Aththuma Vanjithu Katharuthe | ஆத்துமா வாஞ்சித்து | Tamil Christian New ...
ஆத்துமா வாஞ்சித்து கதறுதே
நேசரின் முகத்தை தேடுதே
உம் பாதம் பணிந்து உம்மையே நோக்கி
ஆனந்தம் கொள்ளுதே
பாவ சேற்றில் கிடந்தேன் நான்
கழுவி அணைத்தீரே
நிம்மதியின்றி தவித்த எனக்கு
ஆறுதல் தந்தீரே
நீண்ட தூரம் சென்றேன் நான்
தேடி வந்தீரே
விலகி சென்ற என்னை அணைத்து
அன்பை தந்தீரே
பாலைவனத்தில் கிடந்தேன் நான்
பாதுகாத்தீரே
ஆதரவின்றி இருந்த எனக்கு
உதவி செய்தீரே
0 comments:
Post a Comment