மன அமைதி கிடைக்கும் இடம்.
உலகத்தில் மனிதனின் மிக முக்கியமான தேடல்
மன அமைதி. மன அமைதி
எந்த மனிதனிடம் இருக்கிறதோ, அந்த மனிதன்தான் தன்
வாழ்வில் வெற்றிகரமான வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கிறான்.
சமாதானம், சந்தோஷம் மன நிறைவு இல்லாமல்,
வாழ்க்கையில் இலக்கு தெரியாமல் ஓடிக்கொண்டிருக்கும்
மனிதன் வெகு விரைவில் தன்
மன அமைதியை இழந்து வாழ்க்கையில்
மிகப் பெரிய தோல்வியை சந்திக்க
நேரிடும். வாழக்கையின் முடிவுக்கும் கூட சென்று விட
வாய்ப்புக்கள் உண்டு.
மனிதன் மன அமைதி
இல்லாமல் இருப்பதுதான், அநேக பிரச்சனைகளுக்கு முக்கியமான
காரணம். தன்னால் தன் மனதை
சந்தோஷமாக வைத்துக்கொள்ள முடியாமல் தத்தளிக்கும் மனிதன் தன்னை சுற்றிலும்
இருக்கும் மனிதர்களுக்கோ, அல்லது தன் குடும்பத்தினர்களுக்கோ
கூட சந்தோஷத்தை கொடுக்க முடியாது.