அவனா இவன் !
எருசலேம் தேவாலயத்தை நோக்கி திரளான மக்கள் போவதும் வருவதுமாக இருந்தனர். இயேசுவும் அவருடைய சீஷர்களும் தேவாலயத்திற்குச் செல்ல திரளான மக்கள் கூட்டம் அவர்களைப் பின்தொடர்ந்து சென்று கொண்டிருந்தன.
அன்று ஓய்வு நாளாக இருந்தபடியால், மக்கள் தேவாலயத்திற்கு அதிகமாக வந்து கொண்டிருந்தனர். வழியோரங்களில் சில பிச்சைக்காரர்கள் அமர்ந்திருந்தனர். அப்படி அமர்ந்திருந்தவர்களில், பிறந்தது முதல் குருடனாக இருந்த ஒரு மனிதனும் சத்தமாகப் பிச்சை கேட்டுக்கொண்டிருந்தான்.
'சத்தமாகப் பிச்சையெடுப்பவர் யார்' என இயேசு நின்று பார்த்தார். இயேசுவின் கவனம் அவன் மேல் படுவதைக் கண்ட
சீஷர்கள், அவரிடம் “போதகரே,
இவன் குருடனாய்ப் பிறந்தது யார் செய்த பாவம், இவன் செய்த பாவமா? அல்லது இவனைப் பெற்றவர்கள் செய்த பாவமா?’’ என்று கேட்டனர்.
அவர் என்ன பதில் சொல்லுவார் என்று கேட்க அனைவரும் ஆவலோடு அவர் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தனர். இயேசு அவர்களைப்பார்த்து, “அது இவன் செய்த பாவமும் இல்லை, இவனைப் பெற்றவர்கள் செய்த பாவமும் இல்லை. கடவுளுடைய செயல்கள் இவன் மூலமாக வெளிப்படும் பொருட்டு இப்படிப் பிறந்திருக்கிறான்’’ என்றார். "இவர்கள் பேசிக்கொள்வது என்னவென்று அறியாமல் அந்தக் குருட்டுப் பிச்சைக்காரன் திகைத்துக்கொண்டிருந்தான்.
அப்பொழுது, இயேசு அவன் அருகில் சென்று, தரையில் துப்பி,
உமிழ்நீரினால் சேறுண்டாக்கி, அந்தச் சேற்றைக் அவனுடைய கண்களில் பூசி, “நீ போய்ச் சீலோவாம் குளத்திலே கழுவு’’ என்றார். உடனே அவன், "நான் பார்வை இல்லாதவனாக இருக்கிறேன், நான் எப்படிப் போய்க் கழுவுவேன். நீங்கள் யார் என்னை ஏன் அங்குச் சென்று கழுவ சொல்லுகிறீர்கள்" என்று கேட்டான். அதற்கு இயேசு “நீ போய் உன் கண்களில் உள்ள சேற்றைக் கழுவு பார்வை அடைவாய்’’ என்றார்.
“அப்படியா ஐயா? நான் பார்வை அடைவேனா? நீங்கள் யார்? நீங்கள் சொல்லுவது உண்மையா?" என்று அந்தக் குருட்டுப் பிச்சைக்காரன் கேட்டான்.
இயேசுவின் சீஷர்களில் ஒருவன் “நீ யாரிடத்தில் பேசிக்கொண்டிருக்கிறாய் என்று தெரியாமல் பேசிக் கொண்டிருக்கிறாய். இவர்தான் இயேசு. இவர் சொல்லுகிறபடி நீ செய்’’ என்று அவன் அருகில் சென்று அவன் காதில் சொன்னான். “இதோ போகிறேன்’’ என்று அவன் தட்டு தடுமாறி, எழுந்து வேகமாக நடந்து சென்றான்.
போகும்பொழுதே “ஐயா சீலோவாம் குளம் எங்கு இருக்கிறது, அதற்கு எப்படிப் போகவேண்டும்’’ என்று கேட்டுக்கொண்டே சென்றவன். சீலோவாம் குளத்தை அடைந்தான். அந்தக் குளத்தில் உள்ள தண்ணீரினால் தன் கண்களைக் கழுவினான். பிறந்தது முதல் பார்வையில்லாதிருந்த அவனது கண்கள், அந்தக் குளத்தில் கழுவிய உடன், காட்சிகளைக் கண்டன.
