Bread of Life Church India

Showing posts with label உருவக கதைகள். Show all posts
Showing posts with label உருவக கதைகள். Show all posts

வழிப்போக்கன்



நான் வசிக்கும்படி எனது தந்தை எனக்காக ஒரு வீட்டை கட்டி, அதில் என்னை குடியேற்றினார். எனது வீட்டில் நான் வசித்து வந்த நாட்களில் ஒருநாள் ஒரு நபர் என் வீட்டு கதவை தட்டி, உங்கள் வீட்டில் எனக்கு ஒரு சிறிய அறையை கொடுங்கள், நான் உங்களுக்கு வேண்டிய பணங்களை கொடுக்கிறேன். நீங்கள் என்ன விரும்புகிறீர்களோ, அதை உங்களுக்கு நான் செய்து கொடுப்பேன். எப்பொழுதும் உங்களுக்கு உதவியாக இருப்பேன் என்று பணத்தைக் காண்பித்து, ஆசை வார்த்தைகளை பேசியதில் மயங்கி எனது வீட்டில் ஒரு சிறிய அறையை ஒதுக்கி அந்த நபரை தங்க வைத்தேன்.
ஆரம்பத்தில் நான் என் மனதில் நினைக்கிற எந்த காரியமானாலும் அதை எனக்கு உடனே செய்து கொடுத்தான். எனக்கு மிகவும் இன்பமாக இருந்தது. இப்படி தன் பணத்தையும் கொடுத்து, நான் விரும்புகிற எல்லாவற்றையும் எனக்காக ஓடி ஓடி ஒரு வேலைக்காரனைப்போல உதவி செய்து வந்த நபரை பார்த்து பெருமிதம் கொண்டேன்.
நாட்கள் சென்றன. அந்த நபர் எனது வீட்டின் எல்லா அறைகளையும் என் அனுமதி இல்லாமலேயே பயன்படுத்த ஆரம்பித்தான். நாட்கள் செல்ல செல்ல எனது பேச்சை மதிக்காமல் அவன் தன் இஷ்டம் போல் எல்லாவற்றையும் செய்ய ஆரம்பித்து விட்டான்.

காலம் கெட்டு போச்சு !



 ஏலே மூதேவி விடிஞ்சி எவ்வளவு நேரமாவுது, இன்னும் இழுத்து மூடிக்கீட்டு கிடக்கே எந்திரிலே’’ என்று ரோஸ் அம்மா எழுப்ப மூடி இருந்த போர்வையை விலக்கி, கண்களை திரட்டி, முறைத்து விட்டு, மறுபடியும், முகத்தை மறைத்து படுத்துக்கொண்டான்.

ஏலே இப்ப எந்திரிக்கிறீயா மூஞ்சியில தண்ணிய ஊத்தவா?’’ என்று சொல்ல, “சனியென் சனியென், விடிய காலமே இதுக்கு என்ன வந்துது, நிம்மதியா உறங்கக் கூட விடாமா இப்பிடி கத்தி உசுர வாங்குது’’ என்று முணு முணுத்தபடியே அருகில் இருந்த நார்க்காலியை எட்டி உதைத்தபடியே விருட் என்று வெளியே சென்றான்  ரோஸ் அம்மாவின் மகன் பீட்டர்.

