Showing posts with label சிறுகதை. Show all posts
Showing posts with label சிறுகதை. Show all posts
தேவையானதை மட்டும்...பேச வேண்டும்.
சிறுவன் ஒருவன் தன் ஆசிரியரிடம் வந்து "சார் Sex என்றால் என்ன? என்று கேட்டான். இந்த சிறு வயதில் கேட்க கூடாத கேள்வியை கேட்கிறானே என்று ஆசிரியருக்கு கோபம்.ஆனாலும் தனது கோபத்தை மறைத்து, செக்ஸ் என்றால், தாம்பத்திய உறவு.
அது கணவன் மனைவிக்காக கடவுளால் கொடுக்கப்பட்டது. அதன் மூலமாகவே பிள்ளைகள் பிறக்கிறார்கள். என்று மிகவும் விரிவாக சில நிமிடங்கள் அந்த சிறுவனிடம் விவரித்து சொல்லி விட்டு, இந்த வயதிலேயே இது மாதிரி கேள்விகளை எல்லாம் கேட்க கூடாது என்று கோபத்துடன் சொன்னார்.
ஆசிரியர் சொன்னவைகளை எல்லாம் அமைதியாக கேட்டுக்கொண்டிருந்த சிறுவன் கொஞ்ச நேரம் ஆசிரியரையே பார்த்து விட்டு, குழப்பத்துடன், ஆசிரியர் சொன்னது எதுவும் புரியாமல் ஒரு பேப்பரை காண்பித்து, சார் இதில் Sex என்று போட்டிருக்கிறது இதற்கு நேராக என்ன எழுத வேண்டும் என்று கேட்டான்.
...........
இப்படிதான் அநேகர்...மற்றவர்களின் புரிதலுக்கு ஏற்ற மாதிரி பேசாமல் தனக்கு தெரிந்ததை எல்லாம் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
எந்த இடத்தில் எது தேவையோ அதை மட்டும் சரியாக அறிந்து பேச வேண்டும்.
அதே தந்திரங்கள் பலிக்குமா?
...பழைய கதைதான் முழுவதும் வாசியுங்கள்.....
ஒரு தொப்பி வியாபாரி ஊர் ஊராக அலைந்து தொப்பி விற்று விட்டு வரும் போது மிகவும் களைப்பாக இருந்ததால் தொப்பிகளை கிழே வைத்து விட்டு, ஒரு மரத்தின் நிழலில் அமர்ந்தான்.
மரத்தின் நிழலில் இதமான காற்றி்ல் அப்படியே கண் அயர்ந்து தூங்கி விட்டான். கண் விழித்து பார்த்த போது தனக்கு அருகில் இருந்த தொப்பிகளை காணவில்லை. சுற்றி பார்க்கும் போது மரகிளைகளில் அமர்ந்திருந்த குரங்குகள் தொப்பிகளை அணிந்திருந்தன.
குரங்குகள் ஒவ்வொன்றும் அணிந்திருக்கும் தொப்பிகளை எப்படி வாங்குவது என்று யோசித்த வியாபாரி தன்னுடைய தலையில் அணிந்திருந்த தொப்பியை எடுத்து கீழே போட்டான்.
உடனே குரங்குகளும் அணிந்திருந்த தொப்பிகளை கீழே போட்டு விட்டது.
உடனே சந்தோஷத்துடன் எல்லா தொப்பிகளையும் எடுத்துக்கொண்டு வியாபாரி வியாபாரத்திற்கு சென்றான்.
ஆண்டுகள் உருண்டோடின..தொப்பி வியாபாரிக்கு வயதாகி விட்டது.
இப்போது தொப்பி வியாபாரியின் பேரன் தாத்தாவை போன்று தொப்பி வியாபாரம் செய்ய புறப்பட்டான்.
அப்பொழுது அந்த தொப்பி வியாபாரி தனக்கு நடந்த அனுபவங்களை தனது பேரனிடம் சொன்னான்.
"ஒரு நாள் நான் வியாபாரத்துக்கு சென்ற போது, அசதியில் ஒரு மரத்தின் நிழலில் தூங்கி விட்டேன்.
அப்பொழுது மரத்தில் அமர்ந்து இருந்த குரங்குகள் தொப்பியை எடுத்து அணிந்து கொண்டன. உடனே அந்த தொப்பிகளை எப்படி குரங்குகளிடம் இருந்து வாங்குவது என்று யோசித்த நான், எனது தலையில் அணிந்திருந்த தொப்பியை எடுத்து கீழே போட்டேன்.
