Showing posts with label Stories. Show all posts
Showing posts with label Stories. Show all posts
புத்தம் புதிய பூமி
மக்கள் உயரமான வீடுகளை நோக்கியும், உயர்ந்த மரங்கள், குன்றுகள், மலைகளை நோக்கி ஓடினர். என்றாலும் உயர்ந்த
வீடுகள் எல்லாம் தண்ணீரினால் சூழப்பட்டு, நீர்நிறைந்த குடத்திற்குள் போட்ட
கற்களைப் போல குன்றுகளும் மலைகளும் வெள்ளத்தில் மூழ்கத் தொடங்கின.
பூமி முழுவதும் அழியப் போகிறது
.jpg)
சிறுவர்கள் அங்கும் இங்கும் ஓடி
ஆடி விளையாடிக் கொண்டிருந்தனர். மகிழ்ச்சியுடன் கூடி விளையாடிக்கொண்டிருந்த
சிறுவர்கள் திடீர் என்று ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டனர். “ஏய் ஏன்டா
அடிச்சுக்கிறீங்க, சண்டபோடாதீங்க, சண்டபோடாதீங்க’’ என்று ஒவ்வொருவரையும்
விலக்கிக்கொண்டிருந்தான் சிறுவனான நோவா. “நல்லாதானே விளையாடிக்கொண்டிருந்தோம் நீ
எதற்கு அவனை அடித்தாய்’’ என்று முதலாவது அடித்த சிறுவனிடம் கேட்டான் நோவா. “அவன்
எப்போதும் என்னை கேலி பேசிக்கொண்டே இருக்கிறான். நான் சொல்ல சொல்ல கேட்காமல் தொடர்ந்து
கேலி பேசிக்கொண்டே இருந்தான் அதனாலதான் அடிச்சேன்’’ என்றான் முதலாவது அடித்த
சிறுவன்.
உயர்வுக்கு வழி
ஒரு மனிதன் கோழி பண்ணையை சுற்றிப்
பார்க்கும் படியாக சென்றார். சுற்றிப் பார்த்துக் கொண்டு வரும்பொழுது, ஒரு முட்டை தானாக
உடைவதைப் பார்த்தார். பார்த்தவரின் கண்கள் தொடர்ந்து அந்த முட்டையின் மீதே பதிந்து
நின்றது. அப்படியே பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே, கொஞ்சம் கொஞ்சமாக முட்டை ஓடுகள்
அகன்று உள்ளே இருந்து குஞ்சின் அலகு தெரிய ஆரம்பித்தது. அதைப் பார்த்துக்
கொண்டிருந்தவருக்கு, ஆர்வம் அதிகமாகி விட்டது. இன்னும் ஆர்வமாக பார்க்க ஆரம்பித்து விட்டார்.
அப்படியே நேரம் செல்ல, செல்ல பாதி அளவிற்கு முட்டையின் ஓடு உடைந்து பாதி அளவு குஞ்சு வெளியே தெரிய
ஆரம்பித்தது.
இதற்கு யார் காரணம் ?
வயது முதிர்ந்த கணவன் மனைவி உச்சி வெயிலில் தங்களின்
வாழ்க்கையின் கசப்பான அனுபவங்களை ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டே நடந்தனர். “நாம்
பெற்று வளர்த்தது ஒரே மகன் என்று எவ்வளவு செல்லமாக பார்த்து பார்த்து எப்படி
எல்லாம் அவனை நாம் வளர்த்தோம். ஒரு
நிமிஷத்தில் நம்மை தூக்கி எறிந்து விட்டானே’’, என்று கண்ணீர் முகத்தில் வடிய அதை துடைக்க கூட மறந்த
நிலையில் மிகுந்த வேதனையோடு தளு தளுத்த குரலில் பேசிய தனது மனைவியின் வார்த்தையை
கேட்ட முதியவர், “இன்னுமா நீ அதையே நினைச்சுகிட்டு வருகிறாய், என்ன செய்ய நம்முடைய
நடுத்தர வயதை மகனை வளர்ப்பதற்க்காகவே செலவு செய்து பாடு பட்டோம். அவன் வளர்ந்து
நம்மை பார்த்துக்கொள்வான் என்று நினைத்தோம். ஆனால் அவனோ, நம்மை நாயை விட கேவலமாக
துரத்தி விட்டான். பரவாயில்லை, மீதி நாட்களில் நமக்காக பாடுபட்டு, நம்முடைய
வாழ்க்கையை ஓட்டுவோம்’’ என்று கண்களில் முட்டிக்கொண்டு வந்த கண்ணீரை கண்களை தாண்டி வரவிடாமல்
சமாளித்துக்கொண்டே முதியவர் பேசினார்.
ஐயோ, என்னை காப்பாற்ற யாரும் இல்லையா?
ஒரு மனிதன் மலையில் ஏறுவதற்காக வேண்டிய எல்லா பொருள்களையும்
எடுத்துக்கொண்டு பாதுகாப்பாக ஏறிக்கொண்டிருந்தான். பல கடினமான பகுதியையும் கவனமாக
கடந்தான். அவனுடைய பயணத்தில் எத்தனையோ இடறல்கள் வந்தும் அவைகளையும் தாண்டி மலையின்
உச்சியை அடையும்படியாக அருகில் சென்று விட்டான். அவனுக்குள்ளாக மகிழ்ச்சி “இன்னும்
சிறிது தூரம்தான் என்னுடைய இலக்கை நான் அடைய போகிறேன்’’ என்று
நினைத்துக்கொண்டே உற்சாகமாக சென்று கொண்டிருந்தான். பகல் சென்று இருள் சூழ
ஆரம்பித்தது. மலை உச்சியின் மிக அருகில் வந்து விட்டான்.
