இயேசு உனக்கு முன் செல்வார்
தேவனுடைய வழிநடத்துதல் இல்லாவிட்டால், கர்த்தர் நமக்கு முன்
செல்லாவிட்டால் நம்முடைய வாழ்வில் நாம் நன்மைகளைப் பெற்றுக்கொள்ளமுடியாது,
நாம் இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து தேவனுடைய
வார்த்தைகளுக்குப் கீழ்ப்படிந்து நடக்கும் போது, நம்முடைய வாழ்வில் நம்மை வழி நடத்தும்படியாக கர்த்தர் முன் செல்லுகிறார்.
கர்த்தர் நமக்கு முன் செல்வதினால் என்ன என்ன நன்மைகள் கிடைக்கிறது என்பதை தேவனுடைய
வார்த்தைகள் மூலமாக அறிந்து கொள்வோம்.
பலவீனத்தை பலமாக்கும் தேவன்
கர்த்தருடைய பெரிதான கிருபையினால் நாம்
தியானிக்கும் படியாக தேவன் காண்பித்துக் கொடுத்த தேவனுடைய வார்த்தையை உங்களுக்கு
காண்பித்துக்கொடுக்க விரும்புகிறேன்.” கர்த்தருடைய வார்த்தை என்னவென்றால், பலத்தினாலும் அல்ல,
பராக்கிரமத்தினாலும்
அல்ல, என்னுடைய
ஆவியினாலேயே ஆகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்’’ < சகரியா 4:6>.
இந்த வார்த்தையானது நாம்
செயல்படாமல் இருக்க வேண்டும் என்று சொல்லாமல், எந்த செயலாக இருந்தாலும் மனித
பெலத்தினாலும், மனித பராக்கிரமத்தினாலும் ஆகாது. எந்த செயலைச் செய்தாலும் அதை தேவனுடைய
ஆலோசனையின்படி செய்யவேண்டும் என்று தேவன் சொல்லுகிறார்.
"ஜீவ அப்பம்'' (மார்ச் 2014) கிறிஸ்தவ மாத இதழ்
கிறிஸ்து இயேசுவுக்குள் பிரியமான நண்பர்களுக்கு இந்த மாத (மார்ச் 2014) ஜீவ
அப்பம் மாத இதழை மின் இதழாக (PDF)கொடுத்துள்ளோம். இலவசமாக பதிவிறக்கம் செய்து படியுங்கள்.
ஜீவ அப்பம் மாத இதழ் உங்கள் ஆவிக்குறிய வாழ்க்கையின் வளர்ச்சிக்கு
உறுதுணையாகவும், கிறிஸ்துவை அறியாதவர்களுக்கு விடுதலையின் இரட்சிப்பையும்
கொடுப்பது நிச்சயம்.