உடனே குரங்குகளும் தான் அணிந்திருந்த தொப்பிகளை கீழே போட்டு விட்டது நான் தொப்பிகளை எடுத்து வந்து விட்டேன்" என்று தனது பேரனிடம் தனது பழைய அனுபவத்தை விவரித்து சொன்னான்.
தனது தாத்தாவின் அனுபவத்தை கேட்ட பேரன். தொப்பி வியாபாரத்திற்கு சென்றான்.
மதிய வேளையில் மிகவும் களைத்து போனவனாக ஒரு மரத்தின் நிழலில் அமர்ந்தவன் அப்படியே தூங்கி விட்டான்.
கண் விழித்து பார்த்த போது தொப்பிகளை காண வில்லை. சுற்று முற்றும் பார்த்த போது மரத்தில் அமர்ந்திருந்த குரங்குகள் தொப்பிகளை எடுத்து அணிந்திருந்தன.
உடனே அவனுக்கு தாத்தா. சொன்ன கதை ஞாபகத்திற்கு வந்தது.
இப்போது என்ன செய்கிறேன் பார்.
என்று தான் அணிந்திருந்த தொப்பியை எடுத்து கீழே போட்டான்.
கீழே போட்டு விட்டு குரங்குகளை பார்த்தான். குரங்குகள் தாங்கள் அணிந்திருந்த தொப்பியை கீழே போட வில்லை.
மறுபடியும் தலையில் தொப்பியை அணிந்து விட்டு கீழே போட்டு விட்டு குரங்குகளை பார்த்தான்.
அப்பொழுதும் குரங்குகள் தொப்பியை கீழே போட வில்லை.
அவனுக்கு புரியாமல் திகைத்துக்கொண்டிருக்கும் போது குரங்குகள் அவனைப்பார்த்து உனக்கு எப்படி தாத்தா இருக்கிறாரோ அதே போல
எங்களுக்கும் தாத்தா இருக்கிறார் என்றது...😀😀
..கதையின் பொருள்..
ஒருவரின் அனுபவம் இன்னொருவருக்கு உதவாது..
செயல்களில் மாற்றம் இல்லாமல் ஜெயிக்க முடியாது.
எனவே..சிந்தித்து செயல்படுவோம்.☺
Rev. V.S.Lourduraj
Bread of Life Church
Thiruvottiyur, Chennai 19
எல்லாம் பொதுவில்
பசியால் மிகவும் களைத்து
போன நிலையில் இருந்த ஒரு மனிதன்,
ஒரு திருச்சபையைக் கண்டு, அதற்குள்ளே சென்று
அங்கு இருந்த போதகரிடம் “ஐயா
மிகுந்த பசியாக இருக்கிறது, சாப்பிடுவதற்கு
ஏதாவது தருகிறீர்களா?” என்று கேட்டான்.
அந்த மனிதனின் நிலையை
கண்ட போதகர் உடனடியாக
தங்களிடம் இருந்த உணவைக் கொடுத்து
அவன் பசியை ஆற்றினார். இரவு
வெகு நேரம் சென்று விட்டபடியினால்,
அந்த மனிதன் “ஐயா நீங்கள்
அனுமதி கொடுத்தால் நான் இன்று இரவு
மட்டும் இங்கு தங்கிக்கொள்கிறேன்” என்று
அனுமதி கேட்டான்.
வழிப்போக்கன்
நான் வசிக்கும்படி எனது தந்தை எனக்காக ஒரு
வீட்டை கட்டி, அதில் என்னை குடியேற்றினார். எனது வீட்டில் நான் வசித்து வந்த நாட்களில்
ஒருநாள் ஒரு நபர் என் வீட்டு கதவை தட்டி, உங்கள் வீட்டில் எனக்கு ஒரு சிறிய அறையை கொடுங்கள்,
நான் உங்களுக்கு வேண்டிய பணங்களை கொடுக்கிறேன். நீங்கள் என்ன விரும்புகிறீர்களோ, அதை
உங்களுக்கு நான் செய்து கொடுப்பேன். எப்பொழுதும் உங்களுக்கு உதவியாக இருப்பேன் என்று
பணத்தைக் காண்பித்து, ஆசை வார்த்தைகளை பேசியதில் மயங்கி எனது வீட்டில் ஒரு சிறிய அறையை
ஒதுக்கி அந்த நபரை தங்க வைத்தேன்.
