Bread of Life Church India

ஓநாய்களுக்குள்ளே வந்த ஆடு

“ஆடுகளை ஓநாய்களுக்குள்ளே அனுப்புகிறது போல, இதோ, நான் உங்களை அனுப்புகிறேன்; ஆகையால், சர்ப்பங்களைப்போல வினாவுள்ளவர்களும் புறாக்களைப்போலக் கபடற்றவர்களுமாய் இருங்கள்’’ (மத்தேயு 10:16 ).

இயேசு கிறிஸ்து, ஆடுகளுக்குள்ளே ஓநாய்களை அனுப்ப வில்லை. ஆடுகளை ஓநாய்களுக்குள்ளே அனுப்புகிறது போல, இதோ, நான் உங்களை அனுப்புகிறேன்;  என்று கூறுகிறார்.


ஆடுகளே (நாம்) ஓநாய்களுக்குள்ளாக (பொல்லாத உலகத்தில் இருக்கிறோம்) வந்திருக்கிறது.

"ஆகையால், சர்ப்பங்களைப்போல வினாவுள்ளவர்களும் '' என்று இயேசு கிறிஸ்து குறிப்பிடுகிறார். இதனுடைய அர்த்தம் என்னவென்றால்,
பொதுவாக சர்ப்பம்  (பாம்பு)  வெளியில் செல்லும் போது, நின்று தன்னைச்சுற்றிலுமாக 10 அடி தூரத்தில் அதிர்வலைகள் (மனித நடமாட்டம்) உள்ளதா என்பதை கவனித்து, தன்னுடைய நாக்கை வெளியில் நீட்டி நீட்டி பார்க்கும். எந்த அதிர்வலைகளும் இல்லை என்பதை அறிந்து கொண்ட பின்பே தன் இடத்தை விட்டு நகர்ந்து  பின்பு ஊர்ந்து செல்லும்.

இது 10 அடி தூரத்திற்கு மட்டுமே, பின்பு சிறிது தூரம் சென்ற பின்பு மறுபடியும் முன்பு போல அதிர்வுகளை கவனிக்கும். இது எதற்கு என்றால் தன்னைப் பாதுகாத்துக்கொள்வதற்காக.
இதுதான் சர்ப்பத்தின் வினா’’ இந்த வசனம் புதிய மொழி பெயர்ப்பில் “இதோ!ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப் போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்      (மத்தேயு 10:16 ) என்று உள்ளது.

ஓநாய்களுக்குள்ளே (பொல்லாத உலகம்)  ஆடுகளாய் (நாம்) வந்திருக்கிற நாம்  விழிப்பாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்தவே இயேசு கிறிஸ்து இந்த வார்த்தையை பயன் படுத்துகிறார்.

எனவே நம்மைச்சுற்றி இருக்கும் நபர்கள் எப்படிப்பட்டவர்கள், என்பதை சரியாக வேத வசனத்தின் அடிப்படையில் அறிந்து கொள்வது நல்லது.

"புறாக்களைப்போலக் கபடற்றவர்களுமாய் இருங்கள்''

புறாவின் தன்மையில் பிரதானமான நல்ல குணம். தானாக தன்னுடைய கூடுகளை கட்டும் தன்மை உடையது. வேறு பறவைகளின் கூட்டை தன்னுடைய இருப்பிடமாக மாற்றிக்கொள்ளும் கபடம் இதற்கு தெரியாது.
முன் காலங்களில் அதாவது, ராஜாக்களின் காலத்தில் புறா,  மன்னர்கள் ஆட்சியில் கடிதப்போக்குவரத்து மற்றும் தூது ஓலை அனுப்புவதற்கு நன்கு பயிற்சிகொடுத்துப் பழக்கப்பட்ட புறாக்கள் பயன்படுத்தப்பட்டன.
எதையும் சேர்க்கவேண்டிய இடத்தில் சரியாக சேர்க்கும் கபடற்ற தன்மையை விளக்கியே இயேசு கிறிஸ்து நாமும் கபடு இல்லாதவர்களாக. நமக்கு தேவையானவைகளை ஒருவரையும் ஏமாற்றாமல் நாமாக பூர்த்தி செய்து கொள்ள வேண்டும் என்றும், தன்னை நம்புகிற ஒருவருக்கும் துரோகம் செய்யாமல், எதற்காக அதாவது எந்த வேலைக்காக அனுப்பப் படுகிறோமோ. அதை சரியாக செய்து முடிக்கிறவர்களாக இருக்க வேண்டும் என்றும்,


இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை கலப்படமில்லாமல் சொல்ல வேண்டும் என்றும் அறிவுருத்தியே இயேசு கிறிஸ்து இந்த வசனத்தின் மூலமாக நம்மிடம் பேசுகிறார். மொத்தமாக இந்த வசனத்தில் இருந்து இயேசு கிறிஸ்து நமக்கு கற்றுக்கொடுக்கும் பாடம்,

எச்சரிக்கையாக இருங்கள்.
கபடு இல்லாதவர்களாக இருங்கள்.

0 comments:

Post a Comment