எது சரி ?
“இதோ வந்து விட்டேன்’’ என்று சொல்லியபடியே கதவை திறந்து “யாரு’’ என்றபடி வெளியே வந்தாள் கவிதா.
“நான்தாங்கா வித்யா’’
வித்யாவா, என்ன வித்யா ரொம்ப வேகமா வந்திருக்க? என்ன
விஷயம். உள்ளே வா’’ என்று கதவை முழுவதுமாக திறக்க “வேகம் எல்லாம் இல்ல, வீடு பூட்டி இருந்துச்சு,
அதான் சத்தமா கூப்பிட்டு கதவை தட்டினேங்கா’’ என்றபடியே உள்ளே சென்றாள் வித்யா.
“எப்படி இருக்கீங்கக்கா’’ என்று கேட்டபடியே சோபாவில் அமர்ந்தாள்.
“ம் நான் நல்லா இருக்கேன் நீ எப்படி இருக்க? என்ன இரண்டு
மூன்றுநாளா வீடு பூட்டி இருந்தது. ஊருக்கு போயிருந்தீயா?’’
"ஜீவ அப்பம்'' (ஜூலை 2014) கிறிஸ்தவ மாத இதழ்
கிறிஸ்துவுக்குள் அன்பான தேவ பிள்ளைகளுக்கு, நமது ஆவிக்குரிய வாழ்வுக்கு
உறுதுணையாக, நமது விசுவாச வாழ்வுக்கு தேவையான செய்திகளுடன்,
கிறிஸ்துவுக்குள் நாம் வளரவும், நிலைத்து நிற்கவும், "ஜீவ அப்பம்'' மாத
இதழ் வெளி வந்து கொண்டிருக்கிறது.
எல்லாரும் இலவசமாக படிக்கும் வண்ணமாக மின் இதழாகவும் (PDF) இணையத்தில் கொடுக்கப்படுகிறது. இந்த மாத (ஜூலை 2014) ஜீவ
அப்பம் மாத இதழை இலவசமாக பதிவிறக்கம் செய்து படியுங்கள்.
தேவ கிருபையால், ஆவியானவரின் ஒத்தாசையுடன எழுதப்பட்டிருக்கும் தேவ செய்திகள் கட்டாயம் படிக்கும் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கும்.
அவனா இவன் !
எருசலேம் தேவாலயத்தை நோக்கி திரளான மக்கள் போவதும் வருவதுமாக இருந்தனர். இயேசுவும் அவருடைய சீஷர்களும் தேவாலயத்திற்குச் செல்ல திரளான மக்கள் கூட்டம் அவர்களைப் பின்தொடர்ந்து சென்று கொண்டிருந்தன.
அன்று ஓய்வு நாளாக இருந்தபடியால், மக்கள் தேவாலயத்திற்கு அதிகமாக வந்து கொண்டிருந்தனர். வழியோரங்களில் சில பிச்சைக்காரர்கள் அமர்ந்திருந்தனர். அப்படி அமர்ந்திருந்தவர்களில், பிறந்தது முதல் குருடனாக இருந்த ஒரு மனிதனும் சத்தமாகப் பிச்சை கேட்டுக்கொண்டிருந்தான்.
'சத்தமாகப் பிச்சையெடுப்பவர் யார்' என இயேசு நின்று பார்த்தார். இயேசுவின் கவனம் அவன் மேல் படுவதைக் கண்ட
சீஷர்கள், அவரிடம் “போதகரே,
இவன் குருடனாய்ப் பிறந்தது யார் செய்த பாவம், இவன் செய்த பாவமா? அல்லது இவனைப் பெற்றவர்கள் செய்த பாவமா?’’ என்று கேட்டனர்.
மதங்களும் கிறிஸ்தவமும்
கடவுள் நம்பிக்கை கொண்டவர்களையும், கடவுள் வழிபாடு
செய்கிறவர்களையும் ஆன்மீகவாதிகள் என்று அழைக்கிறார்கள். உலகமெங்கும் மதங்கள் ஏராளமாக
உள்ளன. எல்லாம் கொள்கை ரீதியிலும், வழிபாடு மாறுபாடுகளினாலும்
வித்தியாசப்படுகிறது.
