Bread of Life Church India

கிறிஸ்தவ அடிப்படை உபதேசம் என்பது என்ன?


பாவத்தில் வீழ்ந்த மனித இனத்தை தூக்கி யெடுக்கும் படியாகவும்
, இரட்சித்து மறுரூப படுத்தி, மறுவாழ்வு கொடுக்கும் படியாகவும் இயேசு கிறிஸ்து வானவர் வாக்குத்தத்தம் பண்ணப்பட்டு, முன் அறிவிக்கப் பட்டு தேவனாயிருந்த அவர் மனிதனாக பிறந்து,பாடுபட்டு, மரித்து அடக்கம் பண்ணப்பட்டு மூன்றாம் நாளிலே உயிரோடு எழுந்தார்.

கிறிஸ்தவத்தின் அடிப்படை அஸ்திபார உபதேசம் ``மரித்த இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்தார்'' இவ் விசுவாசத்திற்குள் வரும் நபர் இயேசுவின் மரணத்தின் சாயலில் இணைக்கப்பட்டு,பாவத்திற்கு மரித்து, இயேசு கிறிஸ்து உயிரோடு எழுந்தது போல நீதிக்கு பிழைக்கிறார் இது விசுவாசத்தினாலே உண்டாகும் உயிர்த்தெழுதல்.


இவ்வித விசுவாச வாழ்வுக்குள்ளாக இருந்து கிறிஸ்துவுக்குள் மரிக்கும் பொழுது இயேசு கிறிஸ்துவின் வருகையிலே எடுத்துக்கொள்ளப்படுவோம், கிறிஸ்துவுக்குள்ளானவர்களாகிய நம்முடைய வாழ்க்கையிலே தணியாத தாகமாக எப்போதும் இருக்க வேண்டியது ``இயேசுகிறிஸ்துவின் வருகையில்  நான் எடுத்துக்கொள்ளப்படவேண்டும்'' என்று அதை நோக்கியே வாழவேண்டும்.

இந்த அஸ்திபாரத்தின் மேல் கட்டப்படும் கிறிஸ்தவனின் வாழ்க்கையில் இந்த விசுவாசம் நாளுக்கு நாள் விருத்தியடைந்து வளர ``ஐக்கியம்''அவசியம் இந்த ஐக்கியம்தான் ``பாவத்திலிருந்து வெளியே அழைக்கப்பட்டவர்களின் கூட்டமாக`` கிறிஸ்துவின் சரீரமான சபையாக இயங்கிக்கொண்டிருக்கிறது.

கிறிஸ்துவின் சபையாகி ஐக்கியத்தில் இணைந்தபின்``இயேசு கிறிஸ்து ஜெயித்தது போல நானும் ஜெயிப்பேன்'' என்று பரிசுத்த ஆவியானவரின் ஆளுகைக்குள் இருந்து, பரிசுத்த ஆவியானவரின் பெலத்தோடு ஜெயமுள்ள வாழ்வு வாழ்வதற்கு அனுதினமும் பிரயாசப்பட்டு ஜீவிக்க வேண்டும்.

கிறிஸ்துவுக்குள்ளானவனின் கடமைகள் உண்டு, வாரம் ஒரு முறையாகிலும் தவறாமல் ஆராதனை ஐக்கியத்தில் இணையவேண்டும், அனுதினமும் ஜெபத்திலும், வேதவாசிப்பிலும் தியானத்திலும் வளர வேண்டும்.இது விசுவாச வாழ்வை கட்டியெழுப்பிக் கொண்டே இருக்கும்.
``மனிதனின் பாவத்திற்காக மரித்து,இயேசு உயிரோடு எழுந்தார்''என்று பாவத்தின் அழுத்தத்திலும் வாழ்க்கையில் நிலையில்லாமலும் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒவ்வொருவருக்கும் இந் நற்செய்தியை அறிவிப்பது ஒவ்வொரு கிறிஸ்தவனின் கடமையாகும்.

மேலும் இயேசுவானவர் கற்பித்துக் கொடுத்திருக்கும் ,எல்லோரிடமும் அன்பு கூறவேண்டும். ,எல்லோரையும் நேசிக்க வேண்டும். யாவரோடும் சமாதானமாயிருக்க வேண்டும். மற்றவர்கள் தவறு செய்தாலும் கிறிஸ்து நமக்கு மன்னித்தது போல நாமும் பிறரை மன்னிக்கவேண்டும். நற்செய்தி எங்கும் பரவி செல்ல ,ஊழியத்திலே பங்கு பெறவேண்டும் ஊழியங்களுக்கு கொடுக்க வேண்டும்.

0 comments:

Post a Comment