்துக்கொள்ள வேண்டிய பரிதாப நிலைக்கு
தள்ளப்படுகிறார்கள்.
நீயே அந்த மனிதன்
தவறுகள் ஒரு மனிதனுடைய வாழ்வில் ஏற்படுத்தும்
பாதிப்பைவிட, அந்த தவறுகளை இன்னொருவர் மீது திணிக்க முற்படுவதே மனித வாழ்வில் நீங்காத
பாதிப்பை ஏற்படுத்தி விடுகிறது.
தன்னுடைய தவறுகளுக்கு இன்னொருவரே காரணமாக
இருக்கிறார் என்று மற்றவரை சுட்டி காட்ட காரணம் கண்டுபிடிக்கப்படும் வரை மனிதனுடைய
தவறுகள் ஒருபோதும் சரி செய்யப்படுவதில்லை.
தப்பிதங்களுக்கு சூழ்நிலைகள்தான் காரணம்
என்று சூழ்நிலைகளை காரணம் காட்டி தப்பித்து விடுவது, தற்காலிகமான விடுதலையே. அப்படிப்பட்ட
மனிதன் அந்த சூழ்நிலையில் இருந்து தப்பித்துக்கொள்கிறானே தவிர, தப்பிதங்களில் இருந்து
தப்பித்துக்கொள்வதில்லை.
மனிதனின் தொடர் தோல்விக்கு அடிப்படையாக இருப்பது,
தனது தவறை நேர்மையாக ஏற்றுக்கொள்ளாத தன்மைதான். ஆதி மனிதர்களாகிய ஆதாம் ஏவாளில் இருந்து
வந்த இந்த நிலை மனிதர்களிடம் செயல்படுவது விசித்திரம் அல்ல, அது ஜென்ம சுபாவம்.
பொய் சொல்வதற்கும், ஒரு விஷயத்தை மாற்றி
சொல்வதற்கும், திரித்து பேசுவதற்கும், மற்றவர்களை குற்றப்படுத்துவதற்கும் செலவிடப்படுகிற
நேரத்தையும், அதற்காக எடுக்கும் பயிற்சியையும் நிறுத்தி விட்டு, தனக்குள் இருக்கும்
வேண்டாதவைகளை விட்டு விட நேர்மையாக தேவனிடத்தில் அறிக்கையிட்டு, தன்னுடைய தப்பிதங்களுக்கு
மனஸ்தாபப்பட்டு தன்னைத்தானே அனுதினமும் நியாயம் தீர்த்து நடக்கும் போது வாழ்க்கை கிறிஸ்துவைப்போல
வெற்றியுடன் ஜொலிக்க ஆரம்பித்து விடும்.
எல்லாம் உனக்காக......
தேவனுடைய வார்த்தைகளை தியானித்து வாசிக்கும்
போது நமக்குள் உண்டாகும் பரவசத்தை வார்த்தையால் சொல்ல இயலாது, காரணம் தேவனுடைய வார்த்தையின்
வல்லமை நமக்குள்ளாக சென்று நம்மை உயிர்ப்பிக்கிறது.
ஜீவ அப்பம் வாசக குடும்பத்திற்கு இந்த மாத தேவனுடைய
வாக்குத்தத்தமான வார்த்தை “நீ எப்போதும்
என்னோடிருக்கிறாய், எனக்குள்ளதெல்லாம் உன்னுடையதாயிருக்கிறது’’ (லூக்கா 15:31).
லூக்கா 15 ம் அதிகாரத்தில் 11ம் வசனத்தில் இருந்து
32 ம் வசனம் வரை உள்ள வேத பகுதியில் இரண்டு விதமான நபர்களைக் குறித்து இயேசுவானவர்
சொல்வதைப் பார்க்கலாம்.
அநேகமாக இந்த பகுதியில் இளைய மகனைக்குறித்துதான்
நாம் அதிகமாக தியானித்து இருக்கிறோம். ஆனால் உண்மையாக இந்த பகுதி மூத்த குமாரனை மையமாக
வைத்தே துவங்குகிறது.
மூத்த குமாரன், தனது தந்தை இளைய மகனை கவனிப்பது
போல் தன்னை கவனிக்க வில்லையே என்று வருந்துகிறான். ஆனால் தந்தையின் பதிலோ, தனது மூத்த
மகனையும் தான் எவ்விதம் நேசிக்கிறேன், எந்த
அளவுக்கு அதிகாரம் தந்திருக்கிறேன் என்பதை அறிந்து கொள்ள அறிவுறுத்துவதாக இருக்கிறது.