இன்னும் கொஞ்சங்காலந்தான்

என்ன இன்னும் உறங்கிக்கிட்டு இருக்கீங்க, எந்திரிங்க’’ என்று கூப்பிடும் சத்தம் கேட்டு, வேகமாக எழுந்திருந்து மணியைப் பார்த்தான் “ஏய் சீக்கிரமா எழுப்ப கூடாதா? ஐயா, வைய போராக, தூக்காளில கஞ்ச ஊத்து,’’ என்று சொல்லிக்கொண்டே, முகத்தைக் கழுவிக்கொண்டு, துண்டை எடுத்துத் தோளில் போட்டுக்கொண்டு, கொரட்டி கம்மை எடுத்துக்கொண்டு, புறப்பட, தூக்குவாளியில் இருக்கும் கஞ்சியைக் கொடுத்து, இப்ப கொஞ்சம் கஞ்சி குடிச்சுட்டு போங்க, என்று மனைவியின் வார்த்தைகளை நின்று கூடக் கேட்காதவனாய், வேண்டாம், வேண்டாம் நேரம் ஆச்சு, பிறவு குடிச்சிக்கிறேன். என்று சொல்லி விட்டு, நேரம் ஆகி விட்டதே என்ற வேகமும், துடிப்பும் அவனுடைய கண்களிலும், நடையிலும் தெரிந்தது.ஓட்டமும் நடையுமாக வேலை செய்யும் முதலாளி வீட்டை நோக்கி சென்றான்.
    “என்னடா, வளவா இம்புட்டு நேரம், நேரம் என்ன ஆவுது, சீக்கிரம் போடா’’ என்று சொல்ல, ஐயா, இதோ போரேன்யா, என்று சொல்லியபடி, ஆட்டுத் தொழுவத்தை நோக்கி சென்று ஆடுகளை அவிழ்த்து, மேய்க்கும் படி, ஓட்டி சென்றான்.
    மேய்ச்சலுக்குத் தயாரான ஆடுகள், வேகமாக நடக்க ஆரம்பித்தன. செல்கிற வழியில் பச்சை பசேலெனக் கண்களைப் பறிக்கும் தாவரங்களைப் பார்த்து பெருமூச்சு விட்டபடி நடக்கலாயின.
எல்லா ஆடுகளும் ஒழுங்காய் நடந்து சென்று கொண்டிருக்க, அதில் வைரவன் என்ற ஆடு மட்டும் தன் இஷ்டப்படி, போகிறவழியில் இருக்கும் எல்லாத் தோட்டத்தில் உள்ள பயிர்களையும் மேய்ந்து கொண்டே சென்றது.
    அதைப் பார்த்தப் மற்ற ஆடுகள், “ம் அதை மட்டும் ஒருவரும் ஒன்றும் சொல்வதில்லை, அதை மாதிரி நாம செய்தால் இந்நேரம் எத்தனை அடி விழுந்து இருக்கும்’’ என்று சொல்ல மற்ற ஆடுகளும் ஆமாம் என்பது போல் தலையை ஆட்டின.
    போகிற வழியில் கண்ணில் தெரியும் எல்லாவற்றையும் மேய்ந்து கொண்டு, மற்ற ஆடுகளைப்பார்த்து, “ஏய் பயந்தாங்களி பசங்களா, என்னை யாரும் ஒன்னும் பண்ண முடியாது, நான் எங்கு வேணுமனாலும், போவேன், என்ன வேணுமனாலும் செய்வேன், யாரும் என்னை ஒன்னும் பண்ண முடியாது’’ என்று சொல்லி, சிரித்தது வைரவன்.
    அது என்னமோ, போப்பா, இது இன்னைக்கு நேத்தா நடக்குது, பல நாளா நீ இப்படிதான் பண்ணிக்கிட்டு இருக்க, உன்னிய மாதிரி நாங்களும் பண்ணினா, ஒரு பக்கம் தோட்டகாரங்க அடிப்பாங்க, இன்னொரு பக்கம், நம்ம எஜமான் அடிப்பாரு, ஆனா உன்னைய மட்டும் யாரும் ஒன்னுமே பண்ண மாட்டேங்கிறாங்க, நீ கொடுத்து வச்சவந்தான். என்று பெருமூச்சு விட, “ஆமா, ஆமா அதுக்கெல்லாம் அதிஷ்டம் வேணும், அந்த அதிஷ்டம் எனக்கு வந்திருக்கு, நீங்க என்ன பாத்து பொறாம மட்டும்தான் பட முடியும், என்னைய மாதிரி உங்களால, பண்ண முடியாது’’ என்று சொல்லியது.
    இதைக் கேட்ட மற்ற ஆடுகள், தங்களுக்குள்ளாகப் பேசிக்கொண்டன. “இந்தக் கடவுள் ஏந்தான் இப்படி, வஞ்சகமா படைத்தானோ, எல்லோரையும் ஒரே மாதிரி படைக்க வேண்டியது தானே, அவனை ஒரு மாதிரி, நம்மை ஒரு மாதிரின்னு, ஏன் இப்படி ஓர வஞ்சனையாகப் படைக்க வேண்டும்’’ அவன் என்ன செய்தாலும், யாரும் கேட்க மாட்டாங்க, ஆனா நாம சின்னத் தவறு செஞ்சாலும், அதைப் பெருசா எடுத்து உடனே நம்மை அடிக்க வாராங்க, என்ன பொழப்பு இது’’ என்று சொல்ல,
இது மட்டுமா? வீட்டுக்குச் சென்றதும் நம்மை ஒரே இடத்தில் அடைத்து வைக்கின்றனர், ஆனா, அவனை மட்டும் நம்மோடு கூட அடைத்து வைப்பதும் இல்லை, கட்டி போடுவதும் இல்லை. அவன் விருப்பத்திற்கு எல்லா இடமும் சுற்றி வருகிறான்’’ இவ்விதமாக ஒன்றோடு ஒன்று தங்கள் ஆதங்கத்தை, தெரிவித்துக்கொண்டன.
இப்படியே நாட்கள் சென்றன. கோயில் திருவிழா வந்தது, அந்த வேளையில் “டேய் வளவா, இங்கே வாடா அந்த வைரவன பிடிச்சிட்டு வந்து, கோயில்ல கட்டு, நாம நேர்ந்து கொண்ட மாதிரி, அதைப் பலி செலுத்த வேண்டிய நேரம் வந்திடுச்சு,’’ என்ற சொல்ல வளவன், வைரவனைப் பிடித்துக் கோயிலுக்கு முன்பாகக் கட்டி வைத்தான்.
வைரவனுக்கோ, ஒன்றுமே புரிய வில்லை, இதுவரை நம்மை எங்கும் கட்டி போடவே மாட்டார்களே, இன்று இங்கு வந்து கட்டி போட்டு இருக்கிறார்களே, என்று திருவிழா கூட்டத்தைப் பார்த்து, அங்கும், இங்கும் விழித்துக்கொண்டிருந்தது.
தன்னுடைய நண்பர்கள் எல்லாம் ஒன்றாக ஒரு இடத்தில் இருப்பார்கள். அவர்களை எல்லாம் விட்டு விட்டு, என்னை மட்டும் ஏன் இங்குக் கொண்டு வந்திருக்கிறார்கள். என்று சிந்தித்துக்கொண்டிருக்கும் போதே, அதை அவிழ்த்து, இழுத்துச் சென்றனர்.
      ஏதோ, விவரீதம் நடக்கப்போகிறது என்று மட்டும் அதற்குப் புரிந்து விட்டது.
சிறிது நேரத்திற்கெல்லாம் அதைப் பலி செலுத்தும் இடத்திற்குக் கொண்டு, சென்று பலியிட தயாரான நேரத்தில், “இத்தனை காலமாக, என் விருப்பத்திற்கும், என் இஷ்டத்திற்கும் விடப்பட்டது இதற்காகதானா? என்று சிந்தித்துக்கொண்டிருக்கும் போதே அதனுடைய தலை துண்டிக்கப்பட்டது.
   துன்மார்க்கமாக வாழ்கிறவர்கள், கண்டிக்கப்படுவதில்லை, தண்டிக்கப் படுவதில்லை, தங்கள் இஷ்டப்படி நடக்கிறார்கள். என்றும் தாங்கள் உண்மையாக வாழ்கிறவர்களாக இருந்தாலும் தண்டிக்கப்படுகிறோமே என்று அநேகர் நினைப்பது உண்டு, ஆனால் வேதம் கூறுகிறது. “துன்மார்க்கன் ஆபத்துநாளுக்கென்று வைக்கப்படுகிறான்; அவன் கோபாக்கினையின் நாளுக்கென்று கொண்டுவரப்படுகிறான்’’ <யோபு 21:30> “அக்கிரமக்காரர் ஏகமாய் அழிக்கப்படுவார்கள்; அறுப்புண்டுபோவதே துன்மார்க்கரின் முடிவு <சங் 37:38>

