"ஜீவ அப்பம்'' (அக்டோபர் 2014) கிறிஸ்தவ மாத இதழ்
கிறிஸ்துவுக்குள் அன்பான ஜீவ அப்பம் இணைய நண்பர்களுக்கு, நமது ஆவிக்குரிய வாழ்வுக்கு
உறுதுணையாக, நமது விசுவாச வாழ்வுக்கு தேவையான செய்திகளுடன்,
கிறிஸ்துவுக்குள் நாம் வளரவும், நிலைத்து நிற்கவும், "ஜீவ அப்பம்'' மாத
இதழ் வெளி வந்து கொண்டிருக்கிறது.
எல்லாரும் இலவசமாக படிக்கும் வண்ணமாக மின் இதழாகவும் (PDF) இணையத்தில் கொடுக்கப்படுகிறது. இந்த மாத ( அக்டோபர் 2014) ஜீவ
அப்பம் மாத இதழை இலவசமாக பதிவிறக்கம் செய்து படியுங்கள்.
மனந்திறந்து உங்களுடன்
அன்பு ஜீவ அப்பம்
இணைய வாசகர்களே, உங்கள் அனைவருக்கும் கிறிஸ்து
இயேசுவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள்.
நமது ஜீவ அப்பம்
வலைபூ தேவனுடைய கிருபையினால், தொடர்ந்து வருகிறது. இந்த வலைபூவின் மூலமாக இணையத்தில் ஆவிக்குரிய
சத்தியங்களை எழுதவும், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இரட்சிப்பின் சுவிசேஷத்தை அறிவிக்கவும், இணையத்தின் வழியாக தேவனுடைய ஊழியங்கள்
செய்து வருகிறோம்,.
சவாலுக்கு சவால்
வாழ்க்கையில் போராட்டம் என்பது
தவிர்க்க முடியாதது. நம்முடைய வாழ்க்கையில் வருகின்ற போராட்டங்கள் நம்மைத் தேவனோடு
இன்னும் ஐக்கியப்படவும், நாம் ஆவிக்குரிய வாழ்வில் வளர்ச்சியடையவுமே தேவன்
அனுமதிக்கிறார். ஆனால் போராட்டமான சூழ்நிலையில் நாம் சோர்ந்து போகிறோம், கலங்குகிறோம். என்ன செய்வது என்று
தெரியாமல் கவலைப்படுகிறோம்.
நம்முடைய வாழ்வில் போராட்டங்களை
அனுமதிக்கிற தேவன் நம்மைத் தனியாக விட்டு விட்டு வேடிக்கை பார்க்கிறவர் அல்ல, அப்படிப்பட்ட சூழ்நிலைகளில்
நமக்கு உதவி செய்து, நம்மை
உயர்த்துகிறவராக இருக்கிறார்.