"ஜீவ அப்பம்'' (செப்டம்பர் 2015) மாத இதழ்
கிறிஸ்துவுக்குள் அன்பான ஜீவ அப்பம் இணைய நண்பர்களுக்கு, ஆவிக்குரிய வாழ்வுக்கு
உறுதுணையாக, விசுவாச வாழ்வுக்கு தேவையான செய்திகளுடன்,
கிறிஸ்துவுக்குள் வளரவும், நிலைத்து நிற்கவும், "ஜீவ அப்பம்'' மாத
இதழ் வெளி வந்து கொண்டிருக்கிறது.
எல்லாரும் இலவசமாக படிக்கும் வண்ணமாக மின் இதழாகவும் (PDF) இணையத்தில் கொடுக்கப்படுகிறது. இந்த மாத ( செப்டம்பர் 2015) ஜீவ
அப்பம் மாத இதழை இலவசமாக பதிவிறக்கம் செய்து படியுங்கள்.
உனக்குள் இருக்கும் பலம்
தங்களுக்கு எதிரான
போராட்டங்களையே, சிலர் தோல்வி என்று
நினைத்துக்கொள்கின்றனர். ஆகையால் போராட்டத்தைப் பார்த்தும்,
போராட்டத்திற்கு காரணமாக இருக்கும் எதிரியை
பார்த்தும் பயந்து விடுகின்றனர்.
ஆகையால்தான் எதிரி கொண்டு வரும்
போராட்டத்தை நேருக்கு நேர் நின்று ஜெயிக்க
முடியாதபடி திணருகின்றனர். நமக்கு எதிரான பிரச்சனைகள்,
போராட்டங்கள் வரும் போது கண்ணை
மூடிக்கொண்டால் பிரச்சனை நீங்கி விடாது.
எதிரியை நேருக்கு நேர்
நின்று, எதிர்த்து, பிரச்சனைகளை தூள் தூளாக்க வேண்டும்.
அதை விட எதிரியின் தந்திரங்களை
சரியாக அறிந்து கொள்ள வேண்டும்.
சத்தியமுள்ள, சத்தான சந்ததியே.......
கிறிஸ்துவுக்குள் பிரியமான என் அன்பு ஜீவ
அப்பம் சொந்தங்களே, உங்கள் அனைவருக்கும் இயேசு
கிறிஸ்துவின் வல்லமையுள்ள நாமத்தில் வாழ்த்துக்கள்.
நமது ஜீவ அப்பம்
மூலம் உங்களை சந்திப்பதில் மிகுந்த
மகிழ்ச்சி அடைகிறேன். தேவனுடைய மேலான கிருபையும். இரக்கமுமே,
நமது மாத இதழ் வருவதற்கு
மிக முக்கிய காரணம்.
பல நெருக்கடிகள் மத்தியில்தான்
உங்கள் கரங்களில் இந்த புத்தகமானது தவழ்ந்து
கொண்டிருக்கிறது. அத்தனை நெருக்கங்களையும் தாண்டி
இந்த புத்தகத்தை உங்களிடம் கொண்டுவந்து சேர்ப்பதற்கு காரணம், எதாகிலும் ஒருவார்த்தை
உங்கள் வாழ்க்கையில் கிறிஸ்துவுக்குள்ளான மறுரூபத்தை ஏற்படுத்தி விட வேண்டும் என்பதற்காகத்தான்.
நமது சிந்தனை, எண்ணங்கள்
கிறிஸ்துவைப்போல் மாற்றத்தை பெற்றுவிட வேண்டும். இதுதான் நமது வாழ்க்கையில்
இருக்கும் பொல்லாத அரண்களை நிர்மூலமாக்கும்.
மகிழ்ச்சியாய் வாழ்ந்திடவே
இந்த மாதத்திற்கான ஆசீர்வாதமான
வசனத்தை தியானிப்போம். “இந்த நாள் நம்முடைய
ஆண்டவருக்குப் பரிசுத்தமான நாள், விசாரப்படவேண்டாம்; கர்த்தருக்குள்
மகிழ்ச்சியாயிருப்பதே உங்களுடைய பெலன் என்றான்’’ (நெகேமியா 8:10).
சந்தோஷமும், மகிழ்ச்சியும் தேவனால் கொடுக்கப்படுவதாகும், மகிழ்ச்சியை விரும்பாதவர்
இந்த பூமியில் யார் இருக்க முடியும்.மனிதர் மகிழ்ச்சியை விரும்புகிறார்கள்.
ஆனால் எதை மனிதரின்
இருதயம் மகிழ்ச்சி என்று நினைக்கிறது. எந்த
மகிழ்ச்சி கிடைக்காமல் மனிதர்கள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். அல்லது எந்த மகிழ்ச்சியைத்
தேடி மனிதர்கள் அலைந்து கொண்டிருக்கிறார்கள் ?
உலக பொருள்களின் வழியாகவும்,
உலக இன்பங்களின் வழியாகவும், மகிழ்ச்சியையும், சந்தோஷத்தையும் மனிதர்கள் தேடுவதால்தான் அதை முழுமையாக பெற்றுக்கொள்ள
முடியாமல், கலக்கம், கவலை, பயம், வேதனை
என்று வேண்டாத யாவற்றையும், விரும்பாமல்
எடுத்துக்கொள்ள வேண்டிய பரிதாப நிலைக்கு
தள்ளப்படுகிறார்கள்.