தேவையானதை மட்டும்...பேச வேண்டும்.
ஆனாலும் தனது கோபத்தை மறைத்து, செக்ஸ் என்றால், தாம்பத்திய உறவு.
அது கணவன் மனைவிக்காக கடவுளால் கொடுக்கப்பட்டது. அதன் மூலமாகவே பிள்ளைகள் பிறக்கிறார்கள். என்று மிகவும் விரிவாக சில நிமிடங்கள் அந்த சிறுவனிடம் விவரித்து சொல்லி விட்டு, இந்த வயதிலேயே இது மாதிரி கேள்விகளை எல்லாம் கேட்க கூடாது என்று கோபத்துடன் சொன்னார்.
ஆசிரியர் சொன்னவைகளை எல்லாம் அமைதியாக கேட்டுக்கொண்டிருந்த சிறுவன் கொஞ்ச நேரம் ஆசிரியரையே பார்த்து விட்டு, குழப்பத்துடன், ஆசிரியர் சொன்னது எதுவும் புரியாமல் ஒரு பேப்பரை காண்பித்து, சார் இதில் Sex என்று போட்டிருக்கிறது இதற்கு நேராக என்ன எழுத வேண்டும் என்று கேட்டான்.
...........
இப்படிதான் அநேகர்...மற்றவர்களின் புரிதலுக்கு ஏற்ற மாதிரி பேசாமல் தனக்கு தெரிந்ததை எல்லாம் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
எந்த இடத்தில் எது தேவையோ அதை மட்டும் சரியாக அறிந்து பேச வேண்டும்.
அதே தந்திரங்கள் பலிக்குமா?
...பழைய கதைதான் முழுவதும் வாசியுங்கள்.....
ஒரு தொப்பி வியாபாரி ஊர் ஊராக அலைந்து தொப்பி விற்று விட்டு வரும் போது மிகவும் களைப்பாக இருந்ததால் தொப்பிகளை கிழே வைத்து விட்டு, ஒரு மரத்தின் நிழலில் அமர்ந்தான்.
மரத்தின் நிழலில் இதமான காற்றி்ல் அப்படியே கண் அயர்ந்து தூங்கி விட்டான். கண் விழித்து பார்த்த போது தனக்கு அருகில் இருந்த தொப்பிகளை காணவில்லை. சுற்றி பார்க்கும் போது மரகிளைகளில் அமர்ந்திருந்த குரங்குகள் தொப்பிகளை அணிந்திருந்தன.
குரங்குகள் ஒவ்வொன்றும் அணிந்திருக்கும் தொப்பிகளை எப்படி வாங்குவது என்று யோசித்த வியாபாரி தன்னுடைய தலையில் அணிந்திருந்த தொப்பியை எடுத்து கீழே போட்டான்.
உடனே குரங்குகளும் அணிந்திருந்த தொப்பிகளை கீழே போட்டு விட்டது.
உடனே சந்தோஷத்துடன் எல்லா தொப்பிகளையும் எடுத்துக்கொண்டு வியாபாரி வியாபாரத்திற்கு சென்றான்.
ஆண்டுகள் உருண்டோடின..தொப்பி வியாபாரிக்கு வயதாகி விட்டது.
இப்போது தொப்பி வியாபாரியின் பேரன் தாத்தாவை போன்று தொப்பி வியாபாரம் செய்ய புறப்பட்டான்.
அப்பொழுது அந்த தொப்பி வியாபாரி தனக்கு நடந்த அனுபவங்களை தனது பேரனிடம் சொன்னான்.
"ஒரு நாள் நான் வியாபாரத்துக்கு சென்ற போது, அசதியில் ஒரு மரத்தின் நிழலில் தூங்கி விட்டேன்.
அப்பொழுது மரத்தில் அமர்ந்து இருந்த குரங்குகள் தொப்பியை எடுத்து அணிந்து கொண்டன. உடனே அந்த தொப்பிகளை எப்படி குரங்குகளிடம் இருந்து வாங்குவது என்று யோசித்த நான், எனது தலையில் அணிந்திருந்த தொப்பியை எடுத்து கீழே போட்டேன்.
