மேன்மையும், கனமும்.....
``ஐசுவரியமும் கனமும் உம்மாலே வருகிறது; தேவரீர் எல்லாவற்றையும்
ஆளுகிறவர்; உம்முடைய கரத்திலே சத்துவமும் வல்லமையும் உண்டு; எவரையும் மேன்மைப்படுத்தவும் பலப்படுத்தவும் உம்முடைய கரத்தினால் ஆகும்'' <1நாளா 29:12>.
இவ்வசனம் வேதாகமத்தில் தாவீது இராஜாவின் ஜெபமாக இருக்கிறது. தேவனின் மகத்துவத்தையும் வல்லமையையும் அறிந்திருந்த தாவீது, தேவனிடமிருந்தே சகலவிதமான நன்மைகளையும், நிறைவான ஆசீர்வாதங்களையும் பெற்றுக் கொண்டார்.
ஆளுகிறவர்; உம்முடைய கரத்திலே சத்துவமும் வல்லமையும் உண்டு; எவரையும் மேன்மைப்படுத்தவும் பலப்படுத்தவும் உம்முடைய கரத்தினால் ஆகும்'' <1நாளா 29:12>.
இவ்வசனம் வேதாகமத்தில் தாவீது இராஜாவின் ஜெபமாக இருக்கிறது. தேவனின் மகத்துவத்தையும் வல்லமையையும் அறிந்திருந்த தாவீது, தேவனிடமிருந்தே சகலவிதமான நன்மைகளையும், நிறைவான ஆசீர்வாதங்களையும் பெற்றுக் கொண்டார்.
உங்கள் துக்கம் முடிந்தது
``உன் சூரியன் இனி அஸ்தமிப்பது மில்லை; உன் சந்திரன் மறைவதுமில்லை; கர்த்தரே உனக்கு நித்திய வெளிச்ச மாயிருப்பார்; உன் துக்க நாட்கள் முடிந்துபோம்'' (ஏசாயா 60:20).
கர்த்தர் தமது மக்களுக்கு வெளிச்சமாக இருந்து, தம்மை விசுவாசித்து பின்பற்றும் யாவரையும் பிரகாசிக்க வைக்கிறார்.
கடந்த நாட்களில் துக்கத்துடனும் வேதனையுடனும் வாழ்ந்து வந்த உங்கள் துக்கங்களை மாற்றி, உங்களை ஆனந்த களிப்புடன் செழிக்க வைக்கப்போகிறார்.
கர்த்தர் தமது மக்களுக்கு வெளிச்சமாக இருந்து, தம்மை விசுவாசித்து பின்பற்றும் யாவரையும் பிரகாசிக்க வைக்கிறார்.
கடந்த நாட்களில் துக்கத்துடனும் வேதனையுடனும் வாழ்ந்து வந்த உங்கள் துக்கங்களை மாற்றி, உங்களை ஆனந்த களிப்புடன் செழிக்க வைக்கப்போகிறார்.
இதற்கு யார் காரணம் ?
வயது முதிர்ந்த கணவன் மனைவி உச்சி வெயிலில் தங்களின்
வாழ்க்கையின் கசப்பான அனுபவங்களை ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டே நடந்தனர். “நாம்
பெற்று வளர்த்தது ஒரே மகன் என்று எவ்வளவு செல்லமாக பார்த்து பார்த்து எப்படி
எல்லாம் அவனை நாம் வளர்த்தோம். ஒரு
நிமிஷத்தில் நம்மை தூக்கி எறிந்து விட்டானே’’, என்று கண்ணீர் முகத்தில் வடிய அதை துடைக்க கூட மறந்த
நிலையில் மிகுந்த வேதனையோடு தளு தளுத்த குரலில் பேசிய தனது மனைவியின் வார்த்தையை
கேட்ட முதியவர், “இன்னுமா நீ அதையே நினைச்சுகிட்டு வருகிறாய், என்ன செய்ய நம்முடைய
நடுத்தர வயதை மகனை வளர்ப்பதற்க்காகவே செலவு செய்து பாடு பட்டோம். அவன் வளர்ந்து
நம்மை பார்த்துக்கொள்வான் என்று நினைத்தோம். ஆனால் அவனோ, நம்மை நாயை விட கேவலமாக
துரத்தி விட்டான். பரவாயில்லை, மீதி நாட்களில் நமக்காக பாடுபட்டு, நம்முடைய
வாழ்க்கையை ஓட்டுவோம்’’ என்று கண்களில் முட்டிக்கொண்டு வந்த கண்ணீரை கண்களை தாண்டி வரவிடாமல்
சமாளித்துக்கொண்டே முதியவர் பேசினார்.