ஆரம்பத்தில் நான் என் மனதில் நினைக்கிற எந்த
காரியமானாலும் அதை எனக்கு உடனே செய்து கொடுத்தான். எனக்கு மிகவும் இன்பமாக இருந்தது.
இப்படி தன் பணத்தையும் கொடுத்து, நான் விரும்புகிற எல்லாவற்றையும் எனக்காக ஓடி ஓடி
ஒரு வேலைக்காரனைப்போல உதவி செய்து வந்த நபரை பார்த்து பெருமிதம் கொண்டேன்.
நாட்கள் சென்றன. அந்த நபர் எனது வீட்டின்
எல்லா அறைகளையும் என் அனுமதி இல்லாமலேயே பயன்படுத்த ஆரம்பித்தான். நாட்கள் செல்ல செல்ல
எனது பேச்சை மதிக்காமல் அவன் தன் இஷ்டம் போல் எல்லாவற்றையும் செய்ய ஆரம்பித்து விட்டான்.
எல்லாம் நன்மைக்கே...
கடந்த சில ஆண்டுகளுக்குமுன்
இயேசு கிறிஸ்துவை அறியாத குடும்பத்தில் பிறந்து
வளர்ந்த வாலிப சகோதரனுக்கு சுவிசேஷம்
அறிவிக்கப்பட்டது.
சுவிசேஷத்தை ஆரம்பத்தில் அசட்டை செய்த அந்த
வாலிபர் நாட்கள் செல்ல செல்ல
சுவிசேஷத்தினால் ஈர்க்கப்பட்டு, இயேசுவே உண்மையான கடவுள்
என்பதை அறிந்து கொண்டார்.
சுவிசேஷ கூட்டங்களில் கலந்து
கொண்டார், சபையின் ஆராதனை ஐக்கியத்திலும்
பங்கு பெற்று வந்தார். அவர்
இயேசுவை ஏற்றுக்கொண்டதின் நிமித்தமாக குடும்பத்தில் பலவிதமான எதிர்ப்புக்களையும் சந்தித்தார்.
இருப்பினும் இயேசுவே உண்மையான கடவுள்
என்பது உள்ளத்தில் ஆழமாக பதிந்து விட்டதால்
எந்த எதிர்ப்புக்களும் ஒன்றும் செய்திட முடிய
வில்லை. வந்த எதிர்ப்புக்கள் வாலிபர்
விசுவாசத்தில் மேலும் வளர்வதற்கு உதவியாகவும்,
இயேசு கிறிஸ்துவை இன்னும் உறுதியாக பற்றிக்கொள்ளவும்
செய்தன.
நாட்கள் சென்றன. வாலிபர்
தனது கல்லூரி படிப்பை நிறைவு
செய்தார். படித்த
படிப்புக்கான வேலைக்காக காத்திருந்தார். ஜெபித்தார். பல மாதங்கள் உருண்டோடின,
ஆனால் வேலை கிடைக்க வில்லை.
மிகவும் சோர்ந்து போன நிலையில் கர்த்தரை
நம்பி வந்திருக்கிற எனக்கு கர்த்தர் ஒரு
நல்ல வேலையை கொடுக்க கூடாதா?
என்று சபையின் போதகரிடத்தில் கேட்பார்.
“கர்த்தர்
நிச்சயமாக நல்ல வேலையை உங்களுக்கு
தருவார். சகோதரனே, கர்த்தரை தேடுகிறவர்களுக்கு ஒரு நன்மையும் குறைவுபடாது’’ என்று
சபையின் போதகரும் வாலிபருக்கு கர்த்தரின் வார்த்தைகளை சொல்லி, ஜெபித்து, “கர்த்தருக்காக
காத்திருங்கள். கர்த்தர் உங்களுக்கு நிச்சயமாக அற்புதங்களை செய்வார்’’ என்று விசுவாசத்தில் பெலப்படுத்தி
நடத்துவார்.
