புது வருட துவக்கம் மட்டுமல்ல, புது வாழ்வின் ஆரம்பம்
கிறிஸ்துவுக்குள் அன்பான என் அன்பு தேவ பிள்ளைகளுக்கு புத்தாண்டின் வாழ்த்துக்களுடன் இந்த புது வாழ்வின் வாக்குத்தத்த தை கொடுப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
2014 ம் ஆண்டு புதிய வாக்குத்தத்தம் உங்களுக்கு ஆசீர்வாதமாகவும், நிறைவான நன்மைகளையும் கொண்டு வரப்போகிறது. அதற்காக கர்த்தரை ஸ்தோத்தரித்து, கர்த்தருடைய நாமத்தை மகிமைப்படுத்துகிறேன்.
2014 ம் ஆண்டு புதிய வாக்குத்தத்தம் உங்களுக்கு ஆசீர்வாதமாகவும், நிறைவான நன்மைகளையும் கொண்டு வரப்போகிறது. அதற்காக கர்த்தரை ஸ்தோத்தரித்து, கர்த்தருடைய நாமத்தை மகிமைப்படுத்துகிறேன்.
நீங்களும் எஜமானாக வேண்டுமா?
இந்த உலகத்தில் பணம்
எல்லாவற்றிற்கும் தேவை என்பதை எல்லோரும் அறிவோம். பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதை
இலட்சியமாக கொண்டு செயல்படுவோரும் உண்டு. பணம் இல்லாவிட்டால் இன்றைய காலகட்டத்தில்
எதையுமே செய்யமுடியாது என்பது போன்ற நிலை வந்துவிட்டது. இதையும் யாரும் மறுக்க
முடியாது.
ஆனால் இந்த பணத்தை பயன்படுத்தும்
விதத்தைதான் அதிகமானோர் சரியாக அறிந்து கொள்ள வில்லை. இதைக்குறித்து வேதாகமம் என்ன
சொல்லுகிறது என்பதை வேதாகமம் வெளிச்சத்தில் பார்க்கலாம்.
வானமும் பூமியும் சந்தித்த நாள்
"அந்தகாரத்திலும் மரண
இருளிலும் உட்கார்ந்திருக்கிறவர்களுக்கு வெளிச்சம் தரவும், நம்முடைய கால்களைச்
சமாதானத்தின் வழியிலே நடத்தவும், அவ்விரக்கத்தினாலே உன்னதத்திலிருந்து தோன்றிய அருணோதயம்
நம்மைச் சந்தித்திருக்கிறது'' ( லூக்கா 1:78,79).
வானமும் பூமியும்
ஒன்றோடு ஒன்று சந்திக்குமா? என்றால் சந்திக்காது என்றே அநேகர் சொல்லுவார்கள்.
ஒருவிதத்தில் அதுவும் உண்மைதான். ஆனால் வானாதி வானமும் கொள்ளாத தூயாதி தூயவரான
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, தம்முடைய மக்களை சந்திக்கும் படியாக இந்த பூமிக்கு வந்தார்.
அந்த நாளை நினைவு கூர்ந்துதான் நாம் இந்த மாதத்தில் நமது மகிழ்ச்சியை தெரிவித்து
வருகிறோம்.
எச்சில் கைகள்
ஊழியங்களிலும், ஊழிய அழைப்பிலும், வித்தியாசங்கள் உண்டு. வேதாகமத்தில்
அப்போஸ்தலர்கள் ஒவ்வொருவரும் தங்களின் அழைப்பின்படி ஊழியத்தை நிறைவேற்றினர். அதில்
அவர் ஊழியம் சிறந்தது, இவர் ஊழியம் குறைந்தது என்று எதையும் சொல்ல முடியாது.
இந்த காலத்திலும் அவரவர் அழைக்கப்பட்டுள்ள
ஊழியத்தில் நிலைத்திருப்பது நல்லது. நிறை குறை எல்லோரிடத்திலும் உண்டு. குறைகளை
மட்டும் நோக்கினால் ஒருவர் கூட தேறமாட்டோம் . இது தான் உண்மை.
இப்போதும் சிலர் சொல்லுவதை
கேட்டிருக்கிறேன். நான் பவுலைப்போல ஊழியம் செய்கிறேன். நான் அவரைப்போல ஊழியம்
செய்கிறேன், நான் இவரைப்போல ஊழியம் செய்கிறேன் என்று சொல்லி விட்டு, அப்படிப்பட்டவர்களின் ஊழிய வழிகளை
நோக்கி பார்ப்பது இல்லை.
வென்றவர் மூலம் வெல்வோம்
வெற்றி வாழ்க்கை சாத்தியமே (பகுதி 2)
1.
அறிந்து கொள்ள வேண்டிய சத்தியங்கள்
கடந்த நாட்களில் அறிந்து கொள்ள வேண்டிய சத்தியங்கள் என்ற தலைப்பில், அ) சுயத்தின்
அடிமைத்தனத்தில் இருந்து விடுதலை பெற்று விட்டோம் என்று பார்த்தோம்.
தொடர்ந்து அதை தியானித்து, வெற்றி வாழ்க்கை வாழும்படியாக தேவ கிருபைகளை
பெற்றுக்கொள்வோம்.
ஆ) பாவத்தின் பிடியிலிருந்து விடுதலை பெற்று விட்டோம்.
“பாவத்தினின்று நீங்கள்
விடுதலையாக்கப்பட்டு, நீதிக்கு அடிமைகளானீர்கள்’’ ( ரோமர் 6:22). தேவனுடைய வார்த்தை சொல்லுகிறது,
பாவத்தில் இருந்து நீங்கள் விடுதலையாக்கப் பட்டு விட்டீர்கள் என்று. ஆனால் அநேக
நேரங்களில் இந்த உண்மையை ஏற்றுக்கொள்ள நம்முடைய உள்ளம் மறுக்கிறது. ஏன் என்று
பார்த்தால் வேதம் இப்படி சொல்லுகிறது ஆனால் என்னுடைய வாழ்க்கையில் எந்த மாற்றமும்
இல்லையே, அப்படி இருக்க இந்த வசனத்தை எப்படி முழுமையாக ஏற்றுக்கொள்வது.