செழித்திருப்பாய்
இந்த ஆண்டு ஜீவ அப்பம் ஊழியங்களுக்கும், சபைக்கும், மாத இதழுக்கும் கர்த்தர் கொடுத்துள்ள ஆசீர்வாதங்களை கொடுத்து உங்களுக்காக ஜெபித்து ஆசீர்வதிக்க விரும்புகிறேன்.
“நீ நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப்போலவும், வற்றாத நீரூற்றைப்போலவும் இருப்பாய்’’ (ஏசாயா 58:11).
ஒவ்வொரு ஆண்டு துவக்கத்திலும் இந்த ஆண்டிலாகிலும் என்னுடைய வாழ்க்கையில் மாற்றம் இருக்காதா ? என்ற எதிர் பார்ப்புடன், ஜெபித்து நமது வாழ்க்கை பயணத்தை தொடருகிறோம்.
நமது எதிர்பார்ப்பை அறிந்து நமக்கு ஆசீர்வாத வாக்குத்தத்ததை ஆண்டவர் தந்திருக்கிறார். தேவனுடைய கிருபையால் இந்த ஆண்டு செழிப்பின் ஆண்டாக நமக்கு இருக்கப்போகிறது.
வேதாகமத்தில் தண்ணீர் பரிசுத்த ஆவியானவருக்கு அடையாளமாக பல இடங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. இந்த ஆண்டிலே ஆவியானவருடைய வல்லமையால் நிரப்பபட்டு நம்முடைய வாழ்வு செழிப்படையும் என்று கர்த்தர் வாக்குப்பண்ணுகிறார்.
நம்முடைய வாழ்க்கை கர்த்தருடன் அதிகமாக இணைக்கப்பட்டு, தேவனுடைய வாக்குத்தத்தத்திற்கு சுதந்திரவாளிகளாக கர்த்தர் நம்மை மாற்றப்போகிறார்.
நீர் வளம் பொருந்திய தோட்டம் எப்படி செழிப்பாக இருக்குமோ, அது போல நம்முடைய வாழ்க்கை கர்த்தருக்குள்ளாக செழிப்படையப் போகிறது.
கடந்த ஆண்டுகளில் காணப்பட்ட வறட்சிகளை நீக்கி, தடைகளை விலக்கி கர்த்தருடைய கரம் நம்மை நடத்தப்போகிறது. விசுவாசத்துடன் தேவனுடைய வார்த்தைக்கு செவிகொடுத்து, கர்த்தர் கொடுத்த வாக்குத்தத்ததை சொல்லி தினம் தோறும் ஜெபிக்கும் பொழுது தேவன் இந்த ஆண்டிலே கொடுத்திருக்கிற வாக்குத்தத்தம் நம்முடைய வாழ்விலே நிறைவேறும்.
ஆவிக்குரிய வாழ்வில் செழிப்பு
“உன்னதத்திலிருந்து நம்மேல் ஆவி ஊற்றப்படுமட்டும் அப்படியே இருக்கும்; அப்பொழுது வனாந்தரம் செழிப்பான வயல்வெளியாகும்’’ (ஏசாயா 32:15)
நம்முடைய ஆத்துமாவில் இருந்தே செழிப்பு ஆரம்பமாகிறது. எனவே நாம் எந்த அளவுக்கு தேவனோடு ஐக்கியமாக இருக்கிறோமோ, அந்த அளவுக்குதான் நம்முடைய ஆத்துமா செழிப்படையும், நம்முடைய ஆத்துமா செழிப்படையும் போதே சமாதானம் உண்டாகும். இல்லை என்றால் ஏதோ ஒரு வெறுமையும், நிர்விசாரமும் உண்டாகும். அப்படிப்பட்ட சூழ்நிலையில் பயமும் குழப்பமும் காணப்படும். இவ்விதமாக கடந்த ஆண்டுகளில் இருந்திருக்கலாம் ஆனால் இந்த ஆண்டிலே இயேசு கிறிஸ்துவோடு கூட நாம் ஐக்கியமுள்ளவர்களாக இருக்கவும், நம்முடைய ஆத்துமா செழிப்படைந்து தேவனுக்குப் பிரியமாக வாழவும் தேவன் வாக்குப் பண்ணுகிறார்.