கடவுள் ஒருவரே என்று, கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள்
சொன்னாலும் பெயரிலும், வழிபாடுகளிலும் கடவுளை அறிந்து கொள்ளும் அறிவிலும்
அதிகப்படியான வித்தியாசங்கள் கொண்ட அநேக பிரிவுகளும் பிரிவினைகளும் உலகம் முழுவதிலும்
உண்டு.
சுவடுகள் (இரண்டு) எழுத்தின் ஆரம்பம்
என் எண்ணங்களை பின் நோக்கி செலுத்திய போது, மறக்காமல்
இருக்கும் சில சுவடுகள்.
மிகவும் பின்தங்கிய கிராமத்தில் எளிய குடும்பத்தில் பிறந்து,
அதிகம் படிக்காத இளம் வாலிபனாய் வலம் வந்த நாட்கள், பேச பிடிக்கும் ஆனால் பேச
தெரியாது. அந்த கோர்வை வராது. மனதில் சிந்திப்பதை வார்த்தையில் வடிக்கும் கலை
தெரியாது.
எல்லாவற்றிலும் ஜீரோ. இதுதான் என்னைக்குறித்த எனது எண்ணம். 20 ஆண்டுகளுக்கு
முன் சென்னையில் இருந்து திருவிழாவிற்காக ஊருக்கு சென்றிருந்த ஒருநாள் மாலை வேளை,
கத்தோலிக்க தேவாலயம் முன் ஊர் மக்கள்
கூடியிருக்க, 13 நாள் அந்தோணியார் கோவில் திருவிழா முடிந்து வெளிஊரில் இருந்து
வந்த பாதிரியாரை வாழ்த்தி வழியனுப்ப மாலையுடன்
காத்திருந்த வேளை, ஒருசில வார்த்தை வாழ்த்தி பேச வேண்டும் என்று
முடிவெடுத்தேன்.
கானான் சபிக்கப்பட்டது ஏன்?
வேதாகமத்தை வாசிக்கும் போது நமக்குள்ளாக கேள்விகள் எழுவது
இயற்கையே, கேள்விகள் வந்தால்தான் நாம் சரியாக வேதாகமத்தை கவனித்து வாசிக்கிறோம்
என்று பொருள். கேள்விகள் வரலாம், அதே வேளையில் சந்தேகம் வரக்கூடாது. தவறுதலாக
புரிந்து கொள்ளக்கூடாது. தனக்கு புரியாதவைகளை இல்லை என்றும் சொல்லக் கூடாது.
வெள்ளத்தினால் உலகம் அழிந்த பிறகு, புதிய பூமியில் முதல்
குடும்பமான நோவாவின் குடும்பத்தில் நடந்த சம்பவத்தை குறித்து இந்த செய்தியில்
பார்க்கலாம்.
எனக்கு எந்த ஆபத்தும் இல்லை
அழகிய பண்ணை, வீடு சுற்றிலும் இயற்கை வளம் கொஞ்சும் அழகிய
வயல்கள். அந்த பண்ணை வீட்டில் வெகு நாட்களாக உலாவி வந்த ஒரு எலி சமையலறையில் எலிபொறியைப் பார்த்துவிட்டது.
"ஆகா நமக்காகத்தான் இதை வைத்திருக்கிறார்கள். இதில் மாட்டிக்கொண்டுவிட்டால் என்ன செய்வது?" என்ற பயத்தில் ஓடிச் சென்று தனக்கு நெருங்கிய நண்பனான அந்தப் பண்ணையில் இருந்த கோழியிடம் சென்று மூச்சிறைக்க நின்றது.
“என்ன எலியாரே,
என்ன சங்கதி, இவ்வளவு வேகமாக ஓடி வந்து மூச்சிறைக்க வந்து நிற்கிறீர்’’ என்று கோழி கேட்டது.
