Bread of Life Church India

இதுவே அடையாளம்

 ஆடு மேய்க்கிறவர்களுக்கு இயேசு கிறிஸ்துவின் பிறப்பின் நற்செய்தியை அறிவித்து தேவ தூதன்.``பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தியிருக்கக் காண்பீர்கள்; இதுவே உங்களுக்கு அடையாளம் என்றான்'' <லூக்கா 2:12>.
    இயேசு கிறிஸ்து பிறந்திருக்கிறார் என்பதற்கு ஆடு மேய்ப்பவர்களுக்கு அடையாளம் கொடுக்கப்பட்டது. அவர் எந்த ஊரிலே, எந்த இடத்திலே எப்படி இருக்கிறார் என்பதும் அவர்களுக்கு துல்ஙியமாக அறிவிக்கப்பட்டது.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தேவனாகிய கர்த்தர் இயேசு கிறிஸ்து இந்த பூமியிலே வந்த செய்தி மனித குலத்திற்கே நல்ல செய்தி.
இந்த நல்ல செய்தியை கேட்பது மட்டும் அல்ல, வாழ்க்கையில் எல்லோரும்  பெற்றுக் கொள்ளவேண்டும். இதை எல்லா மனிதருக்கும் அறிவிக்க வேண்டும். என்பதே தேவனுடைய விருப்பமாக இருக்கிறது.

வெற்றியின் இரகசியம்

   
    கிறிஸ்துவுக்குள் நாம் வாழும் பொழுது தேவன் நமக்கு வெற்றியை கொடுக்கிறார். ஆனால் நாம் தான் இந்த வெற்றி வாழ்க்கையை  அனுதினமும் நம்முடைய வாழ்வில் நடைமுறைப் படுத்த வேண்டும்.
    அதற்கு தேவனுடைய வசனங்கள் நமக்கு வழிகாட்டியாக இருக்கிறது.
    வெற்றி வாழ்க்கை சாத்தியமே, என்ற தலைப்பில் செயல் படுத்த வேண்டிய அவசியம் என்ற குறிப்பின் கீழ்  இப்போது நாம் தியானிக்கும் பொருள். அர்ப்பணிப்பின் ஆழம்.
    கிறிஸ்துவுக்குள்ளாக நம்மை எந்த அளவுக்கு அர்ப்பணிக்கிறோமோ, அந்த அளவுக்கு நம்முடைய வெற்றி வாழ்க்கை சாத்தியமாகும்.
    அர்ப்பணிப்பின் அழம் அதிகமாகும் போது, ஆசீர்வாதங்களின் அளவும் அதிகமாகும். இதுதான் வெற்றி வாழ்வின் இரகசியம்.
    இதைக்குறித்து நாம் விரிவாக வேதாகம வசனங்களின் அடைப்படையில் தியானிப்போம்.
    லூக்கா 17ம் அதிகாரம், 7முதல் 10 வரை உள்ள வேத பகுதியை நாம் வாசித்துப் பார்க்கும் போது. உவமையாக ஒரு சம்பவத்தை இயேசு கிறிஸ்து  விவரித்துக் காண்பிக்கிறார்.