வழிப்போக்கன்
நான் வசிக்கும்படி எனது தந்தை எனக்காக ஒரு
வீட்டை கட்டி, அதில் என்னை குடியேற்றினார். எனது வீட்டில் நான் வசித்து வந்த நாட்களில்
ஒருநாள் ஒரு நபர் என் வீட்டு கதவை தட்டி, உங்கள் வீட்டில் எனக்கு ஒரு சிறிய அறையை கொடுங்கள்,
நான் உங்களுக்கு வேண்டிய பணங்களை கொடுக்கிறேன். நீங்கள் என்ன விரும்புகிறீர்களோ, அதை
உங்களுக்கு நான் செய்து கொடுப்பேன். எப்பொழுதும் உங்களுக்கு உதவியாக இருப்பேன் என்று
பணத்தைக் காண்பித்து, ஆசை வார்த்தைகளை பேசியதில் மயங்கி எனது வீட்டில் ஒரு சிறிய அறையை
ஒதுக்கி அந்த நபரை தங்க வைத்தேன்.
ஆரம்பத்தில் நான் என் மனதில் நினைக்கிற எந்த
காரியமானாலும் அதை எனக்கு உடனே செய்து கொடுத்தான். எனக்கு மிகவும் இன்பமாக இருந்தது.
இப்படி தன் பணத்தையும் கொடுத்து, நான் விரும்புகிற எல்லாவற்றையும் எனக்காக ஓடி ஓடி
ஒரு வேலைக்காரனைப்போல உதவி செய்து வந்த நபரை பார்த்து பெருமிதம் கொண்டேன்.
நாட்கள் சென்றன. அந்த நபர் எனது வீட்டின்
எல்லா அறைகளையும் என் அனுமதி இல்லாமலேயே பயன்படுத்த ஆரம்பித்தான். நாட்கள் செல்ல செல்ல
எனது பேச்சை மதிக்காமல் அவன் தன் இஷ்டம் போல் எல்லாவற்றையும் செய்ய ஆரம்பித்து விட்டான்.
"ஜீவ அப்பம்'' (மார்ச் 2017) மாத இதழ்
கிறிஸ்துவுக்குள் அன்பான ஜீவ அப்பம் இணைய நண்பர்களுக்கு, ஆவிக்குரிய வாழ்வுக்கு
உறுதுணையாக, விசுவாச வாழ்வுக்கு தேவையான செய்திகளுடன்,
கிறிஸ்துவுக்குள் வளரவும், நிலைத்து நிற்கவும், "ஜீவ அப்பம்'' மாத
இதழ் வெளி வந்து கொண்டிருக்கிறது.
எந்த சரீரத்தில் இருப்பார்கள்?
இதை அடுத்து பழைய
ஏற்பாடு காலங்களில் “இதோ, அக்கினிரதமும் அக்கினிக்
குதிரைகளும் அவர்கள் நடுவாக வந்து
இருவரையும் பிரித்தது; எலியா சுழல்காற்றிலே பரலோகத்திற்கு
ஏறிப்போனான்” (2 இராஜா
2:11) என்று எலியாவைக்குறித்தும் வேதம் கூறுகிறது.