ஆகவே பிரியமானவர்களே, கடந்த நாட்களில், மாதங்களில், ஆண்டுகளில் நடந்தவைகளை நினைத்து கலங்கிக்கொண்டிருக்காமல், தேவன் இந்த ஆண்டிலே என்னுடைய ஆத்துமாவை செழிக்க செய்து என்னில் இருந்து இரட்சிப்பின் தண்ணீர் புறப்பட செய்வார் என்ற விசுவாசத்துடன் கர்த்தரோடு இன்னும் அதிகமாக நெருங்கி தேவ சித்தம் செய்ய ஒப்புக்கொடுப்போம்.
“வனாந்தரமும் வறண்ட நிலமும் மகிழ்ந்து, கடுவெளி களித்து, புஷ்பத்தைப்போல செழிக்கும்’’ (ஏசாயா 35:1)
வனாந்திரமாக இருந்த உங்கள் வாழ்க்கை தொடர்ந்து அப்படியே இருக்க போவது இல்லை. தேவனோடு கொண்டுள்ள உங்கள் ஐக்கியம் பெருகும் போது வனாந்திரத்தைப் போலும் வறண்ட நிலத்தைப் போலும் எதை எடுத்தாலும் தோல்வி, எதைச் செய்தாலும் குழப்பம் என்று இருந்த உங்கள் வாழ்க்கையில் நீங்கள் மகிழ்ந்து களி கூறும்படியாக கர்த்தருடைய நன்மைகள் பெருகி, உங்கள் ஆத்துமா செழிப்படையப்போகிறது.
பயத்திலும் திகிலிலும் இருந்த உங்கள் மனம் மகிழ்ந்து உற்சாகமடையப்போகிறது.
தேவனுடைய பிள்ளைகளாக இருந்தும் தேவனோடு சரியான ஐக்கியம் இல்லாமல், மிகவும் வறண்டு போய், ஜெபிக்காமல் இருந்து வந்த உங்கள் வாழ்க்கையை முதலாவது புதுப்பித்து, வற்றாத நீரூற்றைப்போல கர்த்தர் மாற்றப்போகிறார்.
கடந்த ஆண்டில் உங்கள் வாழ்வில் ஆவிக்குரிய செழிப்பு இல்லாமல் மிகவும் வறட்சியாக காணப்பட்டிருக்கலாம். அதின் நிமித்தமாக குடும்பத்திலும் சமாதானம் இல்லாமல், எப்போதும் பிரச்சனைகள், சண்டைகள் வேண்டாத வாக்கு வாதங்கள், சந்தேகங்கள் என்று நிம்மதி இழந்து வேதனையின் மத்தியில் உங்கள் குடும்பம் இருந்திருக்கலாம். ஆனால் தேவனாகிய கர்த்தர் இந்த ஆண்டில் உங்கள் ஆவிக்குரிய வாழ்வை செழிக்க செய்து, உங்கள் குடும்ப வாழ்வில் சமாதானத்தையும் சந்தோஷத்தையும் தந்து, ஒரு மனம் ஒற்றுமை, ஒருவருக்கொருவர் புரிந்து கொள்ளுதல், விட்டுக்கொடுத்தல் உண்டாக செய்யப்போகிறார்.
கர்த்தருடைய சமூகத்தை விட்டு விடாதிருங்கள். தண்ணீர் உள்ள இடங்களில் தன்னுடைய வேரை விடுகிற மரம் எப்படி செழிப்பாக இருக்குமோ, அதே போல தேவனோடு ஐக்கியமாக இருக்கும் உங்கள் ஆவிக்குரிய வாழ்வும் செழிப்பாக இருக்கும்.
தேவனோடு ஐக்கியப்பட்டிருக்கும் போது எல்லா குறைவுகளும் நிறைவாக மாறும். எந்த விதமான போராட்டங்கள் வந்தாலும் எதையும் எளிதாக வெல்லக்கூடிய பெலன் உடையவர்களாக இருப்பீர்கள். இது தேவன் இந்த ஆண்டிலே கொடுக்கும் ஆசீர்வாதம்.
எனவே நீங்கள் எதை விட்டாலும் தேவனையும், தேவனுடைய ஐக்கியத்தையும் மட்டும் விடாதிருங்கள். ஏன் என்றால் தேவனோடு கொண்டுள்ள ஐக்கியம் எல்லாவிதமான நன்மைகளையும் கொண்டுவரும். ஆத்துமாவிலே செழிப்பு உண்டாக தேவனுடைய ஐக்கியம் மிக மிக முக்கியம், ஆத்துமாவிலே உண்டாகும் செழிப்புதான் சமாதானத்திற்கு நேராக நம்மை நடத்தும்.