ஐயோ, என்னை காப்பாற்ற யாரும் இல்லையா?
ஒரு மனிதன் மலையில் ஏறுவதற்காக வேண்டிய எல்லா பொருள்களையும்
எடுத்துக்கொண்டு பாதுகாப்பாக ஏறிக்கொண்டிருந்தான். பல கடினமான பகுதியையும் கவனமாக
கடந்தான். அவனுடைய பயணத்தில் எத்தனையோ இடறல்கள் வந்தும் அவைகளையும் தாண்டி மலையின்
உச்சியை அடையும்படியாக அருகில் சென்று விட்டான். அவனுக்குள்ளாக மகிழ்ச்சி “இன்னும்
சிறிது தூரம்தான் என்னுடைய இலக்கை நான் அடைய போகிறேன்’’ என்று
நினைத்துக்கொண்டே உற்சாகமாக சென்று கொண்டிருந்தான். பகல் சென்று இருள் சூழ
ஆரம்பித்தது. மலை உச்சியின் மிக அருகில் வந்து விட்டான்.
விதை முளைக்கும் முன்....
"அவர் கிறிஸ்துவுக்குள் உன்னதங்களில் ஆவிக்குரிய
சகல ஆசீர்வாதத்தினாலும் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார்'' ( எபேசியர் 1:3).
"நிச்சயமாக நான் உன்னை ஆசீர்வதிக்கவே
ஆசீர்வதித்து, உன்னைப் பெருகவே பெருகப்பண்ணுவேன்
என்றார். அந்தப்படியே, அவன் பொறுமையாய்க் காத்திருந்து, வாக்குத்தத்தம் பண்ணப்பட்டதைப் பெற்றான்'' (எபிரெயர் 16:14,15).
எறும்பின் வழியும், ஞானமும்
"அற்பமான
ஜெந்துவாயிருந்தும், கோடைகாலத்திலே
தங்கள் ஆகாரத்தைச் சம்பாதிக்கிற எறும்பு" ( நீதிமொழிகள் 30:25 )
தினமும் நம் வாழ்க்கையில் நாம்
பார்க்கிற குட்டி உயிரினம் எறும்பு. வீட்டு மூலைமுடுக்குகளிலும் இண்டு
இடுக்குகளிலும் சுற்றிக்கொண்டு திரிந்து கொண்டிருக்கும். அதை ஒரு நாளும் நாம் ஒரு பொருட்டாக நினைத்தது கிடையாது.. உருவத்தில்
நம்மைவிட ஆயிரம் மடங்கு சிறிய இந்த எறும்புகள் நம்மை கடிக்கும்போது
ஒற்றைவிரலில் நசுக்கி கொன்று விடுவோம். அதை .யாராலும் முற்றிலுமாக அழித்துவிட முடியாது
என்பதே உண்மை
கழுகிடம் கற்றுக்கொள்
“உன் பிராணனை அழிவுக்கு விலக்கி மீட்டு, உன்னைக்
கிருபையினாலும் இரக்கங்களினாலும் முடிசூட்டி, நன்மையினால் உன் வாயைத்
திருப்தியாக்குகிறார்; கழுகுக்குச் சமானமாய் உன் வயது திரும்ப வால வயது போலாகிறது’’ ( சங்கீதம் 103:4,5).
கழுகின் சிறப்பு.
கழுகுகளில் மொத்தம் 74 இனங்கள் உள்ளன. உலகம் முழுவதும் கழுகுகள்
பரவலாகக் காணப்படுகின்றன.
பருவ நிலை மாற்றம்
ஒரு தகப்பன் தனது இரண்டு மகள்களுக்கு திருமணம் ஆக வேண்டும்,
நல்ல மணமகன் வாழ்க்கை துணையாக கிடைக்க வேண்டும் என்று ஜெபித்துக்கொண்டிருந்தார்.