சுற்று முற்றும் பார்த்தான், அவனுக்கு எல்லாம் தெரிந்தது.
சந்தோஷத்தை அவனால் அடக்கமுடியவில்லை. “நான் பார்க்கிறேன், எனக்கு எல்லாமே தெரிகிறது’’ என்று துள்ளிக் குதித்துக்கொண்டே அவன் தேவாலையத்தை நோக்கி ஓடினான்.
இயேசுவைப் பார்த்து அவரிடம் சொல்லவேண்டும் என்று சுற்றும் முற்றும் தேடிப்பார்த்தான். அங்கு நிற்பவர்களிடம் “ஐயா,
இயேசு என்று ஒருவர் இங்கு இருந்தாரே அவரைப் பார்த்தீர்களா? அவர் எங்கு இருக்கிறார்’’ என்று ஒவ்வொருவரையும் பார்த்துக்கேட்டான். அவன் பிச்சை கேட்டுக்கொண்டிருந்ததைப் பார்த்தவர்களுக்கும், அங்குச் சூழ்ந்திருந்தவர்களுக்கும் இது அதிர்ச்சியைத் தந்தது.
“இவன் இங்கு அமர்ந்து பிச்சை கேட்டுக்கொண்டிருந்தவன் அல்லவா? இவன் எப்படிப் பார்க்கிறான்’’ என்றார்கள் “இல்லை இல்லை, இது அவன் இல்லை அவனின் சாயலில் இருக்கும் வேறொருவன்’’ என்று மற்றவர்கள் சொல்ல இன்னொருவர் “இவன் அவனின் சகோதரனாக இருப்பான், அதனால்தான் அவனைப்போலவே இருக்கிறான்’’ என்று ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாகப் பேசிக்கொண்டார்கள். ஆனாலும் அவர்கள் அந்த அதிர்ச்சியில் இருந்து விடுபடவே இல்லை.
அவர்கள் பேசிக்கொண்டிருப்பதைக் கவனித்துக்கொண்டிருந்த பிச்சைக்காரன், “இங்கு அமர்ந்து பிச்சை கேட்டுக்கொண்டிருந்தவன் நான் தான். என் சாயலில் உள்ளவனோ, என் சகோதரனோ இல்லை’’ என்றான். “நீயா? உனக்கு எப்படிப் பார்வை கிடைத்தது’’ என்று அவனைச் சுற்றிலும் இருந்தவர்கள் கேட்டுக்கொண்டிருந்தனர்.
“இயேசு என்ற ஒருவர் என்னிடத்தில் வந்தார். அவர் சேற்றை என் கண்களில் பூசி , நீ போய்ச் சீலோவாம் குளத்தில் கழுவு என்றார். நானும் அவருடைய வார்த்தையின்படி சீலோவாம் குளத்திற்குச்
சென்று கழுவினேன். உடனே எனக்குப் பார்வை வந்தது’’ என்று கேட்டவர்களுக்ககெல்லாம் பதில் சொல்லிக்கொண்டிருந்தான்.
இவ்விஷயம் அந்தப் பகுதி முழுவதும் பரவ ஆரம்பித்தது. அதைக் கேள்விப்பட்டவர்கள் அவனைப் பார்ப்பதற்காக அங்குக் கூடி விட்டனர். சிறிது நேரத்தில், அங்குத் திரளான மக்கள் கூடி விட்டனர். ஒவ்வொருவரும் வந்து அவனிடத்திலே கேள்வி கேட்க அவனும் எல்லோருக்கும் பதில் சொல்லிக்கொண்டே இருந்தான்.
அப்பொழுது அவர்கள் “அவர் எங்கே’’
என்று கேட்டார்கள். அதற்கு அவன் “எனக்குத் தெரியாது, நானும் அவரைத்தான் தேடிக்கொண்டிருக்கிறேன்’’ என்றான். நேரம் ஆக ஆகக் கூட்டம் அதிகமானது. அந்த வேளையில் சிலர் “இன்று ஓய்வு நாளாக இருக்கிறதே! இன்று எப்படி இவன் கண்களைத் திறக்கலாம்’’ என்று சொல்லி
“எங்களோடு வா’ என்று அவனைப் பரிசேயர்களிடத்தில் அழைத்துக்கொண்டு போனார்கள்.