ஆத்துமாவிலே செழிப்பு இல்லை என்றால், சமாதானம் கேள்விக்குறியாக மாறி விடும். எனவே எனக்கன்பான தேவ ஜனமே, இந்த வருடத்திலே கர்த்தர் கொடுக்கும் ஆத்மீக செழிப்பை பெற்று, சமாதானத்துடனும், சந்தோஷத்துடனும் கர்த்தருக்கு சாட்சியாக வாழ்வோம், தேவ நாமம் மகிமைப்படும்.
தேவனோடு வாழும் வாழ்க்கையில் ஆத்துமா நாளுக்கு நாள் புதிதாக்கப்படுகிறது.
“ உதாரகுணமுள்ள ஆத்துமா செழிக்கும்; எவன் தண்ணீர் பாய்ச்சுகிறானோ அவனுக்குத் தண்ணீர் பாய்ச்சப்படும்’’ (நீதி 11:25)
செழிப்பான தோட்டம் எப்போதும் மற்றவர்களுக்கும் நல்ல பலனை கொடுக்கும், அது போல ஆண்டவர் இந்த ஆண்டிலே கொடுக்கும் ஆசீர்வாதம் மற்றவர்களுக்கும் நாம் பயன் உள்ளவர்களாக இருக்க வேண்டும் என்பதற்காகதான்.
தண்ணீர் பாய்ச்சுகிறவனுக்கு, தண்ணீர் பாய்ச்சப்படும் என்று வேத வாக்கியங்கள் கூறுகிறது. எனவே நாம் எப்போதும் கர்த்தருக்குள்ளாக நன்மை செய்கிறவர்களாக இருக்க வேண்டும்.
நன்மை செய்வதினாலே ஒரு நாளும் நாம் குறைந்து போவது இல்லை. கர்த்தர் நம்முடைய வாழ்வில் கொடுக்கும் ஆசீர்வாதங்களை நாம் மற்றவர்களோடும் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
எந்த ஆத்துமாவையும் நாம் துக்கப்படுத்தக்கூடாது., கர்த்தருடைய வார்த்தையினாலே நாம் ஒருவரை ஒருவர் தேற்ற வேண்டும். கர்த்தர் நம்முடைய ஆத்துமாவை செழிக்கச் செய்வதின் நோக்கமே மற்ற ஆத்துமாக்களை கர்த்தரிடமாக கொண்டு வந்து செழிப்படைய வைப்பதேயாகும்.
இந்த கால கட்டத்திலே ஆநேகருடைய ஆத்மீக வாழ்விலே செழிப்பில்லை, ஆத்மீக செழிப்பை குறித்த அறிவு குறைந்து கொண்டிருக்கும் காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆகவே அநேகருடைய ஆத்துமா விடாய்த்த தாக இருக்கிறது.
எதை எதையோ தேடிக்கொண்டிருக்கும் மனிதன் தன்னுடைய ஆத்மீக தேடலை விட்டு விடுகிறான். ஆத்தும மீட்பரான இயேசு கிறிஸ்துவை அறியாமல் வாழ்ந்து வருகிறான்.
அப்படிப்பட்ட தேவனை அறியாத மக்களுக்கு கிறிஸ்துவை அறிவிக்கும் படியாகவே, கர்த்தர் இந்த ஆண்டிலே நமது ஆத்மீக வாழ்விலே மிகுதியான செழிப்பை கட்டளையிடுகிறார்.
ஆகவே இதை ஒரு போதும் நாம் மறந்து விடலாகாது. விலையேறப்பெற்ற நம்முடைய ஆத்துமா இயேசு கிறிஸ்துவால் மீட்கப்பட்டது போல, நம்மை சுற்றிலும் இருக்கிற எல்லா மனிதர்களின் ஆத்துமாவும் மீட்கப்பட வேண்டுமே என்ற பாரமும், தாகமும் எப்போதும் நமது இருதயத்தில் இருந்து கொண்டே இருக்க வேண்டும்.
இதைக்குறித்து தான் உதார குணமுள்ள ஆத்துமா செழிக்கும் என்று வேதம் திட்டமாக போதிக்கிறது. நம்முடைய ஆத்மீக தேடுதலைப்போல மற்றவர்களும் மீட்பரான இயேசு கிறிஸ்துவை தேட வழி காட்டுகிறவர்களாக நாம் இருக்க வேண்டும் என்றே தேவன் விரும்புகிறார், இதுவே தேவ சித்தமாக இருக்கிறது.
