Bread of Life Church India

கிறிஸ்தவம் அந்நிய மதமா?




இந்தியாவின் பழம்பெரும் மதம் என்று சொல்லிக்கொள்ளும்  மதத்தில் சிலர் தங்கள் கையில் எடுத்திருக்கும் ஆயுதங்களில் இதுவும் ஒன்று. இயேசு கிறிஸ்து எந்த மனிதனுக்கும், எந்த நாட்டிற்கும் அந்நியர் அல்ல என்பதை இவர்கள் முதலாவது புரிந்து கொள்ள வேண்டும்.

இந்தியாவில் இரண்டாயிரம் ஆண்டுகளுகளாக இயேசு கிறிஸ்துவை பின் பற்றுகிறவர்கள் உண்டு, இயேசு கிறிஸ்து ஆசிய கண்டத்தில் மனிதனின் விடுதலைக்காக (தேவன்) மனிதனாக பிறந்து, மரித்து அடக்கம் பண்ணப்பட்டு, உயிரோடு எழும்பினார். இந்த மார்க்கம் உலகமெங்கும் இன்று பரவி வேர் ஊன்றி இருக்கிறதென்றால் இது சாதாரணமாக நடந்த செயலல்ல, அடிகளும், மிரட்டல்களும் சிறை வாசங்களும், உயிர் தியாகங்களும் கொஞ்சம் நஞ்சமல்ல. உலகம் கிறிஸ்தவ மயமாக வேண்டும் என்பது நோக்கமல்ல, மனிதன் மனமாற்றம் பெற்று, உண்மை கடவுளை அறிந்து வழிபட வேண்டும் என்பதும், மறுமை வாழ்வில் கடவுளோடு மனிதன் இணைக்க படவேண்டும் என்பது மட்டுமே நோக்கம். பணத்தை காட்டியோ, மிரட்டியோ ஒரு மனிதனை வெகு நாட்கள் எந்த ஒரு கூண்டிலும் அடைத்து வைக்க முடியாது.

கிறிஸ்தவத்திற்கு ஆள் பிடிப்பதோ, உலகம் கிறிஸ்தவ மயமாகிவிட வேண்டும் என்பதோ, கிறிஸ்தவர்களின் நோக்கமல்ல.

கிறிஸ்தவம் வெளிநாட்டு மதம், இயேசு வெளிநாட்டுக்கடவுள், இந்தியாவின் பாரம்பரியங்களையும், நாகரீகத்தையும் இவர்கள் அழித்து விட்டார்கள் என்று கூக்குரல் இடுபவர்கள் உண்டு. அவர்களிடத்தில் கேட்கிறேன்.

உங்களின் பழமையும், நாகரீகமும் மனிதனை ஏற்றதாழ்வுடன் வைத்திருப்பது தானா? இரண்டு சதவீதம் வளர 98 சதவீதம் நசுக்கப்பட்டதே அதுதான் உங்கள் பழமை பாரம்பரியமா?

மாட்டிற்கு கொடுத்த மரியாதையில் ஒரு சதவீதம் மனிதனுக்கு கொடுக்காமலும்,  நாய்க்கு வீட்டிற்குள் அனுமதி உண்டு, மனிதனுக்கோ தாங்கள் இருக்கும் தெருவில் நடக்கக்கூட அனுமதியில்லை. பள்ளியும் படிப்பும் கூட சிலருக்கு மட்டுமே என்ற உங்கள் நாகரீகத்தை மாற்றுபவர்கள் காட்டுமிராண்டிகள்தான். 

சாதி ரீதியாக மனிதனைப்பிரித்து, அடிமைபடுத்தி சம உரிமை, மறுக்கப்பட்டு, இருந்த மனிதனுக்குள் சம உரிமையையும், சமத்துவத்தையும், ஏற்படுத்தி, சுதந்திரத்திற்கும், மக்களாட்சிக்கும் வித்திட்ட தன்னலமில்லா உண்மை கிறிஸ்தவ மிஷனரிகள் உங்கள் பார்வையில் பாரம்பரியங்களை அழிக்க வந்தவர்கள்தான்.

உண்மையான சமூக மாற்றத்திற்கும், மனிதனின் மனமாற்றத்திற்கும் பாடுபடுபவர்கள் உங்கள் பார்வையில் கேலி சித்திரங்கள்தான்.