உடனே குரங்குகளும் தான் அணிந்திருந்த தொப்பிகளை கீழே போட்டு விட்டது நான் தொப்பிகளை எடுத்து வந்து விட்டேன்" என்று தனது பேரனிடம் தனது பழைய அனுபவத்தை விவரித்து சொன்னான்.
தனது தாத்தாவின் அனுபவத்தை கேட்ட பேரன். தொப்பி வியாபாரத்திற்கு சென்றான்.
மதிய வேளையில் மிகவும் களைத்து போனவனாக ஒரு மரத்தின் நிழலில் அமர்ந்தவன் அப்படியே தூங்கி விட்டான்.
கண் விழித்து பார்த்த போது தொப்பிகளை காண வில்லை. சுற்று முற்றும் பார்த்த போது மரத்தில் அமர்ந்திருந்த குரங்குகள் தொப்பிகளை எடுத்து அணிந்திருந்தன.
உடனே அவனுக்கு தாத்தா. சொன்ன கதை ஞாபகத்திற்கு வந்தது.
இப்போது என்ன செய்கிறேன் பார்.
என்று தான் அணிந்திருந்த தொப்பியை எடுத்து கீழே போட்டான்.
கீழே போட்டு விட்டு குரங்குகளை பார்த்தான். குரங்குகள் தாங்கள் அணிந்திருந்த தொப்பியை கீழே போட வில்லை.
மறுபடியும் தலையில் தொப்பியை அணிந்து விட்டு கீழே போட்டு விட்டு குரங்குகளை பார்த்தான்.
அப்பொழுதும் குரங்குகள் தொப்பியை கீழே போட வில்லை.
அவனுக்கு புரியாமல் திகைத்துக்கொண்டிருக்கும் போது குரங்குகள் அவனைப்பார்த்து உனக்கு எப்படி தாத்தா இருக்கிறாரோ அதே போல
எங்களுக்கும் தாத்தா இருக்கிறார் என்றது...😀😀
..கதையின் பொருள்..
ஒருவரின் அனுபவம் இன்னொருவருக்கு உதவாது..
செயல்களில் மாற்றம் இல்லாமல் ஜெயிக்க முடியாது.
எனவே..சிந்தித்து செயல்படுவோம்.☺
Rev. V.S.Lourduraj
Bread of Life Church
Thiruvottiyur, Chennai 19
கெட்டுப்போகிறவர்களுக்கே பைத்தியமாக இருக்கும்
தனக்கு முன் இருக்கும்
எதிரியை வீழ்த்துகிறவர்களையே வெற்றி பெற்றவர்கள் என்று
அழைப்பார்கள். இதுதான் உலக வழக்கம்,
உலக நியதி, ஆனால் இதற்கு
முற்றிலும் மாறுபாடாக இயேசு கிறிஸ்து சிலுவையில்
மரித்தார். ஆனால் இயேசு கிறிஸ்து
“சிலுவையிலே வெற்றி சிறந்தார்” (கொலோ 2:15) என்று வேதம் கூறுகிறது.
மரணத்தை தோல்வி என்று நினைக்கும் உலக ஞானிகளால் இதை
ஏற்றுக்கொள்ள முடிய வில்லை. உலக
ஞானிகள் இதை பைத்தியகாரத்தனமாக எண்ணுகிறார்கள்.
எனவேதான். “சிலுவையைப்பற்றிய
உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது” (1 கொரி 1:18) என்று வேதம் கூறுகிறது.
அவர்கள் தங்களை ஞானிகள் என்று
எண்ணிக்கொண்டாலும் கடவுளின் இரட்சிப்பின் வழியை அவர்களால் அறிந்து
கொள்ள முடிவில்லை.
உலக ஞானமே கடவுளோடு
இணைந்து கொள்ள முடியாதபடி அவர்களை
தடுக்கிறது. “தேவஞானத்துக்கேற்றபடி உலகமானது சுயஞானத்தினாலே தேவனை அறியாதிருக்கையில், பைத்தியமாகத்
தோன்றுகிற பிரசங்கத்தினாலே விசுவாசிகளை இரட்சிக்க தேவனுக்குப் பிரியமாயிற்று” (1 கொரி
1;21) என்று வேதம் கூறுகிறது.
