Bread of Life Church India

வாழ்க்கையின் மாற்றத்திற்கு அவசியம்



பிரியமானவர்களே, இந்தமாதத்தில் கர்த்தர் நமக்கு தரும் விசேஷமான ஆசீர்வாதமான தேவனுடைய வார்த்தை “பயப்படாதே, உன் வேண்டுதல் கேட்கப்பட்டது’’ (லூக்கா 1:13). கடந்த நாட்களில் நீங்கள் எதைக்குறித்து எல்லாம் வேண்டுதல் செய்து கொண்டிருந்தீர்களோ, அவைகள் எல்லாவற்றிற்கும் தேவன் பதில் கொடுக்கப் போகிறார்.
மேலே நாம் வாசித்த வேதபகுதியில் சகரியாவிடம் தேவ தூதன் தரிசனமாகி கர்த்தருடைய வார்த்தையை அறிவிக்கிறான், ஆனால் சகரியாவோ அதை ஏற்றுக்கொள்ள தயங்குகிறான். ஏன் என்றால் பல வருடங்களுக்கு முன்பாக தான் வேண்டுதல் செய்தவைகளை சகரியாவே மறந்து விட்டான். ஆகையால்தான் “சகரியா தேவதூதனை நோக்கி: இதை நான் எதினால் அறிவேன்’’ என்று கேட்கிறான்.
இன்றைக்கும் அநேகர் இப்படிதான் இருக்கிறார்கள். தாங்கள் வேண்டுதல் செய்தவைகளை மறந்து விடுகிறார்கள். ஆனால் தேவன் நாம் வேண்டுதல் செய்தவைகளை மறக்கிறவர் அல்ல, அவர் கட்டாயம் பதில் கொடுக்கிறவராக இருக்கிறார். எத்தனை ஆண்டு காலம் ஆனாலும் சரி, தேவன் நமது வேண்டுதலுக்கு பதில் கொடுக்கிறார் என்பதைத்தான் இந்த வேத பகுதி நமக்கு விளக்கி காண்பிக்கிறது.

பாஸ்டர், போதகர், ஆயர், பிஷப் , என்று அழைக்கலாமா?


கர்த்தருடைய ஊழியத்தை செய்கிறவர்கள் பாஸ்டர், போதகர், ஆயர், பிஷப் என்று போட்டுக்கொள்வது தவறு என்பது போல் இக்காலத்தில் சிலர் பேசுவது வேதாகமத்திற்கு எதிராகவும், உறுதியில்லாத விசுவாச மக்களை, திருச்சபை விசுவாசத்தை விட்டு விலகச் செய்வது போலும் இருக்கிறது.
இக்காலத்தில் சிலர் தவறாக  பாஸ்டர், போதகர், ஆயர், பிஷப் என்று தங்களை தாங்களே அழைத்துக்கொள்கிறார்கள், தவறாக பயன்படுத்துகிறார்கள் என்பதற்காக வேதாகமம் சொல்லியிருக்கும் பொறுப்புக்களை இல்லை என்று சொல்லி விட முடியுமா?

"ஜீவ அப்பம்'' (ஜீன் 2014) கிறிஸ்தவ மாத இதழ்

கிறிஸ்துவுக்குள் அன்பான தேவ பிள்ளைகளுக்கு,  நமது ஆவிக்குரிய வாழ்வுக்கு உறுதுணையாக, நமது விசுவாச வாழ்வுக்கு தேவையான செய்திகளுடன், கிறிஸ்துவுக்குள் நாம் வளரவும், நிலைத்து நிற்கவும், "ஜீவ அப்பம்'' மாத இதழ் வெளி வந்து கொண்டிருக்கிறது. 

வேதாகமத்தில் “திரித்துவம்’’ உள்ளதா?


வேதாகமத்தில் திரித்துவ உபதேசம் மிகவும் முக்கியமான உபதேசமாகும். திரித்துவத்தை சரியாக விளங்கி கொள்ளா விட்டால், புரிந்து கொள்ளாவிட்டால் துர் உபதேசக்காரர்களின் வலையில் விழுந்து விசுவாச வாழ்வை விட்டு விலக வேண்டிய சூழ்நிலை உண்டாகும்.
திரித்துவ உபதேசம் இடையில் வந்தது அல்ல., வேதாகமத்தோடு கலந்தது. ஒரே நித்திய தேவன் திரித்துவமாக எப்படி செயல்படுகிறார் என்பதை வேதாகமம் அற்புதமாக விளக்கி காண்பிக்கிறது.
திரித்துவத்தை மறுதலிக்கப் புறப்படும் கள்ளர்களின் நோக்கம் இயேசு கிறிஸ்துவின் தேவத்துவத்தை மறுதலிக்க வைப்பதேயாகும். இது பிசாசின் மற்றுமொரு தந்திரம்.

எதிரிக்கு சவால்

அவர்கள் உனக்கு விரோதமாக யுத்தம்பண்ணுவார்கள்; ஆனாலும் உன்னை மேற்கொள்ளமாட்டார்கள்; உன்னை இரட்சிக்கும்படிக்கு நான் உன்னுடனே இருக்கிறேன்’’ என்று கர்த்தர் சொல்லுகிறார் (எரேமியா 1:19).

தேவ குமாரர்கள் யார் ?



தேவ குமாரர், மனுஷ குமாரத்திகள் யார் என்ற கேள்விகள் பல நூற்றாண்டுகாலங்களாக விவாதத்திற்கு உரிய பகுதி. வேதாகமத்தில் எந்த வசனமும், எந்த வேத பகுதியும் நம்முடைய வாழ்வில் விசுவாசத்தை வளர்க்கவும், கர்த்தருக்குள் வளரவுமே எழுதப்பட்டுள்ளது.