உண்மை வழி
மதங்களை சுமப்பது மனிதனுக்கு என்றுமே சுமைதான். மதங்கள் ஒன்றுக்கும் உதவாது.
உலகின் எந்த மூலையிலும் வாழும் எந்த மனிதனும் உறவுகளே, அதை எந்த வகையிலும் பிரித்து பார்ப்பது மனிதனின் அறியாமையையே வெளிக்காட்டும்.
மனிதர் தங்கள் அடையாளங்களை பதிவு செய்ய முயல்கிறார்கள்.மனித மனங்களில் இருக்கும் அறியாமை இருளே கடந்த கால அடையாளங்கள்.
வெளிச்சத்தை பதிவு செய்து இருளை விலக்க முயல்கிறவர்களை மதவாதிகள் எதிர்ப்பது ஒன்றும் புதிய வரலாறு அல்லவே.
கடவுளின் வழிநடத்துதல்களை {வார்த்தைகளை}, தங்களுக்கு ஏற்ற விதத்தில் மாற்றி, பாரம்பரிய மோகத்தில் வாழ்ந்து வந்தவர்களுகளிடத்தில் இயேசு கிறிஸ்து பேசிய மனித நேய மிக்க வார்த்தைகள் அவர்களுக்கு மாற்று மதமாகவே புரிந்தது. அது தகாததாகவே தெரிந்தது.
மனித நேயத்தை வலியுருத்தும் கிறிஸ்துவின் வழி, பரலோக வாழ்வுக்கு வழி நடத்தும் இயேசுவின் வார்த்தை, பாவ அடிமைத் தனத்தில் இருந்து விடுவிக்கும் இயேசு கிறிஸ்துவின் பாவ மன்னிப்பு. இது மனிதருக்கு கிடைத்த வெளிச்சம்.
அறம் மட்டும் பேசும் மானுட வார்த்தைகள் தாங்கி நிற்கும் எழுத்துக்கள் மத்தியில், அறம் செயல்படுத்தும் வழிகளை மட்டும் ஒவ்வொரு தனிமனிதனிடமும் வலியுருத்தி, செயல்படுத்த வழிகாட்டும் வாழ்வியல் முறையே கடவுளின் வார்த்தையை தாங்கி நிற்கும் பரிசுத்த வேதாகமம்.
எந்த எழுத்துக்கும், ஆதி மூலமுண்டு, அந்த ஆதி மூலம் பரிசுத்த வேதாகமம். காலத்தால் அழிக்க முடியாத காவியமாக, காலங்களை கடந்து, தலை முறைகளை கடந்து ராஜநடை போடும், நூல் ஒன்று இருக்கிறது என்றால் அது பரிசுத்த வேதாகமமே.
{பைபிள்} பரிசுத்த வேதாகமத்திற்கு "புத்தகங்களின் புத்தகம்'' என்ற மறு பெயர் ஒன்று உண்டு. இன்று உலகில் இருக்கும எந்த புத்தகத்திற்கும், {அது எந்த நாட்டை மொழியை உடையவையாக இருந்தாலும்} அதற்கு ஆதி மூலமாக விளங்குவது பரிசுத்த வேதாகமமே.
மனிதனின் எண்ணத்திலோ, கருத்திலோ, தோன்ற முடியாத, மனிதனின் கற்பனை வளங்களை தாண்டி, கடவுளால், எழுதிக் கொடுக்கப்பட்ட, சொல்லப்பட்ட, வெளிப்படுத்தப்பட்ட வார்த்தைகளை உள்ளடக்கியதே பரிசுத்த வேதாகமம்.
மனித வாழ்வுக்கே முன்னுதாரணமாய், வழிகாட்டியாய், எந்த காலத்திற்கும், எந்த சூழலில் இருக்கும் மனிதருக்கும், வாழ்வியல், அரசியல், இறையியல், புவியியல், அறிவியியலைக் கற்றுக்கொடுத்து, நடை முறைப்படுத்தி, கல்வி, வீரம், செல்வம் என்று மனக்கண்களை தெளிவிக்கும் தெவிட்டாத தெளிதேனாக விளங்கும் சிறப்பே பரிசுத்த வேதாகமம்.
கண்டவர் படித்திடுவார், படித்தவர் தெளிவடைவர், புவிவாழ்வோடு முடிவதில்லை, தொடரும் விண்ணகவாழ்வும் உண்டு, முடிவில்லா விண்ணக வாழ்வை கொடுக்கவே வந்தேன் என்று வாய்மொழியாய் சொல்லாமல், வாழ்வியல் முறையில் காட்டி, மாண்டவர் எழும்பிடுவர், மறுமை வாழ்வு பெற்றிடுவர் என்று மாண்டு, உயிருடன் எழும்பி காண்பித்த இயேசுவின் சரித்திர சரிதையை தாங்கி நிற்கும் சரித்திர பெட்டகமே பரிசுத்த வேதாகமம்.
மொழி சாயம், இனச்சாயம், மதச்சாயம், அந்நியச்சாயம் பூசி மழுங்கடிக்க முனைபவர்களின், அறிவுக்கு ஒளிகொடுத்து, நல்லோர்மேலும், தீயோர் மீதும் நன்மையை மட்டும் வழங்கிவரும் ஒப்பற்ற சுடரே, பரிசுத்த வேதாகமம்.
முகவரியின்றி கிடந்த எழுத்துக்களுக்கு முகவரி உருவாக்கித்தந்த பெருமை வாய்த்த பெட்டகம்தான் பரிசுத்த வேதாகமம்.
இந்த மண் உருவானது கடவுளின் வார்த்தைகளை கேட்டு, இந்த உலகம் உருவானது கடவுளின் வார்த்தைகளைக்கேட்டு, படைப்பின் பரம்பொருளாய் இருந்தது கடவுளின் வார்த்தை. அந்த வார்த்தையில் துவங்குவதே பரிசுத்த வேதாகமம்.
கடவுளை காண்பிக்கும் புத்தகமாக மட்டும் இல்லாமல், கடவுளிடம் இருந்து துவங்கும் புத்தகமே பரிசுத்த வேதாகமம்.
மனிதன் யார் என்று உணர்த்துவதும், மனிதனின் துவக்கத்தை காண்பிக்கும் புத்தகமும் பரிசுத்த வேதாகமமே.
ஒரு பெயர் வைத்து, அதற்கு தலைப்பிட்டு, தன் கற்பனை வளங்களை வடித்து, கற்பனை கதாபாத்திரங்களை கண்முன் காட்ட துடிக்கும் கற்பனை கதை புத்தகங்களுக்கு முன், கடவுளிடமிருந்து துவங்கி, சரித்திரங்களின் வழி வந்து, இறையியல், வாழ்வியல், புவியியல், அறிவியியல், அரசியல், ஒட்டுமொத்த மனித வாழ்வின் நெறியியலை காலங்களின் ஊடாய் விளக்கி நிற்கும் அறிவு பொக்கிஷமே பரிசுத்த வேதாகமம். அதை தனக்குள் வாங்கி இருப்பதே கிறிஸ்தவம்.

0 comments:
Post a Comment