Bread of Life Church India

உள்ளத்திலிருந்து உங்களுடன்



கிறிஸ்துவுக்குள் இனிமையான ஜீவ அப்பம் வாசகர்களே, சர்வ வல்லமையுள்ள கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள்.
மறுபடியும் உங்களோடு பேசுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். நேரில் உங்களில் சிலரை காண முடியாவிட்டாலும், தேவனுடைய வார்த்தைகளின் மூலமாக உங்களை சந்திப்பதில் மிகுந்த சந்தோஷப்படுகிறேன்.
நம்முடைய தலைமுறையில் தேவன் நமக்கு கொடுத்த பொறுப்புக்களை சரியாக உணர்ந்து செயல்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட்டுக்கொண்டிருக்கும் ஜீவ அப்பம், இந்த தலைமுறையில் அநேகர் கிறிஸ்துவுக்குள் வளர்ந்து பெருகவும், கிறிஸ்துவுக்குள்  கட்டப்படவும் செயல்பட்டு வருகிறது.

ஆசீர்வாதமான குடும்பம்

               
இப்போதும் உமது அடியானின் வீடு என்றைக்கும் உமக்கு முன்பாக இருக்கும்படி அதை ஆசீர்வதித்தருளும்; கர்த்தரான ஆண்டவராகிய தேவரீர் அதைச் சொன்னீர், உம்முடைய ஆசீர்வாதத்தினாலே உமது அடியானின் வீடு என்றைக்கும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பதாக ” (2 சாமுவேல் 7:29).
                தேவனுடைய சமூகத்தில் நிற்கும் பாக்கியம் கிடைக்கப் பெருவதே ஆசீர்வாதம். ஆசீர்வாதங்களிலேயே மிகப்பெரிய ஆசீர்வாதம் தேவனுக்கு முன்பாக இருப்பதுதான். எனவேதான் தாவீது தன்னுடைய வீடு தேவனுக்கு முன்பாக இருக்க வேண்டும் என்று வேண்டுதல் செய்கிறார்.
தேவனுக்கு முன்பாக இருப்பவர்கள் தான் தங்கள் சுயத்திற்கு தினமும் மரித்து, தேவனுடைய அங்கீகாரத்திற்கு பாத்திராக ஒவ்வொரு நாளும் தகுதியாக முடியும்.
தேவனுக்கு முன்பாக இருக்கும் போது மட்டுமே ஒருவனுடைய சுயமும், அவன் செய்கிற தவறும் நன்றாக வெளிப்படும், தேவனுக்கு முன்பாக இருக்கும் குடும்பத்தில் ஒவ்வொருவரும் தேவனுக்குப் பயந்து தேவனால் நடத்தப்படுகிறவர்களாகிறார்கள். அப்படிப்பட்ட குடும்பத்தில் தேவனுடைய ஆசீர்வாதம் நிறைவாக இருக்கும்.
ஆகையால் தான் கர்த்தாவே, எனது குடும்பம் உமக்கு முன்பாக இருக்க வேண்டுமே என்று தாவீது ஜெபிக்கிறார்.
அநேகர் தனது குடும்பம் ஆசீர்வாதமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள் ஆனால் ஆசீர்வாதம் என்றால் என்ன என்பதை அறியாமல் இருக்கிறார்கள்.
அதைச் சரியாக அறிந்து கொண்டால் உண்மையான ஆசீர்வாதங்களை ஒவ்வொரு குடும்பங்களும் நிறைவாகப் பெற்றுக்கொள்ளும்.

