Bread of Life Church India

"ஜீவ அப்பம்'' (ஏப்ரல் 2015) மாத இதழ்

கிறிஸ்துவுக்குள் அன்பான ஜீவ அப்பம் இணைய நண்பர்களுக்கு,  நமது ஆவிக்குரிய வாழ்வுக்கு உறுதுணையாக, நமது விசுவாச வாழ்வுக்கு தேவையான செய்திகளுடன், கிறிஸ்துவுக்குள் நாம் வளரவும், நிலைத்து நிற்கவும், "ஜீவ அப்பம்'' மாத இதழ் வெளி வந்து கொண்டிருக்கிறது.


நீ என்னுடையவன்



கர்த்தர் சொல்லுகிறதாவது: பயப்படாதே; உன்னை மீட்டுக்கொண்டேன்; உன்னைப் பேர்சொல்லி அழைத்தேன்; நீ என்னுடையவன்’’ (ஏசாயா 43:1)
தேவன் இஸ்ரவேல் மக்களுக்கு தந்த வாக்குத்தத்தங்கள் எல்லாவற்றையும் நிறைவேற்றிக்கொடுத்தார், ஆவிக்குரிய இஸ்ரவேலர்களாய் இருக்கிற நாமும் இந்த வாக்குத்தத்தங்களை கிறிஸ்து இயேசுவுக்குள் நமக்கு சொந்தமாக்கிக்கொள்ளலாம்.
இந்த உலகத்தின் பாவ அடிமைத்தனத்தில் இருந்து நம்மை மீட்டெடுத்து, தம்முடைய வாக்குதத்தங்களுக்கு சுதந்திரவாளிகளாக்கிய தேவனுக்கே மகிமை உண்டாவதாக.
நம்மை பெயர் சொல்லி, அழைத்து, தம்முடைய நாமம் தரிப்பித்து, நம்மை அதிகாரமுள்ளவர்களாய் இந்த பூமியிலே வாழ வைத்திருக்கிற தேவன் சொல்லுகிறார்.

நம் கரங்கள் இணைந்தால்......

கிறிஸ்துவுக்குள் மிகவும் அன்பான ஜீவ அப்பம் குடும்ப அங்கத்தினர்களுக்கு இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அன்பான வாழ்த்துக்கள்.
ஜீவ அப்பம் மாத இதழ் மூலமாக உங்களுடன் பேசும்படியாக உதவி செய்து வரும் தேவனை நன்றி நிறைந்த இருதயத்துடன் ஸ்தோத்தரிக்கிறேன்.
ஒவ்வொரு மாதமும் தேவைகளை சந்தித்து, இந்த ஊழியங்கள் சிறப்பாக நடைபெறவும், மாத இதழ் வெளியிடவும், அநேக ஆத்துமாக்களை சந்தித்து, சத்தியத்தை அறிவிக்கவும், இரக்கம் பாராட்டி வரும் தேவாதி தேவனை துதிக்கிறேன்.
அன்பு தேவனுடைய பிள்ளைகளே, நம்முடைய வாழ்வு, ஏனோ, தானோ என்ற வாழ்வு அல்ல, அர்த்தம் நிறைந்த வாழ்வு, நோக்கம் இல்லாமல் தேவன் நம்மை தெரிந்து கொள்ள வில்லை, திட்டமில்லாமல் நம்மை இரட்சிக்கவும் இல்லை.

பலமற்றவர்களின் பலம்



என் கிருபை உனக்குப்போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும் என்றார். ஆகையால், கிறிஸ்துவின் வல்லமை என்மேல் தங்கும்படி, என் பலவீனங்களைக்குறித்து நான் மிகவும் சந்தோஷமாய் மேன்மைபாராட்டுவேன்
அந்தப்படி நான் பலவீனனாயிருக்கும்போதே பலமுள்ளவனாயிருக்கிறேன்; ஆகையால் கிறிஸ்துவினிமித்தம் எனக்குவரும் பலவீனங்களிலும், நிந்தைகளிலும், நெருக்கங்களிலும், துன்பங்களிலும், இடுக்கண்களிலும் நான் பிரியப்படுகிறேன்” (2 கொரி 12:9,10)
இந்த பூமியில் வாழும் நாட்களில் பல வேளைகளில் பெலவீனங்கள் தாக்குகிறது. அது சரீரத்திலும், ஆத்துமாவிலும் உண்டாகிறது. பெலவீனம் இல்லாமல் வாழ்கிறவர்கள் குறைவு, பெலவீனத்தை மேற்கொண்டு வாழ்கிறவர்கள் அதிகம். பெலவீனங்கள் வருகிறபொழுது. சந்தேகங்களும் உடனடியாக கூடவே வந்து விடுகிறது.