மதிக்கப்படுவாய்
``நான் உங்களைக் கீர்த்தியும்
புகழ்ச்சியுமாக வைப்பேன்'' என்று கர்த்தர் சொல்லுகிறார் (செப்பனியா 3:20).
சிறுமைப்பட்டு, அவமானப்பட்டு, நிந்திக்கப்பட்டு,
வேதனையோடு வாழ்ந்து
வந்த நம்முடைய வாழ்க்கையில் இதுமுதல் நம்மை புகழ்ச்சியாக்கி, எந்த இடங்களில் எந்த பகுதியில்
நிந்திக்கப்பட்டு, சிறுமை அனுபவித்தோமோ, அதே பகுதியில் கர்த்தர் நம்மை உயர்த்தி மேன்மையாக
வைக்கப்போகிறார்.
எதிரியின் அடையாளம்
நம்முடைய நண்பன் யார் என்பதை அறிந்துகொள்வதற்கு முன்பாக
எதிரி யார்? என்பதை அறிந்திருக்க வேண்டும். எதிரியை இனம் கண்டு கொள்ளாதவன்
போர்களத்தில் தோல்வியை சந்திப்பது நிச்சயம்.
இது யாருக்குதான் தெரியாது. புதிதாக எதாவது இருந்தால் சொல்லுங்கள்
என்று சிலர் சொல்லுவது காதில் விழுகிறது. பொறுமையாக இருங்கள் அதைத்தான்
சொல்லவருகிறேன். இன்றைக்கும் நம்மில் சிலர் நம்முடைய எதிரியை வெளியில்
தேடிக்கொண்டிருக்கிறோம். உண்மை என்னவென்றால் எதிரி நமக்கு வெளியில் இல்லை. ஆனால்
நமக்கு உள்ளேதான் எதிரி தங்கி இருக்கிறான். அந்த எதிரியைத்தான் பரிசுத்த வேதாகமம்
(பைபிள்) “பாவம்’’ என்று அடையாளப்படுத்தி காண்பிக்கிறது.
ஐயோ! யாரும் இந்த இடத்திற்கு வந்துவிடாதீர்கள்!
காலை முதல் அந்த ஊரே பரபரப்பாக
இருந்தது. அரண்மனை பெரியவரின் பிறந்த நாள் என்பதால் ஊரில் உள்ள அனைவரும்
அரண்மனையில் குவிய ஆரம்பித்தனர். சிறுவர்களும், சிறுமிகளும் அங்கும் இங்கும்
மகிழ்ச்சியுடன் துள்ளி குதித்து விளையாடிக்கொண்டிருந்தனர். குதிரை வண்டிகளிலும்,
மாட்டு வண்டிகளிலும், வெளி ஊர்களில் இருந்தும்
மக்கள் வந்த வண்ணமாக இருந்தனர். “சிறு விஷயமாக இருந்தாலும் விழா எடுத்து
அமர்களப்படுத்தும் பெரியவர், தனது பிறந்த நாளை
சாதாரணமாக கொண்டாடுவாரா? அதுதான் இந்த பரபரப்புக்கு காரணம்’’ என்று இருவர்
பேசிக்கொண்டனர்.
இஸ்ரேல் புனித பூமியா? எருசலேம் புனித ஸ்தலமா?
இஸ்ரேல் பயணம் செல்வதும், இயேசு
கிறிஸ்து பிறந்து, ஊழியம் செய்த
பகுதிகளையும், சிலுவைப்பாடுகள் பட்ட இடங்களையும் பார்த்து வருவது நல்ல விஷயம்தான்.
ஆனால் அதை தற்போது “புனித பயணம்’’ என்றும், புனித ஸ்தலம், புனித பூமி என்றும் அழைக்கிறார்கள்.
இதை வேதாகமத்தின் அடிப்படையில் ஏற்றுக்கொள்ள முடியுமா? என்றால் கட்டாயமாக
ஏற்றுக்கொள்ள முடியாது. எந்த அடிப்படையில் இஸ்ரேல் புனித பூமி
என்றும், எருசலேம் புண்ணிய ஸ்தலம் என்றும் அழைக்கிறார்கள் என்று விளங்கி கொள்ள
முடிய வில்லை. இப்படிப்பட்ட செயல் ஒரு சிலரால் கிறிஸ்தவத்திற்குள் வந்தது கூட,
வேறு சில மதத்தை பார்த்துத்தான் இருக்க வேண்டும் என்று கருதுகிறேன்.
மனு குலத்தின் முதற்கொலை
சூரியன் மறைந்து கொண்டிருந்த அந்த நேரத்தில் உலகத்தின் முதல் மனிதர்களான ஆதாமும், ஏவாளும் பாலை நிலத்தில் நடந்து கொண்டிருந்தனர்.
இருவருடைய முகத்திலும் பயமும், திகிலும் நிறைந்திருந்தது,
சோகத்தால் மிகவும் வாடிப் போன நிலையில் இருந்தனர். "எப்படி இருந்த நமது வாழ்க்கை இப்படி ஆகி விட்டது. நாம்
செய்த முட்டாள் தனமான செயலால்தானே நாம் இந்த நிலைக்கு ஆளானோம். ஒரு நிமிடம் யோசித்து இருந்தால் கடவுளின் தோட்டமான ஏதேனை விட்டு வெளியே துரத்தப்பட்டிருக்க
மாட்டோமே. கடவுளோடு கூட சந்தோஷமாக இருந்திருப்போமே. வஞ்சக சாத்தான் தந்திரமாக நம்மை ஏமாற்றி விட்டானே’’ என்று
ஆதாம் ஏவாளிடம், தனது ஆதங்கத்தை வெளிப்படுத்திக் கொண்டே நடந்தான்.
ஜீவ அப்பம் ஊழியங்கள், கைப்பிரதிகள்
கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே, ஜீவ அப்பம் ஊழியங்கள் மூலமாக வெளியிடப்பட்டுள்ள கைப்பிரதிகளை pdf வடிவில் download செய்து கொள்ளும்படியாக கொடுத்துள்ளோம். உங்கள் பகுதியில் நீங்கள் கைப்பிரதி ஊழியம் செய்வீர்கள் என்றால், இக்கைப்பிரதியை நீங்கள் download செய்து பிரதி எடுத்து கிறிஸ்துவை அறிந்திராத மக்களுக்கு கொடுக்கலாம். இதை வாசிக்கும் போது அநேகர் இயேசு கிறிஸ்துவை அறிந்து, இரட்சிக்கப்பட்டு, ஆசீர்வாதங்களை சுதந்தரித்துக்கொள்வார்கள்.
கீழே Download links கொடுக்கப்பட்டுள்ளது.
3, சுதந்திரமும், மனித வாழ்வும்
எதாகிலும் சந்தேகம் இருந்தால் கேட்கலாம்.