Good Friday Song | Kurusinil Thongi | Christian New Tamil Song
பாடல் வரிகள் ----------------
குருசினில் தொங்கி குருதியை சிந்தி
பலியாகி என்னை மீட்டவரே
அப்பா இயேசப்பா உங்க அன்புக்கு
ஈடு இந்த உலகத்தில் இல்லை
1. அடிக்கப்படும் ஆடு போல கொண்டு போகும் போதும்
நொருக்கப்பட்டு ஆக்கினைக்கு உட்படுத்திய போதும்
எனக்காகவே சிலுவையை சுமந்து
என் பாவம் போக்க பலியான உம் அன்பை நினைக்கையிலே
உள்ளமெல்லாம் உடையுதப்பா உந்தன் அன்பை தெரியுதப்பா
2. கை கால்கள் ஆணிகளால் அடிக்கப்பட்ட போதும்
உடலெல்லாம் கீரப்பட்டு இரத்தம் வடிந்த போதும்
பிதாவே இவர்களை மன்னியும் என்று சொன்ன உந்தன் அன்பை நினைக்கையிலே
உள்ளமெல்லாம் உடையுதப்பா உந்தன் அன்பு தெரியுதப்பா
3. உலகத்தின் பாவங்கள் சுமத்தப்பட்ட போதும்
பிதா முகம் உமக்கு மறைக்கப்பட்ட போதும்
என் தேவனே என் தேவனே ஏன் என்னை கை விட்டீர் என்று கதறும் வேளையிலே
உள்ளமெல்லாம் உடையுதப்பா உந்தன் அன்பு தெரியுதப்பா