ஓடி வந்த களைப்புடனே மூச்சிறைக்க "சமையலறையில் ஒரு எலி பொறி இருக்கிறது, சமையலறையில்
ஒரு எலி பொறி இருக்கிறது’’ என்று திக்கி தினறி சொல்லியது.
அதைக் கேட்ட கோழி
“ஆஹா எலியாரே இனி உமது பாடு திண்டாட்டம்தான் போல’’ என்று எந்த வருத்தமும் இல்லாமல்
சொல்லியது. “என்ன கோழியாரே இவ்வளவு பெரிய விசயத்தை சொல்லுகிறேன், நீங்க மிக
சாதாரணமாக பேசுகிறீர்களே’’ என்று மிகவும் பட படப்புடன் பேசியது.
சீர்திருத்தம் எங்கிருந்து....
இக்காலத்தில் சீர்திருத்தம் பேசுகிறவர்களுக்கோ, சீர்திருத்தவாதிகளுக்கோ
பஞ்சமில்லை. இத்தனை சீர்திருத்தவாதிகள் இருந்தும், சீர்திருத்தம் எங்கே? என்று
தேவன் கேட்கும் கேள்வி காதில் விழுகிறதா?
வேதாகமத்தில் இயேசு கிறிஸ்துவானாலும், பவுலானாலும், மற்ற
அப்போஸ்தலர்களானாலும், சீர்திருத்தம் பேசுகிறவர்களாக மட்டும் இல்லை. சீராக
வாழ்ந்தார்கள்.
இயேசுவைப்போல் சாட்டை எடுக்க இன்று அநேகர் தயார். இயேசுவைப்போல் வாழ அவர்கள் தயாராக
இல்லை. பவுலைப்போல் பிரம்பை எடுக்க எல்லோரும் தயார். ஆனால் பவுலைப்போல் வாழ
அவர்களுக்கு விருப்பம் இல்லை.
சுவடுகள் (ஒன்று) இரட்சிப்பின் அனுபவம்
சென்னை
திருவொற்றியூர் பகுதியில் வசித்து வரும் லூர்துராஜ் என்கிற நான் பிறப்பால் ரோமன்
கத்தோலிக்க குடும்பத்தில் பிறந்தவன், சிறு வயதிலிருந்தே இயேசுகிறிஸ்துவை விட
புனிதர்களை வணங்கி வழிபட்டதுதான் அதிகமாக இருக்கும் ஏனென்றால் எனக்கு அதைத்தான்
சொல்லிக் கொடுத்து வளர்த்தார்கள், எங்கள் ஊரில் உள்ளதும் அந்தோணியார் கோயில்தான்
இவ்விதமாக வளர்ந்த நான் கோவில்பட்டி அருகே உள்ள செவல்பட்டி என்ற கிராமத்தில் பிறந்தவன். 1998 ம் வருடம் ஊரிலிருந்து சென்னைக்கு வந்ததினால் திருவொற்றியூரில் உள்ள ஒரு பெந்தெகொஸ்தே சபைக்கு முதன் முதலாக செல்ல ஆரம்பித்தேன், தொடர்ந்து ஒருவருடகாலம் அந்த சபையின் ஆராதனைகளில் கலந்து கொண்டேன் அந்த நாட்களிலேயே பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகம் பெற்றுக் கொண்டேன்
இவ்விதமாக வளர்ந்த நான் கோவில்பட்டி அருகே உள்ள செவல்பட்டி என்ற கிராமத்தில் பிறந்தவன். 1998 ம் வருடம் ஊரிலிருந்து சென்னைக்கு வந்ததினால் திருவொற்றியூரில் உள்ள ஒரு பெந்தெகொஸ்தே சபைக்கு முதன் முதலாக செல்ல ஆரம்பித்தேன், தொடர்ந்து ஒருவருடகாலம் அந்த சபையின் ஆராதனைகளில் கலந்து கொண்டேன் அந்த நாட்களிலேயே பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகம் பெற்றுக் கொண்டேன்