Bread of Life Church India

En Jeevanulla Naatkalellaam | New Christian Worship Song | Kirubai song

 

 

 

 

 

 

என் ஜீவனுள்ள நாட்களெல்லாம்
உம்மை துதித்திடுவேன்
உம் நாமத்தையே சொல்லி சொல்லி
உயர்த்தி மகிழுவேன்
ஜீவனை பார்க்கிலும் உம் கிருபை நல்லது
உம் கிருபையால் என்னை நிரப்பிடுமே

வரண்டதும் விடாய்த்ததும் தண்ணீரற்ற நிலத்தில்
என் ஆன்மா உம்மீதே தாகமாய் என்றுமே உள்ளதே
என் தேவனே உம்மை ஆதிகாலமே
தினம் தினம் தேடுவேன்
தினம் தினம் தேடுவேன்

நிணத்தையும் கொழுப்பையும் உண்டது போலவே
என் மனம் உம் மீதே திருப்தியாகி தினமும் மகிழுதே
என் துணையாளரே உம்மில் களிகூரவே
உம் மார்பில் சாய்ந்திடுவேன்
உம் மார்பில் சாய்ந்திடுவேன்

படுக்கையிலும் உம்மை நினைக்கிறேன்
இராச்சாமத்தில் தியானிப்பேன்
உமது மகிமை வல்லமையை கண்டு துதிக்கிறேன்
உம்முகமே தினம் கண்டிடவே ஆவலாய்
உள்ளதே ஆவலாய் உள்ளதே


Un Nambikkai Veen Pogathu | New Christian Song



 

 







உன் நம்பிக்கை வீண்போகாது

உன் வேண்டுதல் கேட்கப்படும்
நீ விசுவாசத்தால் தேவ மகிமை கண்டிடுவாய்
உன் துக்கமெல்லாம் சந்தோஷமாய் மாறிடுமே

கலங்கி நிற்காதே எதற்கும் சோர்ந்து போகாதே
கர்த்தர் இயேசு உன்னோடு மறந்து விடாதே

சிறுமைபட்ட நாட்களுக்கும்
துன்பத்தை கண்ட வருஷங்களுக்கும்
சரியாக உன்னை மகிழ்ச்சியாக்குவார்
வாழ்நாளெல்லாம் களிகூர செய்திடுவார்

வறுமைக்கும் வெறுமைகளுக்கும்
அவமானத்தால் வந்த நிந்தைகளுக்கும்
இரட்டிப்பான நன்மைகளை தந்திடுவார்
உன் களஞ்சியங்கள் பூரணமாய் நிரம்பிட செய்வார்

நம்பிக்கை துரோகங்களுக்கும்
ஏமாற்றம் விரக்தி தோல்விகளுக்கும்
பதிலாக இயேசு உன் கூட இருப்பார்
சந்தோஷம் சமாதானம் தந்திடுவார்


Uyirodu Ezhunthar | New Christian worship Song


 









உயிரோடு எழுந்தார் என் உணர்வோடு கலந்தாரே - 2
கண்மணி போல் என்னை காப்பவரே காலமெல்லாம் என்னை சுமப்பரே- 2
துதியும் கனமும் மகிமையுமே உமக்கு செலுத்தி உயர்த்திடுவேன் - 2
உயிருள்ள நாளெல்லாம் உயிருள்ள நாளெல்லாம்

வேதனை துன்பம் நெருக்கத்தில் நெருங்கி வந்து அணைத்தீரே
கதறி அழுத நேரமெல்லாம் அருகில் நின்று தேற்றினீரே - 2
ஒன்றும் இல்லா நேரங்களிலே உதவி செய்து உயர்த்தினீரே
கைவிட பட்டு கலங்கும் போது கரம் பிடித்து தூக்கினீரே
சத்துருக்கள் முன்பாக பந்தியை ஆயத்தப்படுத்தினீர்
என் தலையை எண்ணெயினால் அபிஷேகித்து உயர்த்தினீர்

நிலையில்லா இந்த உலகிலே நிம்மதி இன்றி வாழ்ந்தேனே
வெறுமையான வாழ்வில் வந்து நம்பிக்கை நங்கூரமானீரே - 2
நிந்தை அவமானம் யாவும் அகற்றி நித்திய வாழ்வை எனக்கு தந்தீர் கல்வாரியிலே ரத்தம் சிந்தி உந்தன் அன்பால் என்னை மீட்டீர்
பாவ சாப ரோகங்கள் யாவும் அழித்து காத்தீரே
என்னை உமக்காய் தெரிந்து கொண்டு புதிய மனிதனாய் மாற்றினீர்

 

 

 

Siluvaiyil Sinthiya Rathathinale | New Christian song


 









சிலுவையில் சிந்திய இரத்தத்தினாலே
சமாதானத்தை உண்டு பண்ணினீர்
பாவியாகவே இருந்த எங்களை
பரிசுத்தமாய் மாற்றி விட்டீரே

ஆராதனை ஆராதனை
ஜீவனை பலியாக தந்தவர்கே
ஆராதனை ஆராதனை
அன்பராம் எந்தன் இயேசுவுக்கே

மகிமையின் நம்பிக்கையாக
எங்களுக்குள் இருப்பவரே
தம்முடைய இராஜ்யத்திற்கும்
மகிமைக்கும் அழைத்துக்கொண்டீர் - ஆராதனை

மரணத்தையும் பாதாளத்தையும்
சிலுவையிலே வென்று விட்டவரே
ஜீவனையும் அழியாமையையும்
கிருபையாக தந்துவிட்டீர் - ஆராதனை

Irakkamaai Iruntheer | New Christian Worship Song











இரக்கமாய் இருந்தீர் மனதுருக்கமாய் இருந்தீர்
ஆயிரம் தலைமுறை மட்டும் இரங்குவேன் என்றீர்
இமைபொழுதும் என்னை மறக்க வில்லையே
நான் விலகி சென்றும் விட்டு விலக வில்லையே

மலைகள் விலகினாலும்
பர்வதங்கள் நிலைபெயர்ந்தாலும்
கிருபையோ விலகாதென்றீர்
சமாதான உடன்படிக்கை செய்தீர்

அநாதி சிநேகத்தினால்
என்னையும் நேசித்தீரையா
காருண்ய கேடகத்தால்
என்னையும் இழுத்துக்கொண்டீரே

எனது வழிகளெல்லாம்
உம் சமுகம் முன் செல்லுதே
வாழ்கின்ற காலமெல்லாம்
இளைப்பாறுதல் தருவேன் என்றீர்


Thooyavare Thooyavare | தூயவரே தூயவரே | Tamil Christian Worship Song

07:41 By



 








தூயவரே தூயவரே தூயாதி தூயவரே
துதிகளின் நடுவினில் வாசம் செய்பவரே
துதி ஸ்தோத்திரம் துதி ஸ்தோத்திரம்
துதி ஸ்தோத்திரம் துதி ஸ்தோத்திரம்

ஒருவரும் சேரா ஒளியினிலே
வாசம் செய்திடும் தூயவரே
வணங்குகிறோம் போற்றுகிறோம்
கனத்திற்கு பாத்திரரே

கேரூபீன்கள் சேராபீன்கள்
எப்போதும் துதித்திடும் தூயவரே
உம்மை நாங்கள் துதித்திடுவோம்
துதிக்கு பாத்திரரே

எம் துயர் நீக்கிட வந்தவரே
செந்நீரை எமக்காய் சிந்தினீரே
உம் இரத்தத்தால் மீட்படைந்தோம்

விடுதலை நாயகரே