நாட்கள் செல்ல செல்ல
வாலிபரின் இரட்சிக்கப்படாத குடும்பத்தினர் வாலிபரை மிகவும் நெருக்க
ஆரம்பித்தனர். “எந்த ஒரு வேலைக்கும்
போகாமல் இப்படி இயேசு, இயேசு
என்று சுற்றிக்கொண்டிருக்கிறாயே, இதனால்தான் உனக்கு வேலை கூட
கிடைக்க வில்லை’’ என்று பேசுவது நாளுக்கு
நாள் அதிகமாக பதில் பேச
முடியாமல் வாலிபர் தனிமையில் கண்ணீருடன்
ஜெபிக்க ஆரம்பித்தார்.
கைவிடாத கர்த்தர்
சில ஆண்டுகளுக்கு முன்
சுவிசேஷம் அறியாத இடத்தில் கர்த்தராகிய
இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறிவிக்கும்படியாக தேவனுடைய அழைப்பின்படி, தேவ ஊழியர் ஒருவர்
தனது குடும்பத்துடன் சென்றார்.
குடிசை வீட்டில் தங்கி
பொருளாதார நெருக்கடியின் மத்தியில் தேவனுடைய வார்த்தையை அறிவித்து, தனக்கு கொடுக்கப்பட்ட ஊழியத்தை
செய்து வந்தார்.
இவ்வேளையில் சாப்பிட எதுவும் இல்லாமல்
குடும்பத்துடன் மிகவும் கஷ்டப்பட்டு வந்தும்,
ஒருவரிடமும் தனது தேவையை குறித்து
சொல்லாமல் ஊழியத்தை செய்தார்.
மதிய வேளை இரண்டு
தினமாக சாப்பிடாமல் பசி மிகவும் வாட்ட
குடும்பத்துடன் அமர்ந்து, கர்த்தரை நோக்கி ஜெபிக்க ஆரம்பித்தார்கள்.
“மனிதர்களிடம் சென்று எங்கள் தேவைகளை
சொல்ல முடியாது, நீங்கள் தான் எங்களின்
தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும்’’ என்று
ஜெபித்தார்கள்.
அவர்கள் ஜெபித்துக்கொண்டிருக்கிற அந்த வேளையில்
வீட்டின் கூரைகளின் ஓட்டைகள் வழியாக பொட்டலங்கள் அவர்கள்
இருந்த இடத்தில் விழுந்தது.
உனக்குள்ளதை வெளிப்படுத்து..
கல்லூரி
ஆண்டு விழா துவங்குவதற்கு இன்னும் சிறிது நேரமே இருந்தன. மாணவர்கள் எல்லோரும் மிகுந்த உற்சாக வெள்ளத்தில்
மிதந்து கொண்டிருக்க, மனதில் படபடப்புடன் தான் எழுதிவைத்திருந்த கட்டுரையை மறுபடியும்
வாசித்து பார்த்து “நன்றாக எழுதி இருக்கிறேனா? இல்லை இதை நான் வாசிக்கும் போது மற்றவர்கள்
என்னைப்பார்த்து கிண்டல் செய்து சிரிப்பார்களா?’’ என்று நினைத்துக்கொண்டிருக்கும் போதே
மனதிற்குள் கலவரம் மேலோங்க கரங்களில் இருக்கும் விரல்களை மடக்கி சொடுக்கிக்கொண்டிருந்தான்
ஜான்.
ஒவ்வொருவரும்
தங்கள் தங்கள் தனித்திறமைகளை காண்பிக்க வேண்டும் என்று கல்லூரி பேராசிரியர் சொல்லி
இருந்ததால் தன்னால் முடிந்த அளவு கட்டுரையை சொந்தமாக தயார் செய்து வைத்திருந்தான்.
விழா
ஆரம்பம் ஆனது ஒவ்வொருவரும் தங்களின் திறமைகளை காண்பித்துக்கொண்டிருந்தனர். கரவொலி அரங்கத்தை
அதிரப்பண்ணியது. இதைப்பார்த்துக்கொண்டிருக்கையில் தன்னுடைய கரத்தில் இருக்கும் பேப்பரை
மறுபடியும் விரித்துப்பார்த்து விட்டு, தன்னைத்தானே நொந்து கொண்டவனாய், அவனுக்கே அவன்
மேல் வெறுப்பு இன்னும் அதிகமானது.
காலம் கெட்டு போச்சு !
ஏலே மூதேவி விடிஞ்சி
எவ்வளவு நேரமாவுது, இன்னும் இழுத்து மூடிக்கீட்டு
கிடக்கே எந்திரிலே’’ என்று ரோஸ் அம்மா
எழுப்ப மூடி இருந்த போர்வையை
விலக்கி, கண்களை திரட்டி, முறைத்து
விட்டு, மறுபடியும், முகத்தை மறைத்து படுத்துக்கொண்டான்.