மரணத்தை காணாத மனிதன்
இதமான தென்றல் வீசிக்கொண்டிருந்த
மாலை வேளை, ஏவாள் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தாள். நடையில் ஒரு பதட்டம்.
ஒரு இடத்தில் நிற்க முடியாதபடிக்கு கூடாரத்திற்கு உள்ளே போகிறதும் வெளியே வருவதுமாக படபடப்புடன் காணப்பட்டாள். தூரத்தில் ஆதாம் வருவது
தெரிந்ததும் வேகமாக ஓடினாள்.
ஏவாள் ஓடிவருவதை கண்ட ஆதாம் “
என்ன ஏவாள் ஏன் பதட்டமாக ஓடிவருகிறாய்?’’ என்று கேட்டான். மூச்சு இரைத்தபடியே “ காயீனையும், ஆபேலையும்
காணவில்லை. காலையில் வெளியே சென்றவர்கள் இன்னும் வரவில்லை’’. என்று படபடப்புடன் சொன்னாள். “என்ன காலையில் சென்றவர்கள் இன்னும் வரவில்லையா?
எங்கு செல்வதாக சொன்னார்கள்’’ என்று ஆதாமும் சற்று பயந்தபடியே கேட்டான். “என்னிடத்தில்
ஒன்றும் சொல்லவில்லை ஆனால் அவர்கள் பேசிக்கொண்டதை வைத்து பார்க்கும் போது,
காயின்தான் ஆபேலை தன்னுடைய வயல்வெளிக்கு அழைத்துச்சென்றான்’’ என்று ஏவாள்
சொன்னதும் “சரி நீ இங்கேயே இரு நான் சென்று பார்த்து வருகிறேன்’’ என்று சொல்லி
ஆதாம் ஓட்டமும் நடையுமாக வேக வேகமாக காயீனின் வயல்வெளியை நோக்கி சென்றான்.
இன்னும் என்ன செய்ய போகிறாய்?
அழகிய ஒரு குடும்பம் மிகுந்த மகிழ்ச்சியுடன் வாழ்ந்து
வந்தது. கணவன் தூர தேசத்தில் இருந்தாலும், கணவனோடு தொடர்பு கொண்டு,
குடும்பத்திற்கு தேவையானதை கணவனிடம் பெற்று, தனது கணவன் கொடுப்பதை வைத்து, மனைவி
குடும்பத்தை நன்றாக நடத்தி வந்தாள். நாட்கள் செல்ல செல்ல, மனைவியின் நடத்தையில்
மாறுதல் உண்டாக ஆரம்பித்தது. கணவனோடு தொடர்பு கொள்ளாமல், குடும்பத்தையும் பிள்ளைகளையும்
சரியாக கவனிக்காமல், ஏனோ தானோ என்று குடும்பத்தை நடத்த ஆரம்பித்தாள். ஆரம்பத்தில்
கணவன் மேலும், பிள்ளைகள் மேலும் இருந்த அன்பு குறைந்து தன் சுய இஷ்டப்படி நடக்க
ஆரம்பித்தாள்.
மனு குலத்தின் முதற்கொலை
சூரியன் மறைந்து கொண்டிருந்த அந்த நேரத்தில் உலகத்தின் முதல் மனிதர்களான ஆதாமும், ஏவாளும் பாலை நிலத்தில் நடந்து கொண்டிருந்தனர்.
இருவருடைய முகத்திலும் பயமும், திகிலும் நிறைந்திருந்தது,
சோகத்தால் மிகவும் வாடிப் போன நிலையில் இருந்தனர். "எப்படி இருந்த நமது வாழ்க்கை இப்படி ஆகி விட்டது. நாம்
செய்த முட்டாள் தனமான செயலால்தானே நாம் இந்த நிலைக்கு ஆளானோம். ஒரு நிமிடம் யோசித்து இருந்தால் கடவுளின் தோட்டமான ஏதேனை விட்டு வெளியே துரத்தப்பட்டிருக்க
மாட்டோமே. கடவுளோடு கூட சந்தோஷமாக இருந்திருப்போமே. வஞ்சக சாத்தான் தந்திரமாக நம்மை ஏமாற்றி விட்டானே’’ என்று
ஆதாம் ஏவாளிடம், தனது ஆதங்கத்தை வெளிப்படுத்திக் கொண்டே நடந்தான்.கம்பளிப்புழுவின் ஆதங்கம்
ஒரு கம்பளிப்புழு ஒவ்வொரு செடியாக ஊர்ந்து சென்று அதிலுள்ள மெல்லிய இலைகளைத் தன் தாடையில் வைத்து அரைத்துத் தின்று தன் பசியைப்போக்கிக் கொண்டிருந்தது. அப்போது செடிகளிலுள்ள பூக்களும் இலைகளும் பழங்களும் தங்களுக்குள் பேசிக் கொள்ளும் சலசலப்பான சத்தம் கம்பளிப்புழுவின் கவனத்தை திருப்பியது. தன் காதுகளை நன்றாகத் தீட்டிக் கொண்டு அவைகள் பேசுவதைக்கேட்டது. 

