அஸ்திவாரம்
கிறிஸ்துவுக்குள் அன்பான ஜீவ அப்பம் குடும்ப
அங்கத்தினர்களுக்கு, தேனிலும் இனிமையான இயேசு கிறிஸ்துவின் வல்லமையுள்ள நாமத்தில் அன்பான
வாழ்த்துக்கள்.
பிரியமானவர்களே, நமது ஜீவ அப்பம் ஊழியங்களை
கர்த்தர் ஆசீர்வதித்து, எல்லைகளை விரிவாக்கி
வருவதால் கர்த்தரை நன்றியோடு ஸ்தோத்தரித்து, துதிப்போம்.
தேவனுடைய வார்த்தைகளை அறிவிக்கவும், அநேகர்
தேவனுடைய வார்த்தைகளினாலே விடுவிக்கப்படவும், ஆசீர்வதிக்கப்படவும் ஜீவ அப்பம் மாத இதழை
தேவன் பயன்படுத்தி வருகிறார்.
பயனுள்ள கருவிகளாய்.........
கிறிஸ்துவுக்குள் பிரியமான ஜீவ அப்பம் அன்பு வாசக குடும்பத்திற்கு, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபத்துடன் வாழ்த்துக்கள்.
இம்மட்டுமாக நம்மைக் காத்து வழி நடத்தி வரும் இம்மானுவேலாகிய தேவனுக்கு எல்லா கனமும், மகிமையும் துதியும் உண்டாவதாக.
நமது ஜீவ அப்பம், ஊழியங்களையும், ஜீவ அப்பம் மாத இதழையும் ஆசீர்வதித்து நடத்தி வரும், அன்பான தேவனுக்கு ஸ்தோத்திரம் செலுத்துவோம்.
ஜீவ அப்பம் ஊழியமானது தேவனுடைய கிருபையால் அநேகருக்கு ஆசீர்வாதமாக தேவன் நமக்கு கொடுத்திருக்கிறார். இந்த ஊழியமானது இன்னும் விரிவடைந்து அநேகருக்குப் பயனுள்ளதாக இருக்க ஜெபியுங்கள்..
அறிவு, இறுமாப்பையும், அன்பு பக்தி விருத்தியடையவும் செய்யும் என்ற வேத வார்த்தையின் படி, அறிவு பெருகிக்கொண்டிருக்கும், தற்கால உலகில் அன்பு குறைந்து கொண்டிருக்கிறது.

விருத்தியாகும் வாழ்வு
“இந்த தேசத்திலே வாசம்பண்ணு; நான் உன்னோடேகூட இருந்து, உன்னை ஆசீர்வதிப்பேன்’’ (ஆதி 26:3)
ஆண்டவர் குறிப்பிடும் எல்லைக்குள் இருந்து செயல்படும் போது தேவனாகிய கர்த்தர் நம்முடன் இருந்து நம்முடைய செயல்களைப் பெருக செய்கிறார். நன்மையாக மாற்றுகிறார். இது தான் ஆண்டவர் நம்மிடம் எதிர்பார்க்கிறார்.
கர்த்தர் நம்மை ஒரு எல்லையில் நிறுத்துவதின் நோக்கமே நாம் அவருடைய வார்த்தைகளுக்கு கீழ்ப்படிந்து தேவ சித்தம் செய்கிறவர்களாக இருக்கிறோமா? என்பதை காண்பதற்காகவே.
மேலே நாம் வாசித்த தேவனுடைய வார்த்தையானது ஈசாக்கினிடத்தில் தேவன் சொன்ன வார்த்தை, அது எந்த சூழ்நிலையில் சொல்லப்பட்டது என்பதை பார்த்தால் பஞ்ச காலத்திலே எகிப்திற்கு போக புறப்பட்ட ஈசாக்கினிடத்தில் “நீ எகிப்திற்கு போக வேண்டாம், இந்த தேசத்தில் வாசம் பண்ணு, நான் உன்னை ஆசீர்வதிப்பேன் என்பதாகும்.
ஈசாக்கும் கர்த்தருடைய வார்த்தைகளுக்கு கீழ்ப்படிந்து கேராரூரிலேயே தங்கி விட்டான்.
தேவன் கொடுக்கும் வாக்குத்தத்தத்தின் படி கீழ்ப்படிந்து நடந்தால் என்ன ஆசீர்வாதங்கள் உண்டாகும் என்பதைக் குறித்து அடுத்து அடுத்து உள்ள வசனங்கள் விவரித்து காண்பிக்கின்றன.

