Bread of Life Church India

யுத்தத்தில் வல்லவர் | Yuthathil Vallavar | New Tamil Christian Song


யுத்தத்தில் வல்லவர்
கர்த்தர் என்பது அவர் நாமம்
சர்வ வல்ல தேவனவர்
சகலத்தையும் ஆள்பவரே
எனக்காக யாவும் செய்து
என்னோடு கூட இருந்து
என்னையவர் நடத்திடுவரே

அல்லேலூயா அல்லேலூயா ஆனந்தமாய் பாடிடுவேன் அனுதினமும் உயர்த்திடுவேன்

எதிரிகளால் உருவாகும் ஆயுதங்கள் வாய்க்காமல்
காக்கின்ற தேவனவர் என்னோடு இருக்கின்றாரே
எனக்காக வழக்காடி எனக்காக நியாயம் செய்து
நீதியாய் தீர்ப்பு செய்வாரே

உன்னை விட்டு விலக மாட்டேன் உன்னை என்றும் கைவிட மாட்டேன்
என்று சொன்ன தேவனவர் என்னோடு இருக்கின்றாரே
எனக்கு முன்னே அவர் சமூகம் எதைக்குறித்தும் கவலை இல்லை
என்னை என்றும் காத்திடுவாரே

திறந்த வாசலை உனக்கு முன்னே வைக்கின்றேன் என்று சொல்லி
நடத்துகின்ற மீட்பர் இயேசு என்னோடு இருக்கின்றாரே
ஒருவரும் பூட்டாதபடி வாசலை திறந்து வைத்து
என்றென்றும் நடத்திடுவாரே

உலகத்தின் முடிவுவரை சகல நாளும் கூட இருப்பேன்
என்று சொன்ன இயேசு ராஜன் என்னோடு இருக்கின்றாரே
என்னை அவர் பாதுகாப்பார் என்னை அவர் வழி நடத்துவார்
எனக்கென்றும் இயேசு போதுமே

0 comments:

Post a Comment