Bread of Life Church India

நீயே அந்த மனிதன்



தவறுகள் ஒரு மனிதனுடைய வாழ்வில் ஏற்படுத்தும் பாதிப்பைவிட, அந்த தவறுகளை இன்னொருவர் மீது திணிக்க முற்படுவதே மனித வாழ்வில் நீங்காத பாதிப்பை ஏற்படுத்தி விடுகிறது.
தன்னுடைய தவறுகளுக்கு இன்னொருவரே காரணமாக இருக்கிறார் என்று மற்றவரை சுட்டி காட்ட காரணம் கண்டுபிடிக்கப்படும் வரை மனிதனுடைய தவறுகள் ஒருபோதும் சரி செய்யப்படுவதில்லை.
தப்பிதங்களுக்கு சூழ்நிலைகள்தான் காரணம் என்று சூழ்நிலைகளை காரணம் காட்டி தப்பித்து விடுவது, தற்காலிகமான விடுதலையே. அப்படிப்பட்ட மனிதன் அந்த சூழ்நிலையில் இருந்து தப்பித்துக்கொள்கிறானே தவிர, தப்பிதங்களில் இருந்து தப்பித்துக்கொள்வதில்லை.
மனிதனின் தொடர் தோல்விக்கு அடிப்படையாக இருப்பது, தனது தவறை நேர்மையாக ஏற்றுக்கொள்ளாத தன்மைதான். ஆதி மனிதர்களாகிய ஆதாம் ஏவாளில் இருந்து வந்த இந்த நிலை மனிதர்களிடம் செயல்படுவது விசித்திரம் அல்ல, அது ஜென்ம சுபாவம்.
பொய் சொல்வதற்கும், ஒரு விஷயத்தை மாற்றி சொல்வதற்கும், திரித்து பேசுவதற்கும், மற்றவர்களை குற்றப்படுத்துவதற்கும் செலவிடப்படுகிற நேரத்தையும், அதற்காக எடுக்கும் பயிற்சியையும் நிறுத்தி விட்டு, தனக்குள் இருக்கும் வேண்டாதவைகளை விட்டு விட நேர்மையாக தேவனிடத்தில் அறிக்கையிட்டு, தன்னுடைய தப்பிதங்களுக்கு மனஸ்தாபப்பட்டு தன்னைத்தானே அனுதினமும் நியாயம் தீர்த்து நடக்கும் போது வாழ்க்கை கிறிஸ்துவைப்போல வெற்றியுடன் ஜொலிக்க ஆரம்பித்து விடும்.

எல்லாம் உனக்காக......



தேவனுடைய வார்த்தைகளை தியானித்து வாசிக்கும் போது நமக்குள் உண்டாகும் பரவசத்தை வார்த்தையால் சொல்ல இயலாது, காரணம் தேவனுடைய வார்த்தையின் வல்லமை நமக்குள்ளாக சென்று நம்மை உயிர்ப்பிக்கிறது.
     ஜீவ அப்பம் வாசக குடும்பத்திற்கு இந்த மாத தேவனுடைய வாக்குத்தத்தமான வார்த்தை “நீ எப்போதும் என்னோடிருக்கிறாய், எனக்குள்ளதெல்லாம் உன்னுடையதாயிருக்கிறது’’ (லூக்கா 15:31).
     லூக்கா 15 ம் அதிகாரத்தில் 11ம் வசனத்தில் இருந்து 32 ம் வசனம் வரை உள்ள வேத பகுதியில் இரண்டு விதமான நபர்களைக் குறித்து இயேசுவானவர் சொல்வதைப் பார்க்கலாம்.
     அநேகமாக இந்த பகுதியில் இளைய மகனைக்குறித்துதான் நாம் அதிகமாக தியானித்து இருக்கிறோம். ஆனால் உண்மையாக இந்த பகுதி மூத்த குமாரனை மையமாக வைத்தே துவங்குகிறது.
     மூத்த குமாரன், தனது தந்தை இளைய மகனை கவனிப்பது போல் தன்னை கவனிக்க வில்லையே என்று வருந்துகிறான். ஆனால் தந்தையின் பதிலோ, தனது மூத்த மகனையும் தான் எவ்விதம்  நேசிக்கிறேன், எந்த அளவுக்கு அதிகாரம் தந்திருக்கிறேன் என்பதை அறிந்து கொள்ள அறிவுறுத்துவதாக இருக்கிறது.

அஸ்திவாரம்



கிறிஸ்துவுக்குள் அன்பான ஜீவ அப்பம் குடும்ப அங்கத்தினர்களுக்கு, தேனிலும் இனிமையான இயேசு கிறிஸ்துவின் வல்லமையுள்ள நாமத்தில் அன்பான வாழ்த்துக்கள்.
பிரியமானவர்களே, நமது ஜீவ அப்பம் ஊழியங்களை கர்த்தர் ஆசீர்வதித்து, எல்லைகளை விரிவாக்கி  வருவதால் கர்த்தரை நன்றியோடு ஸ்தோத்தரித்து, துதிப்போம்.
தேவனுடைய வார்த்தைகளை அறிவிக்கவும், அநேகர் தேவனுடைய வார்த்தைகளினாலே விடுவிக்கப்படவும், ஆசீர்வதிக்கப்படவும் ஜீவ அப்பம் மாத இதழை தேவன் பயன்படுத்தி வருகிறார்.