Bread of Life Church India

போலியா? அசலா?


மார்கழி மாதம் துவங்குவதற்கு முன்பாகவே பனி கொட்டோ கொட்டென்று கொட்டிக்கொண்டிருந்த காலை வேளை. இரவு படுக்கைக்கு போகும் பொழுது எப்படியாகிலும் ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து படிக்க வேண்டும் என்று தீர்மானித்த ஸ்டீபன் அலாரம் வைத்து படுத்திருந்தான். அலாரம் 5 மணிக்கெல்லாம் சத்தமிட  கண்ணை திறக்காமலே அதை நிறுத்திவிட்டு 7 மணியைத் தாண்டியும் எழுந்திரிக்காமல் நன்றாக போர்வையால் இழுத்து மூடி தூங்கிக் கொண்டிருந்தான்.
“ஸ்டீபன் ஸ்டீபன்’’ என்று சமையல் அறையில் இருந்து கூப்பிட்டாள் மேரி, ஸ்டீபனின் அம்மா. கூப்பிடும் சத்தம் கேட்காமல் நன்றாக தூங்கிக் கொண்டிருந்தான் ஸ்டீபன். ஸ்டீபன் டேய் உன்னைதான்  எங்வளவு நேரம் கூப்பிடுவது. விடிந்து இவ்வளவு நேரம் ஆகிறது இன்னும் எழுந்திருக்காமல் இருக்கிறாயே. எழுந்திரு’’ என்று சொல்லிக்கொண்டே அவனை எழுப்பினாள். “போங்கம்மா’’ என்று  சொல்லிவிட்டு மறுபடியுமாக தூங்கினான். “நான் எழுப்பிட்டே இருக்கிறேன் நீ தூங்கிட்டே இருக்கிற, இப்ப எந்திரிக்க போறியா இல்லை தண்ணிய கொண்டுவந்து மூஞ்சில ஊத்தவா?’’ என்று சொன்னதும். "உங்க இம்ச தாங்லமா தூங்குபோதுதான் இப்படி செய்வீங்க’’ என்று முனுமுனுத்தபடியே எழுந்தான். இவளும் இன்னும் எந்திரிக்கலையா? ஏய் ப்ரியா எந்திரி மணி என்ன ஆகுது பொம்பளபிள்ள இன்னும் தூங்கிட்டு இருக்க என்று எழுப்பியபடியே.
ஸ்டீபன் டீத்தூள் காலியாச்சுப்பா  ஓடிப்போயி நம்ம சேகர் அண்ணாச்சி கடையில் போயி ஒரு டீ தூள் வாங்கிட்டு வந்துடுடா, டீத்தூள் இருக்குன்னு நினைச்சு பாலை கொதிக்க வச்சிட்டேன். போடா எஞ் செல்லம்ல’’ என்று மேரி சொல்ல. இதெல்லாம் முன்னாடியே பாக்கமாட்டீங்களா? அந்த நேரந்தான் ஓடு ஓடுன்னு சொல்லுவீங்க’’ என்று சலித்துக்கொண்டவனாக முகத்தை கழுவி, சட்டையை மாட்டிக்கொண்டு புறப்பட்டான்.
சேகர் அண்ணாச்சி கடைக்கு பக்கத்தில் செல்லும் போதுதான் தெரிந்தது. இன்னும் கடை திறக்க வில்லை. எப்பவும் மனுஷன் எப்போ விடியுன்னு காத்திருப்பது போல 6 மணிக்கெல்லாம் சரியா கடைய திறந்து விடுவார். இன்னைக்கு என்ன இன்னும் திறக்கல என்று நினைத்தபடியே இன்னும் இரண்டு தெரு தள்ளி இருக்கும் செல்வம் அண்ணாச்சி கடைக்குதான் போகனும். இந்த அம்மாவ சொல்லனும் இதெல்லாம் முன்னாடியே வாங்கி வைக்கிறது இல்ல, நம்மைத்தான் ஓடு ஓடுன்னு விரட்டுட்ரது. எப்பவுமே நேரம் கழித்து கடையை திறக்கும் செல்வ அண்ணாச்சி கடைய திறந்துட்டாரோ இல்லையோ என்றபடியே செல்வம் அண்ணாச்சி கடைக்கு நேராக நடந்தான்.
கடைக்கு அருகில் சென்றதும் என்ன ஆச்சரியம் இவர் இவ்வளவு சீக்கிரமா கடையை திறந்து வைத்திருக்கிறார் என்று எண்ணிக்கொண்டே பரவாயில்லை செல்வ அண்ணாச்சி கூட சுறு சுறுப்பா ஆகிட்டாரு என்று நினைத்துக்கொண்டே கடைக்கு வந்தான் “என்னப்பா ஸ்டீபன் ரொம்ப நாள் கழிச்சு கடைக்கு வந்திருக்க’’  என்று அண்ணாச்சி விசாரித்தார்.ஆமா அண்ணாச்சி காலேஜ் போயிட்டு வர்ரதுக்கே நேரம் சரியா போவுது எங்க கடைக்கெல்லாம் வருவது.’’ என்று சொன்னான். “சரிப்பா என்ன வேணும்’’ என்று கேட்டார் அண்ணாச்சி “ஒரு டீத்தூள் குடுங்க அண்ணாச்சி’’ என்று கேட்டான். “இந்தாப்பா வேற என்ன வேனும்’’ என்றார். இது மட்டும்தான் அண்ணாச்சி என்று சொல்லி பணத்தை கொடுத்துவிட்டு வீட்டைநோக்கி நடந்தான் ஸ்டீபன்.