கர்த்தர் நமக்கு கொடுக்கும் செழிப்பை நாம் மற்றவர்களோடும் பகிர்ந்து கொள்ள வேண்டும்.சுய நலம் நம்மை செழிப்படைய விடாது. இருக்கிற செழிப்பையும் குறைத்து விடும். எனவே எதை செய்தாலும் உதாரத்துவமாக செய்யவேண்டும்.
நம்முடைய வாழ்க்கையும் செயலும் எப்போதும் மற்றவர்களுக்கு உதாரணமாக இருக்க வேண்டும். கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பதும், நம்மை செழிப்படைய செய்வதும் அதற்காகத்தான்.
பொருளாதாரத்திலே செழிப்பு
“கர்த்தரின் ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத் தரும்; அதனோடே அவர் வேதனையைக் கூட்டார்’’ (நீதி 10:22)
நாம் வாழ்கின்ற வாழ்க்கை பரலோகத்தை எதிர் நோக்கி இருந்தாலும், இந்த பூமியில் வாழும் காலம் வரைக்கும் பொருளாதாரத்திலும் நமக்கு செழிப்பு அவசியம். பணம், பொருள்கள் மட்டுமே நம்முடைய பிரதானமான நோக்கம் இல்லை. ஆனாலும் நாம் வாழும் வாழ்க்கையில் பொருளாதாரமும் அவசியம் என்பதால் கர்த்தர் நம்மை பொருளாதரத்திலும் உயர்த்துகிற தேவனாக இருக்கிறார்.
இந்த ஆண்டிலே கர்த்தர் கொடுத்திருக்கும் வாக்குத்தத்ததின்படி நம்மை பொருளாதாரத்திலும் செழிப்படைய செய்யப்போகிறார். நாம் பொருளாதரத்திலே செழிப்படைந்து நம்முடைய எல்லா தேவைகளும் சந்திக்கப்பட்டு, நாம் குறைவில்லாத வாழ்க்கை வாழும் போது ஒருபோதும் நாம் கர்த்தரை மறக்கலாகாது.
எவ்வளவு செழிப்பு வந்தாலும் நம்முடைய வாழ்க்கை கர்த்தருக்குள்ளாக கட்டப்பட்டதாக இருக்க வேண்டும். இதைத்தான் கர்த்தர் எப்போதும் நம்மிடத்தில் விரும்பு கிறார். நாம் எப்போதும் தேவ சித்தம் செய்கிற பிள்ளைகளாக இருக்கும் போது கர்த்தருடைய ஆசீர்வாதங்களுக்கும் நாம் சுதந்திரவாளிகளாக இருக்கிறோம்.
எனவே கடந்த ஆண்டிலே காணப்பட்ட நெருக்கத்தை நினைத்து கலங்க வேண்டாம், கர்த்தர் தம்முடைய வாக்குத்தத்ததின் படி நமக்கு தந்து நம்மை நடத்திடுவார்.
நீங்கள் செய்கிற வேலையில் ஆசீர்வாதங்களையும், உயர்வையும் காண்பீர்கள். நீங்கள் செய்கிற வியாபாரங்களில் வளர்ச்சியை பெற்றுக்கொள்வீர்கள். கர்த்தரைத் துதித்து தேவன் கொடுக்கும் ஆசீர்வாதங்களை சுதந்தரித்துக்கொள்ளுங்கள்.
உங்கள் வாழ்க்கையில் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கு முக்கியத்துவம் கொடுத்து, எல்லா வற்றிலும் அவரை முன்பாக வைக்கும்போது கர்த்தர் நம்மை தம்முடைய வல்லமையுள்ள கரங்களால் உயர்த்தி ஆசீர்வதிப்பார்.
எனவே இந்த ஆண்டிலே கர்த்தர் எல்லா காரியங்களிலும் உங்களை உயிர்ப்பித்து, எவைகள் எல்லாம் தடைகளாக இருந்ததோ அந்த தடைகளை எல்லாம் உடைத்துப்போடப்போகிறார். உங்கள் பொருளாதார உயர்வைத்தடுக்கும்படியாக உங்களுக்கு எதிராக எழும்பின எல்லா சத்துருக்களின் தந்திரங்களை கர்த்தர் முறிய அடிக்கிறார்.
எதைக்குறித்தும் கலங்காமல், கர்த்தரை துதித்து மகிமைப்படுத்துங்கள். தேவனுடைய கரம் உங்களோடு இருக்கிறது. கர்த்தர் கொடுத்திருக்கும் வாக்குத்தத்ததை விசுவாசித்து ஜெபியுங்கள்.