பெரியவர் நம்மோடு


இயேசு கிறிஸ்து பழைய ஏற்பாட்டின் மூன்று சம்பவங்களை மேற்கோள் காட்டி, வேதபாரகர்களையும்,  பரிசேயர்களையும் கடிந்து கொள்வதை மத்தேயு 12ம் அதிகாரத்தில் காண முடியும்.
வேதபாரகர்களும்,  பரிசேயர்களும் மிகவும் உயர்வாக எண்ணிக் கொண்டிருப்பவர்களுக்கும் மேலானவர் இயேசு கிறிஸ்து என்பதை இந்த வேதப் பகுதியில் இயேசு கிறிஸ்து அற்புதமாக விளக்கி காண்பித்திருக்கிறார்.   
சாலொமோனிலும் பெரியவர்
தென்தேசத்து ராஜஸ்திரீ பூமியின் எல்லைகளிருந்து சாலொமோனுடைய ஞானத்தைக் கேட்க வந்தாள். இதோ, சாலொமோனிலும் பெரியவர் இங்கே இருக்கிறார். ஆதலால் நியாயத்தீர்ப்புநாளிலே அந்த ராஜஸ்திரீ இந்தச் சந்ததியாரோடெழுந்து நின்று இவர்கள்மேல் குற்றஞ்சுமத்துவாள்” (மத்தேயு 12:42) என்று இயேசு கிறிஸ்து கூறுகிறார்.
இந்த வசனத்தில்சாலொமோனை குறிப்பிட்டு, இயேசு கிறிஸ்து ஒப்பனை செய்து பேசுவதிலிருந்து  ஆழமான செய்தி என்ன என்பதை வேதாகமத்தின் பிண்ணனியத்துடன் ஆராய்ந்து பார்க்கும் போது, இயேசு கிறிஸ்து சொல்லும்  செய்தியை சுவைக்க முடியும்.
இயேசு கிறிஸ்து குறிப்பிடும்தென்தேசத்து ராஜஸ்திரீயை க்குறித்து 1 ராஜாக்கள் 10 ம் அதிகாரத்திலும், அதே சம்பவத்தை 2 நாளாகமம் 9 ம் அதிகாரத்திலும் வாசிக்க முடியும்.
சேபாவின் ராஜஸ்திரீ சாலொமோனின் கீர்த்தியைக் கேள்விப்பட்டபோது, விடுகதைகளினாலே சாலொமோனைச் சோதிக்கிறதற்காக, மிகுந்த பரிவாரத்தோடும், கந்தவர்க்கங்களையும், மிகுதியான பொன்னையும் இரத்தினங்களையும் சுமக்கிற ஒட்டகங்களோடும் எருசலேமுக்கு வந்தாள்; அவள் சாலொமோனிடத்தில் வந்தபோது, தன் மனதிலிருந்த எல்லாவற்றையும் குறித்து அவனிடத்தில் சம்பாஷித்தாள்” (2நாளா 9:1)  என்று வேதம் கூறுகிறது.
சேபாவின் ராஜஸ்திரீயைக் குறித்தே இயேசு கிறிஸ்துதென் தேசத்து ராஜஸ்திரீஎன்று குறிப்பிடுகிறார். சாலொமோனின் நாட்களில் வாழ்ந்து வந்த இந்த பெண் சாலொமோனின் ஞானத்தைக்குறித்தும்,, அவனுடைய கீர்த்திகளைக் குறித்தும், அறிந்து தனது தேசத்திலிருந்து, எருசலேமுக்கு வருகிறாள்.

"ஜீவ அப்பம்'' (பிப்ரவரி 2017) மாத இதழ்

கிறிஸ்துவுக்குள் அன்பான ஜீவ அப்பம் இணைய நண்பர்களுக்கு,  ஆவிக்குரிய வாழ்வுக்கு உறுதுணையாக,  விசுவாச வாழ்வுக்கு தேவையான செய்திகளுடன், கிறிஸ்துவுக்குள் வளரவும், நிலைத்து நிற்கவும், "ஜீவ அப்பம்'' மாத இதழ் வெளி வந்து கொண்டிருக்கிறது.

எல்லோரும் இலவசமாக படிக்கும் வண்ணமாக மின் இதழாகவும் (PDF) இணையத்தில் கொடுக்கப்படுகிறது.  இந்த மாத ( பிப்ரவரி  2017) ஜீவ அப்பம் மாத இதழை  இலவசமாக  பதிவிறக்கம் செய்து படியுங்கள்.

தேவ கிருபையால், ஆவியானவரின் ஒத்தாசையுடன  எழுதப்பட்டிருக்கும்  தேவ செய்திகள் கட்டாயம் படிக்கும் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கும்.

