இயேசுவும் கடவுளா ?
சிலுவையில்லா இயேசு !! என்ற நமது கட்டுரைக்கு நமது அன்பு சகோதரர் இட்டுள்ள கருத்து பதிவும், நமது பதிலும்.
சிலுவையில் தொங்கிக் கொண்டிருக்கும் போதும் "பிதாவே! இவர்களை மன்னியும். தான் என்ன செய்கிறோம் என்றறியாதிருக்கிறார்கள்" என்று மன்றாடும் ஒரு நல்லவரை கடவுளாக ஏற்றுக் கொள்வதில் இந்து மதத்திற்கு எந்த இடர்பாடும் இருக்காது. நீங்கள் ஒவ்வொரு இந்து வீடாகச் சென்று பாருங்கள். எத்தனை வீடுகளில் இயேசு படம் இருக்கிறதென்று. இயேசு எங்களை மதம் மாறச் சொல்லவில்லை. அவர் அப்படி நினைத்திருந்தால் எப்போதோ எங்களை மாற்றியிருப்பார். "நீ நன்றாயிருக்கிறாய் மகனே! உலகத்திற்கு வழிகாட்டு" என்றுதான் ஒரு இந்துவிடம் இயேசு சொல்வார் என்று நான் நினைக்கிறேன்.
அதுக்கு நான் கிறிஸ்தவனாக வேண்டிய அவசியமே இல்லையே.
நான் இயேசுவை ஏற்கிறேன்
நான் இயேசுவை ஏற்கிறேன்
நீங்கள் இயேசுவும் கடவுள் என்று சொல்லுகிறீர்கள், அப்படியல்ல
இயேசுவே கடவுள் என்று சொல்லிப்பாருங்கள். முப்பத்து முக்கோடி தேவர்களையும்
வழிபடுகிற உங்களுக்கு, கூட இன்னொன்றையும் சேர்த்து கொள்வதொன்றும், கடினமான
விஷயம் இல்லையே.
வந்தவனெல்லாம்
கடவுள் அல்ல, இறந்தவனெல்லாம் தேவனுமல்ல, உலகெங்கும் ஒரே ஒரு கடவுள்
மட்டுமே உண்டு அந்த கடவுள் யாரென்று அறிந்து கொள்ள உண்மையில் உங்களுக்கு
ஆர்வம் இருக்குமானால், நீங்கள் போட்டுள்ள வட்டத்திற்கு வெளியில் வந்து
திறந்த மனதோடு தேடிப்பாருங்கள். நீங்கள் கண்டு கொள்ளுவீர்கள்.
"இயேசு கிறிஸ்து இந்த பூமிக்கு வந்ததும், சிலுவையில் இயேசு கிறிஸ்து தொங்கியதும்'' மனிதனை பாவத்திலிருந்து மீட்கும் படியாக வந்த நோக்கத்தை விளக்குகிறது. இதைத்தான், எல்லாராலும் ஏற்க (விசுவாசிக்க) கடினமாக இருக்கிறது.
"இயேசு கிறிஸ்து இந்த பூமிக்கு வந்ததும், சிலுவையில் இயேசு கிறிஸ்து தொங்கியதும்'' மனிதனை பாவத்திலிருந்து மீட்கும் படியாக வந்த நோக்கத்தை விளக்குகிறது. இதைத்தான், எல்லாராலும் ஏற்க (விசுவாசிக்க) கடினமாக இருக்கிறது.
இயேசுவும் மதம் மாற சொல்லவில்லை, நாங்களும் மதம் மாற சொல்ல வில்லை, நீங்க ஏன் கிறிஸ்தவத்தை மதமாக பார்க்க வேண்டும், கிறிஸ்தவம் மதமே இல்லை.
இங்கு மதத்திற்கு வேலையே இல்லையே, இயேசுவும் மதத்தை உருவாக்க இப்பூமிக்கு வரவில்லை, பூமியில் மதம் இருக்கிறது, கிறிஸ்தவ மதமும் இருக்கிறது. ஆனால் "அந்த மதத்திற்கும்'' கிறிஸ்துவுக்கும், எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
மனிதனின்
பாவம் போக்கப்பட இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து ஏற்றுக்கொண்டு, அவருடைய
அடிச்சுவடுகளை பின் பற்றும் பொழுது நித்திய வாழ்வுக்கு
பங்குள்ளவர்களாகிறோம்.
இங்கு மதத்திற்கு வேலையே இல்லையே, இயேசுவும் மதத்தை உருவாக்க இப்பூமிக்கு வரவில்லை, பூமியில் மதம் இருக்கிறது, கிறிஸ்தவ மதமும் இருக்கிறது. ஆனால் "அந்த மதத்திற்கும்'' கிறிஸ்துவுக்கும், எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
மேலும் இயேசுவுக்கு படமே இல்லையே, அந்த படத்தை வைத்திருந்து என்ன பயன், வைத்திராமல் போனால் என்ன இழப்பு, கிறிஸ்தவன்
என்பதற்கு அடையாளம், இயேசு என்று சொல்லப்படும் அந்த படமல்ல, அந்த படத்தை
வைத்திருப்பவரெல்லாம், இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டவர் என்பதும்
அர்த்தமல்ல.