தேவன் அவருடைய விண்ணப்பத்தைக் கேட்டு அவருடைய இரண்டு மகள்களுக்கும் தேவனுக்கு
பயந்த நல்ல மணமகனை கொடுத்தார். ஒரு மணமகன் விவசாயம் செய்து வந்தார். இன்னொருவர்
குயவன் மண் பாத்திரங்கள் செய்து வந்தார்.
இவர்களின் திருமணங்கள் மிகவும் சிறப்பாக நடை பெற்றது.
தகப்பனுக்கும், பிள்ளைகளுக்கும் மிகுந்த சந்தோஷம். மகள்கள் இருவரையும் அவர்களின்
கணவன் வீட்டிற்கு மகிழ்ச்சியுடன் அனுப்பி வைத்தார்.
சில மாதங்கள் ஆகி விட்டது. தகப்பன் தனது மகள்கள் எப்படி
இருக்கிறார்கள் என்று பார்த்து வரலாம் என்று மகள்களை பார்க்கும் படியாக புறப்பட்டு
சென்றார்.
முதலாவது விவசாயம் செய்யும் மகளை பார்க்கும் படியாக
சென்றார். தகப்பனார் சென்றதும் மூத்தமகள் “அப்பா வாங்க எப்படி இருக்கீங்க’’ என்று அன்பாக அழைத்து உபசரித்தாள். “என்னமா
எப்படி இருக்க உனது கணவர் உன்னை நல்லபடியாக கவனித்துக்கொள்கிறாரா? நீ சந்தோஷமாக
இருக்கிறாயா?’’ என்று கேட்டார்.
“அப்பா,எனது கணவர் என்னை மிகவும் நல்ல படியாக
கவனித்துக்கொள்கிறார். தேவ கிருபையால் நான் அதிகமான சந்தோஷத்துடன் இருக்கிறேன்’’ என்று சொல்லி அநேக விஷயங்களை பேசி விட்டு
“எங்கள் விவசாயத்திற்கு ஏற்றபடி மழைதான் நன்றாக பெய்ய வில்லை. நீங்கள் நல்ல மழை
பெய்ய வேண்டும் என்று எங்களுக்காக ஜெபித்துக்கொள்ளுங்கள்’’ என்று கூறினாள். தகப்பனும் “நல்லது மகளே,
நீங்களும் ஜெபியுங்கள். நானும் மழைக்காக ஜெபிக்கிறேன்’’ என்று சொல்லி விட்டு, ”நான்
புறப்படுகிறேன். அப்படியே உனது தங்கை வீட்டிற்கும் சென்று தங்கையையும் பார்த்து
விட்டு, நான் ஊருக்கு செல்கிறேன். போய் வருகிறேன் என்று சொல்லி விட்டு, தனது
அடுத்த மகளை பார்க்கும்படி சென்றார்.
இளைய மகளின் வீட்டிற்கு தகப்பன் போகிற
போதே, அந்த மகள் தனது தந்தை வருகிறதை கண்டு, வேகமாக ஓடி வந்து, அப்பா எப்படிப்பா
இருக்கீங்க, இப்பக்கூட உங்களைத்தான் நினைத்துக்கொண்டிருந்தேன்’’ என்று மகிழ்ச்சி
பொங்க விசாரித்து, வீட்டிற்குள் அழைத்துச்சென்றாள். மகளை பார்க்கும் போதே அவள்
மகிழ்ச்சியாக நல்லபடியாக இருக்கிறாள் என்று அறிந்து கொண்ட தகப்பன், “நீ எப்படிம்மா
இருக்கிறாய்’’ என்று கேட்டார். எனக்கு என்னப்பா, இயேசப்பா கிருபையில் ரொம்ப நல்லா
இருக்கிறேன்’’ என்றாள்.
சிறிது நேரம் இருந்து விட்டு, மகளுக்கு வேண்டிய ஆலோசனைகளை
கொடுத்து விட்டு, தகப்பன் புறப்பட ஆரம்பித்தார். உடனே மகள் “என்னப்பா வந்ததும்
வராததுமா உடனே புறப்பட்டு விட்டீர்கள். இரண்டு நாள் இருந்து விட்டு போகலாமே’’ என்று கேட்டாள். “ இல்லமா எல்லா வேலையையும்
விட்டு விட்டு, நீங்க எப்படி இருக்கீங்க என்று பார்த்து விட்டு போகலாம் என்றுதான்
வந்தேன்மா. தேவன் உங்களுக்கு ஒரு குறையும் இல்லாமல் நன்றாக வைத்திருக்கிறார்.