தண்ணீர் இல்லா மேகங்கள்




 துர் உபதேசம்மிக கொடிய ஆவிக்குரிய வியாதி. மெல்ல மெல்ல விசுவாச வாழ்வை அழிக்க முயற்சிக்கும் உயிர்கொல்லி, இதில் அறிந்து சிக்கியவர்களை விட அறியாமல் சிக்கியவர்களே அதிகம்.
கிறிஸ்துவை விட்டு, பிரித்து, ஒழுக்க நெறிகளை விட்டு விலக்கி, பரிசுத்தவாழ்வுக்கு தகுதியில்லாமல் மாற்றி, தேவனுடைய ஐக்கியத்தை விட்டு முழுவதுமாக  பிரிப்பதுவே, துர் உபதேசத்தின் நோக்கம்.
எனவே ஆவிக்குரியவர்கள் அறிந்து கொள்ள வேண்டியதும், தெரிந்து கொள்ள வேண்டியதும் மிக மிக அவசியம். இதன் தன்மை என்ன? இதன் ஊடுருவல் எப்படிப்பட்டது? என்பதை  வேத வசனங்களின் மூலமாக அறிந்தால் இதன் தாக்குதலில் இருந்து  தற்காத்துக் கொள்ளலாம்.

விண்ணொளியில் மண்ணுலகம்



மனிதனுடைய குறைகளை வெளிச்சம் போட்டு, குற்றப்படுத்துவது வேதாகமத்தின் முறைகள் அல்ல. இயேசு கிறிஸ்துவும் எந்த மனிதனையும் குற்றப்படுத்தி, குற்றவாளிக்கூண்டில் நிறுத்துவதற்காக இந்த பூமிக்கு வரவில்லை.
குறை இல்லாத மனிதனை இந்த பூமி முழுவதுமாக தேடிப்பார்த்தாலும் கண்டுபிடிப்பது கூடாத காரியம். அப்படியானால் எந்த மனிதனுடைய குறைகளைக்குறித்தும் பேச கூடாதா? யார் என்ன தவறு செய்தாலும் அதைக் கண்டு கொள்ளக் கூடாதா? தவறு செய்கிறவர்கள் தொடர்ந்து தவறு செய்து கொண்டிருக்கலாமா? என்று எதிர் கேள்விகள் வரும்.
தவறு செய்வதையோ, தவறுகளில் நிலைத்திருப்பதையோ, வேதம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள வில்லை. மனித வாழ்வின் ஒழுக்கத்தையும், நன்நெறிகளையும், வேதாகமமே மிகவும் வலியுருத்திக்கூறுகிறது. மேலும் பரிசுத்தமான வாழ்வை மிகவும் தெளிவாக போதிப்பது பரிசுத்த வேதாகமமே.
இவ்விதம் வேதாகமம் போதிக்கும் போது தவறு செய்கிறவர்களை, குறை சொல்வதும், குற்றப்படுத்துவதும்தானே சரியான முறை. அதுதானே கர்த்தருக்கென்று வைராக்கியமாக தன்னைக் காண்பித்துக்கொள்ளுதல் என்று சிலர் நினைத்துக்கொண்டுள்ளனர்.
ஆனால் மேலே சொன்னது போல் வேதாகமம் தவறு செய்தவர்களை குற்றப்படுத்த வில்லை. குற்றத்தை உணர்த்துவிக்கிறது. பாவம் செய்கிறவர்களை, பாவிகள் என்று குற்றப்படுத்தி, தள்ளிவிடவில்லை. மாறாக பாவத்தை உணர்த்தி, தவறுகளை சுட்டிக்காட்டி பாவத்திலிருந்தும், குற்றங்களில் இருந்தும் வெளியில் வருவதற்கு இயேசு கிறிஸ்து உதவி செய்கிறார் என்பதை வெளிப்படுத்துகிறது.
மனிதர்கள் தவறு செய்யும் பொழுது அது தவறுதான் என்று சொல்லி, அவர்களை குற்றவாளிக்கூண்டில் நிறுத்த இந்த உலகம் எப்பொழுதும் தயாராகவே இருக்கிறது.  யார் எப்பொழுது தவறு செய்வார்கள் என்று கண் கொட்டாமல் கவனித்துக்கொண்டும் இருக்கிறது. ஒருவர் எப்பொழுது தவறு செய்வார், எவ்விதம் குற்றப்படுத்தி அவமானப்படுத்தலாம் என்று, உலகமே காத்திருக்கிறது.