ஆனால் உலக ஞானிகளால்
பைத்தியமாக தோன்றுகிற சுவிசேஷத்தினாலேயே மனுகுலத்தை விடுதலையாக்க தேவன் விரும்புகிறார்.
சிலுவையில் மரித்து, அடக்கம் பண்ணப்பட்டு, மூன்றாம்
நாளில் இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்தார்.
இதை விசுவாசித்து ஏற்றுக்கொள்வதே விசுவாசம். இதை விசுவாசிக்கும் ஒருவர்
பாவத்திலிருந்து விடுதலையாக்கப்பட்டு, தேவனுடைய பிள்ளை என்ற அதிகாரத்தை
பெறுகிறார் என்பதுதான்… சிலுவையின் உபதேசம்.
தன்னையே காப்பாற்றிக்கொள்ள முடியாமல்
மரித்தவர் மற்றவர்களை விடுதலையாக்க முடியுமா? இது என்ன பைத்தியகாரதனமாக
இருக்கிறது. என்று சொல்லி இந்த
உபதேசத்தை விசுவாசித்து ஏற்றுக்கொள்ளாதவர்கள் கெட்டுப்போவார்கள். எனவே, கெட்டுப்போகிறவர்களுக்கே சிலுவையைப்பற்றிய உபதேசம்
பைத்தியமாயிருக்கிறது என்று வேதம் கூறுகிறது.
ஆனால் இயேசு கிறிஸ்துவின்
சிலுவை மரணத்தின் மூலமாகவே, தேவன் மனுகுலத்தை விடுதலையாக்குகிறார்.
இதுதான் “விசுவாசம்” இந்த விசுவாசமே இரட்சிப்பை
கொடுக்கிறது. இதைக்குறித்துதான் “இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது”
(1 கொரி 1;18) என்று வேதம் கூறுகிறது.
Rev. V.S. Lourduraj
Bread of Life Church
Bread of Life Church
மன அமைதி கிடைக்கும் இடம்.
உலகத்தில் மனிதனின் மிக முக்கியமான தேடல்
மன அமைதி. மன அமைதி
எந்த மனிதனிடம் இருக்கிறதோ, அந்த மனிதன்தான் தன்
வாழ்வில் வெற்றிகரமான வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கிறான்.
சமாதானம், சந்தோஷம் மன நிறைவு இல்லாமல்,
வாழ்க்கையில் இலக்கு தெரியாமல் ஓடிக்கொண்டிருக்கும்
மனிதன் வெகு விரைவில் தன்
மன அமைதியை இழந்து வாழ்க்கையில்
மிகப் பெரிய தோல்வியை சந்திக்க
நேரிடும். வாழக்கையின் முடிவுக்கும் கூட சென்று விட
வாய்ப்புக்கள் உண்டு.
மனிதன் மன அமைதி
இல்லாமல் இருப்பதுதான், அநேக பிரச்சனைகளுக்கு முக்கியமான
காரணம். தன்னால் தன் மனதை
சந்தோஷமாக வைத்துக்கொள்ள முடியாமல் தத்தளிக்கும் மனிதன் தன்னை சுற்றிலும்
இருக்கும் மனிதர்களுக்கோ, அல்லது தன் குடும்பத்தினர்களுக்கோ
கூட சந்தோஷத்தை கொடுக்க முடியாது.
மூன்றாம் பாலினம் உண்டா? அண்ணகர்கள் என்பது திருநங்கைகளை குறிக்கிறதா?
அண்ணகர்கள் என்ற வார்த்தை பழைய
ஏற்பாட்டிலும், புதிய ஏற்பாட்டில் இயேசு
கிறிஸ்துவாலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. அண்ணகர்கள் என்று வேதாகமத்தில் குறிப்பிட்டுள்ளது
நேரடியாக இக்காலத்தில் திருநங்கைகள் என்று அழைக்கப்படுகிறவர்களை குறிக்கும் வார்த்தைதானா?
என்பது அநேகருடைய மனதில் இருக்கும் கேள்விகள்.
அதைகுறித்து வேதாகம வெளிச்சத்தில் சற்று
ஆராய்ந்து பார்க்கலாம்.