அவன் வீட்டை அடைவதற்குள் வாசலிலேயே நின்று கொண்டிருந்த மேரி. “ஏன்டா லேட்டு எதுக்கு இவ்வளவு நேரம், சரி குடு என்று வாங்கிக்கொண்டு சமையலரையை நோக்கி நடந்தாள். சேகர் அண்ணாச்சி கடை திறக்கல, அதனால செல்வ அண்ணாச்சி கடையில போயி வாங்கீட்டு வாரேன்.’’ என்றான்.
வேக வேகமாக சமையல் அறைக்குள்ளாக சென்ற மேரி கொதித்துக்கொண்டிருந்த பாலில் டீத்தூளை போட்டுக்கொண்டிருக்கும் போதே “இன்னுமா டீ போட்டுக்கொண்டிருக்குறாய்.’’ என்ற சத்தமாக கேட்ட தன்னுடைய கணவர் டேவிட் ராஜிடம் “கொஞ்ச நேரம் கழிச்சுதான் டீ குடிக்கிறது போடுரதுக்குள்ள பத்துவாட்டி கேட்டாச்சு, இந்தாங்க டீ குடிங்க என்று சொல்லியபடியே கொடுத்தாள்.
டீயை சுவைத்த டேவிட் “ஏய் என்ன டீ போட்டு இருக்க, எப்பவும் குடிக்கிற டீ மாதிரி இல்லையே, என்ன டீத்தூள் இது’’  என்று கேட்க. எப்பவும் நாம வாங்குர டீத்தூள்தாங்க சேகர் அண்ணாச்சி கடை திறக்கலன்னு செல்வம் அண்ணாச்சு கடையில் ஸ்டீபன் வாங்கி வந்தான். என்று சொன்னதும் ஒருவேளை அந்த செல்வம் டூப்ளிக்கேட்ட குடுத்து ஏமாத்திட்டாரோ? போய் கேளு என்று சொல்லி விட்டு டேவிட் ராஜ் வேலைக்கு சென்று விட்டார்.
சரியான விலை கொடுத்து வாங்கிய டீ தூள் இப்படி டூப்ளிக்கெட்ட கொடுத்து விட்டானே என்ற கோபத்தில் உடனே ஸ்டீபனை கூட்டிக்கொண்டு, மீதம் உள்ள டீதூளை எடுத்துக்கொண்டு, நேராக செல்வம் அண்ணாச்சி கடையை நோக்கி நடந்தாள் மேரி.
 "அம்மா செல்வம் அண்ணாச்சி டூப்ளிக்கெட்டெல்லாம் தரமாட்டார். இதைப்போயி கேக்க போறீங்களா? அதெல்லாம் வேண்டாம் '' என்று போகும் போதே ஸ்டீபன் சொன்னான். "ஏய் ஒனக்கு என்ன தெரியும் நீ சும்மா வா'' என்று வேகமாக நடந்தாள்.
வேகமாக மேரி நடந்து வருவதைப்பார்த்த செல்வம் அண்ணாச்சி “என்ன மேரி அக்கா இவ்வளவு வேகமா வாரீங்க என்ன ஆச்சு’’ என்று கேட்க. “என்ன ஆச்சா டீ தூள் கேட்டா இப்படி டூப்ளிக்கேட் டீ தூளையா குடுக்கரது. ஏன் ஏமாத்த வேறு யாரும் கிடைக்கலனா எங்களா ஏமாத்துரீங்க’’ என்று பட படவென்று பொரிந்து தள்ளிவிட்டாள் மேரி.
ஒன்றுமே புரியாத செல்வம் அண்ணாச்சு “அக்கா நிதானமா பேசுங்க என்ன நடந்த்து’’ என்று கேட்க. இந்த கம்பெனி டீ தூள எத்தனை வருஷமா சேகர் அண்ணாச்சு கடையில வாங்ரோம் தெரியுமா? இது அது மாதிரி இல்லியே, அவரு கடை இல்லைனு உங்க கிட்ட வாங்கினா
இப்படியா டூப்ளிக்கெட்டா தருவீங்க.
என்று கேட்டதும் விஷயம் புரிந்து விட்டது. “அக்கா நீங்க சொல்ர மாதிரி டூப்ளிக்கேட் விக்கிர ஆளு நானு இல்லை. நீங்க இதுவரைக்கும் வாங்கின இடத்திலதான் இதையே டூப்ளிக்கெட்டா வாங்கி இருக்கீங்க கலப்படமான டீத்தூள்ல டீ குடிச்சு டீ குடிச்சு எது அசல் எது போலி என்பது கூட தெரியாத அளவுக்கு நீங்க ஏமாந்து இருக்கீங்க. இதுவரைக்கும் போலியை பார்த்து அசல்ன்னு நினைச்ச உங்களுக்கு அசலபார்த்ததும் போலியா தெரியுது. இதையே கைல வச்சுகோங்க இந்த கம்பெனி காரன் வரும்போது சொல்ரேன். அப்ப எடுத்துட்டு வாங்க, அதுபோல நீங்க சொல்ர கடையிலயும் வாங்கிட்டு வாங்க எது அசல், போலின்னு தெரிஞ்சிரும்.
என்ன செய்ய இந்த உலகமே இப்படி ஆயிடுச்சு, உங்கள சொல்லி ஒரு குற்றமும் இல்லை. நிறைய பேர் இப்படிதான் இருக்கீங்க இனி மேலாவது ஏமாராம சரியா பாத்து வாங்குங்க......என்று சொல்ல சொல்ல அப்பொழுதுதான் உண்மையை அறிந்த மேரி மகனை கூட்டிக்கொண்டு, மேலும் எதுவும் பேசாமல் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்..... 