பழமைவாதம், நாகரீகம் பேசுகிறவர்கள், எது பழமை எது நாகரீகம் என்பதை நன்றாக அறிந்து கொள்ள வேண்டும். நாகரீகம் என்பது உடுத்துகிற உடையிலோ, கட்டுகிற கட்டிடத்திலோ இல்லை. மனிதனின் மனதில் இருக்கிறது அது மனிதனை மனிதன் எந்த ஏற்றதாழ்வும் இல்லாமல் மதிப்பது, சகோதரத்துவ அன்பிலும், ஐக்கியத்திலும் வெளிப்படுவது,

பழமை என்பது மனிதனில் இருந்து ஆரம்பித்ததா? கடவுளிடமிருந்து ஆரம்பிக்கப்பட்டதா? முன் வாழ்ந்த மனிதர்களின் மூலமாக சொல்லப்பட்டவை எல்லாம், மாற்றப்படக்கூடாததாக இருக்க வேண்டும். அப்படி மாறிவிட்டால் இந்திய, தமிழ் மண்ணின் அடையாளம் மாறிவிடும். என்று பதறுகிறவர்கள் உண்டு.

இந்திய மதம் எது? தமிழ்நாட்டு மதம் எது? நான் இந்தியன் கிறிஸ்தவம் இந்திய மதமே. நான் தமிழன் கிறிஸ்தவம் தமிழ்நாட்டு மதமே, நமது ஆசியாவில் இருந்துதான், வெளி நாடுகளுக்கு கிறிஸ்தவம் சென்றதே தவிர அங்கிருந்து இங்கு புதிதாக ஏற்றுமதி ஆகவில்லை.  


வெளி மாநிலத்தைக்கூட சென்றிடாத ஒரு இந்திய  தாய்க்கும், தகப்பனுக்கும் பிறந்த நான் இந்தியனே, கிறிஸ்தவன் என்பதால் நான் வெளி நாட்டுக்காரனோ, வெளிநாட்டு கைக்கூலியோ அல்ல. எந்த நாடும் எந்த மதத்திற்கும் சொந்தமல்ல. யாரோ பயமுறுத்தியோ, ஆசைகாட்டியோ, நயமாக பேசியோ மதம் மாற்ற வில்லை அப்படி ஒருவரையும் மாற்றவும் முடியாது.

இயேசு கிறிஸ்வை இந்தியாவில் இருக்கிறவன் ஏற்றுக்கொண்டு பின் பற்றுகிறவன் எல்லாம், விலை போனவனாகவும், இந்திய துரோகிகள் போலவும் சித்தரிக்க வேண்டாம்.

 பழம்பெரும் மதம் என்று சொல்லி, நாங்கள் மட்டுமே தமிழர் என்றும், இந்தியர் என்றும், மற்றவனெல்லாம் அந்நியன் என்றும் பேசி மட்டுப்படுத்தவும் வேண்டாம்.

தானாய் வளர்வதெல்லாம் தான்தோன்றித்தனம், பயிர் வளரத்தான் விதைக்க வேண்டும் பதர் விளைய விதைக்க வேண்டியது இல்லை,


3 comments:

  1. அந்நிய மதங்கள் சிறுபான்மையா? http://www.arasan.info/2012/06/blog-post.html என்ற என் பதிவிற்கான மறுமொழிதானே இந்த போஸ்ட்! உங்கள் வலைப்பூவின் வாசகர்களும் என் கருத்தைப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இந்த லிங்கை கொடுத்திருக்கிறேன்.