“ஏலே இப்ப எந்திரிக்கிறீயா மூஞ்சியில
தண்ணிய ஊத்தவா?’’ என்று சொல்ல, “சனியென்
சனியென், விடிய காலமே இதுக்கு
என்ன வந்துது, நிம்மதியா உறங்கக் கூட விடாமா
இப்பிடி கத்தி உசுர வாங்குது’’ என்று
முணு முணுத்தபடியே அருகில் இருந்த நார்க்காலியை
எட்டி உதைத்தபடியே விருட் என்று வெளியே
சென்றான் ரோஸ்
அம்மாவின் மகன் பீட்டர்.
இன்னும் கொஞ்சங்காலந்தான்
என்ன இன்னும் உறங்கிக்கிட்டு இருக்கீங்க, எந்திரிங்க’’ என்று கூப்பிடும் சத்தம் கேட்டு, வேகமாக எழுந்திருந்து மணியைப் பார்த்தான் “ஏய் சீக்கிரமா எழுப்ப கூடாதா? ஐயா, வைய போராக, தூக்காளில கஞ்ச ஊத்து,’’ என்று சொல்லிக்கொண்டே, முகத்தைக் கழுவிக்கொண்டு, துண்டை எடுத்துத் தோளில் போட்டுக்கொண்டு, கொரட்டி கம்மை எடுத்துக்கொண்டு, புறப்பட, தூக்குவாளியில் இருக்கும் கஞ்சியைக் கொடுத்து, இப்ப கொஞ்சம் கஞ்சி குடிச்சுட்டு போங்க, என்று மனைவியின் வார்த்தைகளை நின்று கூடக் கேட்காதவனாய், வேண்டாம், வேண்டாம் நேரம் ஆச்சு, பிறவு குடிச்சிக்கிறேன். என்று சொல்லி விட்டு, நேரம் ஆகி விட்டதே என்ற வேகமும், துடிப்பும் அவனுடைய கண்களிலும், நடையிலும் தெரிந்தது.ஓட்டமும் நடையுமாக வேலை செய்யும் முதலாளி வீட்டை நோக்கி சென்றான்.
“என்னடா, வளவா இம்புட்டு நேரம், நேரம் என்ன ஆவுது, சீக்கிரம் போடா’’ என்று சொல்ல, ஐயா, இதோ போரேன்யா, என்று சொல்லியபடி, ஆட்டுத் தொழுவத்தை நோக்கி சென்று ஆடுகளை அவிழ்த்து, மேய்க்கும் படி, ஓட்டி சென்றான்.
மேய்ச்சலுக்குத் தயாரான ஆடுகள், வேகமாக நடக்க ஆரம்பித்தன. செல்கிற வழியில் பச்சை பசேலெனக் கண்களைப் பறிக்கும் தாவரங்களைப் பார்த்து பெருமூச்சு விட்டபடி நடக்கலாயின.
எல்லா ஆடுகளும் ஒழுங்காய் நடந்து சென்று கொண்டிருக்க, அதில் வைரவன் என்ற ஆடு மட்டும் தன் இஷ்டப்படி, போகிறவழியில் இருக்கும் எல்லாத் தோட்டத்தில் உள்ள பயிர்களையும் மேய்ந்து கொண்டே சென்றது.
அதைப் பார்த்தப் மற்ற ஆடுகள், “ம் அதை மட்டும் ஒருவரும் ஒன்றும் சொல்வதில்லை, அதை மாதிரி நாம செய்தால் இந்நேரம் எத்தனை அடி விழுந்து இருக்கும்’’ என்று சொல்ல மற்ற ஆடுகளும் ஆமாம் என்பது போல் தலையை ஆட்டின.
போகிற வழியில் கண்ணில் தெரியும் எல்லாவற்றையும் மேய்ந்து கொண்டு, மற்ற ஆடுகளைப்பார்த்து, “ஏய் பயந்தாங்களி பசங்களா, என்னை யாரும் ஒன்னும் பண்ண முடியாது, நான் எங்கு வேணுமனாலும், போவேன், என்ன வேணுமனாலும் செய்வேன், யாரும் என்னை ஒன்னும் பண்ண முடியாது’’ என்று சொல்லி, சிரித்தது வைரவன்.