இன்னொரு முறை வரும் பொழுது இரண்டு நாள் தங்கி விட்டு போகிறேன்’’ என்று சொல்லி புறப்பட்டார்.
அப்பொழுது மகள் ”எல்லாம் நல்லபடியாகத்தான் இருக்கிறது
அப்பா, ஆனால் மழை அடிக்கடி பெய்கிறதினால், நாங்கள் செய்கிற மண் பாத்திரங்களை காய
வைக்க முடியாமல் சில நேரங்களில் கஷ்டமாக இருக்கிறது. எனவே, மழை வந்து அடிக்கடி
எங்களுக்கு தொல்லைகொடுக்காதபடிக்கு தயவு செய்து எங்களுக்காக ஜெபித்துக்கொள்ளுங்கள்’’ என்று சொன்னதும்,
தகப்பன் ஒரு கனம் திகைத்து போனார். இருப்பினும் உடனடியாக சுதாரித்துக்கொண்டு, “சரிம்மா
அப்படியே செய்கிறேன்’’ என்று சொல்லி விட்டு, தனது ஊருக்கு புறப்பட்டார்.
வருகிற வழியெல்லாம் அவருக்கு, தனது மூத்த
மகள் “மழை வேண்டும் அதற்காக ஜெபித்துக்கொள்ளுங்கள்’’ என்று சொன்னதும்,
இளைய மகள் “மழை எங்களுக்கு தொந்தரவாக இருக்கிறது ஆகவே வேண்டாம்’’ என்று
ஜெபித்துக்கொள்ளுங்கள்’’ என்று சொன்னதும் மாறி மாறி காதுகளில்
ஒலித்துக்கொண்டிருந்தன.
வீட்டிற்கு வந்தும் அந்த குழப்பம் நீங்க
வில்லை. நேராக தனது ஜெப அறைக்கு சென்றார். முழங்காலில் நின்று ஜெபிக்க
ஆரம்பித்தார். “தேவனே எனது மகள்களின் வாழ்க்கையில் உமது சித்தத்தின்படி எல்லாம்
நடக்கட்டும்’’ என்று ஜெபித்தார்.
“நாம் எதையாகிலும் அவருடைய
சித்தத்தின்படி கேட்டால், அவர் நமக்குச் செவி கொடுக்கிறாரென்பதே அவரைப் பற்றி நாம்
கொண்டிருக்கிற தைரியம்’’ ( 1 யோவான் 5:14 ).
“அவர் சகலத்தையும் அதினதின் காலத்திலே
நேர்த்தியாகச் செய்திருக்கிறார்;’’ ( பிரசங்கி 3:11 )
எல்லாவற்றையும் செய்து முடித்தவர்
`எனக்காக யாவையும் செய்து முடிக்கப் போகிற தேவனாகிய உன்னதமான தேவனை நோக்கிக் கூப்பிடுவேன்' '(சங் 57:2) இந்த சங்கீதத்தை தாவீது எந்த சூழ்நிலையில் எழுதினார் என்று மேலே வாசிக்கும் போது விளங்கி கொள்ளலாம்.
தனது உயிருக்கு உத்திரவாதமில்லாத நிலையில், சவுலுக்கு தப்பியோடிக்
கொண்டிருக்கும் பொழுது ``எனக்காக யாவையும் செய்து முடிக்கப் போகிற தேவனை நோக்கிக் கூப்பிடுவேன்'' என்று விசுவாசத்துடன் அறிக்கையிட்டு கூப்பிட்ட தாவீதின் கூப்பிடுதலின் சத்தத்திற்கு செவிகொடுத்து உயர்த்தின தேவன் இன்றைக்கும் நம்மோடு உண்டு.