“தாயின் வயிற்றிலிருந்து அண்ணகர்களாய்ப்
பிறந்தவர்களும் உண்டு; மனுஷர்களால் அண்ணகர்களாக்கப்பட்டவர்களும்
உண்டு; பரலோகராஜ்யத்தினிமித்தம் தங்களை அண்ணகர்களாக்கிக்கொண்டவர்களும் உண்டு; இதை ஏற்றுக்கொள்ள
வல்லவன் ஏற்றுக்கொள்ளக்கடவன் என்றார்” (மத்தேயு 19:12). இந்த வசனத்தின் மூலம்
அண்ணகர்களை குறித்து மூன்று வகையாகப் பிரித்து இயேசு
கிறிஸ்து கூறுவதை வேதாகமத்தில் பார்க்கிறோம்.
இதன் மூலமாக “அண்ணகர்”
என்றால் “பாலியல் உறவுக்கு தயாராக
இல்லாதவர். அல்லது பாலியல் உணர்வு
அற்றவர் என்று அறிந்து கொள்ளலாம்.
1. பிறப்பிலேயே பாலியல் பருவம். அல்லது
வாலிப பருவம் அடையாதவர்கள்.
2. அந்நாட்களில் மன்னர் ஆட்சியில் சில
முக்கிய பொறுப்புகளில் இருந்தவர்களை பாலியல் உறவுக்கு தகுதியில்லாது
செய்துள்ளனர்.
3. கடவுளுடைய பணியை செய்வதற்காக தங்கள்
பாலியல் உணர்வுகளை தங்களுக்குள்ளாகவே அழித்துக்கொண்டு. பாலியல் உறவில் ஈடுபட
மறுத்தவர்கள்.
இவ்விதமாக இந்த மூன்று தரப்பினரைக்குறித்தே
இயேசு கிறிஸ்து குறிப்பிடுகிறார்.
தாயின் வயிற்றில் ஆண்-பெண் தன்மையையை உருவாக்குவது
குரோமோசோம்களாகும் (Chromosomes).
இந்த குரோமோசோம்கள் என்பது தாயிடமிருந்து சுமார்
23, தந்தையிடமிருந்து 23 ஆக
மொத்தம் 46 குரோமோசோம்களாக இணைந்து உடலிலுள்ள பலவித
ஹார்மோன்களால் அவை இயக்கப்படுகின்றன அல்லது
சேர்க்கப்படுகின்றன.
இவைகளை மரபணு என்றும்
- இதிலே XX, XY, 44+XY,
44+X என்றும் கணக்கிடப்படும். ஒரு தாயின் வயிற்றில்
உருவாகும் குழந்தை குரோமோசோம்களில் உருவாகி
- ஹார்மோன்கள் மூலம் ஆண்-பெண்
என்று உறுதியாக்கப்படுகிறது.
இந்த ஹார்மோன்களின்மூலம் சரீரத்தில்
ஈஸ்ட்ரோஜன் இயக்கப்பட்டு டெஸ்டோஸ்டிரோன் என்பவைகளோடு இணைந்துதான் ஆண்-பெண் தன்மைகளையும்
உருவாக்குகிறது.
ஆண்:
தாய்
வயிற்றில் ஆண் குழந்தையாக உருவாகவேண்டுமானால்
டெஸ்டோஸ்டிரோன்
(Testosterone) என்ற ஹார்மோன் அதிக அளவில் சுரக்கவேண்டும்.
அதேசமயம், அதே உடலில், பெண்
உணர்வான ஈஸ்ட்ரோஜனும் (Estrogens) சிறிய அளவில் இணைந்து
இருக்கும். ஒரு மனிதனின் உடலில்
இவைகள் இரண்டுமிருக்கும்.
பெண்:
தாய்
வயிற்றில் பெண் குழந்தை உருவானால்
ஈஸ்ட்ரோஜன் என்ற பெண் தன்மைக்கு
காரணமான ஹார்மோன் அதிகமாக சுரக்கவேண்டும். அதேசமயம்,
ஆண் தன்மைக்கு காரணமான டெஸ்டோஸ்டிரோனும் கொஞ்சமாக
இவற்றோடு சேர்ந்து இருக்கும். ஆண்-பெண் பால்
உணர்வு என்பது ஆண்-பெண்
இருவருக்குள்ளும் எப்போதும் இருக்கும்.