பரிசேயர்கள் அவனிடத்தில் “நீ எப்படிப் பார்வை அடைந்தாய்’’ என்று கோபமாகக் கேட்டார்கள். அதற்கு அவன் “இயேசு என்பவர் என் கண்களில்மேல் சேற்றைப் பூசினார், நான் சென்று கழுவினேன், பார்வை அடைந்தேன்’’ என்று தைரியமாக அவர்களிடத்தில் நடந்த உண்மைகளைச் சொன்னான்.
அதைக் கேட்ட பரிசேயர்கள் சிலர், "அந்த மனிதன் ஓய்வு நாளை கைக்கொள்ளாததினால் அவன் கடவுளிடத்திலிருந்து வந்தவனல்ல’’ என்று சொன்னார்கள். அதைக் கேட்ட வேறு சிலர் “பாவியாக இருக்கிற மனிதன் இப்படிப்பட்ட அற்புதங்களை எப்படிச் செய்வான். ஆகையால் நீங்கள் சொல்வது சரியல்ல’’ என்றார்கள். இப்படி, அவர்கள் வாக்குவாதங்களில் ஈடுபட்டபடியால் பரிசேயர்களுக்குள் பிரிவினை உண்டாக ஆரம்பித்தது.
அப்பொழுது அங்கு இருந்த வேறு சிலர் “நமக்குள் ஏன் நாம் சண்டையிட்டுக்கொள்ள வேண்டும், அமைதியாக இருங்கள்’’
என்று சொல்லிவிட்டு, மறுபடியும் அந்தப் பிச்சைக்காரனிடம், “உன் கண்களைத் திறந்தானே, அவனைக்குறித்து நீ என்ன சொல்லுகிறாய்’’ என்று கேட்டார்கள். அதற்கு அவன் “அவர் தீர்க்கதரிசி என்று நினைக்கிறேன்’’ என்றான்.
ஒரு சிலர் அவன் குருடனாக இருந்து பார்வை அடைந்ததை நம்பாமல் “ உண்மையைச் சொல் நீ உண்மையாகவே குருடனாக இருந்தாயா? என்று கேட்க
“எத்தனை முறை சொல்லுவது நான் குருடனாக இருந்தேன் . இப்போது பார்வை அடைந்திருக்கிறேன்’’ என்று பதில் சொல்லியும், அவன் சொல்வதை நம்பாமல் அவனுடைய தாய் தகப்பனை அழைத்து வரும்படியாக ஆட்களை அனுப்பினார்கள்.
அவனுடைய பெற்றோர் வந்ததும் “உங்கள் மகன் குருடனாகப் பிறந்தான் என்று சொல்லுகிறார்களே, அவன் இவன்தானா? அவன்தான் இவன் என்றால் இவனுக்கு எப்படிப் பார்வை வந்தது?’’ என்று கேட்டார்கள்
அவர்கள் பரிசேயர்களுக்குப் பயந்ததால் “இவன் எங்கள் மகன்தான், இவன் குருடனாகப் பிறந்ததும் உண்மைதான். ஆனால் இவனுக்கு எப்படிப் பார்வை வந்தது என்றும், இவன் கண்களைத் திறந்தவன் யார்? என்றும் எங்களுக்குத் தெரியாது. இவன்தான் வாலிபனாக இருக்கிறானே, இவனையே கேளுங்கள் இவன் சொல்லுவான்." என்று நழுவப்பார்த்தார்கள்.
ஏன் என்றால் யூதர்களுக்கு இவர்கள் அதிகமாகப் பயந்தார்கள். இயேசுவை கிறிஸ்து என்று எவனாவது அறிக்கை செய்தால் அவனை ஜெப ஆலயத்திற்குள் வரவிடக்கூடாது என்று ஏற்கனவே கட்டுபாடு பண்ணி இருந்தார்கள். அவர்கள் இப்படிச் சொன்னதும் மறுபடியுமாகப் பார்வை பெற்ற மனிதனையே விசாரித்தார்கள்.
அவர்கள் பரிசேயர்களுக்குப் பயந்ததால் “இவன் எங்கள் மகன்தான், இவன் குருடனாகப் பிறந்ததும் உண்மைதான். ஆனால் இவனுக்கு எப்படிப் பார்வை வந்தது என்றும், இவன் கண்களைத் திறந்தவன் யார்? என்றும் எங்களுக்குத் தெரியாது. இவன்தான் வாலிபனாக இருக்கிறானே, இவனையே கேளுங்கள் இவன் சொல்லுவான்." என்று நழுவப்பார்த்தார்கள்.
