Bread of Life Church India

இயேசுவும் கடவுளா ?

சிலுவையில்லா இயேசு !!  என்ற நமது கட்டுரைக்கு நமது அன்பு சகோதரர் இட்டுள்ள கருத்து பதிவும், நமது பதிலும்.

சிலுவையில் தொங்கிக் கொண்டிருக்கும் போதும் "பிதாவே! இவர்களை மன்னியும். தான் என்ன செய்கிறோம் என்றறியாதிருக்கிறார்கள்" என்று மன்றாடும் ஒரு நல்லவரை கடவுளாக ஏற்றுக் கொள்வதில் இந்து மதத்திற்கு எந்த இடர்பாடும் இருக்காது. நீங்கள் ஒவ்வொரு இந்து வீடாகச் சென்று பாருங்கள். எத்தனை வீடுகளில் இயேசு படம் இருக்கிறதென்று. இயேசு எங்களை மதம் மாறச் சொல்லவில்லை. அவர் அப்படி நினைத்திருந்தால் எப்போதோ எங்களை மாற்றியிருப்பார். "நீ நன்றாயிருக்கிறாய் மகனே! உலகத்திற்கு வழிகாட்டு" என்றுதான் ஒரு இந்துவிடம் இயேசு சொல்வார் என்று நான் நினைக்கிறேன்.

அதுக்கு நான் கிறிஸ்தவனாக வேண்டிய அவசியமே இல்லையே.
நான் இயேசுவை ஏற்கிறேன்
நீங்கள் இயேசுவும் கடவுள் என்று சொல்லுகிறீர்கள், அப்படியல்ல இயேசுவே கடவுள் என்று சொல்லிப்பாருங்கள். முப்பத்து முக்கோடி தேவர்களையும் வழிபடுகிற உங்களுக்கு, கூட இன்னொன்றையும் சேர்த்து கொள்வதொன்றும், கடினமான விஷயம் இல்லையே.
வந்தவனெல்லாம் கடவுள் அல்ல, இறந்தவனெல்லாம் தேவனுமல்ல, உலகெங்கும் ஒரே ஒரு கடவுள் மட்டுமே உண்டு அந்த கடவுள் யாரென்று அறிந்து கொள்ள உண்மையில் உங்களுக்கு ஆர்வம் இருக்குமானால், நீங்கள் போட்டுள்ள வட்டத்திற்கு வெளியில் வந்து திறந்த மனதோடு தேடிப்பாருங்கள். நீங்கள் கண்டு கொள்ளுவீர்கள்.

‎"இயேசு கிறிஸ்து இந்த பூமிக்கு வந்ததும், சிலுவையில் இயேசு கிறிஸ்து தொங்கியதும்''   மனிதனை பாவத்திலிருந்து மீட்கும் படியாக வந்த நோக்கத்தை விளக்குகிறது. இதைத்தான், எல்லாராலும் ஏற்க (விசுவாசிக்க) கடினமாக இருக்கிறது.
இயேசுவும் மதம் மாற சொல்லவில்லை, நாங்களும் மதம் மாற சொல்ல வில்லை, நீங்க ஏன் கிறிஸ்தவத்தை மதமாக பார்க்க வேண்டும், கிறிஸ்தவம் மதமே இல்லை.

மனிதனின் பாவம் போக்கப்பட இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து ஏற்றுக்கொண்டு, அவருடைய அடிச்சுவடுகளை பின் பற்றும் பொழுது நித்திய வாழ்வுக்கு பங்குள்ளவர்களாகிறோம்.