தாயின் வயிற்றில் குழந்தை
உருவாகினவுடன் சுமார் 7 வாரங்களின் பின்னர்தான் ஆண்-பெண் ஹார்மோன்கள்
உற்பத்தியாகின்றன. அதன் அடிப்படையில் குரோமோசோம்கள்
மூலமாக ஆணாகவோ - பெண்ணாகவோ சரீரம் மாறும்போது ஹார்மோன்
சரீரத்தில் உற்பத்தியாகி அதன் வேகத்திற்கேற்ப ஆணாகவோ
- பெண்ணாகவோ உருமாறி அதற்கான ஆண்
உறுப்பு அல்லது பெண் உறுப்பு
ஆகியவைகள் சிறிய அளவில் குழந்தை
சரீரத்தில் தோன்ற ஆரம்பிக்கும். பிறகு
குழந்தை பிறந்தவுடன் பிறப்பு உறுப்பை பார்த்துதான்
அது ஆணா-பெண்ணா என்று
தீர்மானிக்கிறார்கள்.
ஆக, எந்த மனிதனாக
இருந்தாலும் அது ஆணாக இருந்தாலும்,
பெண்ணாக இருந்தாலும் ஆண்உணர்ச்சி ஹார்மோன், பெண்உணர்ச்சி ஹார்மோன் இரண்டும் ஒரே சரீரத்தில் காணப்படும்.
இந்த அடிப்படையில் 100க்கு-100
ஆண் உணர்வுகள் உள்ள ஆண், 100க்கு-100
பெண் உணர்வுள்ள பெண் இந்த உலகில்
யாருமே இருக்கமுடியாது. ஆண்-பெண் இரண்டு
உணர்வுகளும் கலந்தவர்களாக இருப்பவர்கள்தான் மனிதன் அல்லது மனுஷி
ஆகும்.
எனவே, ஒன்றை நன்றாக புரிந்து கொள்ள
வேண்டும் “அண்ணகர்” என்பவர்கள் தன் பாலினரோடு பாலின
உறவு (ஒரின சேர்க்கை) கொள்பவர்கள்
அல்ல. காரணம், உடல் ரீதியிலும்,
உணர்வு ரீதியிலும் பாலியல் ஈடுபாடு அற்றவர்களே
“அண்ணகர்கள்”
ஆகவே “அண்ணகர்கள்” என்பவர்கள்
மூன்றாம் பாலினம் இல்லை. அண்ணகர்கள்
என்பவர்கள் பெண்களிலும் உண்டு. ஆண்களிலும் உண்டு.
ஒரு பெண் வாலிப பருவத்தை
அடையும் போதே, பாலின உறவுக்கு
தயாராகிறாள். வாலிப பருவத்தை அடையாதவர்களே
“அண்ணகர்”. அது போலவே, வாலிப
பருவம் அடையாத ஆண்தான் “அண்ணகர்.
எனவே தான் , இயற்கையாக உடல்
ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும் பாலியல்
மாற்றம் அடையாதவர்களையும்,
செயற்கையாக
உடல், மற்றும் உணர்வுகளில் பாலியலில்
எவ்விதமாகவும் ஈடுபடாதபடி செய்யப்பட்டவர்களையும், ஒரு நோக்கத்திற்காக ( தேவனுடைய
இராஜ்யம்) தங்களுக்குள்ளாகவே உடல்ரீதியாக, உணர்வுரீதியாக தூண்டப்படும் பாலியல் உணர்வுகளை தங்களுக்குள்ளாகவே
அழித்து, அல்லது கட்டுப்படுத்தி வாழ்கிறவர்களையே
( வரம் பெற்றவர்களே இவ்விதம் இருக்க முடியும்) வேதம்
அண்ணகர் என்று அழைக்கிறது.
வாலிப பருவத்தை அடையாதவர்களையும்,
பாலின உறவுக்கு உடல்ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும், தகுதியடையாதவர்கள்
கடவுளால் சபிக்கப்பட்டவர்கள் என்றும், கடவுளால் தள்ளப்பட்டவர்கள் என்றும் நினைத்துக்கொண்டு, அக்காலத்தில்
அப்படிப்பட்டவர்களை மக்கள் உதாசீனப்படுத்தி, தனிமைப்படுத்தி
வந்தார்கள். ஆகையால் தங்கள்
வாழ்க்கையில் பட்டமரம் போல் இருக்கிறோமே என்று
அண்ணகர்கள் கலங்கி வேதனை அடைந்தனர்.