ஏன் என்றால் யூதர்களுக்கு இவர்கள் அதிகமாகப் பயந்தார்கள். இயேசுவை கிறிஸ்து என்று எவனாவது அறிக்கை செய்தால் அவனை ஜெப ஆலயத்திற்குள் வரவிடக்கூடாது என்று ஏற்கனவே கட்டுபாடு பண்ணி இருந்தார்கள். அவர்கள் இப்படிச் சொன்னதும் மறுபடியுமாகப் பார்வை பெற்ற மனிதனையே விசாரித்தார்கள்.
“நீ கடவுளை மட்டும் மகிமைப்படுத்து, இந்த மனிதன் பாவி என்று நாங்கள் அறிந்திருக்கிறோம்’’ என்றார்கள். அதற்கு அவன் "எனக்கு அதெல்லாம் தெரியாதுங்க. நான் குருடனாக இருந்தேன் இப்பொழுது பார்வை அடைந்து விட்டேன். இது மட்டும் தான் என்க்கு தெரியும்." என்றான்
மறுபடியும் அவர்கள் அவனிடத்தில் “உனக்கு அவன் என்ன செய்தான், உன் கண்களை எப்படித் திறந்தான்?’’ என்று துருவி துருவி கேள்வி மேல் கேள்வியாகக் கேட்டுக்கொண்டே இருந்தனர்.
மறுபடியும் அவர்கள் அவனிடத்தில் “உனக்கு அவன் என்ன செய்தான், உன் கண்களை எப்படித் திறந்தான்?’’ என்று துருவி துருவி கேள்வி மேல் கேள்வியாகக் கேட்டுக்கொண்டே இருந்தனர்.
அதற்கு அவன் “ஏன் இதையே திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டிருக்கிறீர்கள். இயேசுவிற்குச் சீஷராக உங்களுக்கு விருப்பமா?’’ என்று கேட்டான். அப்பொழுது அவர்கள் “நீ அவனுடைய சீஷன். நாங்கள் மோசேயின் சீஷர்கள். மோசேயுடன் கடவுள் பேசினார் என்று அறிந்திருக்கிறோம். இவன் எங்கிருந்து வந்தான் என்பது எங்களுக்குத் தெரியாது." என்றனர்.
அதற்கு அவன் ”என் கண்களை அவர் திறந்திருந்தும் அவர் எங்கிருந்து வந்தார் என்று உங்களுக்குத் தெரியாமல் இருப்பது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. பாவியாக இருக்கிற ஒருவனுக்குக் கடவுள் செவி கொடுப்பது இல்லை என்பதை நாம் நன்றாக அறிந்திருக்கிறோம். ஒருவன் தேவ பக்தி உள்ளவனாக இருந்து, அவருக்குச் சித்தமானதை செய்தால் அவனுக்குச் செவிகொடுப்பார். பிறவிக் குருடனுடைய கண்களை ஒருவன் திறந்தான் என்று உலகம் உண்டானது முதல் யாரும் கேள்வி பட்டது இல்லையே? அவர் கடவுளிடத்தில் இருந்து வராதிருந்தால் அவரால் ஒன்றும் செய்ய முடியாதே, இதை எல்லாம் நீங்கள் தெரிந்து கொள்ளாமல் இருப்பது ஆச்சரியம்தான்." என்று சொன்னான்.
அதைக்கேட்டதும் முன்பிலும் அதிகமான கோபத்துடன். "முழுவதும் பாவத்தில் பிறந்த நீயா எங்களுக்குப் போதனை செய்கிறாய்?" என்று சொல்லி அவனை வெளியே தள்ளி விட்டனர்.
கீழே விழுந்தவன் எழுந்து “இத்தனை ஆண்டுகாலமாக நான் பார்வை இல்லாதவனாக ஒருவராலும் கவனிக்கப்படாதவனாக, பிச்சை எடுத்துக்கொண்டிருந்தேன். அப்பொழுது எல்லாம் என்னை வந்து விசாரிக்காத இந்த மனிதர்கள் இப்போது நான் பார்வை அடைந்து, நலம் பெற்ற பிறகு இத்தனை கேள்விகளைக் கேட்டு, என்னைப் பிடித்துக் கீழே தள்ளி விடுகின்றனர். இப்படி ஓய்வு நாள் ஓய்வு நாள் என்று குதிக்கிறார்களே, மனிதனை விட ஓய்வு நாள் பெரியதா? நல்லது செய்வது தப்பா? எனக்குப் பார்வை கொடுத்த இயேசுவை ஏன் இவர்கள் இப்படித் தப்பானவராகச் சித்தரிக்க முயற்சிக்கிறார்கள். இந்த மனிதர்களுக்கு என்ன வேண்டும்.