    ReplyDelete
  2. இந்தியாவில் மட்டுமல்ல உலகிலேய பழைமையான வாழ்க்கைமுறை
    //இயேசு கிறிஸ்து எந்த மனிதனுக்கும், எந்த நாட்டிற்கும் அந்நியர் அல்ல என்பதை இவர்கள் முதலாவது புரிந்து கொள்ள வேண்டும்.//
    இயேசு மட்டுமில்லீங்க ஆபரகாமிய மதங்கள் அனைத்துமே.
    //இந்தியாவில் இரண்டாயிரம் ஆண்டுகளுகளாக இயேசு கிறிஸ்துவை பின் பற்றுகிறவர்கள் உண்டு,//
    ஏங்க நானும் இயேசு கிறிஸ்துவ பின்பற்றத்தான் செய்கிறேன். ஆனால் உங்கள் கிறிஸ்தவம் தான் எங்களுக்கு வேண்டாம் என்கிறேன். இந்தியர்கள் நல்லவர்களே எப்போதுமே ஏற்றுக் கொள்வார்கள். அல்லவர்களே! இராண்டாயிரம் ஆண்டா? யாரைச் சொல்கிறீர்கள் தோமாவின் வருகையையா? அந்தக் கதைதான் வலைத்தளம் எங்கும் பரவியிருக்கிறதே!
    //இந்த மார்க்கம் உலகமெங்கும் இன்று பரவி வேர் ஊன்றி இருக்கிறதென்றால் இது சாதாரணமாக நடந்த செயலல்ல, அடிகளும், மிரட்டல்களும் சிறை வாசங்களும், உயிர் தியாகங்களும் கொஞ்சம் நஞ்சமல்ல.//
    ஏன் ஒரு மதமாற்றத்திற்காக இத்தனைத் தியாகங்கள். நாங்கள் தான் இயேசுவை (அவர் குணத்தை, போதனைகளை) ஏற்கிறோம் என்கிறோமே. ஆமாம் இந்தியாவில் அப்படியென்ன உங்களுக்கு கொடுமை நடந்துவிட்டது. தோமாவைக் கொண்டுவிட்டார்கள் என்பீர்கள். அவர் இங்கு வரவே இல்லையே என்போம் நாங்கள். ஒரிசாவில் பாதிரியாரை எரித்துவிட்டார்கள் என்பீர்கள். வேறு என்ன சொல்வீர்கள்.
    //உலகம் கிறிஸ்தவ மயமாக வேண்டும் என்பது நோக்கமல்ல, மனிதன் மனமாற்றம் பெற்று, உண்மை கடவுளை அறிந்து வழிபட வேண்டும் என்பதும், மறுமை வாழ்வில் கடவுளோடு மனிதன் இணைக்க படவேண்டும் என்பது மட்டுமே நோக்கம். பணத்தை காட்டியோ, மிரட்டியோ ஒரு மனிதனை வெகு நாட்கள் எந்த கிறிஸ்தவர்களின் நோக்கமல்ல. //
    ஐய்யயோ என்னங்க இப்படி அநியாயமா பேசுறீங்க. ஒரு கிறிஸ்தவர் அல்லாதவரிடம் இந்த வரிகளைக் காட்டி இல்லை என்ற பதிலைப் பெற்றுவிடுங்கள் பார்ப்போம்.
    நாகரீகத்தையும் இவர்கள் அழித்து விட்டார்கள் என்று கூக்குரல் இடுபவர்கள் உண்டு. அவர்களிடத்தில் கேட்கிறேன்.

    மனிதனுக்கோ தாங்கள் இருக்கும் தெருவில் நடக்கக்கூட அனுமதியில்லை. பள்ளியும் படிப்பும் கூட சிலருக்கு மட்டுமே என்ற உங்கள் நாகரீகத்தை மாற்றுபவர்கள் காட்டுமிராண்டிகள்தான்.

    மக்களாட்சிக்கும் வித்திட்ட தன்னலமில்லா உண்மை கிறிஸ்தவ மிஷனரிகள் உங்கள் பார்வையில் பாரம்பரியங்களை அழிக்க வந்தவர்கள்தான்.
    //
    ஏற்றத்தாழ்வு எங்குதான் இல்லை. இதே கதை உங்கள் திருச்சபைகளில் நடக்கிறதே. நீங்கள் குறிப்பிடும் அந்த 2% தான் இந்த நாட்டை ஆண்டனர் என்று நினைக்கிறீர்களா? அந்த ஏற்றத்தாழ்வை ஊதிப் பெரிதாக்கியதில் ஆங்கிலேய கிறிஸ்தவ மிஷினரிகளுக்குப் பெரிய பங்குண்டு. ஆங்கிலேய ஆக்கிரமிப்பு, இஸ்லாமிய ஆக்கிரமிப்புமே 1500 ஆண்டுகளாக இந்தியாவில் இருந்திருக்கின்றன. ஆங்கிலேய ஆட்சியில் இந்துக்களை தனக்குச் சமமாக நடத்தினார்களா? இஸ்லாமியர் ஆட்சியில் இந்துக்களை சமமாக நடத்தினார்களா? நம் நாட்டில் நம் வாழ்க்கைமுறைப்படி வாழ்வதற்கே வரி செலுத்தியவர்கள் நாம். ஆபிரகாமிய மதங்களைத்தான் அந்நியமாகப் பார்க்க வேண்டியிருக்கிறதே தவிர உங்கள் அந்நியர் என்ற நான் குறிப்பிடவே இல்லை. நீங்கள் தவறாக எடுத்துக் கொள்ளக்கூடாது. இந்திய கிறிஸ்தவர்களை என் சொந்த உடன்பிறப்பாகவே பார்க்கிறேன். கிறிஸ்தவத்தைத்தான் ஏற்றுக் கொள்ளமுடியாது என்கிறேன்.
    மனிதனின் மனமாற்றத்திற்கும் பாடுபடுபவர்கள் உங்கள் பார்வையில் கேலி சித்திரங்கள்தான்.//
    உலத்துக்கே அறம் சார்ந்து வாழும் வாழ்வைக் கற்றுக் கொடுத்தவர்கள் நாம். நம் சமூக மாற்றத்திற்கு அந்நியர்களைக் கூப்பிடுவது சரியான மாற்றமாக எனக்குத் தெரியவில்லை. நான் யாரையும் கேலிச்சித்திரமாகப் பார்க்கவில்லை. பயங்கரமாகவே பார்க்கிறேன். அந்தப் பயங்கரத்தில் என் சகோதரராகிய நீங்களும் சிக்குண்டு போகிறீர்களே என்றே கவலைப்படுகிறேன்.
    ///கட்டுகிற கட்டிடத்திலோ இல்லை. மனிதனின் மனதில் இருக்கிறது அது மனிதனை மனிதன் எந்த ஏற்றதாழ்வும் //
    அதைத்தானே நானும் சொல்கிறேன். இந்திய வாழ்க்கைமுறையும் சொல்கிறது.