ஆகவே, அண்ணகர்களை சபிக்கப்பட்டவர்கள் என்று எண்ணி, அவர்களை
தனிமைப்படுத்தி வந்தவர்களை பார்த்தும், கலங்கி, வேதனைப்பட்டுக்கொண்டிருந்த அண்ணகர்களையும் பார்த்துதான்
வேதம் கூறுகிறது.
“……அண்ணகனும், இதோ, நான் பட்டமரமென்று
சொல்லானாக. என் ஓய்வுநாட்களை ஆசரித்து,
எனக்கு இஷ்டமானவைகைளைத் தெரிந்துகொண்டு உடன்படிக்கையைப் பறறிக்கொள்ளுகிற அண்ணகர்களைக் குறித்துக் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்:
நான் அவர்களுக்கு என்
ஆலயத்திலும், என் மதில்களுக்குள்ளும் குமாரருக்கும்
குமாரத்திகளுக்கு முரிய இடத்தையும் கீர்த்தியையும்பார்க்கிலும், உத்தம இடத்தையும் கீர்த்தியையும் கொடுப்பேன்,
என்றும் அழியாத நித்திய நாமத்தை
அவர்களுக்கு அருளுவேன். (ஏசாயா 56:3-5). என்று கர்த்தர் கூறுகிறார்.
பாலியல் உறவுக்கு தகுதி
இல்லாதவர்கள் சபிக்கப்பட்டவர்கள்
அல்ல. கர்த்தரால் தள்ளப்பட்டவர்களும் அல்ல. அவர்கள் கர்த்தரால்
கனப்படுத்தப்படுகிறவர்கள் என்று கர்த்தர் சொல்கிறார்.
எனவே, அண்ணகர்கள் என்பவர்கள் இழிவான இச்சை ரோகங்களுக்கு,
உட்பட்டவர்கள் அல்ல. இழிவான பாலியல்
உறவில் ஈடுபடுபவர்களும் அல்ல. மேலும் வேதாகமத்தில்
சொல்லப்படும் அண்ணகர் எதிர்பாலினரைப்போல் உடை
அணிந்து, தன்னை பெண் போன்றோ,
ஆண் போன்றோ எண்ணிக்கொள்வது இல்லை.
ஒரு ஆண் பாலியல்
உறவுக்கு தகுதியில்லாதவனாக இருந்தால் அவன் பெண்ணின் உணர்வை
பெற்று விட்டான் என்பது பொருள் அல்ல.
அதே போல் ஒரு பெண்
பருவ மாற்றம் அடையாது போனால்
அவள் ஆண் உணர்வை பெற்று
விட்டாள் என்பதும் பொருள் அல்ல.
கடவுள் மனிதனை ஆணும்
பெண்ணுமாகவே படைத்தார். (ஆதி 1:27) கடவுளின் படைப்பில், ஆண், பெண் என்று
இரண்டு பாலினம் மட்டும்தான். எனவே
மூன்றாம் பாலினம் என்று சொல்வது
கடவுளின் படைப்புக்கு எதிரான செயல். கடவுளுடைய
படைப்பில் பாலியலில் ஆண் பெண்ணோடும் (மனைவி),
பெண் ஆணோடும்(கணவன்) மட்டுமே
உறவு கொள்ள வேண்டும். ஆண்
ஆணோடும், பெண் பெண்ணோடும், தன்பால்
உறவு (ஒரின சேர்க்கை) கடவுளின்
படைப்புக்கு எதிரான பிசாசின் செயல்.
எனவே அண்ணகர் என்பவர்கள் மூன்றாம்
பாலினம் என்று ஏற்க இயலாது.
தற்காலத்தில் கூட அண்ணகர்கள் உண்டு.
ஆனால் அவர்கள் திருநங்கைகள் என்று
அழைக்கப்படுபவர்கள் அல்ல. ஆண் அண்ணகர்.