எது எப்படியோ, எனக்குப் பார்வை கொடுத்த இயேசுதான் கடவுள் அவரை இனி விட்டு விடக்கூடாது’’ என்று தன் மனதில் நினைத்தவனாக நடந்து சென்றான்.
எது எப்படியோ, எனக்குப் பார்வை கொடுத்த இயேசுதான் கடவுள் அவரை இனி விட்டு விடக்கூடாது’’ என்று தன் மனதில் நினைத்தவனாக நடந்து சென்றான்.
இந்த சம்பவங்களை எல்லாம் இயேசு கிறிஸ்து கேள்விப்பட்டு, அவனிடத்தில் வந்தார். அவனுக்கு இவர்தான் இயேசு என்று தெரியவில்லை. அவனைப்பார்த்து “நீ கடவுளுடைய மகனிடத்தில் விசுவாசமாக இருக்கிறாயா?" என்று கேட்டார். இப்படி அவர் கேட்டதும், ஒரு நிமிடம் திகைத்தவனாய், “ஆண்டவரே, அவரிடத்தில் விசுவாசமாக
இருக்கும்படிக்கு அவர் யார்?’’ என்று கேட்டு அவரையே பார்த்துக்கொண்டிருந்தான்.
அதற்கு இயேசு சிரித்தபடியே, “நீ அவரைப் பார்த்திருக்கிறாய், இப்போது உன்னோடு பேசிக்கொண்டிருக்கிறவர் அவர்தான்’’ என்று சொன்னதும், “ஆண்டவரே, விசுவாசிக்கிறேன்’’ என்று சொல்லி, அவரைப் பணிந்துகொண்டான்.
அதற்கு இயேசு சிரித்தபடியே, “நீ அவரைப் பார்த்திருக்கிறாய், இப்போது உன்னோடு பேசிக்கொண்டிருக்கிறவர் அவர்தான்’’ என்று சொன்னதும், “ஆண்டவரே, விசுவாசிக்கிறேன்’’ என்று சொல்லி, அவரைப் பணிந்துகொண்டான்.
“காணாதவர் காண்கிறார்கள், காண்கிறவர்கள் குருடராக இருக்கிறார்கள். சக மனிதனுக்குக் கிடைக்கும் நன்மைகளைவிட நாட்கள் மேலானவைகள் அல்ல என்பதைக் காண முடியாத குருடர்களாக இருக்கிறார்கள்’’ என்று தன்னைச் சுற்றிலும் இருந்த பரிசேயர்களைப் பார்த்து இயேசு கிறிஸ்து சொன்னார்.
அதைக் கேட்ட பரிசேயரில் சிலர் தங்களைக் குறித்துதான் சொல்லுகிறார் என்பதை அறிந்து. உள்ளத்தில் குத்தப்பட்டவர்களாக “அப்படியானால் எங்களைக் குருடர்கள் என்று சொல்லுகிறீர்களா?’’ என்று கேட்டார்கள்.
“நீங்கள் குருடராக இருந்தால் உங்களுக்குப் பாவம் இருக்காது, நீங்கள் எல்லாவற்றையும் அறிந்தவர்கள், எல்லாம் எங்களுக்குத் தெரியும் என்று சொல்லுவதால்தான், நீங்கள் பாவத்தில் நிலைத்திருக்கிறீர்கள்’’ என்று சொல்ல எல்லோரும் தலைகவிழ்ந்து நின்றனர்.
“நீங்கள் குருடராக இருந்தால் உங்களுக்குப் பாவம் இருக்காது, நீங்கள் எல்லாவற்றையும் அறிந்தவர்கள், எல்லாம் எங்களுக்குத் தெரியும் என்று சொல்லுவதால்தான், நீங்கள் பாவத்தில் நிலைத்திருக்கிறீர்கள்’’ என்று சொல்ல எல்லோரும் தலைகவிழ்ந்து நின்றனர்.
யோவான் 9 ம் அதிகாரம் கதை வடிவில்
0 comments:
Post a Comment