Bread of Life Church India

மொழி பிரிந்த வரலாறு



காடுகள் மலைகள் என எங்கும் சிதறிச் சென்று, அவற்றைக் குடியிருப்புக்களாக மாற்றி, புதிய பூமியில் மனிதர்கள் பரவ ஆரம்பித்தனர். மனிதர்களின் எண்ணிக்கை பூமியில் பெருகப் பெருக பட்டணங்களைக் கட்டுவதிலும், தங்கள் குடியிருப்புக்களை கவனிப்பதிலும் அதிக கவனத்தைச் செலுத்தியதால், மக்களுக்கு கடவுளைக் குறித்த எண்ணங்கள் குறைய ஆரம்பித்தன.
நோவாவின் இரண்டாம் மகன் சேமுடைய வழி மரபில் வந்த ஏபேர் என்பவனுக்கு  இரு புதல்வர் பிறந்தனர்; அவர்களில்  ஒருவனுக்கு  பேலேகு என்று பெயர் வைத்தான்.  ன் என்றால் அவன் பிறந்த காலத்தில்தான் மக்கள் தேசம் வாரியாக பிரிந்தனர். தேசங்களுக்குள் எல்லைகள் அமைக்கப்பட்டு, ராஜ்யங்கள் உண்டாயின.

வெற்றி வாழ்க்கையின் அவசியம்



வெற்றி வாழ்க்கை சாத்தியமே என்ற தலைப்பில் நாம் தொடர்ந்து தியானித்து வருகிறோம்.
வெற்றி வாழ்க்கையை விரும்பாதவர்கள் யாரும் இருக்க முடியாது. ஆனால் வெற்றி வாழ்க்கையை விரும்பினால்மட்டும் போதாது வெற்றி வாழ்க்கை வாழ்வதற்கு அவசியமானவற்றை நாமும் தேவனோடு இணைந்து செயல்படுத்த வேண்டும். அதைக்குறித்த தேவ வசனம் என்ன சொல்லுகிறது என்பதை கவனிக்கலாம்.