ஆண் தோற்றத்தில் மட்டுமே இருப்பார். பெண்
அன்ணகர் பெண் தோற்றத்தில் மட்டுமே
இருப்பார். அவர்கள் தங்களை மாற்று
பாலினத்தவர் போல் அலங்கரித்துக்கொள்வது இல்லை. அதாவது
ஆண் தன்னை பெண்ணைப்போலவும், பெண்
தன்னை ஆண் போலவும் அலங்கரித்துக்கொள்ள
மாட்டார்கள். அவர்கள் இல்லர வாழ்வுக்கு
ஏற்றவர்களாக இருக்க மாட்டார்கள். மேலும்
எந்த வகை பாலின உறவிலும்
அவர்களுக்கு ஈடுபாடு இருக்காது.எந்த
வகையிலும் பாலின உறவில் ஈடுபடாதவர்களைதான்
வேதாகமம் “அண்ணகர்கள்” என்று அழைக்கிறது.
அப்படியானால் “திருநங்கைகள்” என்று அழைக்கப்படுகிறவர்கள் யார்? என்ற
கேள்வி உண்டாகும். இவர்களை குறித்து வேதாகமம்
என்ன சொல்கிறது என்று பார்க்கலாம்.
பாலியல் (sex) உடல் சம்மந்தப்பட்டது மட்டும்
அல்ல. உணர்வும் சம்மந்தப்பட்டது. உணர்வும், உடலும் சரி விகிதத்தில்
இணைந்து செயல்படுவதே “பாலியல் உறவு”. இருபாலின
உறவே கடவுளின் நியமனம். தன் பாலினரோடு பாலின
உறவில் ஈடுபாடுதல் (1 கொரி 6:9) கடவுளுடைய நியமனமல்ல. மேலும் விலங்குகளுடன் புணருதல்
குறித்தும் கடவுளுடைய வார்த்தை எச்சரிக்கிறது. (யாத் 22:19, லேவி 18:23., 20:15,26)
மேலும் “விதையடிக்கப்பட்டவனும், கோசமறுபட்டவனும் கர்த்தருடைய
சபைக்கு உட்படலாகாது” (உபாகமம் 23:1).என்று வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ள
வசனம் தற்காலத்தில் திருநங்கைகள் என்று அழைக்கப்படுகிறவர்களையும் குறிப்பிடுவதாக உள்ளது.
பாலின உறுப்புக்களை செயல்படாமல்
செய்வதும், (விதையடிக்கப்படுதல்) அதை உடலில் இருந்து
அகற்றுவதும் (கோசமறுபட்டவன்) கடவுளுக்கு விரோதமான செயல் என்றும், இவ்வித
செயல்கள் கடவுளுடைய படைப்பின் செயலுக்கு எதிரானது என்றும் வேதம் கூறுகிறது.
ஒரு சிலர் உடல்
ரீதியாக (ஆணோ,
பெண்ணோ) பாலியல் உறவுக்கு நல்ல
தகுதி நிலையில் இருந்தாலும், அவர்களின் உணர்வில் ஏற்பட்டுள்ள மாற்றத்தின் காரணமாக, ஆணாக இருக்கும் ஒருவர்
பெண் மீது பாலியல் தூண்டுதல்
ஏற்படாமல், தன் பாலினமான ஒரு
ஆண்மீதே பாலியல் தூண்டுதல் அடைவது
உண்டு. இது முழுக்க முழுக்க
உணர்வு ரீதியில் ஒரு மனிதனை கடவுளுக்கு
விரோதமாக திருப்பும் பிசாசின் செயலே ஆகும்.
இவ்விதமான உணர்வு ரீதியிலான தூண்டுதலின்
அடிப்படையிலேயே திருநங்கைகள் என்று அழைக்கப்பட கூடியவர்கள்
இருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு ஒரு
கட்டத்தில் தங்கள் உடலில் உள்ள
உறுப்பு மீதே வெறுப்பு உண்டாகி,
எவ்வகையிலாவது தன் உறுப்பை அகற்றி,
விடுகிறார்கள். மருத்துவ ரீதியில் செயற்கையாக உடல் அமைப்பையும் மாற்றிக்கொள்கிறார்கள்.