அது என்னமோ, போப்பா, இது இன்னைக்கு நேத்தா நடக்குது, பல நாளா நீ இப்படிதான் பண்ணிக்கிட்டு இருக்க, உன்னிய மாதிரி நாங்களும் பண்ணினா, ஒரு பக்கம் தோட்டகாரங்க அடிப்பாங்க, இன்னொரு பக்கம், நம்ம எஜமான் அடிப்பாரு, ஆனா உன்னைய மட்டும் யாரும் ஒன்னுமே பண்ண மாட்டேங்கிறாங்க, நீ கொடுத்து வச்சவந்தான். என்று பெருமூச்சு விட, “ஆமா, ஆமா அதுக்கெல்லாம் அதிஷ்டம் வேணும், அந்த அதிஷ்டம் எனக்கு வந்திருக்கு, நீங்க என்ன பாத்து பொறாம மட்டும்தான் பட முடியும், என்னைய மாதிரி உங்களால, பண்ண முடியாது’’ என்று சொல்லியது.
இதைக் கேட்ட மற்ற ஆடுகள், தங்களுக்குள்ளாகப் பேசிக்கொண்டன. “இந்தக் கடவுள் ஏந்தான் இப்படி, வஞ்சகமா படைத்தானோ, எல்லோரையும் ஒரே மாதிரி படைக்க வேண்டியது தானே, அவனை ஒரு மாதிரி, நம்மை ஒரு மாதிரின்னு, ஏன் இப்படி ஓர வஞ்சனையாகப் படைக்க வேண்டும்’’ அவன் என்ன செய்தாலும், யாரும் கேட்க மாட்டாங்க, ஆனா நாம சின்னத் தவறு செஞ்சாலும், அதைப் பெருசா எடுத்து உடனே நம்மை அடிக்க வாராங்க, என்ன பொழப்பு இது’’ என்று சொல்ல,
இது மட்டுமா? வீட்டுக்குச் சென்றதும் நம்மை ஒரே இடத்தில் அடைத்து வைக்கின்றனர், ஆனா, அவனை மட்டும் நம்மோடு கூட அடைத்து வைப்பதும் இல்லை, கட்டி போடுவதும் இல்லை. அவன் விருப்பத்திற்கு எல்லா இடமும் சுற்றி வருகிறான்’’ இவ்விதமாக ஒன்றோடு ஒன்று தங்கள் ஆதங்கத்தை, தெரிவித்துக்கொண்டன.
இப்படியே நாட்கள் சென்றன. கோயில் திருவிழா வந்தது, அந்த வேளையில் “டேய் வளவா, இங்கே வாடா அந்த வைரவன பிடிச்சிட்டு வந்து, கோயில்ல கட்டு, நாம நேர்ந்து கொண்ட மாதிரி, அதைப் பலி செலுத்த வேண்டிய நேரம் வந்திடுச்சு,’’ என்ற சொல்ல வளவன், வைரவனைப் பிடித்துக் கோயிலுக்கு முன்பாகக் கட்டி வைத்தான்.
வைரவனுக்கோ, ஒன்றுமே புரிய வில்லை, இதுவரை நம்மை எங்கும் கட்டி போடவே மாட்டார்களே, இன்று இங்கு வந்து கட்டி போட்டு இருக்கிறார்களே, என்று திருவிழா கூட்டத்தைப் பார்த்து, அங்கும், இங்கும் விழித்துக்கொண்டிருந்தது.
தன்னுடைய நண்பர்கள் எல்லாம் ஒன்றாக ஒரு இடத்தில் இருப்பார்கள். அவர்களை எல்லாம் விட்டு விட்டு, என்னை மட்டும் ஏன் இங்குக் கொண்டு வந்திருக்கிறார்கள். என்று சிந்தித்துக்கொண்டிருக்கும் போதே, அதை அவிழ்த்து, இழுத்துச் சென்றனர்.
ஏதோ, விவரீதம் நடக்கப்போகிறது என்று மட்டும் அதற்குப் புரிந்து விட்டது.
சிறிது நேரத்திற்கெல்லாம் அதைப் பலி செலுத்தும் இடத்திற்குக் கொண்டு, சென்று பலியிட தயாரான நேரத்தில், “இத்தனை காலமாக, என் விருப்பத்திற்கும், என் இஷ்டத்திற்கும் விடப்பட்டது இதற்காகதானா? என்று சிந்தித்துக்கொண்டிருக்கும் போதே அதனுடைய தலை துண்டிக்கப்பட்டது.
