பிதா, குமாரன், பரிசுத்த ஆவி இதில் யார் கடவுள் ?
இது எனது நண்பருடைய கேள்வி, இக்கேள்வி அநேகருக்கு பதிலாக இருக்கலாம்.
பிதா, குமாரன், பரிசுத்த ஆவி என்று கிறிஸ்தவர்கள் வழிபடுவது, மூன்று தனித்தனி தெய்வங்கள் அல்ல, தேவன் திரித்துவமாக செயல்படுகிறார். இது சில கிறிஸ்தவர்களுக்கே சரியாக விளங்கிக்கொள்ள முடிய வில்லை, சிலர் யெகோவா மட்டும் என்று தனி ராஜ்யமன்றமாக செயல்படுகிறார்கள். சிலர் இயேசு மட்டும் என்று only jesus என்று சொல்லிக்கொள்ளுகிறார்கள். பரிசுத்த ஆவியானவர் மட்டுமே என்று செயல்படுகிறவர்களும் உண்டு.
இப்படி திரித்துவத்தை சரியாக விளங்கிக்கொள்ளாதவர்கள், அல்லது விளங்கிக்கொள்ள மறுப்பவர்கள்தான் இப்படி தனித்தனியாக செயல்படுகிறார்கள்.
வேதாகமத்திலே திரித்துவத்தை குறித்த நேரடி குறிப்புக்கள் இல்லை என்றாலும், ஆங்காங்கே சிதறி இருப்பதை, கவனமாக வேதாகமத்தை வாசித்தால் விளங்கிக்கொள்ள முடியும்.
இந்த செய்தியானது கேள்வி கேட்பவர்களுக்கு மட்டுமல்ல, சரியாக விளங்கிக்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறவர்களுக்கும்தான். வேதாகமமானது, கருகலான சில விஷயங்களையும் உள்ளடக்கி வைத்துள்ளது இதை எல்லாராலும் உடனடியாக விளங்கிக்கொள்வதென்பது சற்று கடினமான காரியம்தான் என்றாலும் திறந்த மனதோடு வாசிப்பவர்கள் எளிதில் அறிந்து கொள்வார்கள்.
மறுபடியுமாக தெளிவுபடுத்த விரும்புவது தேவன் ஒருவரே. ஆனால் திரித்துவத்தை இல்லை என்றும் சொல்ல முடியாது. மூன்றில் ஒன்றாக தேவன் செயல்படுவதை மறுக்கவும் முடியாது.
எப்படி என்று கேட்பவர்களுக்கு சில கேள்விகளோடு பதிலை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
மனிதன், சரீரமா, ஆவியா, ஆத்மாவா. மனிதனை சரீரம் என்று சொல்லலாமா ? ஆவிதான் என்று சொல்லலாமா? அல்லது ஆத்துமா என்று சொல்லலாமா? இப்படி மனிதனை தனத்தனியாக பிரித்து காண்பித்து விட முடியுமா? முடியும் என்றால், பிதா, குமாரன், பரிசுத்த ஆவி, இதில் யார் கடவுள் என்று பிரித்து கூறுவது எளிது. கேள்வி கேட்பவர்களே தயாரா?
ஆவி, ஆத்மா, சரீரம் என்னும் முக்கூட்டு கலவைதான் மனிதன். சரீரம் இல்லாவிட்டால் ஆவியோ, ஆத்மாவோ பூமியில் இயங்க முடியாது. அதே போல் ஆவியோ, ஆத்மாவோ இல்லாவிட்டால் சரீரம் பூமியில் இருந்து பயனில்லை.
மனிதன் தேவ சாயலாக படைக்கப்பட்டிருக்கிறான். என்று வேதாகமம் கூறுகிறது. மனிதன் என்ற மைய புள்ளி ஆத்மாவாக இருந்தாலும், பூமியில் வாழ மண்ணான (மண்ணிலிருந்து) சரீரம் (தேவனால்) உண்டாக்கப்பட்டு, சரீரம் இயங்க தேவன் தன் ஜீவ சுவாசத்தை (ஆவியை) கொடுத்தார். மனிதன் ஜீவ ஆத்துமாவானான் அதாவது பூமியில் ஆவி, ஆத்மா, சரீரம் என்னும் முக்கூட்டு கலவையுள்ள மனிதனானன்.
தேவ சாயலாக படைக்கப்பட்ட மனிதன் முக்கூட்டு கலவை என்றால், தேவனும் பிதா, குமாரன், பரிசுத்த ஆவி, என்னும் முக்கூட்டு கலவையாக செயல்படுகிறார்.முக்கூட்டு கலவை என்றால் மூன்று அல்ல, ஒன்றே. எப்படி ஆவி, ஆத்மா, சரீரம் என்ற முக்கூட்டு கலவையை, “மனிதர்கள்’’ என்று சொல்லாமல், “மனிதன்’’ என்று ஒருமையில் சொல்லுகிறோமோ, அப்படித்தான். தேவன் மூன்றில் ஒன்றாக அதாவது திரித்துவமாக இருக்கிறார்.
என்ன பதில் இது! கிறிஸ்தவர்களே உங்களுக்காவது ஏதாவது புரிகிறதா? வேதாகமத்தில் இல்லை ஆதாரம் என்கிறார். அப்புறம் வேதாகமத்தில் ஆங்காங்கே சிதறிக் கிடக்கின்றன என்கிறார். அந்தச் சிதறலையும் காண்பிக்க மாட்டேன் என்கிறார். மனிதன் முக்கூட்டுக் கலவை என்கிறார். கடவுள் அதேபோல்தான் என்கிறார். எனக்கு ஒன்றும் விளங்கவில்லை. உங்களுக்குப் புரிந்தால் சரிதான்.
ReplyDelete