தோல்விக்கு தோல்வி
எப்போது ஒரு மனிதன் வெற்றி வாழ்க்கை வாழ வேண்டும் என்று தீர்மானிக்கிறானோ, அப்பொழுது அவன் போராட்ட களத்தில் எதிரியை வீழ்த்த தயாராகி விட்டான் என்று எண்ணிக்கொள்ளலாம்.
இந்த களத்தில் தோல்வியின் விளிம்பை தொடாதவர்கள் இருக்க முடியாது. காரணம் வெற்றி வீரனாய் வலம் வருவதற்கு, வெற்றியில் பாடம் கற்றவர்களை விட, தோல்வியின் விளிம்பில் பாடம் கற்றவர்களே அதிகம். தோல்வியின் பாதையில் செல்லாதவரை வெற்றியின் அருமை உணரப்படுவதில்லை. ஆகவேதான் தோல்வியின் வாசனையை முகர்ந்து பார்க்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
ஆனால் அது முடிவல்ல, வெற்றியே முடிவாக இருக்கும், இவ்வித திடநம்பிக்கையுடன் போராடுபவர்களே, தோல்வியில் துவண்டு போகாமல் எழுந்து ஜெயிக்கிறவர்கள். அவர்களே, போராட்டத்தில் வெற்றியை ருசிக்க முடியும்.
ஆனால் அது முடிவல்ல, வெற்றியே முடிவாக இருக்கும், இவ்வித திடநம்பிக்கையுடன் போராடுபவர்களே, தோல்வியில் துவண்டு போகாமல் எழுந்து ஜெயிக்கிறவர்கள். அவர்களே, போராட்டத்தில் வெற்றியை ருசிக்க முடியும்.
நீ என்னுடையவன்
“கர்த்தர் சொல்லுகிறதாவது: பயப்படாதே; உன்னை மீட்டுக்கொண்டேன்; உன்னைப்
பேர்சொல்லி அழைத்தேன்; நீ என்னுடையவன்’’ (ஏசாயா 43:1)
தேவன் இஸ்ரவேல் மக்களுக்கு
தந்த வாக்குத்தத்தங்கள் எல்லாவற்றையும் நிறைவேற்றிக்கொடுத்தார், ஆவிக்குரிய இஸ்ரவேலர்களாய் இருக்கிற நாமும் இந்த வாக்குத்தத்தங்களை
கிறிஸ்து இயேசுவுக்குள் நமக்கு சொந்தமாக்கிக்கொள்ளலாம்.
இந்த உலகத்தின் பாவ
அடிமைத்தனத்தில் இருந்து நம்மை மீட்டெடுத்து,
தம்முடைய வாக்குதத்தங்களுக்கு சுதந்திரவாளிகளாக்கிய தேவனுக்கே மகிமை உண்டாவதாக.
நம்மை பெயர் சொல்லி,
அழைத்து, தம்முடைய நாமம் தரிப்பித்து, நம்மை
அதிகாரமுள்ளவர்களாய் இந்த பூமியிலே வாழ
வைத்திருக்கிற தேவன் சொல்லுகிறார்.
நம் கரங்கள் இணைந்தால்......
கிறிஸ்துவுக்குள் மிகவும் அன்பான ஜீவ
அப்பம் குடும்ப அங்கத்தினர்களுக்கு இயேசு
கிறிஸ்துவின் நாமத்தில் அன்பான வாழ்த்துக்கள்.
ஜீவ அப்பம் மாத
இதழ் மூலமாக உங்களுடன் பேசும்படியாக
உதவி செய்து வரும் தேவனை
நன்றி நிறைந்த இருதயத்துடன் ஸ்தோத்தரிக்கிறேன்.
ஒவ்வொரு மாதமும் தேவைகளை
சந்தித்து, இந்த ஊழியங்கள் சிறப்பாக
நடைபெறவும், மாத இதழ் வெளியிடவும்,
அநேக ஆத்துமாக்களை சந்தித்து, சத்தியத்தை அறிவிக்கவும், இரக்கம் பாராட்டி வரும்
தேவாதி தேவனை துதிக்கிறேன்.
அன்பு தேவனுடைய பிள்ளைகளே,
நம்முடைய வாழ்வு, ஏனோ, தானோ
என்ற வாழ்வு அல்ல, அர்த்தம்
நிறைந்த வாழ்வு, நோக்கம் இல்லாமல்
தேவன் நம்மை தெரிந்து கொள்ள
வில்லை, திட்டமில்லாமல் நம்மை இரட்சிக்கவும் இல்லை.