துன்மார்க்கமாக வாழ்கிறவர்கள், கண்டிக்கப்படுவதில்லை, தண்டிக்கப் படுவதில்லை, தங்கள் இஷ்டப்படி நடக்கிறார்கள். என்றும் தாங்கள் உண்மையாக வாழ்கிறவர்களாக இருந்தாலும் தண்டிக்கப்படுகிறோமே என்று அநேகர் நினைப்பது உண்டு, ஆனால் வேதம் கூறுகிறது. “துன்மார்க்கன் ஆபத்துநாளுக்கென்று வைக்கப்படுகிறான்; அவன் கோபாக்கினையின் நாளுக்கென்று கொண்டுவரப்படுகிறான்’’ <யோபு 21:30> “அக்கிரமக்காரர் ஏகமாய் அழிக்கப்படுவார்கள்; அறுப்புண்டுபோவதே துன்மார்க்கரின் முடிவு <சங் 37:38>

எது சரி ?
“இதோ வந்து விட்டேன்’’ என்று சொல்லியபடியே கதவை திறந்து “யாரு’’ என்றபடி வெளியே வந்தாள் கவிதா.
“நான்தாங்கா வித்யா’’
வித்யாவா, என்ன வித்யா ரொம்ப வேகமா வந்திருக்க? என்ன
விஷயம். உள்ளே வா’’ என்று கதவை முழுவதுமாக திறக்க “வேகம் எல்லாம் இல்ல, வீடு பூட்டி இருந்துச்சு,
அதான் சத்தமா கூப்பிட்டு கதவை தட்டினேங்கா’’ என்றபடியே உள்ளே சென்றாள் வித்யா.
“எப்படி இருக்கீங்கக்கா’’ என்று கேட்டபடியே சோபாவில் அமர்ந்தாள்.
“ம் நான் நல்லா இருக்கேன் நீ எப்படி இருக்க? என்ன இரண்டு
மூன்றுநாளா வீடு பூட்டி இருந்தது. ஊருக்கு போயிருந்தீயா?’’
எனக்கு எந்த ஆபத்தும் இல்லை
அழகிய பண்ணை, வீடு சுற்றிலும் இயற்கை வளம் கொஞ்சும் அழகிய
வயல்கள். அந்த பண்ணை வீட்டில் வெகு நாட்களாக உலாவி வந்த ஒரு எலி சமையலறையில் எலிபொறியைப் பார்த்துவிட்டது.
"ஆகா நமக்காகத்தான் இதை வைத்திருக்கிறார்கள். இதில் மாட்டிக்கொண்டுவிட்டால் என்ன செய்வது?" என்ற பயத்தில் ஓடிச் சென்று தனக்கு நெருங்கிய நண்பனான அந்தப் பண்ணையில் இருந்த கோழியிடம் சென்று மூச்சிறைக்க நின்றது.
“என்ன எலியாரே,
என்ன சங்கதி, இவ்வளவு வேகமாக ஓடி வந்து மூச்சிறைக்க வந்து நிற்கிறீர்’’ என்று கோழி கேட்டது.
ஓடி வந்த களைப்புடனே மூச்சிறைக்க "சமையலறையில் ஒரு எலி பொறி இருக்கிறது, சமையலறையில்
ஒரு எலி பொறி இருக்கிறது’’ என்று திக்கி தினறி சொல்லியது.
அதைக் கேட்ட கோழி
“ஆஹா எலியாரே இனி உமது பாடு திண்டாட்டம்தான் போல’’ என்று எந்த வருத்தமும் இல்லாமல்
சொல்லியது. “என்ன கோழியாரே இவ்வளவு பெரிய விசயத்தை சொல்லுகிறேன், நீங்க மிக
சாதாரணமாக பேசுகிறீர்களே’’ என்று மிகவும் பட படப்புடன் பேசியது.
போலியா? அசலா?
