எல்லாம் நன்மைக்கே...
கடந்த சில ஆண்டுகளுக்குமுன்
இயேசு கிறிஸ்துவை அறியாத குடும்பத்தில் பிறந்து
வளர்ந்த வாலிப சகோதரனுக்கு சுவிசேஷம்
அறிவிக்கப்பட்டது.
சுவிசேஷத்தை ஆரம்பத்தில் அசட்டை செய்த அந்த
வாலிபர் நாட்கள் செல்ல செல்ல
சுவிசேஷத்தினால் ஈர்க்கப்பட்டு, இயேசுவே உண்மையான கடவுள்
என்பதை அறிந்து கொண்டார்.
சுவிசேஷ கூட்டங்களில் கலந்து
கொண்டார், சபையின் ஆராதனை ஐக்கியத்திலும்
பங்கு பெற்று வந்தார். அவர்
இயேசுவை ஏற்றுக்கொண்டதின் நிமித்தமாக குடும்பத்தில் பலவிதமான எதிர்ப்புக்களையும் சந்தித்தார்.
இருப்பினும் இயேசுவே உண்மையான கடவுள்
என்பது உள்ளத்தில் ஆழமாக பதிந்து விட்டதால்
எந்த எதிர்ப்புக்களும் ஒன்றும் செய்திட முடிய
வில்லை. வந்த எதிர்ப்புக்கள் வாலிபர்
விசுவாசத்தில் மேலும் வளர்வதற்கு உதவியாகவும்,
இயேசு கிறிஸ்துவை இன்னும் உறுதியாக பற்றிக்கொள்ளவும்
செய்தன.
நாட்கள் சென்றன. வாலிபர்
தனது கல்லூரி படிப்பை நிறைவு
செய்தார். படித்த
படிப்புக்கான வேலைக்காக காத்திருந்தார். ஜெபித்தார். பல மாதங்கள் உருண்டோடின,
ஆனால் வேலை கிடைக்க வில்லை.
மிகவும் சோர்ந்து போன நிலையில் கர்த்தரை
நம்பி வந்திருக்கிற எனக்கு கர்த்தர் ஒரு
நல்ல வேலையை கொடுக்க கூடாதா?
என்று சபையின் போதகரிடத்தில் கேட்பார்.
“கர்த்தர்
நிச்சயமாக நல்ல வேலையை உங்களுக்கு
தருவார். சகோதரனே, கர்த்தரை தேடுகிறவர்களுக்கு ஒரு நன்மையும் குறைவுபடாது’’ என்று
சபையின் போதகரும் வாலிபருக்கு கர்த்தரின் வார்த்தைகளை சொல்லி, ஜெபித்து, “கர்த்தருக்காக
காத்திருங்கள். கர்த்தர் உங்களுக்கு நிச்சயமாக அற்புதங்களை செய்வார்’’ என்று விசுவாசத்தில் பெலப்படுத்தி
நடத்துவார்.
நாட்கள் செல்ல செல்ல
வாலிபரின் இரட்சிக்கப்படாத குடும்பத்தினர் வாலிபரை மிகவும் நெருக்க
ஆரம்பித்தனர். “எந்த ஒரு வேலைக்கும்
போகாமல் இப்படி இயேசு, இயேசு
என்று சுற்றிக்கொண்டிருக்கிறாயே, இதனால்தான் உனக்கு வேலை கூட
கிடைக்க வில்லை’’ என்று பேசுவது நாளுக்கு
நாள் அதிகமாக பதில் பேச
முடியாமல் வாலிபர் தனிமையில் கண்ணீருடன்
ஜெபிக்க ஆரம்பித்தார்.
நேரம் நல்ல நேரம்
நேரங்களை பயன்படுத்துவதில் அநேகர் குறையுள்ளவர்களாகவே
இருக்கிறோம். குறிப்பிட்ட நேரத்தில் சரியாக செயல்படுவதில் வேகம் காட்டுவதை விட அந்த நேரத்தை அலட்சியப்படுத்துவது நம்முடைய சுபாவமாகவே
இருப்பது தான் வேதனை.
காலத்தையும் நேரத்தையும் படைத்த தேவன் நேரத்தில்
கவனமுள்ளவராகவே இருக்கிறார். எல்லாவற்றையும் அதினதின் நேரத்தில் மிகவும் சரியாக செய்கிறவர்,
அதே வேளையில் அந்த நேரத்தை தன்னுடைய பிள்ளைகளும் சரியாக மதித்து செயல்பட வேண்டும் என்றும்
விரும்புகிறார்.
மனிதர்கள் நல்ல நேரம் என்றும், கெட்ட நேரம்
என்றும் மணித்துளிகளை பிரித்து விட்டு, செயல்பட வேண்டிய நேரத்தில் இது கெட்ட நேரம்
என்று செயல்படாமல் இருந்து கொண்டு, என்னுடைய வாழ்வில் உயர்வே இல்லை எனக்கு நேரமே சரியில்லை
என்று காலத்தின் மீதும், நேரத்தின் மீதும் பழி சுமத்திக்கொண்டிருப்பவர்கள். நான் தான்
நேரத்தை சரியாக பயன்படுத்த வில்லை என்ற குற்றமே
தெரியாமல் இருப்பதுதான் வேதனையின் உச்சம்.
கைவிடாத கர்த்தர்
சில ஆண்டுகளுக்கு முன்
சுவிசேஷம் அறியாத இடத்தில் கர்த்தராகிய
இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறிவிக்கும்படியாக தேவனுடைய அழைப்பின்படி, தேவ ஊழியர் ஒருவர்
தனது குடும்பத்துடன் சென்றார்.
குடிசை வீட்டில் தங்கி
பொருளாதார நெருக்கடியின் மத்தியில் தேவனுடைய வார்த்தையை அறிவித்து, தனக்கு கொடுக்கப்பட்ட ஊழியத்தை
செய்து வந்தார்.
இவ்வேளையில் சாப்பிட எதுவும் இல்லாமல்
குடும்பத்துடன் மிகவும் கஷ்டப்பட்டு வந்தும்,
ஒருவரிடமும் தனது தேவையை குறித்து
சொல்லாமல் ஊழியத்தை செய்தார்.
மதிய வேளை இரண்டு
தினமாக சாப்பிடாமல் பசி மிகவும் வாட்ட
குடும்பத்துடன் அமர்ந்து, கர்த்தரை நோக்கி ஜெபிக்க ஆரம்பித்தார்கள்.
“மனிதர்களிடம் சென்று எங்கள் தேவைகளை
சொல்ல முடியாது, நீங்கள் தான் எங்களின்
தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும்’’ என்று
ஜெபித்தார்கள்.
அவர்கள் ஜெபித்துக்கொண்டிருக்கிற அந்த வேளையில்
வீட்டின் கூரைகளின் ஓட்டைகள் வழியாக பொட்டலங்கள் அவர்கள்
இருந்த இடத்தில் விழுந்தது.