கர்த்தரிடத்தில் இருந்து நன்மைகளை எதிர்பாருங்கள். தேவனோடு இன்னும் அதிகமாக நெருங்கி தேவனுடைய வார்த்தைகளுக்கு கீழ்ப்படிந்து நடக்க அர்ப்பணிப்போடு உங்களை தேவனுடைய கரங்களில் கொடுங்கள் கர்த்தர் பெரிய காரியங்களை உங்கள் வாழ்க்கையில் செய்யப்போகிறார்.
எத்தனையோ ஆண்டுகள் காத்திருந்த காத்திருப்புக்கு கர்த்தர் இந்த ஆண்டிலே உங்களுக்கு பதிலைக்கொடுக்கிறார். கடந்த ஆண்டுகளில் நீங்கள் கண்ணீரோடு விதைத்த விதைகள், அறுவடையாக உங்களுக்கு முன்பாக வரும்.
சிலர் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கும் போது கர்த்தரோடு நல்ல ஐக்கியமுள்ளவர்களாக, தேவனுடைய வார்த்தைகளுக்கு கீழ்ப்படிந்து, ஆராதனை வேளைகள், ஜெப வேளைகளை விட்டு விடாதபடிக்கு கர்த்தருக்கு மட்டும் முதலிடம் கொடுத்து உண்மையாக நேர்மையாக வாழ்ந்து வருவார்கள்.
இப்படி இருக்கும் போது கர்த்தர் ஆத்மீக செழிப்பையும், பொருளாதார செழிப்பையும் கொடுத்து எல்லா வற்றிலும் உயர்வை கொடுப்பார், அதன் பின்பாக கர்த்தரை விட்டு பின் வாங்கி, தங்கள் ஆவிக்குரிய வாழ்வில் தோய்வு ஏற்பட்டு, ஏனோ தானோ என்று வாழ ஆரம்பித்து விடுவார்கள்.
அன்பு தேவனுடைய பிள்ளைகளே, நம்மை பொருளாதாரத்தில் எவ்வளவு உயர்ந்த நிலைக்கு கர்த்தர் கொண்டு சென்றாலும் நாம் கர்த்தரை விட்டு விலகாத இருதயம் உள்ளவர்களாக இருக்க வேண்டும். இதை ஏன் சொல்லுகிறேன் என்றால் இந்த வருடம் அநேகர் பொருளாதாரத்திலும் மிகவும் உயர்ந்த நிலைக்கு செல்லப்போகிறீர்கள்.
இவ்விதமாக கர்த்தர் உயர்த்தும் போது கர்த்தருக்கு உண்மையுள்ளவர்களாக, கர்த்தரை மறக்காத இருதயம் உள்ளவர்களாக இருக்க வேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார்.
கர்த்தருக்கு உண்மையாக இருக்கும் போது மட்டுமே, ஐசுவரியம் நன்மையாக இருக்கும் இல்லை என்றால் அதுவே வேதனையாக மாறி விடும்.
மக்கள் அநேகர் ஐசுவரிய வான்களாக இருக்கிறார்கள். ஆனால் தேவனுடைய நன்மைகளுக்கு தூரமானவர்களாக இருக்கிறார்கள். ஆனால் தேவ பிள்ளைகளோ, தேவன் கொடுக்கும் ஐசுவரியத்திற்கும், நன்மைகளுக்கும் சுதந்திர வாளிகளாக இருக்க வேண்டுமானால் கர்த்தரை முழு இருதயத்துடன் பின்பற்றுகிறவர்களாக தேவனுடைய வார்த்தைக்கு செவி சாய்த்து, உண்மையுள்ளவர்களாக இருக்க வேண்டும்.
இந்த செய்தியை வாசித்துக்கொண்டிருக்கிற தேவ பிள்ளைகளே, இத்தனை ஆண்டுகாலங்கள் உங்கள் வாழ்க்கை எப்படி வேண்டுமானாலும் இருந்திருக்கலாம். ஆனால் இந்த ஆண்டு கர்த்தருக்காக முழுமையாக உங்களை ஒப்புக்கொடுங்கள். கர்த்தர் உங்கள் வாழ்க்கையில் செயல்பட விட்டு கொடுங்கள். கர்த்தர் உங்கள் ஆவிக்குரிய வாழ்விலும், பொருளாதரா வாழ்விலும் செழிப்பைக்கொடுத்து எல்லா வற்றிலும் நீங்கள் உயர்ந்திருக்க செய்வார்.

0 comments:
Post a Comment