எனக்கு எந்த ஆபத்தும் இல்லை



 அழகிய பண்ணை, வீடு சுற்றிலும் இயற்கை வளம் கொஞ்சும் அழகிய வயல்கள். அந்த பண்ணை வீட்டில் வெகு நாட்களாக உலாவி வந்த ஒரு எலி சமையலறையில் எலிபொறியைப் பார்த்துவிட்டது.    

             "ஆகா நமக்காகத்தான் இதை வைத்திருக்கிறார்கள். இதில் மாட்டிக்கொண்டுவிட்டால் என்ன செய்வது?" என்ற பயத்தில் ஓடிச் சென்று தனக்கு நெருங்கிய நண்பனான அந்தப் பண்ணையில் இருந்த கோழியிடம் சென்று மூச்சிறைக்க நின்றது.
      “என்ன எலியாரே, என்ன சங்கதி, இவ்வளவு வேகமாக ஓடி வந்து மூச்சிறைக்க வந்து நிற்கிறீர்’’ என்று கோழி கேட்டது.
ஓடி வந்த களைப்புடனே மூச்சிறைக்க "சமையலறையில் ஒரு எலி பொறி இருக்கிறது, சமையலறையில் ஒரு எலி பொறி இருக்கிறது’’ என்று திக்கி தினறி சொல்லியது.    அதைக் கேட்ட கோழி “ஆஹா எலியாரே இனி உமது பாடு திண்டாட்டம்தான் போல’’ என்று எந்த வருத்தமும் இல்லாமல் சொல்லியது. “என்ன கோழியாரே இவ்வளவு பெரிய விசயத்தை சொல்லுகிறேன், நீங்க மிக சாதாரணமாக பேசுகிறீர்களே’’ என்று மிகவும் பட படப்புடன் பேசியது.