தங்களை போல் உள்ளவர்களோடு
மட்டும் நட்பு வைத்து, தங்களைப்போன்ற
உணர்வு உள்ளவர்களை தேடி சென்று அவர்களோடு
இணைந்து கொள்கிறார்கள். பெரும்பாலும் இவர்கள் இயற்கைக்கு மாறாக
பாலியல் உறவில் (oral sex) ஈடுபடுகிறவர்களாகவே
இருக்கிறார்கள். ஆணோடு திருமண உறவையும்
ஏற்படுத்திக் கொள்பவர்களும் உண்டு. இவ்வித செயல்கள்
எல்லாம். ஒரீன சேர்க்கை தான்.
மேலும் திருநங்கைகளாக இருப்பவர்களில்
பலர் மனதளவில் பாதிக்கப்பட்டவர்களாகவும் இருக்க அதிக வாய்ப்புக்கள்
உள்ளது. சிறுவயது முதலே ஏதோ ஒருவகையில்
பாலியல் துன்புறுத்தலுக்கு உட்பட்டு, பின்பு அதுவே அவர்களின்
பழக்கமாகவும் மாறி, அதுவே அவர்களுக்கு
உடல்ரீதியில் (இச்சை
அடைந்து) விருப்பம் உண்டாகி,
உணர்வு ரீதியில் அதற்கு அடிமையாகிபோனவர்களும் உண்டு.
இன்னும் சிலர் பருவ
மாற்றம் அடையும் வேளையில், பாலியல்
உறவுக்கு தன்பாலர் மீது ஈர்ப்பு ஏற்பட்டு,
எதிர்பாலர் மேல் எவ்வித பாலியல்
உணர்வும் இல்லாதவர்களாக மாறி விடுகிறதும் உண்டு.
பெண்களிலும் கூட, எதிர்பாலர் மேல்
எந்த ஈர்ப்பும் இல்லாமல் தன்பாலினரோடே பாலியல் உறவு (lesbian) கொள்பவர்களும்
உண்டு.
அதற்காக திருநங்கைகள் என்று
அழைக்கப்படுகிறவர்களை உதாசீனப்படுத்துவதோ, அவர்களை விட்டு விலகி
இருக்கவோ, அவசியம் இல்லை. உண்மையில்
சொல்ல வேண்டுமானால் மனதளவில் அவர்கள் ஒரு நோயாளியாக
இருக்கிறார்கள். ஆனால் தான் ஒரு
நோயாளி என்பதை அறியாமல் தங்கள்
மனம்போன வழியில் தங்கள் வாழ்வை
அமைத்துக்கொள்கின்றனர்.
எனவே திருநங்கைகளும் மூன்றாம் பாலினம் என்று
சொல்ல கூடாது மேலும், கடவுளின்
படைப்பின் குறைபாடுகள் என்றும் சொல்ல கூடாது. சிறுவயது முதல்
அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளும், பிசாசின் பொல்லாத செயல்களுமே அப்படிப்பட்டவர்களின்
வாழ்வில் அவர்கள் அவ்விதமாக இருப்பதற்கு
காரணம். எனவே
திருநங்கைகள் இரட்சிப்புக்கு தூரமானவர்கள் இல்லை. அவர்கள் இரட்சிக்கப்பட வேண்டும்.
பிசாசின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும். இரட்சிக்கப்பட்ட ஒரு திருநங்கை
தன்னை ஒரு பெண் போல் காண்பித்துக்கொள்ள கூடாது.
ஒரு
வேளை அண்ணகராக இருந்து, சூழ்நிலை நிமித்தமும், பணத்திற்காகவும், தன்னை திருநங்கையாக
கண்பித்து, தங்களுக்கு விருப்பமே இல்லாத பாலியல் உறவில் (oral sex) ஈடுபடுபவராக இருந்தால்
அப்படிப்பட்டவர்கள் விடுவிக்கப்பட வேண்டும்.
இவ்விதமானவர்களை
சிறுவயதிலேயே கண்டறிந்து, சரியான மருத்துவ சிகிச்சை செய்து, உளவியல் ஆலோசனைகளையும்
கொடுத்தால் தவறான பாலியல் உறவில் இருந்து விடுவிக்கலாம்.