 ..............................................................................................
நல்ல டீ தூள் இயேசு கிறிஸ்து,  சரியான உபதேசம்.
போலி டீ தூள் , போலியான மனிதர்களால் உண்டான தெய்வங்கள்.
போலியான உபதேசம்.

இப்படியாக உருவகப்படுத்தி மறுபடியும் வாசியுங்கள்.  
.....................................................................................
ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அவர் ஆதியிலே தேவனோடிருந்தார்.
சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை.
அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது. உலகத்திலே வந்து எந்த மனுஷனையும்   பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி.

அவர் உலகத்தில் இருந்தார், உலகம் அவர் மூலமாய் உண்டாயிற்று. உலகமோ அவரை அறியவில்லை.
அவர் தமக்குச் சொந்தமானதிலே வந்தார்,
அவருக்குச் சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.  
(யோவான் 1: 1-4 , 9-11
உண்மையான தெய்வம் இயேசு கிறிஸ்துவை அறிவிக்கும் போது, நாங்கள் எத்தனை தலைமுறையாக இந்த பாரம்பரியத்தில் இந்த தெய்வத்தை வழிபட்டுவருகிறோம். இன்றைக்கு வந்து, எங்கள் தெய்வத்தை விட்டு, நீங்கள் சொல்லுகிற தெய்வம்தான் உண்மை என்று நீங்கள் சொன்னால் நாங்கள் எப்படி ஏற்றுக்கொள்வது. என்று அநேகர் சொல்லுவார்கள்.
இப்படிப்பட்டவர்கள் போலியை பார்த்து பார்த்து, அசலை நம்ப தயங்குகிறார்கள். எவ்வளவு வாதங்கள் வந்தாலும், நம்ப மறுத்தாலும், அசல் அசல்தான். உண்மை உண்மைதான். போலி போலிதான். பொய் பொய்தான்.............இதை அப்படிப்பட்டவர்கள் சரியாக அறிந்து கொள்ள ஜெபிப்போம்.
இன்னும் சத்தியத்தை அறிந்த தேவ பிள்ளைகள். சில போலியான உபதேசங்களை கண்டு குழம்பி, போலியை உண்மையாகவும், உண்மையை போலியாகவும் எண்ணி வாதிடுவதை காணமுடியும்.
அநேகரைப்போல, நாங்கள் தேவவசனத்தைக் கலப்பாய்ப் பேசாமல், துப்புரவாகவும், தேவனால் அருளப்பட்டபிரகாரமாகவும், கிறிஸ்துவுக்குள் தேவசந்நிதியில் பேசுகிறோம்’’ (2 கொரிந்தியர் 2:17).
உங்களைக் கிறிஸ்துவின் கிருபையினாலே அழைத்தவரை நீங்கள் இவ்வளவு சீக்கிரமாய் விட்டு, வேறொரு சுவிசேஷத்திற்குத் திரும்புகிறதைப்பற்றி நான் ஆச்சரியப்படுகிறேன்;
வேறொரு சுவிசேஷம் இல்லையே; சிலர் உங்களைக் கலகப்படுத்தி, கிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தைப் புரட்ட மனதாயிருக்கிறார்களேயல்லாமல் வேறல்ல.

நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தையல்லாமல், நாங்களாவது, வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது, வேறொரு சுவிசேஷத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்.

முன் சொன்னதுபோல மறுபடியும் சொல்லுகிறேன்; நீங்கள் ஏற்றுக்கொண்ட சுவிசேஷத்தையல்லாமல் வேறொரு சுவிசேஷத்தை ஒருவன் உங்களுக்குப் பிரசங்கித்தால் அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்’’  (ரோமர் 1:7-9).
போலிகளை கண்டு ஏமாறாதீர். உண்மையை சரியாக அறிந்து போலிகளை விட்டு விலகி விடுவோம்.

  

0 comments:

Post a Comment