போலியா? அசலா?


மார்கழி மாதம் துவங்குவதற்கு முன்பாகவே பனி கொட்டோ கொட்டென்று கொட்டிக்கொண்டிருந்த காலை வேளை. இரவு படுக்கைக்கு போகும் பொழுது எப்படியாகிலும் ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து படிக்க வேண்டும் என்று தீர்மானித்த ஸ்டீபன் அலாரம் வைத்து படுத்திருந்தான். அலாரம் 5 மணிக்கெல்லாம் சத்தமிட  கண்ணை திறக்காமலே அதை நிறுத்திவிட்டு 7 மணியைத் தாண்டியும் எழுந்திரிக்காமல் நன்றாக போர்வையால் இழுத்து மூடி தூங்கிக் கொண்டிருந்தான்.

இதற்கு யார் காரணம் ?

வயது முதிர்ந்த கணவன் மனைவி உச்சி வெயிலில் தங்களின் வாழ்க்கையின் கசப்பான அனுபவங்களை ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டே நடந்தனர். “நாம் பெற்று வளர்த்தது ஒரே மகன் என்று எவ்வளவு செல்லமாக பார்த்து பார்த்து எப்படி எல்லாம்  அவனை நாம் வளர்த்தோம். ஒரு நிமிஷத்தில் நம்மை தூக்கி எறிந்து விட்டானே’’, என்று கண்ணீர் முகத்தில் வடிய அதை துடைக்க கூட மறந்த நிலையில் மிகுந்த வேதனையோடு தளு தளுத்த குரலில் பேசிய தனது மனைவியின் வார்த்தையை கேட்ட முதியவர், “இன்னுமா நீ அதையே நினைச்சுகிட்டு வருகிறாய், என்ன செய்ய நம்முடைய நடுத்தர வயதை மகனை வளர்ப்பதற்க்காகவே செலவு செய்து பாடு பட்டோம். அவன் வளர்ந்து நம்மை பார்த்துக்கொள்வான் என்று நினைத்தோம். ஆனால் அவனோ, நம்மை நாயை விட கேவலமாக துரத்தி விட்டான். பரவாயில்லை, மீதி நாட்களில் நமக்காக பாடுபட்டு, நம்முடைய வாழ்க்கையை ஓட்டுவோம்’’ என்று கண்களில் முட்டிக்கொண்டு வந்த கண்ணீரை கண்களை தாண்டி வரவிடாமல் சமாளித்துக்கொண்டே முதியவர் பேசினார்.

விதை முளைக்கும் முன்....

"அவர் கிறிஸ்துவுக்குள் உன்னதங்களில் ஆவிக்குரிய சகல ஆசீர்வாதத்தினாலும் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார்'' ( எபேசியர் 1:3).
"நிச்சயமாக நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து, உன்னைப் பெருகவே பெருகப்பண்ணுவேன் என்றார். அந்தப்படியே,  அவன் பொறுமையாய்க் காத்திருந்து, வாக்குத்தத்தம் பண்ணப்பட்டதைப் பெற்றான்'' (எபிரெயர் 16:14,15).

இன்னும் என்ன செய்ய போகிறாய்?


அழகிய ஒரு குடும்பம் மிகுந்த மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தது. கணவன் தூர தேசத்தில் இருந்தாலும், கணவனோடு தொடர்பு கொண்டு, குடும்பத்திற்கு தேவையானதை கணவனிடம் பெற்று, தனது கணவன் கொடுப்பதை வைத்து, மனைவி குடும்பத்தை நன்றாக நடத்தி வந்தாள். நாட்கள் செல்ல செல்ல, மனைவியின் நடத்தையில் மாறுதல் உண்டாக ஆரம்பித்தது. கணவனோடு தொடர்பு கொள்ளாமல், குடும்பத்தையும் பிள்ளைகளையும் சரியாக கவனிக்காமல், ஏனோ தானோ என்று குடும்பத்தை நடத்த ஆரம்பித்தாள். ஆரம்பத்தில் கணவன் மேலும், பிள்ளைகள் மேலும் இருந்த அன்பு குறைந்து தன் சுய இஷ்டப்படி நடக்க ஆரம்பித்தாள்.