இங்கு மதத்திற்கு வேலையே இல்லையே, இயேசுவும் மதத்தை உருவாக்க இப்பூமிக்கு வரவில்லை, பூமியில் மதம் இருக்கிறது, கிறிஸ்தவ மதமும் இருக்கிறது. ஆனால் "அந்த மதத்திற்கும்'' கிறிஸ்துவுக்கும், எங்களுக்கும்  எந்த சம்பந்தமும் இல்லை.
மேலும் இயேசுவுக்கு படமே இல்லையே, அந்த படத்தை வைத்திருந்து என்ன பயன், வைத்திராமல் போனால் என்ன இழப்பு, கிறிஸ்தவன் என்பதற்கு அடையாளம், இயேசு என்று சொல்லப்படும் அந்த படமல்ல, அந்த படத்தை வைத்திருப்பவரெல்லாம், இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டவர் என்பதும் அர்த்தமல்ல.
கிறிஸ்தவர்கள், அதாவது கிறிஸ்துவை பின்பற்றுகிற எங்கள் வீடுகளில் இயேசுவின் படம் என்று சொல்லப்படுகிற படத்தை  நாங்கள்  வைத்திருப்பதில்லை.

தொடரும்........

பிதா, குமாரன், பரிசுத்த ஆவி இதில் யார் கடவுள் ?

 
 





“பிதா, குமாரன், பரிசுத்த ஆவி இதில் யார் கடவுள்’’

இது எனது நண்பருடைய கேள்வி, இக்கேள்வி அநேகருக்கு பதிலாக இருக்கலாம்.


பிதா, குமாரன், பரிசுத்த ஆவி என்று கிறிஸ்தவர்கள் வழிபடுவது, மூன்று தனித்தனி தெய்வங்கள் அல்ல, தேவன் திரித்துவமாக செயல்படுகிறார். இது சில கிறிஸ்தவர்களுக்கே சரியாக விளங்கிக்கொள்ள முடிய வில்லை, சிலர் யெகோவா மட்டும் என்று தனி ராஜ்யமன்றமாக செயல்படுகிறார்கள். சிலர் இயேசு மட்டும் என்று only jesus என்று சொல்லிக்கொள்ளுகிறார்கள். பரிசுத்த ஆவியானவர் மட்டுமே என்று செயல்படுகிறவர்களும் உண்டு.

இப்படி திரித்துவத்தை சரியாக விளங்கிக்கொள்ளாதவர்கள், அல்லது விளங்கிக்கொள்ள மறுப்பவர்கள்தான் இப்படி தனித்தனியாக செயல்படுகிறார்கள்.
வேதாகமத்திலே திரித்துவத்தை குறித்த நேரடி குறிப்புக்கள் இல்லை என்றாலும், ஆங்காங்கே சிதறி இருப்பதை, கவனமாக வேதாகமத்தை வாசித்தால் விளங்கிக்கொள்ள முடியும்.

பெயரை மாற்றுவதா கிறிஸ்தவம் ?



பேர மாத்துரதும் ஊர மாத்திக்கிறதும் கிறிஸ்தவமல்ல, மனதை மாற்றிக்கொள்வதுதான், கிறிஸ்தவம்  கிறிஸ்தவம் என்று எவ்வளவு உரக்கச் சொன்னாலும் இன்னும் சிலருக்கு புரியவே இல்லை. தங்கள் மதத்தை எப்படியாகிலும் உயர்த்தி காண்பித்து விட வேண்டிடும் என்று போராடினால் அதற்கு நாம் ஒன்றும் செய்ய முடியாது.

ஒருவருக்கே அம்மா ஒரு பெயர் வைத்து கூப்பிடுவார், அப்பா ஒரு பெயர் வைத்து கூப்பிடுவார், இப்படியே அம்மா வீட்டாருக்கு ஒரு பெயர், அப்பா வீட்டாருக்கு ஒரு பெயர், உடன் பிறந்தவர்களுக்கு ஒரு பெயர், நண்பர்களுக்கு ஒரு பெயர், ஸ்கூல்ல ஒரு பெயர், காலேஜ்ல ஒரு பெயர், அரசாங்க பதிவேட்டில் ஒரு பெயர், செல்லம ஒரு பெயர், அப்பாட இன்னும் இருக்குங்க. இது பெருமையோ, இழிவோ இல்லைங்க ஒவ்வொருவருடைய தனிப்பட்ட விருப்பம்.