Bread of Life Church India

பெயரை மாற்றுவதா கிறிஸ்தவம் ?



பேர மாத்துரதும் ஊர மாத்திக்கிறதும் கிறிஸ்தவமல்ல, மனதை மாற்றிக்கொள்வதுதான், கிறிஸ்தவம்  கிறிஸ்தவம் என்று எவ்வளவு உரக்கச் சொன்னாலும் இன்னும் சிலருக்கு புரியவே இல்லை. தங்கள் மதத்தை எப்படியாகிலும் உயர்த்தி காண்பித்து விட வேண்டிடும் என்று போராடினால் அதற்கு நாம் ஒன்றும் செய்ய முடியாது.

ஒருவருக்கே அம்மா ஒரு பெயர் வைத்து கூப்பிடுவார், அப்பா ஒரு பெயர் வைத்து கூப்பிடுவார், இப்படியே அம்மா வீட்டாருக்கு ஒரு பெயர், அப்பா வீட்டாருக்கு ஒரு பெயர், உடன் பிறந்தவர்களுக்கு ஒரு பெயர், நண்பர்களுக்கு ஒரு பெயர், ஸ்கூல்ல ஒரு பெயர், காலேஜ்ல ஒரு பெயர், அரசாங்க பதிவேட்டில் ஒரு பெயர், செல்லம ஒரு பெயர், அப்பாட இன்னும் இருக்குங்க. இது பெருமையோ, இழிவோ இல்லைங்க ஒவ்வொருவருடைய தனிப்பட்ட விருப்பம்.


ஆகவே எந்த பெயரில் அழைக்கப்படுகிறோம் என்பது இல்லங்க  விஷயம், “புதிய இருதயமும்’’ புதிய ஆவியும் உடையவர்களாய், வைக்கப்பட்டுள்ள பெயருக்கு ஏற்றார் போல் வாழ்வதும், தங்கள் பெயரை காப்பாற்றுவதும், தங்களுக்கு பெயர் வைத்தவர்களின் பெயரை காப்பாற்றுவதுமே முக்கியம்.

     மேலும், நாம் இந்துவா? முஸ்லீமா? கிறிஸ்தவனா ? அல்லது மற்ற எண்ணற்ற மதங்கள் இருக்கிறதே அதில் ஒன்றோ என்பது முக்கிய மல்ல, உலகமெங்கும் ஒரே கடவுள்தான். என்பதை புரிந்து கொள்ள வேண்டும். 

       கிளை கடவுள், சிறு கடவுள், பெருங்கடவுள் என்று, நாமாக தேர்ந்தெடுப்பதும், அல்லது நமக்கு பிடித்ததும், பிடித்த தெய்வத்தை வழிபடுவது எல்லாம் உண்மை ஆகி விடுமா ? இல்லங்க, அந்த மெய் பரம்பொருளை சரியாக அறிந்து வழிபட வேண்டும். இதைத்தான் கிறிஸ்தவம் வலியுறுத்தி கூறுகிறது.

      கிறிஸ்தவர்களில் சிலர் செய்யும் தவறை குறித்து, ஒரு கிறிஸ்தவ தலைவர் இப்படியாக சொல்லுகிறார் “இந்திய கிறிஸ்தவர்களின் சிலருடைய எண்ணங்கள், இந்திய பெயர்களெல்லாம், வேறுமதத்தின் பெயர் என்றும், மேலே நாட்டு பெயர்கள் எல்லாம் கிறிஸ்தவ பெயர்கள் என்றும், மேலை நாட்டுப் பெயர்கள் இந்திய நாட்டு பெயர்களை விட மேலானவை என்று  நினைத்து கொள்கின்றனர். இது தவறு’’

     இப்படி சிலர் செய்வதால்தான் மாற்று மதத்தில் இருக்கும் சிலருக்கு கிறிஸ்தவம் இந்தியாவில் அந்நியமாக தெரிகிறது. அது மட்டுமல்ல தாங்கள்தான் மேலானவர்கள், மண்ணின் மைந்தர்கள் என்பது போல காண்பிக்கவும், மனம் மாறின கிறிஸ்தவர்களை வெறுக்கவும் வைக்கிறது''.என்று குறிப்பிடுகிறார்.
     மாட சாமியாகவோ, குப்புசாமியாகவோ, கந்தசாமியாகவோ, எந்த சாமியாக வேண்டுமானாலும் இருக்கலாம் தப்பில்லை, ஆனால் நல்ல சாமியா இருக்க வேண்டும், அது மட்டுமல்ல நல்ல சாமியா, நம்மை படைச்ச சாமியா, என்று பார்த்து வழிபட வேண்டும்.  நம்மை படைக்காததும், நாம் உருவாக்கியதும், சிறு தெய்வமும் இல்ல, பெரும்
தெய்வமும்  இல்ல  புரிந்து கொள்ளுங்கள்.
      

2 comments:

  1. எனக்கு என்னுடைய வலைப்பூவில் மறுமொழி இட்டிருந்தீர்கள். இருந்தாலும் உங்கள் வலைப்பூவிலும் யாருக்கு மறுமொழியாக இந்தப் பதிவை இடுகிறீர்கள் என்று எனதுநான் இந்துவா? என்ற பதிவுக்கு நேரடியாகச் செல்ல ஒரு சுட்டியை வைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். உங்கள் வாசகர்களும் நான் என்ன கருத்தைச் சொல்கிறேன் என்று புரிந்து கொள்ள வசதியாக இருந்திருக்கும். உங்கள் பதிவிற்கு மறுமொழி அடுத்த மறுமொழியாக இடுகிறேன். உங்களைப் போன்றோர் என்னை மதித்து எனக்கு மறுமொழி இடுவதைப் பெருமையாகக் கொள்கிறேன். நன்றி!

    ReplyDelete
  2. நான் இந்தியன்! கிறிஸ்தவம்? என்ற எனது புதிய பதிவு உங்களுக்கு பதிலாக இருக்கும் என்று நம்புகிறேன்.

    ReplyDelete