தனது உயிருக்கு உத்திரவாதமில்லாத நிலையில், சவுலுக்கு தப்பியோடிக்
கொண்டிருக்கும் பொழுது ``எனக்காக யாவையும் செய்து முடிக்கப் போகிற தேவனை நோக்கிக் கூப்பிடுவேன்'' என்று விசுவாசத்துடன் அறிக்கையிட்டு கூப்பிட்ட தாவீதின் கூப்பிடுதலின் சத்தத்திற்கு செவிகொடுத்து உயர்த்தின தேவன் இன்றைக்கும் நம்மோடு உண்டு.
மரணத்தை காணாத மனிதன்
இதமான தென்றல் வீசிக்கொண்டிருந்த
மாலை வேளை, ஏவாள் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தாள். நடையில் ஒரு பதட்டம்.
ஒரு இடத்தில் நிற்க முடியாதபடிக்கு கூடாரத்திற்கு உள்ளே போகிறதும் வெளியே வருவதுமாக படபடப்புடன் காணப்பட்டாள். தூரத்தில் ஆதாம் வருவது
தெரிந்ததும் வேகமாக ஓடினாள்.
ஏவாள் ஓடிவருவதை கண்ட ஆதாம் “
என்ன ஏவாள் ஏன் பதட்டமாக ஓடிவருகிறாய்?’’ என்று கேட்டான். மூச்சு இரைத்தபடியே “ காயீனையும், ஆபேலையும்
காணவில்லை. காலையில் வெளியே சென்றவர்கள் இன்னும் வரவில்லை’’. என்று படபடப்புடன் சொன்னாள். “என்ன காலையில் சென்றவர்கள் இன்னும் வரவில்லையா?
எங்கு செல்வதாக சொன்னார்கள்’’ என்று ஆதாமும் சற்று பயந்தபடியே கேட்டான். “என்னிடத்தில்
ஒன்றும் சொல்லவில்லை ஆனால் அவர்கள் பேசிக்கொண்டதை வைத்து பார்க்கும் போது,
காயின்தான் ஆபேலை தன்னுடைய வயல்வெளிக்கு அழைத்துச்சென்றான்’’ என்று ஏவாள்
சொன்னதும் “சரி நீ இங்கேயே இரு நான் சென்று பார்த்து வருகிறேன்’’ என்று சொல்லி
ஆதாம் ஓட்டமும் நடையுமாக வேக வேகமாக காயீனின் வயல்வெளியை நோக்கி சென்றான்.
இன்னும் என்ன செய்ய போகிறாய்?
அழகிய ஒரு குடும்பம் மிகுந்த மகிழ்ச்சியுடன் வாழ்ந்து
வந்தது. கணவன் தூர தேசத்தில் இருந்தாலும், கணவனோடு தொடர்பு கொண்டு,
குடும்பத்திற்கு தேவையானதை கணவனிடம் பெற்று, தனது கணவன் கொடுப்பதை வைத்து, மனைவி
குடும்பத்தை நன்றாக நடத்தி வந்தாள். நாட்கள் செல்ல செல்ல, மனைவியின் நடத்தையில்
மாறுதல் உண்டாக ஆரம்பித்தது. கணவனோடு தொடர்பு கொள்ளாமல், குடும்பத்தையும் பிள்ளைகளையும்
சரியாக கவனிக்காமல், ஏனோ தானோ என்று குடும்பத்தை நடத்த ஆரம்பித்தாள். ஆரம்பத்தில்
கணவன் மேலும், பிள்ளைகள் மேலும் இருந்த அன்பு குறைந்து தன் சுய இஷ்டப்படி நடக்க
ஆரம்பித்தாள்.
உறுதியான வாழ்வும், நிலையான நன்மையும்
``யூதா வம்சத்தாரில் தப்பி மீந்திருக்கிறவர்கள் மறுபடியும் கீழே வேர் பற்றி மேலே கனி கொடுப்பார்கள்'' (ஏசாயா 37:31). யூதா தேசத்தை குறித்த வாக்குத்தத்தத்தை ஏசாயா தீர்க்கதரிசியின் வழியாக தேவன் கொடுக்கிறார். யூதா தேசத்திற்கு வந்த ஆபத்திலிருந்து தப்பி யார் எல்லாம் நிலைத்திருக்கிறார்களோ, அவர்கள் இனி உறுதியுடனும் நிறைவான நன்மையை பெற்றும் சுகத்துடன் வாழ்வார்கள் என்று தேவன் முன்பதாகவே வாக்குப் பண்ணுகிறார்.