மார்கழி மாதம் துவங்குவதற்கு
முன்பாகவே பனி கொட்டோ கொட்டென்று கொட்டிக்கொண்டிருந்த காலை வேளை. இரவு படுக்கைக்கு
போகும் பொழுது எப்படியாகிலும் ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து படிக்க வேண்டும் என்று
தீர்மானித்த ஸ்டீபன் அலாரம் வைத்து படுத்திருந்தான். அலாரம் 5 மணிக்கெல்லாம்
சத்தமிட கண்ணை திறக்காமலே அதை
நிறுத்திவிட்டு 7 மணியைத் தாண்டியும் எழுந்திரிக்காமல் நன்றாக போர்வையால் இழுத்து
மூடி தூங்கிக் கொண்டிருந்தான். உயர்வுக்கு வழி
ஒரு மனிதன் கோழி பண்ணையை சுற்றிப்
பார்க்கும் படியாக சென்றார். சுற்றிப் பார்த்துக் கொண்டு வரும்பொழுது, ஒரு முட்டை தானாக
உடைவதைப் பார்த்தார். பார்த்தவரின் கண்கள் தொடர்ந்து அந்த முட்டையின் மீதே பதிந்து
நின்றது. அப்படியே பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே, கொஞ்சம் கொஞ்சமாக முட்டை ஓடுகள்
அகன்று உள்ளே இருந்து குஞ்சின் அலகு தெரிய ஆரம்பித்தது. அதைப் பார்த்துக்
கொண்டிருந்தவருக்கு, ஆர்வம் அதிகமாகி விட்டது. இன்னும் ஆர்வமாக பார்க்க ஆரம்பித்து விட்டார்.
அப்படியே நேரம் செல்ல, செல்ல பாதி அளவிற்கு முட்டையின் ஓடு உடைந்து பாதி அளவு குஞ்சு வெளியே தெரிய
ஆரம்பித்தது.
இதற்கு யார் காரணம் ?
வயது முதிர்ந்த கணவன் மனைவி உச்சி வெயிலில் தங்களின்
வாழ்க்கையின் கசப்பான அனுபவங்களை ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டே நடந்தனர். “நாம்
பெற்று வளர்த்தது ஒரே மகன் என்று எவ்வளவு செல்லமாக பார்த்து பார்த்து எப்படி
எல்லாம் அவனை நாம் வளர்த்தோம். ஒரு
நிமிஷத்தில் நம்மை தூக்கி எறிந்து விட்டானே’’, என்று கண்ணீர் முகத்தில் வடிய அதை துடைக்க கூட மறந்த
நிலையில் மிகுந்த வேதனையோடு தளு தளுத்த குரலில் பேசிய தனது மனைவியின் வார்த்தையை
கேட்ட முதியவர், “இன்னுமா நீ அதையே நினைச்சுகிட்டு வருகிறாய், என்ன செய்ய நம்முடைய
நடுத்தர வயதை மகனை வளர்ப்பதற்க்காகவே செலவு செய்து பாடு பட்டோம். அவன் வளர்ந்து
நம்மை பார்த்துக்கொள்வான் என்று நினைத்தோம். ஆனால் அவனோ, நம்மை நாயை விட கேவலமாக
துரத்தி விட்டான். பரவாயில்லை, மீதி நாட்களில் நமக்காக பாடுபட்டு, நம்முடைய
வாழ்க்கையை ஓட்டுவோம்’’ என்று கண்களில் முட்டிக்கொண்டு வந்த கண்ணீரை கண்களை தாண்டி வரவிடாமல்
சமாளித்துக்கொண்டே முதியவர் பேசினார்.
ஐயோ, என்னை காப்பாற்ற யாரும் இல்லையா?
ஒரு மனிதன் மலையில் ஏறுவதற்காக வேண்டிய எல்லா பொருள்களையும்
எடுத்துக்கொண்டு பாதுகாப்பாக ஏறிக்கொண்டிருந்தான். பல கடினமான பகுதியையும் கவனமாக
கடந்தான். அவனுடைய பயணத்தில் எத்தனையோ இடறல்கள் வந்தும் அவைகளையும் தாண்டி மலையின்
உச்சியை அடையும்படியாக அருகில் சென்று விட்டான். அவனுக்குள்ளாக மகிழ்ச்சி “இன்னும்
சிறிது தூரம்தான் என்னுடைய இலக்கை நான் அடைய போகிறேன்’’ என்று
நினைத்துக்கொண்டே உற்சாகமாக சென்று கொண்டிருந்தான். பகல் சென்று இருள் சூழ
ஆரம்பித்தது. மலை உச்சியின் மிக அருகில் வந்து விட்டான்.