    ReplyDelete
  3. தமிழ் மண்ணின் அடையாளம் மாறிவிடும். என்று பதறுகிறவர்கள் உண்டு.//
    மாற்றம் ஒன்றே மாற்றமில்லாதது என்பதில் அதி தீவிர நம்பிக்கையுடையவர்கள்தான் இந்தியர்கள். அதனால் இந்து மதம் அவ்வளவு மாற்றத்தையும் ஏற்றுக்கொண்டு இன்று பழைமையான மதமாக உலாவர முடிகிறது. வேறு எந்த மதமும் மாறியதாக எள்ளளவும் தெரியவில்லை. அது சரி செழியன் என்ற பெயர் ராபர்ட் என்று மாறும்போது நம் மண்ணின் அடையாளம் மறைவது உங்கள் கண்களுக்குத் தெரியவில்லை. இது பார்க்க சாதாரணமாக இருக்கும். ஆனால் உண்மை அவ்வளவு சாதாரணமானது இல்லை. சகோதரரே! ராபர்ட்க்கும் இந்தியாவிற்கு என்ன சம்பந்தம் இருக்க முடியும். செழியன் என்றால் செழிப்பானவன் என்று அர்த்தம், ராபர்ட் என்றால் என்ன பொருள், அது என்ன மொழி. நாங்கள் எங்கள் சகோதர மொழியான சமஸ்கிருதத்தையோ, ஹிந்தியையோ படிக்கமாட்டோம். ஆனால் உங்கள் லத்தீனையும், கிரேக்கத்தையும், அரமெக்கையும் படித்து அந்த பெயருக்கு அர்த்தம் தெரிந்து கொள்ள வேண்டுமா?
    வெளி நாடுகளுக்கு கிறிஸ்தவம் சென்றதே தவிர அங்கிருந்து இங்கு புதிதாக ஏற்றுமதி ஆகவில்லை.//
    ஐயோ என்னங்க சொல்ல வரீங்க. என் தலையே சுத்துதே.
    வெளிநாட்டு கைக்கூலியோ அல்ல. எந்த நாடும் எந்த மதத்திற்கும் சொந்தமல்ல.//
    சகோதரரே! உங்களை அந்நியர், அந்நியக்கைகூலி என்று சொல்ல எப்படி எனக்கு மனம் வரும். ஆனால், ஆட்டுக்குத் தெரியுமா பூசாரி நம்மை பலி கொடுக்கப் போகிறான் என்று. மேய்ப்பர் என்று நீங்கள் செல்லும் இடம்தானே சிந்திக்க வைக்கிறது. உங்களைப் போன்றோர் இந்தியப் பாரம்பரியத்தில் இருந்து விடுபடுவது என்னை வருத்தமடைய வைப்பதாலேயே மேற்கண்ட பதிவை எழுதினேன்.
    நயமாக பேசியோ மதம் மாற்ற வில்லை அப்படி ஒருவரையும் மாற்றவும் முடியாது.//
    அப்படியா?
    மற்றவனெல்லாம் அந்நியன் என்றும் பேசி மட்டுப்படுத்தவும் வேண்டாம்.//
    சத்தியமாக நான் அப்படி நினைக்கவில்லை. இறக்குமதி பிசாவை நம்பாதீர்கள், நம்மூர் இட்லியே நல்லா இருக்குன்னு சொல்றேன். கேக்க மாட்றீங்க!
    பயிர் வளரத்தான் விதைக்க வேண்டும் பதர் விளைய விதைக்க வேண்டியது இல்லை//
    இதற்கு நான் என்ன பதில் சொல்வது என்றே தெரியவில்லையே. ஐயா யாராவது என்ன வந்து பிடிச்சுக்குங்க, இயற்கையா வளர்வது காடு. செயற்கையா மனுஷன் பண்படுத்துனதுல வளர்வது வயல், தோட்டம் இவையெல்லாம். தோட்டம் வந்து காடுகிட்ட சொல்லிச்சாம். நான்தாண்டா உண்மையானவன்னு. சூப்பர்ல!

    ReplyDelete