Bread of Life Church India

இதையும் கொஞ்சம் படிங்க





 
வாழ்க்கையின் தார்ப்பரியம், சந்தோஷமும், மகிழ்ச்சியும், சமாதானமுமே, ஆனால் இப்படிப்பட்ட வாழ்க்கையை எத்தனை பேர் உண்மையாக வாழ்கிறார்கள்?

    இவைகளெல்லாம் நமக்கில்லையோ! ஒரு சிலருக்குத்தான் செழிப்பான வாழ்க்கையும், சமாதானமும், சந்தோஷமும் நிரந்தரமோ? நம்முடைய தலைவிதி இவ்வளவுதானா? அல்லது நம்முடைய வாழ்க்கையும், செழிப்படைய வாய்ப்புள்ளதா? அதற்க்கு நான் என்ன செய்ய வேண்டும்.
    இப்படிப்போல பல கேள்விகள், ஒருநாள் அல்ல, சில நாள் அல்ல, வாழ்வில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும், இதைக்குறித்த சிந்தையோடு வாழ்பவரா நீங்கள்? உங்களுக்குத்தான் இந்த செய்தி : உங்கள் வாழ்வில் இதுவரை இருந்த  எல்லா துன்பமும், வேதனைகளும், பயமும், வியாதியும் நீங்கி, உங்கள் வாழ்வில் சமாதானத்தையும், சந்தோஷத்தையும், நிம்மதியையும் கொடுத்து உங்களை நல்ல முறையில் வாழவைக்க இயேசு கிறிஸ்து விரும்புகிறார். அதற்காகவே இந்த செய்தியின் வழியாக உங்களை அழைக்கிறார்
.
    இயேசு சொல்லுகிறார்: ``சமாதானத்தை உங்களுக்கு வைத்துப் போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிற பிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை, உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலும் இருப்பதாக,'' (யோவான் 14:27) 
    பாவமே, மனிதனின் எல்லா பயத்திற்கும், துன்பத்திற்கும் சாபத்திற்கும், சஞ்சலத்திற்கும் காரணம். மனிதனுக்குள் இருக்கும் பாவமே எல்லா தீமையான பழக்கவழக்கங்களுக்கும், கசப்புக்களுக்கும், விரோதங்களுக்கும் ஆரம்பமாகவும், அப்படியே நடத்துகிறதாகவும் இருக்குறது, ``இவர்(இயேசு)மூலமாய் உங்களுக்குப் பாவமன்னிப்பு உண்டாகும் என்று அறிவிக்கப்படுகிறதென்றும், (இயேசுகிறிஸ்துவை) விசுவாசிக்கிறவன் எவனும் அவைகளிலிலிருந்து (பாவத்திலிருந்து) இவராலே விடுதலையாகி நீதிமானாக்கப்படுகிறான் என்றும் உங்களுக்குத் தெரிந்திருக்கக்கடவது.' '(அப் 13:38,39).
    எனென்றால் பாவம் போக்க, சாபம் நீக்க, உனக்குள்ளிருக்கும் பாவத்தையும், உன்னை அழிக்க நினைக்கும் சாபங்களையும்,சிலுவையில் சுமந்து, மரித்து, உயிர்தெழுந்து அவைகளுக்கு பரிகாரமாக தன்னையே இயேசு தந்து,இப்பொழுதும் உனக்காக பரிந்து பேசிக்கொண்டிருக்கிறார். உன்னை மறுரூப படுத்துவார். ஆகவே வேறு ஒரு பரிகாரம் வேண்டாம், இயேசுவை நம்பி, மேலே சொன்னவைகளை விசுவாசி, உன் வாழ்வில் ``கர்த்தர் நித்தமும் உன்னை நடத்தி, மகா வறட்சியான காலங்களில் உன் ஆத்துமாவைத் திருப்தியாக்கி, உன் எலும்புகளை நிணமுள்ளதாக்குவார், நீ நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப்போலவும், வற்றாத நீரூற்றைப்போலவும் இருப்பாய்.
    அப்பொழுது விடியற்கால வெளிப்பைப்போல உன் வெளிச்சம் எழும்பி, உன் சுக வாழ்வு சீக்கிரத்தில் துளிர்த்து, உன் நீதி உனக்கு முன்னாலே செல்லும்; கர்த்தருடைய மகிமை உன்னைப் பின்னாலே காக்கும்''
    கனவில் மட்டுமே சந்தோஷத்தை அனுபவித்துக்கொண்டிருக்கும் உன் வாழ்வை, நிஜத்தில் உண்மையாக இயேசு கிறிஸ்து மாற்றுவார். அந்த நல்ல செய்தியை அறிந்து, உங்கள் வாழ்வு வளம்பெற எல்லா நன்மைகளையும், ஆசீர்வாதங்களையும், இயேசு கிறிஸ்து மூலமாக பெற்றுக்கொள்ள அன்புடன் இந்த செய்தி மூலமாக அழைக்கிறோம். விசுவாசித்து  பாருங்கள்!

    

0 comments:

Post a Comment