கிறிஸ்தவர்கள்,
அதாவது கிறிஸ்துவை பின்பற்றுகிற எங்கள் வீடுகளில் இயேசுவின் படம் என்று
சொல்லப்படுகிற படத்தை நாங்கள் வைத்திருப்பதில்லை.
தொடரும்........
தொடரும்........
//இயேசுவே கடவுள் என்று சொல்லிப்பாருங்கள்.//
ReplyDeleteஅப்ப இயேசு பொறுக்குறதுக்கு முன்னே. எல்லாம் எந்த தெய்வம்?
//வந்தவனெல்லாம் கடவுள் அல்ல, இறந்தவனெல்லாம் தேவனுமல்ல, உலகெங்கும் ஒரே ஒரு கடவுள் மட்டுமே உண்டு அந்த கடவுள் யாரென்று அறிந்து கொள்ள உண்மையில் உங்களுக்கு ஆர்வம் இருக்குமானால்//
அப்ப கடவுள்னா இஸ்ரேல்ல பொறந்தவராத்தான் இருக்கணும் போல. எங்க அப்பா, அம்மா (மூதாதையர்கள்) எல்லாம் இல்ல. தாவீதின் குமாரனைத்தான் வணங்கணும். அப்படித்தானே! சரிங்க.
//நீங்கள் போட்டுள்ள வட்டத்திற்கு வெளியில் வந்து திறந்த மனதோடு தேடிப்பாருங்கள். நீங்கள் கண்டு கொள்ளுவீர்கள்//
நானா வட்டத்துக்குள் இருந்து பேசுகிறேன். ஒ! இப்படிச் சொல்கிறீர்களோ, நான் சிறிய வட்டத்தில் இருக்கிறேன். நீங்கள் பெரிய வட்டத்தில் இருக்கிறீர்கள் என்று சொல்கிறீர்களா? எனக்கு என் வீடு போதுங்க, அடுத்த வீட்டுக்காரன் சொத்து வேண்டாங்க.
//கிறிஸ்தவ மதமும் இருக்கிறது. ஆனால் "அந்த மதத்திற்கும்'' கிறிஸ்துவுக்கும், எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.//
ஐய்ய்யோ! எனக்கு வேலையே இல்லாம நீங்களே சொல்றீங்களே, பரவாயில்லையே.
//மேலும் இயேசுவுக்கு படமே இல்லையே//
அப்படியா? எனக்குத் தெரியாமல் போயிற்றே.
நான் நிறைய கிறிஸ்தவர்கள் வீட்டில் அந்தப் படத்தைப் பார்த்திருக்கிறேன். அப்ப அவங்க எல்லாம் கிறிஸ்தவர்கள் இல்லையோ?
தொடருங்கள்... இன்னும் என்னதான் சொல்லப் போகிறீர்கள் என்றறிய ஆவலாகக் காத்திருக்கிறேன்.
பிறப்பதற்கு முன்னமே இயேசு கடவுள் தாங்க, தாவீதின் குமாரன் என்பது தீர்க்கதரிசனம், இயேசுவானவர் தாவீதுக்கு முன்னமே அதாவது உலகம் உண்டாவதற்கு முன்னமே இருக்கிறார். அவர் எல்லா மனிதரை போலவும், பிறந்தவர் அல்ல, இருந்தவர் வந்தார். மனித வடிவில்.
Delete//நான் நிறைய கிறிஸ்தவர்கள் வீட்டில் அந்தப் படத்தைப் பார்த்திருக்கிறேன். அப்ப அவங்க எல்லாம் கிறிஸ்தவர்கள் இல்லையோ?//
நான் அப்படி சொல்லவில்லை, அவர்கள் தெரியாமல் செய்கிறார்கள்,
அப்ப இயேசு பொறுக்குறதுக்கு முன்னே. எல்லாம் எந்த தெய்வம்?
Delete"பிழை திருத்தம் செய்யுங்க''
என்னோட வலைப்பூவைப் பார்த்திருப்பீர்கள். ஒரு கிறிஸ்தவப் பள்ளியில் பிள்ளையார் படம் போட்டதற்கே, கிறுக்கிக் கொடுத்தார்கள் நவீனத் தீண்டாமை - உதாரணம். பரவாயில்லை நீங்கள் எல்லா மதக் குறிகளையும் படமாகப் போட்டு அசத்தியிருக்கிறீர்களே.
ReplyDeleteசாரி! நண்பரே!
ReplyDeleteநான் வேண்டுமென்று இப்படி இட்டுவிட்டதாக தயவு செய்து எண்ண வேண்டாம். வேகமாகத் தட்டெழுதியதில் உண்டான பிழை. மன்னித்துக் கொள்ளுங்கள். இயேசு பிறப்பதற்கு முன்னால் என்று வந்திருக்க வேண்டும். பிழையாகிவிட்டது.